சனி, 9 ஜனவரி, 2021

கட்டுரையா கதையா

 

இப்போது உலகளவில்  பேசப்படும் கொரோனாபற்றியசெய்திகள்  என்னை வேறு ஒரு சிந்தனைக்கு கொண்டு விட்டது  சில ஆண்டுகளுக்கு முன் HIV எனும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய எண்ணங்களை கிள்றி விட்டது  ஆனால் இப்போது எய்ட்ஸ் நோய் இல்லையா ஏனது பற்றிப்பேசப்படுவதில்லை உலகம் தொடங்கிய காலம் முதல் ஆண்பெண் சேர்க்கை சகஜம்மாக இருந்தது ஒரு ஆணே பல பெண்களோடு சேர்க்கை இருப்பதால் எய்ட்ஸ் வரக்கூடும் எனப்பட்டது அதற்கான தடுபூசி கண்டுபிடித்தார்களாஅந்தஓய் இப்போது இல்லையாஇது குறித்த சிந்ய்ஜனை என்பக்ஷையபதிவுகளைபுரட்ட வைத்தது அன்றே எழுதி இருக்க்,கிறேன் ஒரு விழிப்புணர்வு கடை கட்டுரை எனலாம் அடே பொல் இன்றாஆஈஆ ஓறோஓணாஆஊ ஏர்கனவே இருந்திருக்கலாம் ஏடோ புதிய கண்டு பிடிப்புபோல் தொன்ற்லாம் இல்லாமலும் இருக்கலாம்  என்பழையபதிவுகலை படித்திருந்தவர்களுக்கு லேசான நினைவு வரலாம்   

                                                          ------------------------------------------------------

முன் கதை .    பழைய கடிதம்  ஒன்றினைக் காண  நேரிட்டு  அந்தக் 

     கடிதம் எழுதியவன்  இன்று எப்படி இருக்கிறான்  என்று அறியும் 
    ஆவலால் உந்தப்பட்டு, வாசுவும் அவன் மனைவி தங்கமும் ,
     கடிதத்தில் இருந்த முகவரி தேடி பயணிக்கிறார்கள் )

           திருச்சூர்  சென்று, அங்கு ஒரு ஓட்டலில் தங்கி, ஒரு நாள் இருந்து, 
பிறகு பெருங்கோட்டுகா  என்ற இடம் எங்கிருக்கிறது  என்று விசாரித்து ,
தேடிக் கண்டுபிடித்து அங்கு சென்றால் வாசுவுக்கு முதலில் ஒன்றுமே 
புரியவில்லை. அந்த இடம் ஒரு ஆசிரமமாம் .அதன் தலைவர் யாரோ 
ஒரு பிரம்ம தேவ  சுவாமிகளாம். வாசுவுக்கும் தங்கத்துக்கும் ஒரே 
ஏமாற்றமாகப்  போய்விட்டது. .சரி. வந்ததுதான் வந்தோம் அந்த சுவாமி 
களையாவது தரிசித்துச் செல்லலாம்  என்று  உள்ளே சென்றால், வயதான 
தேவன்தான்   பிரம்ம தேவ சுவாமிகளா.?.. வாசுவுக்கு தலையே சுற்றும் 
போலாகி விட்டது. .பிரம்மதேவசுவாமிகள் என்னும் வாசுவின் பழைய 
நண்பன் தேவன்  வாசுவைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போய்
பிறகு சுதாரித்துக்  கொண்டார். அருகில் வர வாசுவை சைகை காட்டி 
அழைத்தார். வாசு அருகில் சென்றதும்  எதுவும் பேசு முன்பாக கண்களில் 
இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.  வாசுவுக்கு ஒன்றும்
விளங்கவில்லை. 

           "தேவா ....நீயா ...நீங்களா  ..பிரம்மதேவ  சுவாமிகள். ?"

           "அதே... வாசு.. ஞான் தன்னே. .. அப்போள் ஞான் ஆடிய  ஆட்டம் ..
இப்போள்  அனுபவிக்குன்னு. "

            " என்ன சுவாமி, அனுபவங்கள் சுவையாய்  இருந்திருக்கும் போலத் 
தோன்றுகிறது. உங்களுடைய மதிப்பும் உயர்ந்து விட்டது மாதிரியும் 
தெரிகிறது. "

            "வாசு  சத்தியம் அதல்லா. ..தினை வெச்சவன் தினை அறுக்கும்,
வினை வெச்சவன் வினை அறுக்கும்  கேட்டுட்டில்லே "

             "புரியவில்லையே. ..சற்று விளக்கமாகக் கூறுங்களேன் "

             " வாசு, கொறச்சு  காலம்  மும்பு  நிங்கள்  வன்னிருன்னு  எங்கில்
என்னெக் காணான்   காத்திரிக்கேண்டி  இருக்கும்.  எப்பொழும் என்னே 
சுத்தி  ஒரு கூட்டமிரிக்கும் . பட்சே  இப்போள் எனிக்கி தேகம் சுகமில்லா. 
ஆரும் என்னேக் காணான் வருனில்லா"

              வாசு சுவாமிகளே  சொல்லட்டுமென்று பேசாமல் இருந்தார். 
இதற்குள் காப்பி கொண்டு வரப்பட்டது. வாசுவும் தங்கமும் காப்பி 
அருந்தத் துவங்கும்போது ,......"வாசு, இப்போள் இவிடேயுள்ளோர்
ஞஙகளிடமிருன்னு  வெள்ளம்போலும்  வாங்கிக்  குடிக்காரில்லா. . 
எந்து கொண்டறியோ .....எனிக்கி எய்ட்ஸ் ஒண்ட. .. எல்லார்க்கும் 
அறிஞ்சு போய்.. நம்மளே எல்லாரும்  ஒதுக்கி வெச்சு."

             வாசுவுக்கு புரையேறியது. "என்னது... உங்களுக்கு எய்ட்ஸ்  நோயா.?
நம்பவே முடிய லியே "

            " அதே வாசு.இன்னோ நாளையோ  ஜீவன் எப்போலேங்கிலும் 
போவாம். தேகம் வல்லாண்டு  ஷீணிச்சு போய்., கோரே திவசமாய்க் 
காணும். பழைய பாவங்களுக்கு இப்போள்  அனுபவிக்கின்னு. " சற்று 
நேரம் தாமதித்து மறுபடியும் சுவாமிகள் கூறினார். " வாசு, ஞான்  செத்தை 
தன்னே. ( கெட்டவன்தான் ) கூடாத காரியங்கள்  பலதும் செய்துட்டுண்டே..
பட்சே ஞான்  மாறி  வாசு மாறி. நல்லவனாயிட்டு  மாறி இருபது 
கொல்லங்களின்   மேலே ஆயி.  ஈ  தேவன் பிரம்மதேவ சுவாமிகளாயி..
ஈஸ்வர  விசாரங்க்கொண்டு  பிராயசித்தம் செய்யுன்னு. .. பட்சே பழைய 
பாவங்களெல்லாம்  அத்தர  வேகம் மாறுவோ. ..ஹூம்.! பகவான் என்னே 
 சிட்சிக்குன்னு..!"

            இதுவரை எதுவுமே பேசாமல் இருந்த தங்கம் இப்போது வாசுவிடம் 
கேட்டாள்."எனக்குத் தெரிந்த வரையில எய்ட்ஸ் வியாதிக்கான HIV எனும் 
வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டதே இருபது வருடங்களுககுள்ளாகத்தானே
அப்படிஎன்றால் அதற்கு முன் இந்த வைரசே இல்லை என்றுதானே 
அர்த்தம்..?"

          "  HIV வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது இருபது வருடங்களுக்குள்தான் 
என்றாலும் அந்தக் கிருமி அதற்கு முன்பே  இருக்கவில்லை  என்று 

அர்த்தமாகுமா.? டைபாய்ட்  மலேரியா,  பெரியம்மை  இதற்கெல்லாம் 
காரணமான  கிருமிகளை அடையாளம்  கண்டு,  அதற்கு மருந்தும் 
கண்டு பிடித்திருக்கிறார்கள் . ஆனால் அதற்கு முன்பு அந்த வியாதிகள் 
இருக்கவில்லை என்றாகுமா. ?அதுபோல் தான் இதுவும்  " என்றார் வாசு 

             தேவன் எனும் பிரம்மதேவ சுவாமிகள் இவர்களுடைய பேச்சை 
சற்று ஆர்வமுடன்  கேட்கத் துவங்கினார். 

             "பெரியம்மை  டைபாய்ட், மலேரியா போன்ற வியாதிகளுக்கு 
மருந்து கண்டு பிடிக்கும் முன்பே  அந்த வியாதி இருப்பது அனைவர்க்கும் 
தெரியும். ஆனால் எய்ட்ஸ் நோய் இருப்பதே இப்போதுதானே தெரிய 
ஆரம்பித்திருக்கிறது. "

             "தங்கம், நீ சொல்வதைப் பார்த்தால்  சுவாமிகளுக்கு இந்த நோய் 
வர வாய்ப்பே இல்லையே. அவர்தான் இருபது வருடங்களுக்கு  மேலாக 
நல்வாழ்க்கை ...அதுவும் ஆன்மீக  வாழ்க்கை  வாழ்வதாகக்  கூறுகிறாரே..
நீ கூறுவது  உண்மையானால் சுவாமிகளுக்கு  எய்ட்ஸ் நோய் இருக்காது. 
அப்படி இல்லை என்றால் அவருக்கு இந்த நோய்  ஏற்கனவே  பல வருடங்களுக்கு  முன்பே தாக்கி இருக்க வேண்டும். அதன் சுய ரூபம் 
டாக்டர்கள்  சொல்வது போல் பல வருடங்களுக்குப் பிறகு முற்றிப்போய் 
தெரிய வந்திருக்கிறது.

             இந்தக் கேசைப் பார்க்கும்போது எனக்கென்னவோ அடிப்படையே 
எங்கோ நெருடுகிறது. பூதக் கண்ணாடி  வைத்துப் பார்க்கிறோமோ  என்று 
தோன்றுகிறது.  ஒன்றை நீ யோசித்துப்பார்.  ஆதிகாலத்திலேயே  மனிதன் 
பல தாரங்களை வைத்துக் கொண்டு இருந்திருக்கிறான் .தாசிகளை நாடிப் 
பல  பெரியவர்களே சென்றதாகக் கதைகள்  இருக்கின்றன.  செக்ஸ்தான் 
இந்த நோய்க்கு  மூல  காரணம்  என்றால் நாட்டில் பலருக்கும்  பல 
வருஷங்களுக்கு முன்பே  இந்த நோய் இருந்திருக்க வேண்டும். அது 
பரவுவது பற்றிய  விழிப்புணர்ச்சி  மூலம் ......அதாவது ரத்தத்தின்  மூலம் 
பரவுகிறது. அதனால் பரிசோதனை செய்த ரத்தம் செலுத்துவது; ஒருமுறை 
உபயோகித்த ஊசியை மறுமுறை உபயோகிக்காமல் இருப்பது. ஆணுறை 
உபயோகிப்பது, போன்றவை  வேண்டுமானால்  எந்தப் பாவமும் செய்யாத 
அப்பாவி மக்கள் இந்த நோய் வந்து அவதிப்படுவதை  தடுக்கலாம். 

              உலகத்தில் சுமார் பத்து சதவிகித மக்களாவது இந்த நோயால் 
தாக்கப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால்  இந்தியாவில் 
மட்டும் சுமார் பத்து கோடி மக்களுக்குமேல் இந்நோய் இருக்க வேண்டும். 
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. முன்பெல்லாம் இந்தியனின் 
சராசரி வயது  35-/ லிருந்து  40-/ க்குள்  இருந்தது. இப்போது சுமார் 
அறுபதுக்கும் மேல் என்கிறார்கள். மருத்துவம் வளர வளர  வியாதிகளும் 
காரணமும் கண்டு பிடிக்கப்பட்டு,  மருந்தும் கண்டு பிடிப்பதால்தான் 
சராசரி வயது உயர்ந்திருக்க வேண்டும். எயட்சுக்கும் மருந்து கண்டு 
பிடித்தால் நம்முடைய  வாழ்க்கை  நிலை மேலும் உயரும். "என்று கூறி 
அந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி  வைக்கப் பட்டது. 

            வாசு பிரம்ம தேவ சுவாமிகளிடம் விடை பெற்றுக்கொள்ளும்போது. 
"சுவாமி, இந்த நோய் ஒருவரை ஒருவர்  தொடுவதாலோ ஒருவருடன் 
பழகுவதாலோ பரவுவதில்லை. உடலுறவு மூலமும்,  வியாதி 
இருப்பவரின் ரத்தம் மற்றவருடைய ரத்தத்தில் கலப்பதாலேயோதான் 
பரவும்.  நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள். தங்கம் நினைப்பதுபோல் 
இந்த நோயே இருபது வருடங்களுக்குள் தான்  தோன்றியது என்றால் ஒரு 
சமயம்  உங்களுக்கு இந்த வியாதியே இருக்காது. உங்களால் முடிந்த 
அளவுக்கு  மற்றவர்களுக்கு நல்லது செய்து உங்கள் ஆன்மீக வாழ்விலே
கவனம் செலுத்துங்கள். ஆண்டவன் அருளிருக்கும். நாங்கள்  விடை 
பெறுகிறோம். " என்று கூறி மிகவும் வருத்தத்துடன்  தங்கத்துடன் 
கிளம்பினான். 

              இருவரும் ஆழ்ந்த  சிந்தனையில் வந்து கொண்டிருந்தனர். 
 மிகுந்த நேர  மௌனத்துக்குப் பிறகு  தங்கம் வாசுவிடம்  கூறினாள்
"எது எப்படி இருந்தாலும்  பெருங்கோட்டுக்கா  போய் வந்ததில் பல 
எண்ணங்களும் அடிப்படை சந்தேகங்களும்  நமக்கு வந்துள்ளது. .
இதையே ஒரு கதை  கட்டுரையாக  விழிப் புணர்ச்சிப் பதிவாக 
உங்கள்  வலைப்பூவில் வெளியிட்டால் என்ன. ?"
---------------------------------------------------------------------------------  .





செவ்வாய், 5 ஜனவரி, 2021

எங்கிட்ட மோதாதே

 


எங்கிட்ட மோதாதே

1959ம் வருடம் பயிற்சி முடிந்து  பெங்களு ர்வந்திருந்த  சமயம்  ஒரு ஹோட்டலில்மூவரில் ஒருவனாக தங்கி யிருந்தசமயம்  ரூம்  மேட்சில் ஒருவருக்கு ஹோட்டலில் பணம்  கட்ட முடியாமல்  சில நாள் அவகாசம்  கேட்டிருந்தார் அந்த இடைவெளியில் அவருக்கு சொந்தமான பெட்டி போன்ற சில  பொருட்களை என்பொறுப்பில் விட்டுச்சென்றார் இந்த சமயம் அவர்து உடைமைகளை  கான் ஃபிஸ்டிகேட்செய்ய ஹோட்டல் உரிமையாளர் என்னிடம்  இருந்தநண்பனின் பொருட்களை கேட்டார் நான் கொடுக்க மறுத்தேன்அதன் பின்   அவர் எனக்கு வென்னீர் தரவோ  குடிக்க தண்ணீர் தரவோ மறுத்தார் நான்  அருகே இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்   அங்கிருந்த இன்ஸ்பெக்டர்  இரு காவலர்களை  அனுப்பி ஹோட்டல் உரிமையாள்ரை வரவழைத்தார் எனக்கு நீர் கொடுக்காவிட்டால் அவருக்கு லாக் அப்பில் நீர் கொடுக்க போவ்தாக எச்சரித்தார் ஹோட்டல் உரிமையாளர் தவறை திருத்துவதாக ஒப்புக்கொண்டார்அந்தக்காலத்தில் உடனே நீதிவழங்கும் காவலர்கள் இருந்தனர்  

                                 ------------------------------------------------------------------------------------

என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது வேலைக்கு போகவர உபயோகிப்பேன்அப்பொழுதெல்லாம்  இரவில் சைக்கிளில் பயண்க்கும்போது அதில் விளக்கு பொறுத்தப்பட்டு அது எரிய வேண்டும் என்சைக்கிளில்  டைனமோ இல்லை அதற்குபதில்கெரொசின்  விளக்குதான் இருந்தது ஒரு நாள் பணிக்கு சென்று வரும்போது செகண்ட் ஷிஃப்ட் 11மணி வரை  விளக்குஅணைந்திருந்தது காவல்காரரிடம்  மாட்டினேன்  அவர் பார்க்கும்வரை விளக்கு  எரிந்து கொண்டிருந்தது என்று வாதாடினேன்   ஒரு கட்டத்துக்குமேல்  பொறுமை  இழந்து  அவர் கையை  விளக்கின் மேல்அவர் கையை அழுத்தினேன்பாவம் கை சுட்டு விட்டது  அவர் கோபம் அதிகரித்தது ஸ்டேஷ்னுக்கு கூட்டிச் சென்றார்  அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம்நடந்ததைக் கூறினேன் காவலர்கை   சுட்டதையும் காண்பித்தேன்  எல்லவற்றையும் ம்  கவனித்த இன்ஸ்பெக்டர்  சிரித்து கொண்டே என்னை  போகச் சொன்னார்விட்டு விட்டார்          

 


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

பிழைகள்


பிழைகள் 

 

தாயைக் காட்டுகிறேன், தந்தையைக் காட்டுகிறேன்,

தட்டானே கல்லைத்தூக்கு என்றே வாலில் நூல்கட்டிய

தும்பியும் பிடிமானம் கிடைக்கக் கல்தூக்க தன் சொல் கேட்டு

அது பணிவதாக எண்ணும் பாலகன் அறிவானா

அது ஒரு கருத்துப் பிழை என்று.?

 

நீண்டிருக்கும் தார்ச் சாலையில் வழுக்கி ஓடும்

பேரூந்தில் ஒரு மதிய நேரம் பயணிக்கும்போது,

சற்றுத் தொலைவில் சாலையில் தேங்கி நிற்பது நீரோ

அல்லது மழையின் சுவடோ என எண்ணி அருகில்

காணும்போது நீரேதுமின்றி கண்டது கானலெ

அன்றி காட்சிப் பிழை என்றும் அறிவோமன்றோ.?

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று

ஆன்றோர் கூறினர் அன்று;அகத்தின் அழுக்குப்

பற்றிக் கூற மறந்தனரோ, இல்லை கூற இயலாது

என்றே விட்டனரோ.? அழகான முகங்கள் எல்லாம்

அகத்தில் அழகானதா, புற அழகற்ற  முகங்கள்

அகத்தில் அழகாய் இருக்கக் கூடாதா.?

 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவோர்

உறவு கலவாமை வேண்டும் என்று எளிதே கூறினர்.

முன் பல்லெல்லாம் தெரியக் காட்டி,

முகமெல்லாம் மகிழ்ச்சி கூட்டி

கடைவாய்ப் பல்லால் கடித்துக் குதறி

வன்மம் காட்டும் மனிதரும்  காட்சிப் பிழையில்

கண்டறியாது போதல் சாத்தியமன்றோ.?

 

கண்ணால் காண்பதும் பொய்யாகலாம்,

காதால் கேட்பதும் பொய்யாகலாம்

காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்

பிழையாகவே என்றும் இருக்கட்டும்..

ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!

---

 

 

 

 

வெள்ளி, 1 ஜனவரி, 2021

புத்தாண்டு வாழ்த்துகள் வித்தியாசமாய்

 


சம்பிரதாய புத்தாண்டு வாழ்த்துகள்

       நாளும்தான் இரவுக்குப் பின் பகல் விடிகிறது.

இன்று மட்டும் இது என்ன புதிதா.?

பல்லெல்லாம் தெரியக் காட்டி முகமெல்லாம்

புன்னகை கூட்டி கைகுலுக்கி வரும் ஆண்டு

பிரகாசிக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம்

சற்றே சிந்தித்துப்  பார்க்கிறோமா.

சம்பிரதாய முகமன்கள் ஒரு புறம் இருக்கட்டும்

இந்தபுத்தாண்டு எந்த விதத்தில் வித்தியாசம்

ஒரே போல் நேற்றையது போல்தானே

அதே இரவும் பகலும் ஏதோ

 நம்பிக்கை எல்லாம் புதிது போல்

 நம்பிக்கைகள் வாழ்வின் கட்டாய ஊன்றுகோல்

ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது.

அனுபவங்களும் கூடத்தானே வேண்டும்

அனுபவங்கள் தரும் படிப்பினைகள் சிந்திக்கிறோமா,

வினாடி நிமிடம் மணி நாள் வாரம் மாதம் வருடம்

எல்லாம் காலத்தின் குறியீடுகள் இவற்றின்

ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறப்பதே-அதேபோல்

நாளும் நொடியும் நாமும் புதிதாய்ப் பிறக்கிறோம்

இந்நொடியில் நிகழ்வதே நிதரிசனம் . அடுத்து நிகழப்

போவது யாரே அறிவார். யாரும் யாரையும்

காணவோ முகமன் கூறவோ உறுதி சொல்ல முடியுமா

புத்தாண்டை எப்படி வரவேற்கிறோம்--முன் இரவு

கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி

வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......

பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-( இருமுடி

எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம் இருத்தல்போல்

விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள் ).

பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால் போதுமா.?.

கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல் வேண்டாமா.?.

இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுத்தத் நொடி

காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்

அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்

ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்

இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக  அன்பர்களே

அனைவருக்கும் சம்பிரதாய புத்தாண்டு வாழ்த்துக்கள்