Monday, September 12, 2011

காலத்தின் கோலம்...

காலத்தின் கோலம்....
---------------------------

ஆடவும் பாடவும் ஓடவும் ஒன்றாய்க்
கூடவும் ஆசை இருந்தென்ன லாபம் 
உள்ளத்தின் ஆவல் உடலு ணர்ந்து 
செயல்பட்டி ருந்ததந்தக் காலம்.  

நேற்றைய நாளில் நினைவைக் கடத்தியும் 
கூற்றுவன் எண்ணமென் நெஞ்சினில் நீங்கா 
திருக்கவே அறிந்தேன்நான் காலனின் வரவை 
தவிர்த்தல் இயலா தெனவே. 

பல்வேறு எண்ணங்கள் சிந்தையி லழுத்த 
சொல்லொணாத் துன்பங்கள் ஆட்டிப் படைப்பினு 
மெல்லாம் மறக்கவே செய்ததென் பேரன் 
செல்லம் அவன்சொன்ன சொல். 

படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை 
பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை 
ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்
மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்

( எதுவும் கடந்து போகும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் நான் நலமாக 
இருக்கிறேன் என்று எண்ணும்போது என் உபாதையில் முக்கிய பங்கேற்ற இடுப்பு 
வலி “ நான் எங்கும் போகவில்லை” என்று கூறும் வகையில் அவ்வப்போது 
வந்து வருகையை பதிவிட்டுச் செல்லும் என்று எழுதியிருந்தேன். அவர் இந்த 
முறை வந்து உன்னை விடுவேனா என்று வந்து பாடாய்ப் படுத்துகிறார் வலி 
காரணமாக வலைப் பக்கமே வர முடிய வில்லை. இதையும் மிகவும் சிரமத்
துடன் எழுதுகிறேன். பதிவு முன்பே எழுதியிருந்தது. இப்போது பிரசுரிக்கிறேன். 
முற்றும் நலமான பிறகு ரெகுலராக வருவேன். அதுவரை மற்ற பதிவர்களின் 
பதிவுகளுக்கு பின்னூட்ட மிடாதது பற்றி தவறாக எண்ணவேண்டாம் என்று 
கேட்டுக் கொள்கிறேன். நன்றி.) 
 .  





.    

14 comments:

  1. உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்..

    ReplyDelete
  2. அருமையான கவிதை.

    ReplyDelete
  3. உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது முக்கியம். ஒரேயடியாக கணினி முன் தன்னை மறந்து ஒரே வாக்கில் உட்காருவதைத் தவிர்க்கவும். கணினியின் விசைப்பலகைக்கும் அதற்கு முன்னால் நீங்கள் உட்காரும் இருக்கைக்கும் உள்ள இடைவெளியை அசெளகரியமேற்படுத்தாமல் சரிப்படுத்திக் கொள்ளவும். மருத்துவரைக் கலந்தாலோசித்து தகுந்த சிகித்சை எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டுவனவற்றைத் தவிர்க்கவும். சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். என்ன அவசரம்? உடல் நலன் தேறி நன்கான பிறகு பதிவிட்டால் போயிற்று.

    ReplyDelete
  4. ஜீவி அவர்கள் எல்லாவற்றையும் வெகு அழகாகச் சொல்லிவிட்டார்கள்.

    உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். பதிவுலகம் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை, ஐயா! உங்களுக்காகவே என்றும் காத்திருக்கும். vgk

    ReplyDelete
  5. கவிதை நல்லா இருக்கு. உடல் நிலை நன்கு தெறிய பிறகுவந்து நல்ல பதிவுகலை மீண்டும் கொடுங்கள் வெயிட்டிங்க்

    ReplyDelete
  6. இடுப்பு வலி சாதாரணமானது அல்ல. பல காரணங்களால் வரக்கூடியது.தகுந்த மருத்துவரைக் கலந்து அவர் கூறும் சிகிச்சைகளைக் கடைப்பிடிக்கவும்.

    எக்காரணம் கொண்டும் எந்த விதமான ஆபரேஷனுக்கும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  7. ஐயா உடல் நிலையை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அன்பர்கள் சொன்னது போல் அவசரமின்றி நிதானமாக பதிவிடுங்கள்.

    ReplyDelete
  8. அவரவர் நிலையிலிருந்து அடுத்தவர் நிலையைப் பார்க்க
    அடுத்தவர் நிலைதான் சுகமாக இருப்பது போல் படும்
    எனபதை மிக அழகாகச் சொல்லிப் போகிறது உங்கள் கவிதை
    இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போல
    மனம் கவர்ந்த பதிவு
    உடல் நிலைக்கு முதல் முக்கியத்துவம் தரவும்
    தங்களுக்கு தெரியாதது இல்லை
    விரைவில் முழு குணமடைந்து முன்புபோல்
    பதிவுலகைக் கலக்க வேணுமாய் அன்புடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
  9. ஐயா தங்கள் உடல் நிலையை முதலில் நன்றாகக் கவனித்துக் கொள்ளவும். பதிவுகளும் பின்னூட்டங்களும் பற்றி கவலை கொள்ள வேண்டாம். உடல் நிலை சரியான பின்பு பதிவுகள் இடலாமே.

    நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் முந்தைய மலர்ச்சியோடு இணைய வலம் வர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. //படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
    அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
    தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை
    பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை
    ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்
    மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்//

    மிக அழகான உண்மை வாசகம். இது இன்றைய மழலைகளின் மன வாசகம்.

    ReplyDelete
  11. உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது முக்கியம். ஒரேயடியாக கணினி முன் தன்னை மறந்து ஒரே வாக்கில் உட்காருவதைத் தவிர்க்கவும். கணினியின் விசைப்பலகைக்கும் அதற்கு முன்னால் நீங்கள் உட்காரும் இருக்கைக்கும் உள்ள இடைவெளியை அசெளகரியமேற்படுத்தாமல் சரிப்படுத்திக் கொள்ளவும். மருத்துவரைக் கலந்தாலோசித்து தகுந்த சிகித்சை எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டுவனவற்றைத் தவிர்க்கவும். சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். என்ன அவசரம்? உடல் நலன் தேறி நன்கான பிறகு பதிவிட்டால் போயிற்று.

    ReplyDelete
  12. முற்றும் நலமான பிறகு ரெகுலராக வருவேன்//



    சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். என்ன அவசரம்? உடல் நலன் தேறி நன்கான பிறகு பதிவிட்டால் போயிற்று.

    ReplyDelete
  13. /// படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
    அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
    தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை
    பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை
    ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்
    மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்
    ///

    ரசித்தேன் ஐயா...

    From : http://gmbat1649.blogspot.in/2013/06/blog-post.html

    01.06.2013

    ReplyDelete
  14. ஆஹா.... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இளங்கன்று உணர்ந்ததோடு உணர்த்தவும் செய்கிறதே... பாராட்டுகள் இருவருக்கும்.

    ReplyDelete