Tuesday, March 12, 2013

மனசாட்சி ( நாடகம் )


                                                      


                                       மன சாட்சி ( நாடகம் )
(ான் மாட்சி என்றிறுகை ஒன்றைப் பிவிட்டிருக்கிறேன். ு 1970-கில் எழியு அையே மேடை நாடாகும் அரங்கேற்றி இருக்கிறேன். சிறுகை நாடிவம் பூணுவை இங்கு பிர்கிறேன் ) 
பாத்திரங்கள்:-
1.)      ஷீலா-------------- கதைக்கு நாயகி.
2.)      ரவி  -------------- ஷீலாவின் கணவன், கதாநாயகன்.
3.)      கனகசபை ----------ட்ரஸ்டி-1
4.)      நவகோடி  ----------ட்ரஸ்டி-2
5.)      சபாபதி  ------------கனகசபையின் மகன்
6.)      வேதா  -------------கனகசபையின் மனைவி
7.)      பத்திரிக்கை நிருபர்.
8.)      கணபதி -------------வேலையாள்.

                 ( மற்றும் பலர் )

                                   A DRAMA FROM---G.M.BALASUBRAMANIAM. 

காட்சி-1    இடம்- ஷீலா வீடு.
பாத்திரங்கள்ஷீலா ,ரவி.
(திரை உயரும்போது பின்னணியில் இடியுடன் மழை. ஷீலா பீதியுடன் உட்கார்ந்திருக்கிறாள். கர்ப்பவதி. அவளுக்கு திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு வருகிறது. அடிவயிற்றைப் பிடித்துக் கொள்கிறாள். அவள் மனம் பேயாய் அலைக்கழிக்கிறது. )

ஷீலா...! நீ இருக்க வேண்டிய நிலை என்ன...? இருந்த முறை என்ன.? சே...நீயும் ஒரு பெண்ணா..?

இந்த நிலையில் இதைவிட வேறென்ன செய்திருக்க முடியும்.? மனசாட்சிக்கு விரோதமில்லாமல்தானே இதெல்லாம் நடந்திருக்கிறது?

மனசாட்சி..........ஹஹஹஹ.ஹா.மனசாட்சி.....

......ஆஆ....ஐயோ.....
..( வலியால் துடிக்கிறாள். அதைக் கண்டு கொண்டே வரும் ரவிமெள்ள மனம் பேதலிக்கிறான்.அவன் ஷீலாவை மெள்ள நெருங்குகிறான். அவள் அவனைக் கண்டு பயந்து எழுந்து ஓடுகிறாள். அவன் அருகில் வரக் கால் தடுக்கிக் கீழே விழுகிறாள். வீல் என்றுக் கூக்குரலிடுகிறாள், மயங்கிச் சாய்கிறாள். சிறிது நேரம் செய்வதறியாத ரவி கீழே இரத்த வெள்ளத்தில் இருக்கும் ஷீலாவைப் பார்க்கிறான். பிறகு வெறி பிடித்துச் சிரிக்கிறான். )
                            ( திரை )     (தொடரும்)                 மன சாட்சி ( நாடகம் )

காட்சி-2    இடம்:- க்ளப் ஹவுஸ்

பாத்திரங்கள்:- ஷீலா, ரவி மற்றும் பலர்.(திரை உயரும்போது, shadow scene  ல் பலர் நின்று பேசிக்கொண்டும் குடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் இரண்டு ஓரங்களில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மெல்ல ஒருவரை ஒருவர் நெருங்குகிறார்கள். பின்னணியில் இசை துவங்குகிறது. இருவரும் ஒருவரைஒருவர் அணைத்து ஆடத் துவங்குகிறார்கள். மேடையில் வெளிச்சம் பாய )
  ..

ரவி.:- OH..! YOU ARE BEAUTIFUL….!

ஷீலா.:- OH.! YOU ARE MARVELOUS.!

( இசை நின்றதுமொருவரை ஒருவர் பிடித்திருந்த பிடியும் நழுவ திடீரென ரவி சற்றே விலகிக் கொள்கிறான். பிறகு மெல்ல ஏக்கப் பார்வையுடன் சற்றே திரும்ப )

ஷீலா.:- OH.! FEELING GUILTY.?குற்ற உணர்ச்சியா.? ( கலகலவென நகைத்து) ஓ..... மறந்து விட்டேனே.... ஐ யாம் ஷீலா.....
ரவி.:- ( தெளிவு பெற்று ) ஐ யாம் ரவி..... பாருக்குப் போவோமே....
ஷீலா.:- ஐ டோண்ட் மைண்ட்....
ரவி.:-  வைன்...?

ஷீலா.:- நோ.! தாங்க்ஸ்.சாஃப்ட் ட்ரிங்க்ஸ் ப்ளீஸ்...( பெற்றுக் கொண்டு) மிஸ்டர் ரவி....இன்று நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா..! உலகமே உல்லாசபுரி போலத் தோன்றுகிறது. மனத்தின் அடித்தளத்திலிருந்து ந் எங்கோ இருந்து கொண்டு எனக்குத் தெரியாமலேயே உங்களை நான் அழைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களைப் பார்த்தவுடனேஎன் மனசு லேசாவது மாதிரி உணர்வேனா.? என்ன ரவி... நான் பாட்டுக்குப் பேசிட்டே போறேன்...நீங்க என்னடான்னா.....
ரவி.:- கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபல உணர்வே உனக்குத்தான் பெண் என்று பெயர்....
ஷீலா.:- ஹாங்....
ரவி.:- நான் சொல்லலை. ஷேக்ஸ்பியர் சொன்னது இப்போ நினைவுக்கு வந்தது.
ஷீலா.:- அவர் சொன்னது தவறு. பெண்களுக்கு சபல உணர்வே கிடையாது.
ரவி.: - பெரியவங்களும் அறிஞர்களும் சொன்னது அனுபவத்தின் பேரில் கண்ட உண்மைகள். தவறுன்னு எப்படிச் சொல்ல முடியும். ?
ஷீலா.:- நிரூபிச்சுக் காட்ட என்னால முடியும்.
ரவி..:- வீணா சவாலெல்லாம் எதுக்கு ஷீலா.? மனோரம்யமான இந்த வேளையிலே மனசுக்கு இதம் அளிக்கும் விஷயங்கள் இல்லையா என்ன..?சரி. உன்னைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே.
 ஷீலா.:- என்னைப் பற்றி எல்லாமே சொல்கிறேன் வாருங்கள்.
                           ( திரை )                     (தொடரும்)    .    


 

 


.
 

12 comments:

 1. ஷீலா சொல்வதை... தொடருங்கள் ஐயா...

  முதல் பத்தி எழுத்து சரியாக தெரியவில்லை... அதனால் இதோ அவை :

  (நான் மனசாட்சி என்ற சிறுகதை ஒன்றைப் பதிவிட்டிருக்கிறேன். அது 1970-களில் எழுதியது அதையே மேடை நாடகமாகவும் அரங்கேற்றி இருக்கிறேன். சிறுகதை நாடக வடிவம் பூணுவதை இங்கு பகிர்கிறேன்)

  ReplyDelete
 2. ஷீலா சொல்லும் கதைக்கும், முன் காட்சிக்கும் சம்பந்தம் இருக்குமோ!

  ReplyDelete

 3. பொதுவாக தொடர் எழுத்து என்றால் படிக்கத் தயங்கும் பதிவர்களிடையே உற்சாகமூட்டும் பின்னூட்டம் எழுதும் தனபாலன் கோமதி அரசுக்கு என் நன்றி. முதல் காட்சி ஒரு நாடக உத்தி. நிச்சயம் கதையயோடு தொடர்பு உண்டு. மிக நீளமான தொடர் அல்ல. தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன். இது ஒரு மனோதத்துவக் கதை. இந்த நாடகம் மேடையேற்றியது பற்றி முன்பே பதிவிட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 4. அடுத்த காட்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.

  ReplyDelete
 5. மனோரம்யமான இந்த வேளையிலே மனசுக்கு இதம் அளிக்கும் விஷயங்கள் இல்லையா என்ன..?

  எதிர்பார்க்கிறோம் அடுத்தபகுதியை..!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நாடக மேடையேற்றத்தின் போது இடிக்கும், மழைக்கும் என்ன செய்தீர்கள்? அதாவது அந்த காலகட்டத்தில், உங்கள் நடைமுறை அனுபவத்தில்?..

  ReplyDelete

 8. @ ஜீவி, வருகைக்கு முதலில் நன்றி. மேடை அமைப்பில் வீட்டுக்கு இரு ஜன்னல்கள் இருப்பதுபோல் காட்டியிருந்தோம். இரு ஜன்னல்களில் இருந்தும் மெலிதான ஜிகினா சுருள்களை நிறையக் கட்டித் தொங்க விட்டோம். இடிக்காக அந்த ஓசையை டேப் செய்து வைத்தோம். திரை உயரும்போது மேடையில் ஒளியை சிறிதாக்கி வைத்துஅதை ஆன் ஆஃப் செய்து ஜன்னலுக்கு மட்டும் நல்ல ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவோம். சிறு காற்றுக்கு ஃபேன் உபயோகித்து, அந்த ஜிகினா சுருள்கள் ஆடும்போது மழை விழுவது போல் தெரியும். ஒலியும் ஒளியும் கட்டுப்படுத்தி மழை மின்னல் இடி போன்றவை இருப்பதுபோல் காட்டினோம். நானே எதிர்பார்க்காத அளவுக்கு தத் ரூபமாக வந்தது. மேடை நாடக அனுபவங்கள் மீண்டும் நிழலாடுகிறது நன்றி.

  ReplyDelete
 9. உங்கள் இடி-மின்னல் விளக்கம் எனக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.அந்தக் காலத்து நவாப் ராஜமாணிக்கம் நாடகங்களிலிருந்து மனோகர் நாடகம் வரை தவறாது பார்த்தவன் நான். இந்த கியாதி பெற்ற நாடகக்காரர்களே அந்த ஒரிஜனல் எஃபெக்ட்டை கொண்டு வருவதற்கு படாதபாடு பட்ட பொழுது
  சிறிய அளவிலான வசதிகளைக் கொண்டு உங்களைப் போன்றவர்கள் சாதித்துக் காட்டியதெல்லாம் அற்புதம் என்று தாராளமாகச் சொல்லலாம்.
  பட்ட சிரமம் அத்தனையும் ஜனங்களின் கைதட்டலை நேரில் கேட்டு அனுபவிக்கும் பொழுது பஞ்சாய்ப் பறந்து விடும், இல்லையா? மேடையேற்றிய நாடகங்களை விட அவற்றை மேடையேற்றுவதற்குள் பெற்ற அனுபவங்கள் எல்லாக் காலங்களிலும் சுவாரஸமானது தான்.


  ReplyDelete
 10. ஷீலா சொன்னது சரி - சேக்குபியரு சொன்னது வேறே contextல்

  ReplyDelete
 11. இடி மின்னல் எபக்டுக்கு டூயூப் லைட் ஸ்னேர் டர்ம்ஸ் வைத்து பள்ளிக்கூடங்களில் நாடகம் போட்டிருக்கிறோம். இந்த உத்தி ஒரு ஸ்டெப் மேலே.

  ReplyDelete
 12. இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். கதையின் முதலிலேயே முடிச்சு. அதை அவிழ்க்கும் நுனி எங்கு புலப்படுமென்று தெரியவில்லை. ஆவலுடன் தொடர்கிறேன்.

  இடி மழை மின்னல்களுக்கான மேடை அமைப்பு வியக்கவைத்தது. எத்தனை சிரத்தை எடுத்து செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete