Saturday, July 25, 2015

ஒரு குதூகலப் பயணம் -2


                        ஒரு பயணமும் பேருவகையும் -2
                        ----------------------------------------------------


17-ம் தேதி ----இந்த பயண நிகழ்ச்சி நிரலில் எனக்காக ஒதுக்கப் பட்ட நாள். அன்று நாங்கள் போக வேண்டிய இடங்கள் சந்திக்க வேண்டிய நண்பர்கள் என்று துல்லியமாகத் திட்டமிட்டுக் கொண்டோம் போக வேண்டிய ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு திசையில் பழக்கப்படாத இடத்தில் வழி கேட்டுப் போவதென்றால் நேரம் அதிகமாகும் ஆகவே பாலக்காட்டு  டௌனில் உள்ள இடங்களுக்கு ஆட்டோவில் போய் வந்து  பிற இடங்களுக்குக் காரில் போகத் தீர்மானித்தோம். பெங்களூரை விடும்பொது என் அண்ணாவிடம் பாலக்காடு போவதாகச் சொன்னேன். குலதெய்வக் கோவிலுக்கும் சென்று வருமாறு அண்ணா கூறி இருந்தார். என் மனைவியும் முதலில் அங்கு போய் வரலாம் என்று சொல்லிவிட்டாள். மணப்புளிக் காவு பகவதி கோவிலே எங்கள் குலதெய்வக் கோவில் 
குலதெய்வக் கோவில்
நாம் ஆடி மாதம் என்று சொல்வதைக் கேரளாவில் கர்க்கட மாதம் என்கிறார்கள். இந்தக் கர்க்கட மாதத்தில் கள்ள மழை பொழியும் என்றும் சொல்கிறார்கள். கள்ள மழை என்றால் திடீரென்று பெரிய மழை வரும். ஒரு சில நிமிடங்களிலேயே பளிச் சென்று நின்றுவிடும் இதை நாங்கள் அங்கிருந்த மூன்று நாட்களிலும் அனுபவித்தோம் நாங்கள் கோவிலுக்குப் போன நாள் கர்க்கடக மாத முதல் நாள். கோவில்களில் எல்லாம் நல்ல ‘தெரக்கு(கூட்டம்) கோவிலில் தரிசனம் முடிந்ததும் அங்கிருந்து என் நண்பன் மதுசூதனன் நடத்தும் காருண்யா இல்லத்துக்குச் சென்றோம்

காருண்யா இல்லத்தின் முகப்பு.


நாங்கள் போனநேரம் அங்கே இருப்பவர்களுக்கு ஒரு யோகா ஆசிரியர் வந்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்சிறிது நேரத்தில் அங்கிருந்து மது அவர்கள் வந்து எங்களை வரவேற்றார். என் மச்சினன் அங்கு வருவது முதல் தடவை. காருண்யா இல்லம் முதலில் துவங்கப் பட்டபோது நினைவலை தவறியவர்களுக்காகவே இருந்தது. அப்படி ஒரு இல்லம் நடத்த பணபலம் மட்டுமல்லாமல் ஆள் பலமும் தேவை. ஏறத்தாழ ஒரு அல்ஜிமர் நோயாளிக்கு ஒருவர் தேவைப்படும் என்பதால் அந்த இல்லம் இப்போது கைவிடப் பட்ட முதியோர்களுக்காகவே நடத்தப் படுகிறது இப்போது அங்கு சுமார் இருபது பேர்கள் இருக்கிறார்கள் இவர்களில் ஓரிருவர் ஆல்ஜிமர் நோயாளிகள்.  இவர்கள் உடல் நலம் பேண ஒரு மருத்துவ மனையும் பூர்த்தியாகும் நிலையில் இருக்கிறது பணம் படைத்தோர் பெற்றோரைப் பேணமுடியாமல் இங்கு விட சிலர் வந்தபோது மது மறுத்து விட்டார்.ஆதரவற்றோரையும் பணம் கொடுப்போரையும் ஒரேமாதிரி ட்ரீட் செய்ய முடியாது என்பதே முதல் காரணம்  இவர்களைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூ. 1500/- தேவைப்படுகிறதாம்  வயதானவர்கள் பலரும் குழந்தைகள் போல் பராமரிக்கப் படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதன் லிங்க் இதோ  
நானும் மதுவும்
அன்று காலை உணவு தோசையும் ப்ரெட்டும் அவர்களுடனேயே உண்டோம் என் மாமியாரின் நினைவு நாள் அன்று ஆகும் ஓரு நாள்செலவை என் மச்சினன் கொடுத்தான்  நானும் என்னால் இயன்ற தொகையைக் கொடுத்தேன் நாங்கள் வந்த ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே அறைக்குத் திரும்பினோம் 

முதியோர்கள் காலை உணவு
மெடிகல் செண்டர்முடிவடையும் நிலையில்
அங்கிருந்துஅடுத்ததாக என் தம்பி இருக்கும் ஆலத்தூருக்குப் போனோம் சுமார் 20கி.மீ. தூரம் மதிய உணவுக்கு அங்கு இருப்போம் என்று சொல்லி இருந்தோம் ஆலத்தூரில் இருக்கும் க்ரெசெண்ட் ஆஸ்பத்திரியில் தரப் பிரிவின் பொது மேலாளராக என் தம்பி இருக்கிறான்  குடியிருப்பில் அந்த வளாகத்திலேயே இருக்கிறான் அவனது இரண்டாம் மகள் தன் மகனுடன் ஸ்வீடனிலிருந்து வந்திருந்தாள அவளது திருமண நாளில் பார்த்தது, ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அயல் நாட்டில் வசிப்போரின் குழந்தைகளை போலவே அவளது மகனுக்கும் ஆங்கிலம் தவிர வேறு மொழி தெரியவில்லை.சிறிது நேரம் குடும்ப விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம் தம்பியின் மனைவி வடை பாயசத்துடன் சமையல் செய்திருந்தாள். அவன் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் முதலில் எங்கள் கேரளப் பயணத்தை அந்த வீட்டுக் கிரகப் பிரவேசம் போது வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம் ஆனால் வாய்ப்பு வந்தபோது எனக்கு நழுவ விட மனசிருக்கவில்லை. கிளம்பி வந்து விட்டோம்

உணவு முடிந்ததும் புதியங்கம் எனப்படும் இடத்தில் அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டைப் பார்க்கப் போனோம் கேரளத்தில் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடிவதில்லை என்றும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே பாடாக இருக்கிறது என்றும் குறை பட்டுக் கொண்டான் 


தம்பி என் மனைவி தம்பி மகள் என் மச்சினன் மனைவிஎன் தம்பி மனைவி
தம்பியின் பேரனுடன்

 
கட்டப் படும் தம்பியின் வீடு
  
அடுத்து என்னுடன் பி.எச்.இ. எல்-ல் பணி புரிந்து கொண்டிருந்த வேணுகோபாலன் ஆலத்தூரிலிருந்து 15-16 கி.மீ தூரத்தில் வல்லேங்கி எனும் இடத்தில் இருக்கிறார், இவர்தான் திடீரென்று தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு என்னை இந்தப் பயணம் மேற்கொள்ள முதல் காரணமாயிருந்தவர் கள்ளமழையில் இடம் தேடி ஒருவாறு அவர் வீட்டுக்குச் சென்றோம்  பலரும் மனதளவில் வயதை உணரத் தொடங்கினால் ஆன்மீகப் பக்கமும் பக்தி மார்க்கம் தேடியும் செல்கின்றனர். என் நண்பரும் விதி விலக்கல்ல. ஏதோ சாமியாரிடம் தீட்சை எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். என் வழக்கம் போல் அவரது சிந்தனைகள் எதிர்மறையாய் இருப்பதால்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்றேன் உடல் நலம் குறையும் போது பயம் வந்து விடுகிறதோ என்னவோ. இவர் என்னிலும் ஒரு ஆண்டு மூத்தவர் நிறையவே பேசினோம் அவரது கணினியை உறவினர் வீட்டில் மறந்து விட்டு வந்ததாகக் கூறினார். கணினி வந்தபின் எனக்குச் சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறேன் நான் எழுதி உள்ள சில பதிவுகளை அவருக்கு  அனுப்பிக் கொடுக்கலாம் என்றுதான் ‘ இதனிடையில் என் மனைவி பல்ல சேனா என்னும் இடம் எங்கிருக்கிறது என்றும் அதற்குப் போகும் வழியையும் விசாரித்துக் கொண்டிருந்தார் பல்லசேனா மீன் குளத்துக் காவு பற்றி முன்பே என்னிடம் சொல்லி இருக்கிறாள் வாய்ப்பு கிடைத்தால் போகலாம் என்றும் சொல்லி இருந்தேன் இப்போது அந்த நினைவில் விசாரித்துக் கொண்டிருந்தாள் அங்கிருந்து சுமார் பனிரெண்டு கி.மி தூரத்தில்தான் அந்தக் கோவில் என்றதும் அங்கு  போக முடிவு செய்தோம்  

நண்பர் வேணு கோபாலுடன்

. 
என் மச்சினன் மனைவி என் மனைவி திருமதி வேணு. வேணு கோபால் என் மச்சினன்
கள்ள மழை நன்கு பெய்யத் துவங்கி விட்டது. மாலை ஆறு மணி அளவில் கோவிலுக்குச் சென்றோம் நானும் மச்சினனும் பேண்ட் அணிந்திருந்ததால் எங்களுக்கு அனுமதி இல்லை. என் மனைவியின் நீண்டநாள் ஆசை நிறைவேற அவளும் மச்சினன் மனைவியும் கோவிலுக்குச் சென்று தொழுதனர். மழை காரணமாக குளத்துக்குச் செல்ல இயலவில்லை 

மீன் குளத்துக்காவு
  
மீன் குளத்துக்காவு  இன்னொரு படம்
கோவிலில் தொழுகை முடிந்ததும் காரை நேராகப் பாலக் காட்டுக்கு விடச்சொன்னேன் ஹோட்டல் அறைக்குப் போய்ச்சேரும்போது மணி ஏழரை ஆகி இருந்தது. ஆக எனக்கான ஒரு நாள் பயணம் இனிதே முடிந்தது. அடுத்தநாள் 18-ம் தேதி மனைவியின் குலக் கோவில் பரியானம்பத்தக் காவுக்கும் அங்கிருந்து குருவாயூருக்கும் போக திட்டம் இட்டிருந்தோம் ( குதூகலப் பயணம் தொடரும்) 
 
  

41 comments:

  1. மிகவும் டைட் ஷெட்யூல் என்று தெரிகிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் பணம் கொடுத்து தங்க வைக்க வந்த கோரிக்கையை மறுத்த புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  2. அருமையான பயணம். நன்கு அனுபவித்திருக்கிறீர்கள். காருண்யா பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  3. படங்களோடு பயணச் செய்திகளை படிக்க சுவாரஸ்யம். கேரள கோயில்கள் என்றாலே அரண்மனை வடிவம்தான் போலிருக்கிறது.

    ReplyDelete
  4. நினைத்ததைச் செய்து முடித்தால் அது ஒரு பெரிய சந்தோஷம்தான்.

    ReplyDelete
  5. குடும்பத்துடனான ஒரு அருமையான பயணத்தில் நாங்களும் கலந்துகொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படங்கள் பதிவிற்கு மெருகூட்டுகின்றன.

    ReplyDelete
  6. மகிழ்ச்சியான பயணம் ஐயா... மிகவும் சந்தோசம்...

    ReplyDelete
  7. சுவாரஸ்யமாக பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! கேரளக் கோயில்களில் முழுக்கால் சட்டை அணிந்தும் வணங்கிட தடை உள்ளதா? லுங்கி அணிந்து செல்லக்கூடாது என்றுதான் தெரியும். மரபை கடை பிடிக்கின்றார்கள் போல!

    ReplyDelete
  8. பதிவு முழுக்கக் கள்ளமழையில் நனைந்து கொண்டே நானும் உங்களுடன் வந்து கொண்டிருந்தேன். அறிந்தீர்களா? :)

    நன்றி.

    ReplyDelete
  9. ரொம்ப நாள் கழித்து உங்க பதிவை நிதானமா புகைப்படங்களோடு பார்த்து படித்தேன் பாலா சார்.

    கேரளாவுக்கு சென்று வந்த சந்தோஷம் ஏற்பட்டது. உணவுகளையும் படம் எடுத்துப் போட்டிருக்கலாம். ( ஹாஹா என் போன்ற உணவுப் பிரியைகளுக்காக :)

    துளசி சகோவின் இடுகையில் இருந்து காருண்யா பற்றி நான் என் தம்பிக்கும் பையனுக்கும் தெரிவித்து உள்ளேன். இருவருக்கும் காரைக்குடிப் பக்கம் ஏதும் ஹோம் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம். அது பற்றி நன்கு தெரிந்துகொண்டு ஆரம்பிக்கட்டுமே என்றுதான். (அவர்கள் இருவரும் இது போன்ற இடங்கள் பற்றி விவரம் அனுப்பினால் தங்கள் மனதுக்குப் பட்ட தொகையை அனுப்புவார்கள். வெளிநாட்டுவாசிகள் :) . அதற்காகவும் அனுப்பினேன்.

    கேரளாவில் நான் ஆற்றுக்கால் பகவதியை மட்டுமே தரிசித்து இருக்கேன். இன்னும் ஏகப்பட்ட பேர் இருக்காங்க போல் இருக்கு. ஒரு முறை செல்லணும். :)

    ReplyDelete
  10. கள்ள மழையில் நனைந்தபடியே நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.......

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  11. தலைப்பிலேயே மகிழ்வான பயணம் என்பது புரிந்து விட்டது
    படிக்கப் படிக்க பயணத்தின் இனிமை எங்களையும்
    பிடித்துக் கொண்டது
    தொடருங்கள் ஐயா
    தொடர்கிறேன்

    ReplyDelete
  12. அழகாக திட்டமிட்டு தங்கள் பயணத்தை துவங்கி..... சென்றதை படிக்கும் போது ஆனந்தமாக இருக்கிறது. ஐயா

    ReplyDelete
  13. மகிழ்வான பயணம்...
    நாங்களும் உங்களுடன் பயணித்தது போன்ற உணர்வு...
    அருமை ஐயா...

    ReplyDelete
  14. பணம் படைத்தோர் பெற்றோரைப் பேணமுடியாமல் இங்கு விட சிலர் வந்தபோது மது மறுத்து விட்டார்.ஆதரவற்றோரையும் பணம் கொடுப்போரையும் ஒரேமாதிரி ட்ரீட் செய்ய முடியாது என்பதே முதல் காரணம்// மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் சார். உயர்ந்த ஒரு சேவை செய்கிறார் மதுசூதனன் சார்..

    தங்கள் குதூகலப் பயணத்தை நாங்களும் தொடர்கின்றோம்..பயண விவரம் சொல்லுவது தங்கள் பயணம் தங்களுக்கு மிகவும் நல்லதொரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்று...

    ReplyDelete

  15. @ ஸ்ரீராம்
    ஷெட்யூல் டைட்டாக இருந்தாலும் மகிழ்வாக இருந்தது.என் உடல் நிலையை நானே சோதித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருந்தது மதுவின் சேவை பாராட்டத் தக்கதே. ஊர் கூடித் தேர் இழுத்தல் நல்லது. ஆனால் ஊரைக் கூட்டுவதுதான் சிரமம் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  16. @ கீதா சாம்பசிவம்
    உண்மைதான் மேடம் பயணம் ரசித்து அனுபவித்தேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ தி தமிழ் இளங்கோ
    நம்மூர் மாதிரி கோபுரத்தோடு இருப்பைத் தெரிவிப்பதில்லை கேரளக் கோவில்கள் பெரும்பாலும் மரக் கட்டிடங்கள் ஓடு வேய்ந்தது. திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோவில் மட்டும் விதி விலக்கு போல் இருக்கிறது.வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  18. @ கில்லர்ஜி
    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ டாக்டர் கந்தசாமி
    /நினைத்ததை செய்து முடித்தால் சந்தோஷம்தான்/ உண்மை ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    பயணங்கள் எனக்குப் பிடிக்கும் .ஆனால் இப்போது வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகிறது பதிவுக்கு வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  21. @ திண்டுக்கல் தனபாலன்
    என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு நன்றி டிடி.

    ReplyDelete

  22. @ தளிர் சுரேஷ்.
    ஒரு முறை சிதம்பரம் கோவிலில் மேடையேறுவதற்கு மேல் சட்டையைக்கழட்ட வேண்டும் என்றார்கள். அப்போது என் ஐந்து வய்து பேரன் “ஏன் பாய்ஸ் மட்டும் சட்டை கழற்றணும் . கேர்ல்ஸ் மட்டும் ஆடையோடு “ என்று கேட்டானே ஒரு கேள்வி. இதே மரபு என்னும் பதிலைச் சொல்லித்தான் நான் தப்பித்தேன் . பல கேரளக் கோவில்கள் பேண்ட் அணிந்து வருவதை அனுமதிக்கிறது. என்ன மரபோ போங்கள்.....வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  23. @ ஊமைக்கனவுகள்
    அறிந்தேன் என்று சொன்னால் “கள்ளமாகும் “( பொய்யாகும் ) வருகைக்கும் கூடப் பயணித்ததற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ தேனம்மை லக்ஷ்மணன்
    தன்யனானேன் மேடம் ..!உணவுப் பண்டங்களைப் படம் எடுத்துப் போடுவது என் மனைவி விரும்புவதில்லை. நீங்களும் எப்போவாவது தானே வருகிறீர்கள். பதிவைப் படிக்கும் போது உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் பிறகு மறந்து விடுகிறார்கள். அயல் நாட்டில் இருப்போரும் விதிவிலக்கல்ல. விடாக்கண்டனாக வசூலித்தால் மட்டுமே சாத்தியம் கோவில்கள் நம் நாடு முழுவதும் உண்டு. கோவில் இல்லா ஊரெ இல்லை எனலாம் . நாமெல்லாம் கடவுளைக் கோவில்களில் மட்டும்தான் காண்கிறோம் வருகைக்கு நன்றி. பதிவர் ஒற்றுமை ஓங்குக.

    ReplyDelete

  25. @ வெங்கட் நாகராஜ்
    உடன் பயணித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete

  26. @ கரந்தை ஜெயக்குமார்
    இன்னும் ஒரு பயணப் பதிவு இருக்கிறதையா. வந்து மகிழ்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete

  27. @ உமையாள் காயத்ரி
    எல்லாம் திட்டப் படி நடந்தது மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  28. கோட்டயத்தில் நான்கு ஆண்டுகளும், கண்ணூரில் மூன்று ஆண்டுகளும் பணி புரிந்தபோது எனக்கு ‘கள்ள மழை’யில் அகப்பட்டுக்கொண்ட அனுபவம் உண்டு. தங்களது பதிவைப் படிக்கும்போது மீண்டும் கேரளாவிற்கு சென்றது போன்ற உணர்வு. பாக்டீவை இரசித்தேன்!

    ReplyDelete

  29. @ பரிவை சே குமார்
    உடன் வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  30. பின்னூட்டத்தின் கடைசி வரியில் தவறு ஏற்பட்டுவிட்டது ‘பதிவை இரசித்தேன்’என படிக்கவும்.

    ReplyDelete

  31. @ துளசிதரன் தில்லையகத்து
    மதுவின் சேவை பாராட்டத்தக்கது. வீட்டில் ஏதாவது மகிழ்வான விஷயங்கள் நடை பெறும்போது அந்த மகிழ்ச்சியில் அவருக்கும் உதவ முன் வரவேண்டும் என்பது என் எண்ணம் . இன்னும் இரண்டு நாளையப் பயணம் பாக்கி இருக்கிறது வருகைக்கு நன்றி சார் /மேடம்

    ReplyDelete

  32. @ வே.நடன சபாபதி
    இந்த வார்த்தைப் பிரயோகத்தை இந்தப் பயணத்தின் போதுதான் அறிந்தேன் வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  33. உங்கள் நண்பர் மதுசூதனன் அவர்கள் நடத்தும் காருண்யா இல்லத்தைப் பற்றி முன்பே படித்து இருந்தாபோது ஏற்பட்ட மரியாதை இன்னும் பலமடங்கானது அவரை பற்றி நீங்கள் சொன்ன செய்திகள்.
    மதுரையில் இன்று கள்ள மழை பெய்து முடித்து இருக்கிறது இப்போது.

    ReplyDelete

  34. @ கோமதி அரசு,
    வருகைக்கு நன்றி மேடம் பழைய பதிவின் லிங்க் கொடுத்திருக்கிறேனே. எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென்று விட்டு விட்டுப் பெய்யும் மழையைக் கள்ள மழை என்கின்றனர்.

    ReplyDelete
  35. சிறந்த பயணப் பதிவு
    சிந்திக்க வைக்கும் தகவல்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete

  36. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    சுட்டியில் என் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன் உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  37. உங்களுடன் நானும் பயணித்து போல இருக்கு .பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete

  38. @ தனிமரம்
    வருகைக்கு நன்றி ஐயா. தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  39. வில்லன் இல்லாத கதை சுவைப்பதில்லையே! பயணங்களில் நீங்கள் சந்தித்த எதிர்பாராத இன்னல்களையும் வெளியிட்டால் என்ன?

    ReplyDelete
  40. @ செல்லப்பா யக்ஞசாமி
    எதிர்பாராது சந்தித்த இல்லாத இன்னல்களை எப்படி எழுத முடியும் . எந்த தடங்கலும் இன்னலும் இல்லாமல் பயணம் முடிவடைந்தது. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete