Monday, January 16, 2012

நாவல் பிறந்த கதை...

             நாவல் பிறந்த கதை
             ----------------------------
பதிவுலகிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் கூட முடியவில்லை
என் சுய திருப்திக்காக எழுதிக் கொண்டிருந்த எனக்கு உடல்
நலமில்லாமல் தேறி வந்து கொண்டிருந்தபோது இம்மாதிரி
வலையில் எழுத முடியும் என்ற தகவல் ஆனந்தவிகடனில்
வெளியான ஒரு கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்
இப்பொழுதும் எனக்கு கணினி பற்றிய ஞானம் மிகவும் குறைவு.
ஏதோ எழுதுகிறேனே தவிர இன்னும் பல சூட்சுமங்கள் பிடி
படவில்லை

1960-/ களில் எழுதத் துவங்கினேன். எந்த பத்திரிகைக்கும்
அனுப்பியது கிடையாது. காதல் வசப் பட்டிருந்தபோது கவிதை
எழுத முயற்சித்தேன். நாடகங்கள் பல எழுதி இயக்கி நடித்திருக்
கிறேன். சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 1966-/ ம் வருடம்
கலைமகள் இதழில் நாராயணஸ்வாமி அய்யர் நினைவு நாவல்
போட்டி அறிவித்திருந்தார்கள். நான் ஏன் பங்கு பெறக்கூடாது
என்னும் எண்ணம் எழவே, ஒரு நாவல் எழுதினேன். பெற்ற
அனுபவங்களும் என் மன அபிலாக்ஷைகளுமாக கருஉருவாக்கி
ஒரு நாவல் எழுதினேன். அதை தபாலில் போதிய ஸ்டாம்பு
களுடன் ( அவர்கள் திருப்பி அனுப்ப ஏதுவாக )பதிவுத் தபாலில்
Ack .Due என்னும் முறையில் அனுப்பினேன். ஒரு வாரம் கழிந்தும்
அவர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக ACK. DUE FORM
அவர்கள் கையெழுத்துடன் வராததால் தபால் நிலையத்தில்
விசாரித்தேன். என்ன கொடுமை.!அது அனுப்பப்படாமல்
அங்கேயே இருந்தது. கடைசி நாளும் முடிந்திருந்தது. தபால்
நிலையத்தாருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். ஒரு மாதத்
துக்கு மேல் உழைத்தது வீணாகி இருந்தது. இப்போது அதனை
தூசு தட்டி என் வலைப் பூவில் பதிவிடுகிறேன். ஆதரவு இருக்கும்
என்ற நம்பிக்கையில் வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவிட
உத்தேசம் . முன் கூட்டியே ஆதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
--------------------------------
  

16 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. "நாவல் பிறந்த கதை..." எதிர்பார்க்கவைக்கிறது..

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. நாவல் பிறந்த கதையே நாவல் பழமாக இனிக்கிறது, காத்திருக்கிறோம் அய்யா.

    ReplyDelete
  4. பிரசவித்த நாவலை வெளி உலகிற்கு காட்டுங்கள்/நன்றி வணக்கம்.

    ReplyDelete
  5. ஏன் அனுப்பவில்லையாம்? காரணம் சொன்னார்களா?
    உழைப்பு வீணாகாது சார். அங்கீகாரம் வேண்டுமானால் காலம் தவறியிருக்கலாம். அவர்களை மன்னித்து விடுங்கள்.
    நாவல் படிக்க ஆவல்.

    ReplyDelete
  6. அறுபதுகளின் பின்புலத்தோடு நாவலா? ஆகா!

    ReplyDelete
  7. 60-களில் என்றால், உங்களுக்கு கிட்டத்தட்ட இருபது. 60-களில் எல்லாம் 'கலைமகள்' ஒரு அதாரிட்டியாக கொடி கட்டிப் பறந்த காலம். அகிலன் போன்றோர் கலைமகளில் எழுதிய காலம். பிற்காலத்தில் தமிழில் மிகப் பிரபலமானவர்களெல்லாம் எழுத பாலபாடம் கற்ற காலம் அது.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தப் பத்திரிகைக்கு அனுப்ப நீங்கள் தீர்மானித்ததே உங்கள் அளவில்
    எழுதுகின்ற முயற்சியில் பிற்கால பிடிப்புக்கான ஒரு அச்சாரம் தான்.
    இன்றைக்கும் எழுத வேண்டுமெங்கிற எண்ணம் மனதில் நிலைபெற்றிருப் பதற்கு அப்படியான முயற்சிகள் தாம் ஆரம்பப் படிக்கட்டு.

    அந்த வருட அந்த நாவல் போட்டியில் யார் முதல் பரிசு பெற்றார்கள் என்று தங்களுக்கு நினைவிருக்கா?..

    ReplyDelete
  8. ஐயா,உங்கள் நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. ஜீவி சொல்வது 100% சரி.

    ReplyDelete
  10. காத்திருக்கிறோம்.காதை தீட்டி கதைக் கேட்க ..

    ReplyDelete
  11. திருவாள்ர்கள் ரத்னவேல்,ஏ.ஆர்.ராஜகொபாலன். விமலன்,அப்பாதுரை, ஜீவி,உமேஷ் ஸ்ரீநிவாசன், காளி தாஸ், மற்றும் திருமதி. இராஜராஜேஸ்வரி அனைவருக்கும் என் நன்றிகள்.
    சிறுகதையே சற்று நீளமாக இருந்தால் படிப்பர்ர்களோ என்னும் பயம் எனக்குண்டு. இருந்தும் நாவல் தொடராக பதிவிட்டால் படிக்கலாம் என்னும் நப்பாசையும் இருந்தது. அதுவே நாவல் பிறந்த கதை எனும் இப்பதிவுக்குக் காரணம் வலையுலகப் பிதாமகர்களின் உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் மனதுக்குத் தெம்பு தருகிறது.
    இத்ல் எழுதியுள்ளது போல் ஒரு லோயர் மிடில் க்லாஸ் இளைஞனின் வாழ்வும் அபிலாக்ஷைகளுமே இக்கதையின் மையக் கரு.
    நாவல் போட்டியில் பரிசு பெறு வேன் என்ற நம்பிக்கையில் எழுதவில்லை. கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களுடன் நானும்ம் ஓடுவதுதான் எண்ணம் . போட்டியில் யார் வெற்றி பெற்றாரென்று தெரியவில்லை.
    இத்தொடரின் முதல் அத்தியாயம் இன்று 18-ம் தேதி பதிவிடுகிறேன். இக்கதையை எழுதும்போது எனக்கு வயது 27. மீண்டும் நன்றியுடன்..

    ReplyDelete
  12. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,
    தங்களது பொது நல நோக்குடனான பல பதிவுகளை திறந்து பார்த்தேன், சில வற்றைப் படித்தேன். நாவல் பிறந்த கதையே ஒரு கதைக்கான சுவை (சோகச்சுவை)யுடன் இருக்கிறது.

    2012ம் ஆண்டு இலக்கிய காதலர்களை காதல் கொள்ள வேண்டி உங்களது கன்னி நாவல் 50 வருடங்களாக கன்னி கழியாமல் காத்திருந்திருக்கிறாள். அவளுக்காக காத்திருப்போர் வரிசையில் நானும்.

    ReplyDelete
  14. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தபால்துறையின் மெத்தனத்தைப் புகார் செய்திருக்கலாமோ? புகார் செய்திருந்தாலும், பலனில்லை என்பது வேறு விஷயம். ஆனால் மற்றப் பததிரிகைகளில் முயன்று பார்த்திருக்கலாமோ? நாவல் பிறந்த கதை படிச்சாச்சு. நாவலைப் படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
  15. மின்னல் வரிகள் தளத்தில் நீங்கள் கொடுத்திருந்த இணைப்பைத் தொடர்ந்து வந்தேன்.
    உங்கள் நாவலையும் படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  16. தபால் துறை அந்தக் காலத்திலேயே படுத்தியிருககிறதா இப்படி..? சுவாரஸ்யமான பின்புலம்தான் உங்கள் நாவல் பிறந்த கதை! நாவல் போட்டிக்கு அனுப்ப நினைத்ததை பின்னர் வெளியிட்டுள்ளீர்கள். அவசியம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் நாவலைப் படித்து முடித்து விடுகிறேன். மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete