Tuesday, January 27, 2015

விடுப்புக்கு முன்


                                             விடுப்புக்கு முன்
                                              __________________
      


ஓய்வில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவனுக்கு விடுமுறையா என்று உங்களில் சிலர் முணுமுணுக்கலாம். என் வீட்டில் 1985-ம் ஆண்டில் கட்டியது, சில மராமத்து வேலைகள் தேவைப் பட்ட்து. தரையில் பதிக்கப் பட்டிருந்த மொசைக் தளம் பல இடங்களில் பெயர்க்கப்பட்டு பல் இளிக்க ஆரம்பித்து விட்டது. ரிபேர் செய்ய கை வைக்கப் பயமாக இருந்தது.நான் அந்தக் காலத்து மனுஷன். செலவின் எஸ்டிமேஷன் கேட்டுக் கேட்டே தளளிப்போட்டுக்கொண்டிருந்தேன். நான் வீட்டைக் கட்டியபோது செய்த செலவை விட ரிபேர் செலவு அதிகம் ஆகும் என்று தோன்றியது. இருந்தாலும் நாங்கள் வசிக்கும் வீடாவது எங்களைப்போல் இல்லாமல் பொலிவுடன் இருக்க வேண்டாமா.  செலவை விடப் பிரச்சனை என்னவென்றால்  வேலை முடியக் குறைந்தது பதினைந்து நாட்கள் கணக்கிட்டனர். அந்த சமயம் நாங்கள் எங்கு போவது.?பிள்ளைகளிடம் போகலாம் .ஆனால் வீடு முழுவதையும் வேலையாட்கள் பொறுப்பில் விட்டுச்செல்ல முடியுமா.வீடு பூராவும் ஏகப் பட்ட பொருட்கள். அவற்றை இடம் மாற்றி மாற்றி வைத்துத்தான் வேலை செய்ய வேண்டும் காலி செய்ய முடியாது. பிறகென்ன துணிந்து விட்டோம். எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு எல்லா சிரமங்களையும் அனுபவிப்பது என்று தீர்மானித்தோம். ஒன்று சொல்ல வேண்டுமே. எங்களால் ஓடியாடி எந்தப் பொருளையும் வாங்கி வரமுடியாது. நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒப்பந்ததாரர் ஒருவரை எங்களுக்குத் தெரியும். அவருக்கும் எங்கள் மீது அன்பும் பணிவும் உண்டு. எல்லா வேலைகளுக்கும் அவரே பொறுப்பு. வீட்டில் எல்லா இடங்களிலும் மொசைக் தரையை மாற்றி விட்ரிஃபைட் டைல்ஸ் போட வேண்டும்வீட்டின் உட்புறம் முழுவ்தும் சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வேண்டும். சமையலறையில் இப்போது இருந்த கடப்பாகல்லை எடுத்து கிரானைட் பதிக்க வேண்டும் பாத்திரம் கழுவும் இடத்தில் ஸ்டீல் சிங்க் பதிக்க வேண்டும். அதன் பின் அவ்வப் போது தோன்றும் சில்லரை வேலைகளையும் முடிக்க வேண்டும்.நாங்கள் வீட்டை விட்டு எங்கும் போக மாட்டோம். மிகக் குறைந்த தொந்தரவே தரலாம் என்று ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் வேலையை ஒப்படைத்தோம். சுருங்கச் சொல்லப் போனால் பழைய வீட்டைப் புதுப்பிக்க வேண்டும்.

வீட்டு வேலைகளின் போது சில புகைப் படங்கள் எடுத்திருந்தேன் 
வீட்டின் பல இடங்களில் மொசைக் தரை  இப்படி இருந்தது.
 
சுவர் ஓரங்களில் இருந்த sikrting tiles களை உடைத்து எடுத்து  இப்படி தயார் செய்ய வேண்டி இருந்தது
தரையெல்லாம் acid wash
 
இருந்த பொருட்களை அங்கும் இங்கும் அப்புறப்படுத்தி செய்ய வேண்டிய வேலை.
 
 புதிய விட்ரிஃபைட் டைல்ஸ் பதித்த பிறகு
சாப்பாட்டு+ பூஜை அறையில் படுக்கை
அவ்வப்போது இடம் மாற்றம் செய்யப் படும் பொருட்கள் -
ஹாலில் டைல்ஸ் பதிக்கப்படும்போது 
இம்மாதிரி வீட்டின் எல்லா அறைகளிலும் செய்யும்போது அறைக்கதவுகளை எடுத்து அடியில் சீவி உயரத்தைக் குறைக்க வேண்டி வந்தது. பல பொருட்கள் வீடின் போர்டிகோவிலும், வீட்டின் பின் புறத்திலும் அனாதையாக பல நாட்கள் இருந்தன. டைல்ஸ் பதிக்கும் வேலை முடிந்ததும் பெயிண்ட் வேலை செய்யும் போதும் இதே அவஸ்தை. எல்லா முடிந்து அப்பாடா என்று அமர்வதற்குள் போதுமடா சாமி என்றாகி விட்டது. எல்லாக் கஷ்டங்களுக்குப்பின் வீடு ஒரு புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பது சந்தோஷம் தருகிறது. இத்தனைக் கஷ்டஙளும் அனுபவித்த எங்களுக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று என் மக்கள் கூறினர். என் மூத்த மகன் வந்து எங்களை சென்னைக்கு அழைத்துப் போவதாகக் கூறினான், அது பற்றி பின்னர்....... 

35 comments:

  1. கனத்த வேலை தான் நடந்திருக்கின்றது..

    எனினும் மீண்டும் தங்கள் கைவண்ணம் கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. வீட்டைப் பராமரிப்பது என்பது ஆனையைக் கட்டித் தீனி போடுவது போல. சென்னை, அம்பத்தூர் வீட்டில் எல்லாமும் அனுபவித்திருக்கிறோம். மற்றபடி உங்கள் வீட்டு வேலைகள் நல்லபடி முடிந்து மீண்டும் இணையத்துக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் சென்னையில் இருந்ததாகக் கேள்விப் பட்டேன். எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் சொன்னார். :)

    ReplyDelete

  3. எப்படியோ வீட்டு வேலை முடிந்தது வரை சந்தோஷமே... அன்று தாங்கள் வீடு கட்டுவதற்க்கு செய்த செலவை விட இன்று ரிப்பேர் செலவு கூடுதல்தான் செய்திருப்பீர்கள். காரணம் நமது ஆட்சியாளர்களின் திறமை.
    ஐயா தங்களது புகைப்படம் உள்ள எனது பதிவு // பேசு மனமே பேசு //
    இணைப்பு கீழே..

    http://www.killergee.blogspot.com/2015/01/blog-post_20.html

    ஐயா எனது நண்பரின் தங்களது நூல் விமர்சனம் இணைப்பு கீழே

    http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_26.html

    ReplyDelete
  4. சென்ற வருடம் போல விடுப்பில் ஒரு மாறுதலுக்கு சென்னை வருகிறீர்கள் என்று நினைத்தேன். ஹெவி வொர்க் போல... சென்ற வருடம் போலவே ஒரு விசிட் அடிக்க எண்ணி, முடியாமலேயே போனது.

    ReplyDelete
  5. சென்ற வருடம் போல விடுப்பில் ஒரு மாறுதலுக்கு சென்னை வருகிறீர்கள் என்று நினைத்தேன். ஹெவி வொர்க் போல... சென்ற வருடம் போலவே ஒரு விசிட் அடிக்க எண்ணி, முடியாமலேயே போனது.

    ReplyDelete
  6. கடினமான வேலை தான். நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம் என்றாலும் அசதி தரும் வேலை!

    ReplyDelete
  7. வீட்டு வேலைகளை ஆரம்பித்தால் அதை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் ஐயா...

    எப்படா அப்பாடான்னு உக்காருவோம்ன்னு வரும்..

    வாழ்வின் விளிம்பில் பற்றி சில வரிகள் என் தளத்தில்...

    http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_26.html

    (எனக்கு முன்னர் அதற்கான இணைப்பை அனுப்பிய கில்லர்ஜி அண்ணாவுக்கு நன்றி)

    ReplyDelete
  8. புதிய வீடு கட்டுவதை விட
    மராமத்துப் பணியே கடினமானது
    ஆயினும் புதுப்பொலிவுடன் வீட்டைப் பார்க்க
    வரும் சந்தோஷம் மிக அலாதியானதே
    படங்களுடன் பகிர்வு மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மராமரத்துப் பணிகளைப் பார்க்கும்போது வாடகை வீட்டில் இருந்துவிடலாம் போல் தோன்றும். அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல்தான். தவிர்க்கமுடியாதது.

    ReplyDelete
  10. ரமணி சாரின் கருத்தை வழிமொழிகிறேன். புதிய வீட்டைக் கட்டுவதை விடவும் கடினம் பழைய வீட்டைப் புதுப்பிப்பது. அதனினும் கடினம் வீட்டில் பொருட்களை அப்படியே வைத்துக்கொண்டு அன்றாடப் பணிகளையும் செய்துகொண்டு புதுப்பிக்கும் வேலையைத் தொடர்வது. வயதான இருவருக்கும் மிகுந்த சிரமத்தைத் தந்திருக்கும். நல்லவேளையாக பொறுப்பான ஒருவர் கிடைத்து அவரிடத்தில் பணியை ஒப்படைத்தது நன்று. வீட்டின் புதிய வடிவமைப்பு மனத்துக்கு நிச்சயமாக உற்சாகத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  11. சிரமம் தான்... எப்போது முடியுமோ என்று ஆதங்கம்... அதன் பின் தொடரும் எல்லையில்லா மகிழ்ச்சி - வாழ்க்கையை போல...

    ReplyDelete
  12. புதிய வீட்டைக் கட்டிவிடலாம். ஆனால் பழைய வீட்டை புதுப்பிப்பது மிக கடினம். சிரமப்பட்டாலும் எடுத்த பணியை ஒப்பந்தக்காரர் உதவியுடன் செம்மையாய் முடித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜு
    ஆம் ஐயா. கனத்த வெலைதான். வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி.

    ReplyDelete

  14. @ கீதா பரமசிவம்
    வாருங்கள் மேடம். உங்களுக்கு இல்லாத அனுபவமே கிடையாது போல் இருக்கிறது. ஸ்ரீராம் சொன்னது சரி. நான்கைந்து நாட்கள் சென்னையில் இருந்தோம். அதுதான் என் அடுத்த பதிவே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ கில்லர்ஜி
    என் புகைப் படம் தாங்கிய உங்கள் பதிவினைப் பார்த்தேன்.முன்பே ஒரு முறை கூறி இருக்கிறேன். உங்கள் தளத்தின் தொடர்பாளனாக இருந்தும் சில பதிவுகள் என் டாஷ் போர்டில் வருவதில்லை. பதிவு எழுதி இருக்கிறீர்களா என்று நான் தேடத்தான் வேண்டும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ ஸ்ரீராம்
    நான் நினைத்தபடி எங்கும் போக முடிவதில்லை. என் மகன் வந்து அழைத்துப் போனான் / அதுவே என் அடுத்தபதிவு. எனக்கு சென்னையில் யாரையும் சென்று காண இயலுவதில்லை. வருகிறேன் என்று சொன்னவர்களுக்கும் நான் சென்னை வந்து விட்டதைத் தெரிவிக்கவில்லை. அடுத்த முறை சந்திப்போம்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ வெங்கட் நாகராஜ்
    எங்களுக்கு வேலைஎன்று ஏதும் இருக்கவில்லை. பொருட்களை பந்தோபஸ்தாக இடம் மாற்றுவதுதான் வேலையும் பிரச்சனையும். all is well, that ends well. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  18. @ ’பரிவை; சே. குமார்.
    (முதல்.?) வருகைக்கு நன்றி. என் நூல் விமரிசனத்துக்கு நன்றி. உங்கள் தளத்தில் என் கருத்துக்கள் பதித்திருக்கிறேன். கில்லர்ஜிக்கும் நன்றி.

    ReplyDelete

  19. @ ரமணி
    பதிவு எழுதுவதில் சொல்ல முடியாததைப் படங்கள் தெளிவிக்கலாம். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  20. @ ஜம்புலிங்கம்
    வேலைக்கு என்றுமே அஞ்சியது கிடையாது. இருந்தாலும் முதுமையில் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளதுதான் தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete

  21. @ கீதமஞ்சரி
    உண்மைதான். மேடம் இப்போது மனதுக்கு இதமாய் இருக்கிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

  22. @ திண்டுக்கல் தனபாலன்
    வேலை துவங்குவதே அதிகம் யோசிக்க வைத்து விட்டது. ஆனால் என் மக்கள் செலவு பற்றிக் கவலை வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றது, வேலை செய்யத் துவங்க பக்க பலமாய் இருந்தது. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  23. @ வே.நடன சபாபதி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. dust allergy தொந்தரவு இல்லாது போனதே!!

    ReplyDelete
  26. Glad to see you back after a small break, Sir! :)

    ***எல்லா முடிந்து அப்பாடா என்று அமர்வதற்குள் போதுமடா சாமி என்றாகி விட்டது. எல்லாக் கஷ்டங்களுக்குப்பின் வீடு ஒரு புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பது சந்தோஷம் தருகிறது.***

    :-)))

    வாழ்க்கையில் இதுபோல் "தாங்க முடிந்த" கஷ்டமே இல்லைனா லைஃப் செம போர் அடிக்கும் சார்.

    சொன்னா நம்ப மாட்டீங்க, சொர்க்கத்தைவிட நரகம் இண்டெரெஸ்டிங்கான இடமா இருக்கும் என்பது என் நம்பிக்கை.

    அதனால் முடிந்த அளவு நெறையப் பாவங்கள் செய்து சொர்க்கதிற்கு போகாமல், நரகத்தில் போயி போர் அடிக்காமல் இருக்க முயலுகிறேன். :)

    ReplyDelete
  27. @ கீதா பரமசிவம்//

    ஐயா, என் கணவர் பெயர் சாம்பசிவம். ராஜலக்ஷ்மி பரமசிவம் நினைவில் எழுதி இருக்கீங்க போல! :)))

    நாங்க சொந்த வீடு கட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே குறைந்தது ஒரு ஐம்பது பதிவு வரும்! :))))

    ReplyDelete

  28. @ A.Durai
    வாருங்கள் துரை சார். டஸ்ட் அலர்ஜியால் கஷ்டப் படுவது எனக்குப் பழகிப் போய்விட்டது. All is well that ends well. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  29. @ வருண்
    ஆச்சரியமாக இருக்கிறது. நீங்களா சொர்க்கம் நரகம் பற்றி நினைக்கிறீர்கள்.? சொர்க்கமோ நரகமோ எல்லாமே இந்த வாழ்வில் அனுபவிப்பவைதானே.நரகத்துக்குப் போக விசேஷமாகப் பாவங்கள் ஏதும் செய்ய வேண்டாம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  30. @ கீதா சாம்பசிவம்
    மன்னிக்க வேண்டும் மேடம். யானைக்கும் அடி சறுக்கிவிட்டது . சுட்டியதற்கு நன்றி. நான் எழுதியது வீடு கட்டும்போதான அனுபவம் அல்ல.இப்போது நடைபெற்றது மராமத்து வேலையே. நானும் வீடு கட்டும்போது நிறையவே அனுபவப் பட்டிருக்கிறேன். அப்போது உடலிலும் இளமை இருந்தது.மீள்வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  31. //நான் எழுதியது வீடு கட்டும்போதான அனுபவம் அல்ல//

    புரிந்து கொண்டே எழுதினேன் ஐயா. வீடு கட்டினதை விட மராமத்தின்போது இன்னமும் பிரச்னைகள் அதிகம் வரும் என்பதும் எங்கள் அனுபவம். அதிலும் நாமும் அதே வீட்டிலேயே இருந்து கொண்டு, சமையல், சாப்பாடு எல்லாமும் பண்ணிக் கொண்டு!

    //இப்போது நடைபெற்றது மராமத்து வேலையே. நானும் வீடு கட்டும்போது நிறையவே அனுபவப் பட்டிருக்கிறேன்.//

    ஆமாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும் தான். :)

    ReplyDelete
  32. வேலையை செய்யும்போது உள்ள கஷ்டம், முடிந்த பிறகு கிடைக்கிற ஆனந்தத்திற்கு இணையே கிடையாது

    ReplyDelete
  33. இருந்தாலும் நாங்கள் வசிக்கும் வீடாவது எங்களைப்போல் இல்லாமல் பொலிவுடன் இருக்க வேண்டாமா// உங்களின் பொலிவிற்கு என்ன சார் குறைவு? அறிவுக் களைச் சொட்டுகின்றதே மிளிர்ந்து....

    வீட்டு பராமரிப்பு என்பது ஒவ்வொரு தடவையும் கை வைத்தால் சிறிய வேலையே ஆயிரத்தில் இருக்கும் பெரிய வேலை என்றால் லட்சங்கள்தான்....

    எல்லாம் முடிந்து தங்களது வருகை மகிழ்வைத் தருகின்றது...ம்ம்ம் எல்லாம் சுயநலம் தான் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்துத்தான்

    ReplyDelete

  34. @ Arrow Shankar
    வேலை முடிந்தபின் ஆனந்தமே. உண்மை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  35. @ துளசிதரன் தில்லையகத்து
    எதிர்பார்ப்புகள் எல்லாம் சரிதான். அதற்குத் தகுந்தாற்போல் எழுத வேண்டுமே. இப்போதே என் எழுத்து உப்பு சப்பில்லாமல் இருப்பதுபோல் உணர்கிறேன். அது சரி துளசிதரன். எனக்கு பாலக்காட்டுக்கு வர வேண்டும்போல் இருக்கிறது. எப்பொழுது கை கூடுகிறது பார்ப்போம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete