Saturday, July 4, 2015

வலைச்சரம் சில எண்ணங்கள்


                          வலைச்சரம்  சில எண்ண்ங்கள்
                         ----------------------------------------------


வலைச்சர ஆசிரியப்பணியின் அனுபவம் பற்றிப் பதிவிடலாமே என்று திரு. தி.தமிழ் இளங்கோ அவர்கள் கேட்டிருந்தார்கள். பதிவிடுவதில் பிரச்சனை எனக்கில்லை. ஆனால் நான் சொல்லப் போகும் கருத்துக்கள் சிலருக்கு வேண்டி இருக்க வில்லையோ என்றிருக்கும் . இருந்தாலும் நான் மனசில் பட்டதைச் சொல்லாமல் இருந்தால் என்னை நானே ஏமாற்றிக் கொள்வது போல் இருக்கும் முதலில் இந்த ஆசிரியரைத் தேடும் பணி. இதை யார் செய்கிறார்கள் விதி முறைகள் ஏதாவது உண்டா என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான்.என்னும் பதில் இருந்தது அதாவது நிர்வாக ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் எல்லோருடைய இடுகைகளையும் படிக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும் ஆனால் அப்படி நடக்கிறதா. அவர்கள் படித்துச் செல்வதற்கான எந்தச் சுவடும் தெரியவில்லை. என்னை அழைத்திருந்த யாதவன் நம்பி( அவர் ஆசிரியக குழுவில் இருப்பதே பின்னர்தான் தெரிந்தது.) மட்டும் பின்னூட்டங்கள் எழுதி வந்தார். வலைச்சர இடுகைகளையே படிக்காதவர்கள் பின் எப்படி எல்லோருடைய இடுகைகளையும் படித்திருக்க முடியும் நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த இரண்டாம் நாள் திரு தமிழ்வாசி தொலை பேசியில் அழைத்து வாழ்த்தினார். ஆக நான் புரிந்து கொண்டவரை யாராவது சிபாரிசு செய்து அது அந்தப் பதிவருக்கும் தோதாக இருந்தால் ஆசிரியப் பணிக்கு அழைக்கப் படுகிறார் குறை சொல்வது நோக்கமல்ல. திருத்திக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணமே.

இரண்டாவதாக வலைச்சர ஆசிரியர்கள் பிற பதிவர்களை அறிமுகப் படுத்தவேண்டும் என்பது பெரும்பாலான பதிவர்கள் ஏற்கனவே வலையில் ஓரளவு பிரபல மானவர்களே. எங்காவது ஓரிருவர் என்னை மாதிரி ஐந்தாண்டு காலமாக எழுதி வந்தாலும் கண்ணில் தட்டுப்படாமல் இருக்கலாம் .நான் ஓரளவுக்கு இந்த அறிமுகம் என்னும் வார்த்தையைத் தவிர்த்து அடையாளம் காட்டப்படுபவர் என்று எழுதி வந்தேன் ஒருசில அடையாளப்படுத்தப்பட்ட பதிவர்கள் ஏற்கனவே பலமுறை அறிமுகப் படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினர். ஒரு வேளை இப்படி பலமுறை அடையாளம் காட்டப் பட்டால் சிலரது பிராபல்யம் கூடுகிறதோ என்னவோ.
பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதப் படும் பதிவுகளுக்கு ஆயுசு ஒரு நாள் மட்டுமே/ முதல் நாள் படிக்கப் பட்டிராவிட்டால் பிறகு படிக்கப்படுவது அபூர்வமே. ஆகவே வலைச்சரத்திலாவது இந்த அறிமுகமோ, அடையாளம் காட்டப் படுவதோ இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று பதிவின் ஆயுசை நீட்டிக்கலாம் என்று தோன்றுகிறது.
பெரும்பாலும் அறிமுகம் அல்லது அடையாளம் காட்டப்படும் பதிவர்களுக்கு அது பற்றிய சேதி இல்லாவிட்டால் தெரிவதே இல்லை. ஏனென்றால் தினமும் வலைச்சரம் படிப்பவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் இன்னும் ஒரு விஷயம் . பின்னூட்டங்களுக்கு மறுமொழி தருவது. அப்படித் தந்தால்தான் பின்னூட்டம் இடுபவருக்கு தான் படித்த சுவடு தெரிந்திருக்கிறது என்னும் எண்ணம் ஒரு திருப்தி தரும் விஷயம் ஆனால் பெரும்பாலான பின்னூட்டங்கள் வாழ்த்துச் செய்திகளாகவும் பாராட்டும் வரிகளாகவுமே இருப்பதால் மறு மொழி இடுவது சலிப்பு தரும் சமாச்சாரம் இருந்தாலும் பின்னூட்டம் இடுபவருக்கு நாம் செய்யும் மரியாதை அதற்கு மறு மொழி இடுவதுதான் இது வலைச்சரத்துக்கு மட்டுமல்ல பிற பதிவுகளுக்கும் பொருந்தும்   ஒரு பதிவரை அடையாளம் காட்ட அவரது ஏதாவது ஒரு இடுகை காட்டினால் அதற்குச்சென்று படிப்பவ்ர்கள் இன்னும் குறைவு. நான் கூறிய பல செய்திகள் வலைசரத்துக்கு மட்டுமல்ல பிற இடுகைகளுக்கும் பொருந்தும் வாசகர்கள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு படிப்பதுதான் நிகழ்கிறது. இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது இது அவரவர் விருப்பம் வலைச்சரம் அந்த வட்டத்தைப் பெரிதாக்க முடிந்தால் மகிழ்ச்சியே
கடைசியாக புதிய ஆசிரியரை வரவேற்கும் போது செல்லும் ஆசிரியரின் காலத்தில் இத்தனை பின்னூட்டங்கள் வந்தன, இத்தனை பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்று கூறுவது ஆசிரியரின் பிரபலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவா. புரிய வில்லையே
இப்பதிவில் கூறப்பட்ட செய்திகளை ஆலோசனைகளாக ஏற்க வேண்டுகிறேன் விமரிசனம் அல்ல என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

38 comments:

  1. நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. மீண்டும் மீண்டும் அதே பதிவர்களையே "சுட்டிக்"காட்டுவது தவிர்க்க முடியாதது. வேறு வகை மாற்றம் காணவேண்டிய நேரம் இது.

    ReplyDelete
  2. புதிய பதிவர்களின் வருகை குறைந்து விட்டது என்று கருதுகின்றேன்.

    ReplyDelete
  3. வலைச்சரம் மூலம் ஒன்றிரண்டு புதிய பதிவர்களையாவது அறிய முடிகிறது. பதிவர்கள் அறிமுகம் என்பதை பதிவுகள் அறிமோம் என்றே கொள்ளலாம். சிலசமயங்களில் பிரபலங்களின் சில நல்ல பதிவுகளும் அதிக வரவேற்பைப் பெறுவதில்லை . அது நம்மைக் கவர்ந்ததாக இருக்கலாம் . அதுவ்போன்ற்வத்க்ரை சுட்டிக்காட்ட முடிகிறது. நிறையப் பிர வலைப்பூக்கள் எழுதும் நிலை இருந்தால் வலைச்சரம் முக்கியத்துவம் பெறும்

    ReplyDelete
  4. நேரம் இருப்பின் வாசிக்க : பதிவின் முடிவில் 3 திரட்டிகள் உண்டு...!!! இணைப்பு : (http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html) இதில் வலைச்சரமும் உண்டு...

    இருக்கும் வட்டங்களே சுருங்கிக் கொண்டு வருவது வருத்தப்படும் விசயம்...

    ReplyDelete
  5. ஆமாம், நான் பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டேன். இனியாவது புதிதாக வரும் பதிவர்களை அறிமுகம் செய்யட்டும். மற்றபடி வலைச்சரமும் திக்கித் திணறுவது போல் இருக்கிறதே! ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஒருகாலத்தில் வலைச்சரம் ஆசிரியர் ஆக மாட்டோமா எனப் பதிவர்கள் நினைத்தது போக இப்போது இப்படி! :(

    ReplyDelete

  6. @ ஸ்ரீ ராம்
    வலைச்சர நிர்வாகக் குழு எடுக்கவேண்டிய முடிவு இது வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  7. நியாயமாக மனதில் உள்ள விஷயங்கள்..

    சுட்டிக் காட்டப்படும் - பல தளங்களில் ஓரளவுக்கே சென்று வாசிக்க முடிகின்றது..
    முக்கிய காரணம் - நேரமின்மை!..

    நடப்பவை எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும்!..

    ReplyDelete

  8. @ டாக்டர் கந்தசாமி
    புதிய பதிவர்களின் வருகை குறைந்து விட்டது என்று கருதுகிறேன்/ வலைச்சரத்துக்கு என்று எடுத்துக் கொள்ளலாமா.? தமிழ் மணத்தில் இணைந்திருக்கும் பதிவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000 இருக்கும் என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  9. @ டி.என். முரளிதரன்
    பதிவுகள் அறிமுகம் என்று சொல்லத் தொடங்கினால் வலைச்சர ஆசிரியர்களது பதிவுகளே முன்னணியில் இருக்கும் என்னதான் செய்தாலும் எனக்கென்னவோ பதிவர்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றனர் என்று தோன்றுகிறது. பின்னூட்ட ”பார்ட்டர் டீல்” ( கொடுக்கல் வாங்கல்) என்றுதான் சொல்லப்படாத வழக்கமாக இருக்கிறது தமிழில் 3000 க்கும் அதிகமான வலைப்பூக்கள் இருக்கின்றன. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  10. @ திண்டுக்கல் தனபாலன்
    ஏற்கனவே வாசித்த பதிவாயிருந்தாலும் மீண்டும் சென்று வாசித்தேன் வலைப்பூக்களை இணைக்கச் சொல்லிக் கொடுக்கும் தொழில் நுட்பப் பதிவு என்று தெரிகிறது. எனக்கு ஒருவர் பதிவைப் படிக்க விருப்பமிருந்தால் அவரது வலைப்பூவை இணைத்துக் கொள்வேன் 300 வலைப்பூக்களைப் படிப்பதே கஷ்டமான செயல் வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  11. @ கீதா சாம்பசிவம்
    எத்தனை முறை அறிமுகமானால் என்ன .? அதனால் எத்தனை புதிய வாசகர்கள் கிடைக்கிறார்கள் என்பதே முக்கியம் வருகைக்கு நன்றி மேம்.

    ReplyDelete

  12. @ துரை செல்வராஜு
    படிக்கத் தூண்டும் விதத்தில் எழுதுவது வலைச்சர ஆசிரியருக்குச் சவால் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  13. வலைச் சரம் மட்டுமல்ல வலைப் பூவே சற்று சுறுசுறுப்பை இழந்தது போல்தான் தெரிகிறது
    வலைப் பூவில் எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து வருவது தெரிகிறது. அதற்குக் காரணம் அவர்களது சொந்த அலுவல்களாக இருக்கலாம்,

    வலைச் சரத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு பதிவு என்பதை தாங்கள் சொல்வதுபோல், இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று மாற்றலாம். அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு பதிவர், மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு என்று மாற்றலர்ம். இதுபோல் மாற்றினால் நேரம் கிடைக்காமல் திண்டாடும் பதிவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
    நன்றி ஐயா

    ReplyDelete
  14. விரைவில் வலைச்சர ஆசிரியர் ஆக உள்ள எனக்கு உங்கள் ஆலோசனைகள் பயனளிக்கும். 3000த்திற்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் இருந்தாலும் இப்போது தினமுமோ அல்லது வாரம் ஒன்றிரண்டு பதிவுகள் போடுபவர்கள் குறைந்துவிட்டதாக தோன்றுகிறது. வலைச்சரத்திற்காக நான் பத்து தினங்களாக புதிய பதிவர்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன்! கண்ணில் படவில்லை! ஆனால் இன்னும் நீண்டநாட்களாக எழுதிக்கொண்டு இருக்கும் என் கண்ணில் படாத சிலர் சிக்கி உள்ளனர். வலைச்சரத்திற்கென ஆசிரியர் ஆக இன்ன தகுதி வேண்டும் என்று நிர்ணயித்தல் நல்லதுதான். மாற்றி அமைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டதைத்தான் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதே சமயம் நமது நட்புவட்டத்தில் உள்ள பதிவர்களை அறிமுகம் செய்யாவிட்டால் கோபித்துக் கொள்வார்களோ என்ற ஓர் காரணமும் வலைச்சர ஆசிரியர்களிடம் உள்ளது. நன்றி!

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக் குமார்
    வலைச்சரம் பொலிவோடு இயங்கத் தேவையானது என்பதைப் பதிவாக்கி இருக்கிறேன் முதலில் வலைச்சர நிர்வாகிகள் வலைச் சரம் வாசிக்க வேண்டும் வாசித்த சுவடு காணப்படவேண்டும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  16. @ தளிர் சுரேஷ்
    வலைச்சரத்துக்கக தேடும் புதியபதிவர்கள் உங்கள் வாசிப்புக்கு உட்பட்டு இஉக்கவேண்டும் நீங்களே படிக்காத வலைப் பூவை அறிமுகம் செய்வது சரி அல்ல என்று கூறிக் கொள்கிறேன் தகுதி நிர்ணயிப்பது என்பதைவிட தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்களின் பதிவுகளை நிர்வாகிகள் படித்திருக்க வேண்டும் ஆசிரியப் பணியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  17. அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! ’’வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 7-ம் நாள்’’ – என்ற பதிவில் எனக்கு மறுமொழியாக, “நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா” என்று எழுதிய ஒரு வாரத்திலேயே பதிவும் போட்ட உங்கள் சுறுசுறுப்பை நாங்களும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் அய்யா. நன்றி!

    வலைச்சரம் பற்றிய உங்கள் அனுபவமும் ஆலோசனைகளும் எல்லோருக்கும் வழிகாட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அன்பின் சீனா அவர்கள் பல்வேறு சூழல்களுக்கு இடையிலும் வலைச்சரத்தை தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டிற்கு உரிய விஷயம்.

    ReplyDelete
  18. உங்கள் ஆலோசனைகள் வரவேற்கத் தக்கவை !
    பல நல்ல பதிவர்கள்.. வெளிச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் ,அவர்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற நோக்கில்,முதல் நாளே நான் போட்ட கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
    # Bagawanjee KAMon Jun 22, 10:38:00 PM
    என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உருப்படியான பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன் :)

    ReplyDelete
    Replies

    G.M BalasubramaniamTue Jun 23, 06:16:00 AM
    @ பகவான் ஜி
    மொக்கைப் பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் அதிகம் சும்மாவா தமிழ் மண ரேங்கில் முதலில் வருவது. உமக்கெல்லாம் அறிமுகமே தேவை இல்லை என்றே எண்ணுகிறேன் தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்வருகைக்கு நன்றி#
    என் ஆலோசனையை ஒரளவு தாங்கள் நிவர்த்தி செய்தீர்கள் ,நன்றி !

    ReplyDelete
  19. தங்கள் ஆலோசனைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை ஐயா...
    நிறைய புதியவர்களை இனம் காண வேண்டும்.
    தரமான பதிவர்களை வெளிக் கொணர வேண்டும்.
    முதலில் வலைச்சர ஆசிரியர் குழு ஒவ்வொரு பதிவையும் படித்து நிறை குறை சொல்ல வேண்டும். அங்கு சொல்லவிட்டாலும் அந்த ஆசிரியரின் இணைய முகவரிக்கு கருத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
    வலைச்சரத்துக்கு என சில சட்ட திட்டங்கள் இருக்கு... அதை மாற்ற வேண்டியதில்லை... ஆனால் கடைபிடிக்க வைக்கலாம்.

    ReplyDelete

  20. @ தி.தமிழ் இளங்கோ
    ஐயா வணக்கம் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றிஉங்கள்பின்னூட்டத்தின் கடைசி வரிகளைப் படித்தபோது ஊமைக்கனவுகள் தளத்தில் காணப்படும் ஒரு செய்தி நினைவுக்கு ஏனோ வந்தது”யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்”

    ReplyDelete
  21. @ பகவான் ஜி
    என் பணியைப் பாராட்டிக் கருத்திட்டதற்கு நன்றி ஜி.

    ReplyDelete

  22. @ பரிவை சே குமார்
    ஐயா என் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி யாரும் யாரையும் படிக்க நிர்பந்திக்க முடியாது. வாசகர் வட்டக் கலாச்சாரம் மாறுவது கடினம். சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் போல் இருந்தாலே பிடிப்பதில்லை.

    ReplyDelete
  23. நல்ல அலசல். வழக்கமாக தங்கள் பாணியில் பகிர்ந்துள்ளவிதம் நன்று. தங்களின் கருத்தைப் பெரும்பாலும் ஏற்பர். நான் ஏற்கிறேன்.

    ReplyDelete
  24. ‘பூனைக்கு மணி கட்டிவிட்டீர்கள்’ என நினைக்கிறேன்!

    ReplyDelete

  25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வழக்கமான என் பாணியில் மனதுக்குப் பட்டதைப் பகிர்ந்துள்ளேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ வே நடனசபாபதி
    ஐயா மன்னிக்கவும் கருத்துக்கள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு அனுப்பியும் இதுவரை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  27. வணக்கம் ஐயா....
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வரும் பதிவர்களை தேர்ந்தெடுப்பது பற்றி சொல்லி இருக்கீங்க...

    சீனா ஐயா பதிவர்களை தமிழ்மணம் மூலமாக தேடிப்பிடித்து அவர்கள் பதிவை சிலவற்றை பார்த்த பின்னர் அவர்களை ஆசிரியர் பொறுப்பிற்கு அழைக்கலாம் என முடிவு செய்ததாக சொல்லி இருக்கிறார். அவர்களின் தொடர்பு மின்னஞ்சல், தொடர்பு எண் போன்றவை கிடைத்தால் மட்டுமே அவர்களை தொடர்பு கொள்ள இயலும் எனவும் சொல்லி உள்ளார். அப்படிப்பட்டவர்களை வலைச்சரத்திற்கு அழைக்க அவர்களின் நண்பர்கள் நமக்கும் நண்பர்களாக இருப்பவர்களாக தேடிப் பார்த்து அதன் மூலம் அவர்களுக்கு அழைப்பு அனுப்ப முயற்சி செய்வார் என சொல்லியுள்ளார். அதன்படியே நானும் பதிவர்களை தமிழ்மணத்தில் தேடி அவர்களின் பதிவுகை சிலவற்றை வாசித்து அவர்களுக்கு தொடர்பு கொள்வேன்.(அதற்காக எல்லா பதிவுகளையும் ஏன் வாசிக்கவில்லை என கேட்காதீர்கள். சிலர் செய்தி தாளில் வந்தவற்றை காப்பி பேஸ்ட் செய்பவர்களாக, விளம்பர பதிவுகள் பதிபவராக, இன்னும் சில விரும்பத்தகாத பதிவுகளை பதிபவர்களாக இருக்கலாம். அதான் சில பதிவுகள் வாசிக்கிறோம்)

    ReplyDelete
  28. சில வாரங்களில் பதிவர் தேவைப்படும் போது அவர்களுக்கு தெரிந்த நண்பர்களை எங்களுக்கு தொடர்பு கொள்ள செய்யுங்கள், வலைச்சர பணி ஏற்க அழைப்பு விடுக்கிறோம் என்போம். அவ்வாறு செய்தல் புதிய பதிவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது என்பது தானே... தமிழ்மணத்தில் 3000 பதிவர்கள் பதிந்து இருக்கலாம். அவர்களில் எத்தனை பதிவர்கள் ஆக்டிவாக இருப்பார்கள் என யோசித்து பாருங்கள். இப்போதெல்லாம் நாள்தோறும் 70 பதிவுகளுக்கும் குறைவாகவே தமிழ்மணத்தில் பகிரப்படுகிறது. அவர்களும் பலமுறை ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் தான். ஆனாலும் நாங்களும் புதியவர்களை, இதுவரை ஆசிரியர் பொறுப்பேற்காதவரை தேடிப் பிடிக்கிறோம். இன்னமும் தேடிக் கொண்டு உள்ளோம். இதெல்லாம் எங்களுக்குள் நாங்கள்(சீனா ஐயா, நான், யாதவன் நம்பி) குழு மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து பதிவர்களை தேடிப்பிடித்து ஆசிரியராக நியமித்து வருகிறோம்.

    ஆசிரியர் பொறுப்பேற்ற பதிவர் தான் புதிய பதிவர்களை கண்டறிந்து அடையாளப்படுத்த வேண்டும். அவர்களின் தேடுதல் சுருங்கினால் பழைய/ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பதிவர்களை மட்டுமே அவர் அடையாளப்படுத்த முடியும். ஆக புதியவர்கள் வலைச்சரத்தில் வர வேண்டுமானால் அந்தந்த வாரம் பொறுப்பேற்கும் ஆசிரியர் கையில் தான் உள்ளது.

    ReplyDelete
  29. ஒவ்வொரு வலைச்சர பதிவுகளுக்கும் நிர்வாகிகள் கருத்திடுவது என்பது நல்ல விஷயமென்றாலும், பெரும்பாலும் என்னால் கருத்திட முடிவதில்லை. என் பணி அப்படிப்பட்டது. ஆகையால் தான் நேரம் கிடைக்கையில் அலைபேசி மூலம் எனது பாராட்டுகளை கருத்துகளை தெரிவிக்கிறேன். உங்களிடம் மட்டுமலல் ஐயா, பெரும்பாலானவர்களுக்கு அப்படித்தான் கருத்துகளை சொல்கிறேன்/சொல்லியும் வருகிறேன்.

    திரு.யாதவன்நம்பி எங்களுள் ஒருவராக பொறுப்பேற்றது குறித்து முறைப்படி மின்னஞ்சல் மூலமாக உறுதி செய்து கொண்ட பின்னரே அவர் பதிவர்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். அவரது பெயரும் வலைச்சரத்தில் வலது பத்தியில் இடம்பெற்றது. நான் பொறுப்பேற்கும் போதும் சீனா ஐயா இப்படித்தான் செய்தார். தனியாக எங்களுக்கென வரவேற்று பதிவு பகிரவில்லை.

    ReplyDelete
  30. என்னெவென தெரியவில்லை ஐயா... நாங்கள் எப்போதும் போலவே எங்களின் பணிகளை வலைச்சரத்தில் செய்து வருகிறோம். எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவே திட்டமிட்டு ஒவ்வொரு வாரமும் எங்களின் பணி நடைபெறுகிறது. ஆனால் வாசகர்கள் மத்தியில் பல குழப்பங்கள்/ ஆலோசனைகள் என வருகிறது. அவையெல்லாம் நல்லதாக தெரிந்தாலும், சீனா ஐயா எப்போதும் என்னிடம் சொல்லவதெல்லாம் என்ன தெரியுமா? வாரா வாரம் பதிவர்களை தேடிப் பிடித்து பொறுப்பைக் கொடுப்போம். மின்னஞ்சல் அனுப்புவோம். யார் முதலில் பதில் சொல்கிறார்களோ அவர்களை பொறுப்பில் அமர்த்துவோம். பதில் சொல்லாதவரை கொஞ்ச நாள் கழித்து கூப்பிடுவோம். அப்படியும் சில வாரம் பதிவர் கிடைக்கவில்லையா? கவலையை விடு. நீ ரெஸ்ட் எடு. வலைச்சரத்துக்கு லீவு விட்டுவோம்னு சொல்வாரு. அதன்படியே இன்றும் நடைபெற்று வருகிறது.

    ReplyDelete

  31. @ தமிழ்வாசிப் பிரகாஷ்.
    வருகைக்கும் கருத்திட்டதற்கும் நன்றி. என் இடுகையே சரியாகப் புரிந்து கொ ள்ளப்படவில்லையோ எனும் சந்தேகம் எழுகிறதுவலைச்சரத்துக்கு ஆசிரியரைத் தேடிப் பிடிப்பது பற்றி நீண்ட விளக்கம் அளித்துள்ளீர்கள். நடப்பவைக்கு அவை ஜஸ்டிஃபிகேஷன் போலத்தான் தோன்றுகிறது. என்னதான் விளக்கம் கொடுத்தாலும் உர்சிப் பார்த்தால் பொலிவிழப்பவையாகவே உள்ளது ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நானும் ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறேன் ஆரம்பகாலத்திலேயே தமிழ் மணத்தில் இணைத்தும் விட்டேன் சீனா ஐயாவை நான் ஓரிருமுறை அழைத்தபிந்தான் என் பதிவுகளுக்கு ஓரிரு முறை வந்திருக்கிறார். உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பலமுறை வலைச்சரத்தில் அடையாள்ம் காட்டப் பட்டும் நான் உங்கள் கண்ணில் படவே இல்லை. ஒரு வேளை என் பதிவுகள் செய்தித்தாளில் வந்தவையோ காப்பி பேஸ்ட் செய்தவை எனவோ கருதப்பட்டதா. ஆசிரியரைத் தேடுவது தவிர இன்னும் சில ஆலோசனைகள் என் பதிவில் இருக்கின்றனவே. கண்ணில் படவில்லையா. எழுதியது இன்னும் மேம்பட வேண்டும் எண்ணத்தால் அல்லாமல் குறை கூறும் நோக்கமில்லை. வலைச்சரம் பல புதிய பதிவர்களை எனக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. வலைச் சரத்தில்காட்டப்படும் சுட்டிகளைப் படித்தாலேயே போதும்.வலைச்சர நிர்வாகிகள் அதைக்கூடப் படிப்பதில்லையே என்னும் ஆதங்கம் உண்டு. விவாதங்களில் வெற்றி கிடைக்கலாம் ஆனால் அதனால் சில நட்புகளை இழக்க நேரலாம். ஆகவே நான் விவாதம் செய்ய வரவில்லை. மீண்டும் நன்றியுடன்

    ReplyDelete
  32. திரு. தமிழ்வாசி பிரகாஷின் பொறுப்பான பதில்களுக்குப் பாராட்டுகள். சில இலட்சியங்களை தூக்கிச் சுமப்பவர்கள் எஞ்ஞான்றும் பொதுவாகவே எது குறித்தும் சிந்திக்கிறார்கள் என்கிற வரலாற்று உண்மை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

  33. @ ஜீவி
    என் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  34. தாங்கள் என் ரீடர் லிஸ்டில் இருப்பதால், தொடர்ந்து தவறாது படித்துக் கொண்டு தான் வருகிறேன். புதுசாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று மனசில் பட்டால் தான் இப்பொழுதெல்லாம் பின்னூட்டமிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதனால் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கும், தொடர்ந்து (ஆழ்ந்து) வாசிப்பவர்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.,

    ReplyDelete
  35. பதிவர்கள் எண்னிக்கை அப்படியே இருந்தாலும் பதிவுகளின் எண்ணிக்கைகள் குறைந்து வருவதைக் கவனித்து வருகிறேன். நிறையப்பேர் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூகவலைத் தளங்களில் இப்போது எழுதுகிறார்கள். அங்கே ஒரு நாலைஞ்சு வரிகள் போதுமே!


    ஆனாலொன்னு..... வழக்கமாகப் பின்தொடர்ந்து வாசிப்பவர்கள் கொஞ்சம் தாமதமாக ஆனாலும் வரத்தான் செய்கிறார்கள்(என்னைப்போல!)

    வாசித்துவிட்டுப் போய்விடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. பின்னூட்டங்கள் எழுத யாரும் அவ்வளவா மெனக்கெடுவதில்லை:(

    ReplyDelete

  36. @ ஜீவி
    மீண்டும் நன்றி

    ReplyDelete

  37. @ துள்சி கோபால்
    வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டிருந்தாலேயே வந்து வாசிக்கிறார்கள் ஆனால் அடையாளம் காட்டப்பட்டவர்களை வலைச்சர நிர்வாகிகளாவது வாசிக்க வேண்டும் .நான் பல செய்திகளைக் குறிப்பிட்டு இருக்கிறேன் பின்னூட்டங்கள்தான் எழுதுபவருக்கு டானிக். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  38. அனைத்துக் கருத்துகளும் சரியே. சார். பல புதிய பதிவர்கள் அடையாளம் காணப்படவேண்டும். நீங்கள் சொல்லி இருப்பது போல் ஒருகுறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் வலைகள் இயங்குகின்றன. வைட் ரீடிங்க் இல்லை என்பது உண்மைதான். அதாவது தெரிந்த பதிவர் என்றால் மட்டும் தான் வாசித்தல். நமது தளத்திற்குத் தவறாது வருபவர் என்றால் அந்த தளத்திற்குச் செல்லுதல், இப்படி நீங்கள் சொல்லி இருப்பது போல் கிவ் அண்ட் டேக் என்பது போல்தான் உள்ளது. யாராய் இருந்தாலும் பதிவு நல்ல பதிவாக இருந்தால் வாசித்துக் கருத்துச் சொல்லலாமே. ஒரு சிறிய வட்டத்திற்குள்தான் வலைகள் இயங்குகின்றன. வலைச்சரத்தில் சுட்டப்படும் சுட்டிகளுக்குக் கூட ஒரு சிலர்தான் சென்று வாசிப்பதுண்டு. நாங்களும் தான் ஒரு சிலவற்றிற்குதான் செல்ல முடிகிறது...புதியவர்கள் என்றால். நேரமின்மையும் ஒரு காரணம்.

    நீங்கள் சொல்லி இருப்பது போல் விவாதங்கள் வெற்றி பெறலாம். ஆனால் நட்பு இழக்கப்படலாம். உண்மையே சார். விவாதங்களை நல்ல முறையில், பக்குவப்பட்ட முறையில் அணுகப்பட்டால் பல நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படிப்பட்ட பக்குவம் இல்லாததால், விவாதங்கள் சர்ச்சைகளாக உருவாகிவிடுவதால், நாங்களும் தவிர்த்து விடுகிறோம். நட்புகளை, அன்பை இழக்க மனம் இல்லாததால். வலை உலகம் நல்ல மனம் உள்ள நட்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது உண்மையே.

    ReplyDelete