Wednesday, April 6, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு.?

உங்கள் ஓட்டு  யாருக்கு.?
----------------------------------
         ஓட்டுப் போடுவது நமது ஜனநாயக உரிமை, கடமை. தேர்தல் 
நாளில் மட்டும் இந்நாட்டு மன்னராகி ,நம்மை ஆள்பவரை தேர்வு 
செய்யும் ஒரு மகத்தான பொறுப்பு நமக்குக் கிடைக்கிறது. நமது 
வாக்கின்  மதிப்பை நாம் உணர்ந்து வாக்களிக்க வேண்டியது நம் 
கடமை. .அது சரி, யாருக்கு வாக்களிப்பது.?வாக்களிக்கும் முன் 
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான்  என்ன.? நம் 
தொகுதியில் வேட்பாளராக நிற்பவரைப் பற்றி நமக்கென்ன 
தெரியும்.?வாக்களிப்பது வேட்பாளருக்கா இல்லை அவர் சார்ந்த 
கட்சிக்கா.?நம் வாக்கைப் பெறுவதற்கு வேட்பாளர்களோ 
கட்சிகளோ எந்த விதத்தில் தகுதி உள்ளவர்கள்.?நம் ஒருவரது 
வாக்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.?இருக்கும் 
நிலவரம் திருப்திகரமாக உள்ளதா.?இல்லாவிட்டால் எதில் எதில் 
மாற்றங்கள் வரவேண்டும்.?மாற்றங்களைக் கொண்டுவர நம் 
பலம் என்ன.?மாற்றம் வந்தாலும் நிலவரம் மாறுமா.?ஆயிரம் 
கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். அரசியல் அறிவு 
நமக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது.?இதையெல்லாம தெரிந்து 
நாம் ஓட்டுச்சாவடியில  பத்து நொடிகளுக்குள் ஓட்டுப் போடும் 
நேரத்தில் கடைசி நொடியில் தன்னிச்சையாக நம்மை அறியாமல்
வேண்டாதவருக்கே ஓட்டு போடும் பரிதாபம் நிகழக் கூடாது. நம் 
ஓட்டு நம் தலை எழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது.

            தேர்தலுக்கு நிற்கும்/ நிறுத்தப்படும் வேட்பாளர்களில் நாம்
ஒருவருக்குத்தான் ஓட்டுப் போடமுடியும். வேட்பாளரை நாம்
தேர்ந்தெடுக்கும் முன் நாம் சிந்திக்க வேண்டியதில்
முக்கியமானது மாற்றம் வேண்டுமா என்பதுதான். மாற்றம்
வந்தால் இதைவிட நல்ல ஆட்சி அமையுமா என்பதும்தான்.

             தற்போதைய ஆட்சி என்னவெல்லாம் செய்திருக்கிறது
என்னவெல்லாம் செய்திருக்கக் கூடாது ;தற்போதைய ஆட்சியின்
செயல்பாடுகளில் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன. தமிழ்
மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடக்க இருப்பதால் அது பற்றிக்
கொஞ்சம் அலசலாம்.

            இந்த ஆட்சி மக்களுக்காக செய்திருப்பதாக கூறுவது
1) .ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. 
2). பள்ளிகளில் இலவச மதிய உணவு, ஐந்து நாட்கள் முட்டை
3).இலவச தொலைக்காட்சிப் பெட்டி. 
4).இலவச நிலம். 
5).மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டம். 
6)/இலவச பஸ் பாஸ் ,சைக்கிள் etc etc.(மாணவ மாணவிகளுக்கு.)
தமிழகத்தில் சுமார் ஆறு கோடி மக்கள் இருப்பதாகக் வைத்துக் 
கொண்டால் இந்த வசதிகள் யார் யாருக்கு கிடைத்துள்ளது .?
குறைந்தது  மக்கள் தொகையில் 50% ஆவது இந்த சலுகைகள் 
பெற்றிருக்கிறார்களா.?பலனடைந்தவர் போற்றியும் மற்றோர் 
தூற்றியும் பேசுகிறார்களா.?ஆட்சி மாற்றம் வந்தால் இந்த 
சலுகைகள் தொடருமா, இல்லை அதிகரிக்குமா. இல்லை 
குறையுமா.?

           அரசாங்க நல திட்டங்களுக்கு வேண்டிய செலவுகளை 
எப்படி சமாளிக்கிறார்கள் மத்திய அரசின் பங்களிப்போடு 
டாஸ்மாக் மூலம் வருமானம், பெட்ரோல் விலையில் வரும் 
கணிசமான பங்கு,தவிர வரிவிதிப்பின் மூலம் கிடைக்கும் 
வருமானம். 

          இந்த நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மாற்றம் 
வேண்டுமா, வந்தால் நலமா என்றெல்லாம் யோசித்து மக்கள் 
வாக்களிக்க வேண்டும். 

         நான் ஒருமுறை திருமீயச்சூர் என்ற ஊருக்கு லலிதாம்பிகா 
கோவில் காண சென்றிருந்தேன்.அப்போது அந்த கிராமத்து 
மக்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது ,அரசாங்க நல 
திட்டங்கள் வந்தடைகிறதா என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன 
பதில் என்னை சிந்திக்க வைத்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களோ 
சலுகைகளோ  வராமல் இருக்க விடமாட்டோம், எப்படிப் 
பெறுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்றனர். 
          பாட்டாளியை  நல்ல  " குடி மகனாக்கி"அதன் மூலம் வரும் 
வருவாயில் இந்த நலத் திட்டங்கள் நிறைவேற்றப் படிகிறதா. ?
நலத்திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் ஊழல் இல்லாமல் 
செலவாக்கப்படுகிறதா.?
           கோடிக்கணக்கில் செலவு செய்து, பதவியில் அமருபவர்கள் 
செலவு செய்த பணத்தை எப்படி மீட்கிறார்கள்.?இதில் கட்சி 
வேறுபாடுகள் உண்டா.?
           எது எப்படியாயினும் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும். 
அதன் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் ஆதரவு உள்ளவர் 
என்று கருதலாம். வாக்களிக்காமல் வீட்டில் இருந்து அரசியல் 
பேசுவது நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும் இந்திய சாமானியன் 
விவரமானவன். 
            அரசியல் ஆதாயத்துக்கு கட்சி மாறும் அல்லது ஆதரவை 
மாற்றும் பச்சோந்திகளை வாக்காளன் அடையாளம் கண்டு 
கொள்வான். 
            ஜனநாயகம் என்பது ஓட்டுப் போடுபவர்களில்
மிகையானவர் கழுதையைக்  குதிரை என்றால் கழுதை
குதிரையாகத்தான் இருக்க வேண்டும். இது சாபமா வரமா புரிய  
வில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். 
======================================================







                                        
                              

 
 


        



12 comments:

  1. இவரு அமாவசை னா அவங்க அமாவாசைக்கு அடுத்த நாள் அவ்வளவு தான்.

    ReplyDelete
  2. அறிவிக்கப்பட்ட திட்டங்களோ
    சலுகைகளோ வராமல் இருக்க விடமாட்டோம், எப்படிப்
    பெறுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்றனர்.


    ......இந்த "தங்கமலை ரகசியத்தை" எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டுமே....

    ReplyDelete
  3. 1991 - 1996 and 2001 - 2006 Jayalalitha aatchi nenaithu parthaaley .. ayyoo vendam saami ini appadi oru aatchi. !

    ReplyDelete
  4. நல்ல நேரத்தில் கொடுத்த நல்ல அறிவுரைகள் தான்.
    பாராட்டுக்கள்.

    கழுதையோ குதிரையோ, கழுதைபோன்ற குதிரையோ, குதிரை போன்ற கழுதையோ ஏதோவொன்று, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக்கடிக்காமல் இருந்தால் போதும் என்கின்றனர் இந்த அப்பாவி வாக்காளர்கள்.

    நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.

    //....இந்த "தங்கமலை ரகசியத்தை" எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டுமே by சித்ரா //

    சித்ராவுக்கும் எனக்கும் மட்டுமாவது ரகசியமாகக் கூறுங்களேன், அந்தத்தங்கமலை ரகசியத்தை.

    அந்தப்படத்தில் “ராஜா...காது...கழுதைக்காது... என்று ஒரு ரகசியம் ... மிகவும் காமெடியாக வரும் - ஞாபகம் இருக்கிறதா? அதை நினைத்தேன் - இப்போதும் சிரித்தேன். அது மிகவும் நல்லதொரு காமெடி சீன்.

    ReplyDelete
  5. சரியான பதிவு. காலத்தின் தேவை. உணரவேண்டியவர்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
  6. சார்
    தாங்கள் தங்கள் அறிமுகத்தில் குறிப்பிட்டிருப்பதைபோல
    இளமையும் துடிப்பும் மிக்கவராகத்தான் இருக்கிறீர்கள்
    இல்லையெனில் இந்த வயதில் சமூகத்தின்பால்
    இவ்வளவு அக்கறையும் அவலங்களின்பால்
    இவ்வளவு தார்மீக கோபமும் ஏற்பட சாத்தியமே இல்லை
    தயவு செய்து அந்த அக்கினிக் குஞ்சை காக்கும்
    ரகசியம் குறித்துஒரு விரிவான பதிவு அளித்தால்
    அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நிினைக்கிறேன்
    தங்கள் பதிவை எதிர்பார்த்து...

    ReplyDelete
  7. சித்ராவுக்கும் கோபு சாருக்கும் தங்கமலை ரகசியம் ஏதுமில்லை. அந்த கிராமத்தினர் விவரமானவர்கள். அறிவிக்கப்பட்ட நலதிட்டங்கள் கிடைக்கவில்லை என்றால் ஒன்று பட்டுப் போராடிப் பெறுவார்கள். வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    ReplyDelete
  8. கருத்திட்ட ஏழு பேரும் ஒத்த கருத்து கொண்டிருக்கவில்லை. இதுதான் இன்றைய நம் நாட்டின் நிலை. ஜனநாயகத்தில் பெரும்பான்மையினரின் கருத்தே நிலைகொள்ளும்.அது வேண்டியே அனைவரும் வாக்களிப்ப்து அவசியமாகிறது. என் சொந்தக் கருத்து என்னவென்றால் WE GET WHAT WE DESERVE. உதிரிலை, டாம்மாய், சுந்தர்ஜி,நாகசுப்பிரமணியம் அவர்களுக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. ரமணி சாருக்கு, என் இளமைக் காலம், நான் வளர்ந்த சூழ்நிலை, எல்லாவற்றுக்கும் மேலாக எதுவும் செய்ய முடியாத என் கையாலாகாத்தனம் போன்றவற்றின் வடிகால்தான் என் கண்ணோட்டமும் தார்மீகக் கோபமும். அக்னிக் குஞ்சாக இருந்திருந்தால் எல்லாவற்றையும் எரித்து அழித்திருப்பேனே. எழுத்திலாவது என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேனே.
    என்னைப் புரிந்து கொள்ளும் முயற்சிக்கு என் நன்றி.

    ReplyDelete
  10. அந்தக் கிராமத்து மக்கள் போல எல்லாரும் இருந்து விட்டால் போதுமே?

    ஆட்சியாளர்கள் பொய் வாக்குறுதிகள் கொடுக்க தயங்குவார்கள்

    ReplyDelete
  11. அன்புள்ள...

    பணியிறுக்கத்தின் காரணமாக இந்தப் பதிவைப் படித்துவிட்டு சென்றுவிட்டேன். தற்போதுதான் மீண்டும் ஒருமுறை படித்தேன். உங்களின் வயதில் இத்தனை பொறுப்புமிக்க சமூகப் பதிவாக இதனையெண்ணி பெருமையடைகிறேன். சரியாக தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்களின் எண்ணங்களோடு நான் பல சமயங்களில் உடன்பட்டுப் போகிறேன்.இலவசங்கள் எனும் பெயரில் இவர்கள் சோம்பேறிகளையும் கொள்ளைக்காரர்களையும் உருவாக்குகிறார்கள். நம்மிடம் பிடுங்கி நமக்கே தருகிறார்கள். ஆனாலும் படிக்காத ஒரு சாதாரண வாக்காளனுக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது. எந்தக் கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறான். ஆனால் அவன் விருப்பப்பட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்கிறான்.

    சாதி எனும் சாக்கடையில் கிடந்து போதை தெளியாமலும் என்றைக்கும் அறிவு தெளியாமலும் கிடக்கிற கூட்டம் பெருகிக்கொண்டிருக்கிறது. கல்வி வியாபாரச் சாக்கடையில் அமிழ்ந்து கிடக்கிறது. நேர்மையும் நியாயமும் இறுதிக்கட்ட நோயாளியாகத் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவை எல்லாம் மாறி நல்லசமுதாயம் உருவாகும்நிலை சத்தியமானது. உங்களின் பதிவு எல்லோருக்கும் அறிவிக்கப்படவேண்டியது.

    இருள் என்பது நிலையல்ல. ஒளியின் சுடர் வந்தே தீரும். சத்தியப் பாரதம் நிச்சயம் இந்த சமூகக் கேடுகளை எரித்த சாம்பலின் மேல் நிச்சயம் எழும்பும்.

    ReplyDelete