Saturday, February 2, 2013

கடவுளும் சொர்க்கமும்..!


                                       கடவுளும் சொர்க்கமும்.
                                        ---------------------------------



ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேடி நரேந்திரர் வந்தபோது அவர் பரமஹம்சரிடம் கேட்ட கேள்வி “ நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா.?என்பதாகும். “ நான் பார்த்தது மட்டுமல்ல, உனக்கும் காட்டுகிறேன். என்றாராம். அதன்படி நரேந்திரர் தலைமேல் கை வைத்ததும் அவருக்கு என்னென்னவோ உணர்ச்சிகள் தோன்றினவாம். இது எப்போதோ படித்தது. டாக்டர் கந்தசாமி அவர்கள் என் பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்ட்தில் இரண்டு நாசித் துவாரங்களையும் மூடி விட்டால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று அவர் எங்கோ படித்ததாக எழுதியிருந்தார்.. அது என் பால்ய வயதில் நடந்த ஓரிரு சம்பவங்களை நினைவு படுத்தியது. எனக்கு ஏழு வயதிருக்கலாம். அரக்கோணத்தில் இருந்தோம். ஒரு நாள் ஒரு பையன் கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா என்று கேட்டான். நான் மேலே வானத்தைக் காட்டி அங்கிருக்கிறார் என்றேன். பார்க்க முடியுமா என்று கேட்டான். நான் வானம் வெகு தொலைவில் இருப்பதால் பார்ப்பது கடினம் என்றேன். அருகிலிருந்த ஒரு பெரிய பனை மரத்தைக் காட்டி அதன் மேலிருந்து பார்த்தால் கடவுள் ஒரு வேளை தெரியலாம் என்றான். நான் ஏதும் யோசிக்காமல் விடு விடென மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று விட்டேன். கடவுள் தெரியவில்லை என்று கத்தினேன். ‘இதைவிட உயரமான மரத்தின் மேல் ஏறினால் தெரியும் என்றான்..எப்படியோ மரத்தின் மேல் ஏறிவிட்டேனே தவிர இறங்கத் தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் மரத்தின் உச்சியிலிருந்து சருங்கத் துவங்கினேன். மரத்தைக் கட்டி அணைத்துச் சருங்கினதால் மார்பெல்லாம் தோல் உரிந்து ஒரே ரணம். ஏறத்தாழ ஒரு வாரகாலம் அவதிப்பட்டிருப்பேன்




ஒரு முறை பட்டும் புத்தி வரவில்லை. இன்னொரு முறை நண்பன் ஒருவன் கடவுளைப் பார்க்க இன்னொரு வழி சொன்னான். சொக்காயின் ஒரு பாகத்தை ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டு அந்த விரலால் நெற்றியில் நூற்றியெட்டு முறை அழுத்தித் தேய்க்க வேண்டும் அப்படிச் செய்தால் கடவுள் பிரத்தியட்ச மாவார் என்றான். நான்தான் பலி ஆடு ஆயிற்றே. ! நன்றாகத் தேய்த்து நாமம் போட்ட மாதிரி நெற்றியை ரணமாக்கியதுதான் கண்ட பலன். இதற்கும் மேல் பெற்றோரிடம் வாங்கிய அடியும் திட்டும் எக்ஸ்ட்ரா.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால் கந்தசாமி ஐயாவின் பேச்சைக் கேட்டு இரண்டு நாசித்துவாரங்களையும் மூடிக்கொண்டு சொர்க்கத்துக்குப் பயணம் செய்ய என்னை மாதிரி யாராவது அசடுகள் முயற்சிக்கக் கூடுமோ என்ற பயம்தான்.
 ------------------------------------------------- .            




 

13 comments:

  1. உங்களோட கடவுள் அனுபவம் நல்லாவே இருக்கு! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. உங்களுடைய கடவளைப் பார்த்த அனுபவம் நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள் . நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை கசப்பு மருந்தைத் தேனில் குழைத்துக் கொடுத்தது போல் சொல்லி விட்டீர்கள்.

    நன்றி பகிர்விற்கு,

    ராஜி

    ReplyDelete
  3. இருக்கும் இடத்தை சொர்க்கமாக நினைக்கா விட்டால் அல்லது மாற்ற தெரியா விட்டால், அப்படி இரண்டு நாசித் துவாரங்களையும் மூடி விடலாம் என்று விளையாட்டாக சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  4. கடவுளைத்தேடி

    இளவயதில் .. புண்பட்டிருக்கிறீகள்

    இப்போது ... பண்பட்டிருப்பீர்கள் ...

    ReplyDelete
  5. நானும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதை தான் நினைத்தேன். நானும் அதையே வழி மொழிகிறேன் சார்.

    உங்கள் இளமைக்காலம் வெகுளித்தனம்.

    ReplyDelete
  6. யாரும் அப்படி அவசரப்பட்டு இரண்டு நாசித்துவாரத்தையும் மூடி விடாதீர்கள். தீர யோசித்து, நான்கு பேரைக் கேட்டுவிட்டு, பிறகு அப்படி செய்யுங்கள்.

    ReplyDelete
  7. இன்னொரு வழி சொல்ல மறந்துட்டேன். சொர்க்கத்திற்கு போய்ட்டு வந்தவங்க யாராச்சும் இருப்பாங்க. அவங்களைக் கண்டு பிடிச்சுக் கேட்டா கரெக்ட்டா வழி சொல்லுவாங்க.

    ReplyDelete
  8. எல்லோரும் கடவுளைத் தேடித் தேடி அலைகிறோம். நான்தான் கடவுள் என்று அவர் வரவே மாட்டேன் என்கிறார்.

    ReplyDelete

  9. @ சுரேஷ்
    @ ராஜலக்ஷ்மி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ கோமதி அரசு.
    @ டாக்டர் கந்தசாமி.
    @ தி. தமிழ் இளங்கோ
    ஏதோ ஒரு பொறியில் எண்ணங்கள் துவங்குகின்றன. அது மாதிரித்தான்
    இந்தப் பதிவின் துவக்கமும் அமைந்தது. ராஜி அவர்களுக்கு நான் கடவுளைத் தேடிய அனுபவம்தான் கொடுத்திருக்கிறேன். கடவுளைக் கண்ட அனுபவம் அல்ல. ஏழெட்டு வயசுகளின் , கோமதி அரசு குறிப்பிட்டது போல, வெகுளித்தனத்தில் , இராஜ ராஜேஸ்வரி சொன்னது போல் புண்பட்டேன். ஆனால் அந்தத்தேடலின் முடிவில் ( முடிவா.?) பண்பட்டதாகவே நினைக்கிறேன். தமிழ் இளங்கோவுக்கு , நான் கடவுளைத் தேடுவதை ச்விட்டு விட்டேன் ஏன் என்றால் என்னிஉம் . எல்லோரிலும் அவரைக் காண்கிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. வைகுண்ட ஏகாதசியன்னிக்கு பெருமாள் கோவிலுக்குப் போனா சொர்க்கவாசல் திறக்கும்னு சொல்லுவாங்க ஐயா! நான் ஏழெட்டு வாட்டி சொர்க்கத்துக்குப் போயிருக்கேன். :-)

    ReplyDelete
  11. சொர்க்கமெங்கே சொர்க்கெமெங்கே
    என்று கேளு

    அது இங்கிருக்கு இங்கிருக்கு
    என்று சொல்லு !


    கடவுளை மற
    மனிதனை நினை !

    ReplyDelete
  12. ஹிஹி.. நானே உங்களைக் கேக்கலாம்னு இருந்தா நீங்களே கடைசி வரில எழுதிட்டீங்க.

    ReplyDelete
  13. மரத்திலந்து இறங்கி மாரைக் கிழிச்சிக்கிட்டீங்களா.. படிக்கிறப்பவே பகீர்னு ஆவுதே சார்!

    ReplyDelete