Saturday, August 8, 2015

இவரைச் சந்தித்து இருக்கிறீர்களா


                     சில குணாதிசயர்கள்--சந்தித்து இருக்கிறீர்களா.?
                     ------------------------------------------------------------------
                                              ( 1 )

     ” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த
நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.

      “நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்”--
இதை சொல்ல வரும் நண்பர்,”இன்று காலையில் எழும்போதே
ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ
என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி
தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே
செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்
கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி
விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.
கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.
மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று
பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு
மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக
இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்
ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று
தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்
உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது
மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.
வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை
போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே
போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.
கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்
எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்
கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்
கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து
விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்
என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ
தாமதத்துக்கு நாந்தான் காரணம் போல பெசிக்கொண்டேபோனார்.
                                               --------------
                                                    2

 ” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே”

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது
செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”

 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்
துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்”

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”

 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”

 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?”

  “ஏன், தமிழில்தான். “

 “அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்
திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான் “
                                                 --------------------
                                                             3

 ” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.”

 ” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.”

 “ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.”

 “ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.”

 “உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி
   என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.”

 “ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்
    சண்டை போடவேண்டும்?”

 “ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”

 “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
   கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.”

 “உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./’

 ‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.”

 “ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு
    ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி
    மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?”

 “ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.
    அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் “

 “ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்
   குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.”

இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்
                                         ----------------------------------
                                                          4

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
    நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
    பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
    கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
    சாலையே விலசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
    பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
    பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
    இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
    இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
    சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     விட்டேன்.

 “ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
                மகன் இருக்கிறான்.”

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
                என்கிறீர்களே.”

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
                அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
                வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
                செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
                நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
                வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
                கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
                இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               எடுத்து விட்டீர்களோ.?”

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
                நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
                கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
                வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
              பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
              பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               வைத்திருக்கிறேன். “

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               பேசினீர்களா.?”

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
              அவள் கொடுக்கும் இடம். “

நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?”

அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
                                                    5

“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”

“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”

“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
                                          ============================          

.




  

46 comments:

  1. நான் எனது என்று நாம் அதிகம் நினைக்கும்போது... வளரக்கூடாதது எல்லாம் தானே வளரும் ஐயா...

    ReplyDelete
  2. மனிதர்கள் பல்வேறு குணங்களை உடையவர்கள். ஏதோ ஒரு வடிகால் நாம் எல்லோருக்குமே ஏதோ ஒரு நேரத்தில், ஏதோவொரு இடத்தில் தேவைப் படுகிறது.

    அனுபவங்களையும் ஒரு பதிவெழுத வாய்ப்பையும் தருகிறார்கள்.

    :))))))

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பஞ்ச பாண்டவர்களும் என் நண்பர்கள்தான் :)

    ReplyDelete
  6. வேடிக்கை மனிதர்கள்..
    ஆங்காங்கே கொஞ்சம் வித்தியாசங்கள்.. அவ்வளவு தான்!..

    ReplyDelete
  7. தாங்கள் சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தங்களது அனுபவம் அருமை. சந்திக்கும் நபர்களைவிட தங்களின் சந்திப்பைத் தாங்கள் பகிர்ந்தவிதம் மிகவும் அருமை.

    ReplyDelete
  8. //“ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”

    “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
    கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.” //

    சட்டென்று என் நினைவுக்கு வந்ததைச் சொல்லி விடுகிறேன்: அந்த 'அழைத்து' 'இழுத்து' சம்பந்தப்பட்டது அது:

    கலைஞரின் கைவண்ணமும், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகரனின் (நடிகர் திலகத்தின்) வீராவேசமும் நினைவில் நின்றாடின.

    வரம் பெற்ற எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை. எக்காலத்தும் மறப்பதிற்கில்லை.

    ReplyDelete
  9. BHEL ல் இருதய வால்வு எல்லாம் தயாரிப்பார்களா?

    ReplyDelete

  10. @ திண்டுக்கல் தனபாலன்
    வளரக் கூடாதது என்று ஏதும் சொல்லி இருக்கிறேனா. ?எனக்குப் புரிதல் கொஞ்சம் மட்டு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  11. @ எனக்கு மனிதர்களைப் படிக்கப் பிடிக்கும். அதுவே பதிவுக்கு ஒருவாய்ப்பானால்.... இன்னும் பிடிக்கும்

    ReplyDelete

  12. @ பகவான் ஜி

    பஞ்ச பாண்டவர்களும் நம்மில் உலவுகிறார்கள். நாமும் ஏதோ ஒன்றில் அடங்கலாம் . வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜு
    என்னைப் பற்றியும் சிலர் இப்படி எடை போடலாம் அல்லவா.? கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  14. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இவர்கள் எல்லோரும் நாம் சந்திக்கும் மனிதர்கள். என்ன... நான் பதிவாக்கி விட்டேன் பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ ஜீவி
    வருகைக்கும் அருமையான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  16. @ டாக்டர் கந்தசாமி
    ஒன்று டாக்டர் பார்னார்டின் அறியாமை அல்லது நம்மவரின் அளவற்ற அளப்பு.வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  17. இவ்வுலகில் பேசித்தீர்க்க முடியாத விசயமே இல்லை அதற்க்கு இருபாலரும் விட்டுக்கொடுக்க முன் வரவேண்டும்.

    ReplyDelete
  18. இன்றையஉலகில் ஒரே வீட்டில் பலர் இருந்தும்
    தனித் தனித் தீவுகளாக வாழ்கிறார்கள்.மனம் விட்டுப்
    பேசுவது கிடையாது,நான்சொல்வதைக் கேள் என்னும்
    குண்ம் ஆட்டிப் படைக்கிறது என்ன செய்வது ஐயா
    பதிவு அருமை
    நேரில் ஒவ்வொருவரையும் சந்தித்த உணர்வு
    நன்றி ஐயா

    ReplyDelete

  19. @ கில்லர்ஜி
    உண்மைதான் ஜி. சில விஷயங்கள் பேசித் தீர்க்கப்படவேண்டும் சில விஷயங்கள்பேசப்படாமலேயே தீர்க்கப்படவேண்டும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    ஒவ்வொருவரின் குணாதிசயங்களைப் புரிந்து கொண்டால் பழகுவதற்கு எளிதாகும் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. நல்ல பரந்த அனுபவங்கள்தான்.

    இந்தப் பதிவை இரு முறை நிதானமாகப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது நாம் எத்தகைய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோமென்று. வாழ்க்கையே வீணாகியிருக்கும். சிந்தனை பழகிவிட்டால் அதை திருப்புவது மிகக் கடினம்.

    God Bless You

    ReplyDelete
  22. மனிதர்கள் பல விதம்.......

    ReplyDelete
  23. இது போன்ற மனிதர்களை சில நேரங்களில் சந்தித்ததால்தான் , ஜெயகாந்தன் அவர்கள் ”சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று தலைப்பு வைத்திருப்பார் போலிருக்கிறது.

    ReplyDelete
  24. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்! வெளியில் செல்லும் போதோ, வீட்டிற்கு மனிதர்கள் வரும் போதோ, அவர்களுடன் பேசும் போது மனம் அவர்களைப் படிக்கத் தொடங்கும். ஆனால் தவறான எண்ணத்தில் அல்ல....மனித குணங்களைக் கற்றல்....அறிந்து கொளல்...சுவாரஸ்யமாக இருக்கும் பல சமயங்களில்...

    அழகாக எழுதியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  25. இதைப் படித்தபோது எனக்கு சாவியின் "கேரக்டர்" தான் ஞாபகம் வந்தது. இணையத்தில் இலவசம். தேடிப்படியுங்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
  26. அழகாக எழுதியிருக்கிறீர்கள்...

    ReplyDelete

  27. @ வெட்டிப்பேச்சு
    /
    இந்தப் பதிவை இரு முறை நிதானமாகப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது நாம் எத்தகைய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோமென்று. வாழ்க்கையே வீணாகியிருக்கும்./எந்த ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறீர்கள்?எந்தப் பிரிவிலும் அடங்காததையா சொல்கிறீர்கள்.

    ReplyDelete

  28. @ வெங்கட் நாகராஜ்
    அதிகம் பயணம் செய்யும் நீங்களும் பலவகை மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  29. @ தி தமிழ் இளங்கோ
    ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படித்திருக்கிறேன் ஆனால் இப்போது நினைவில்லை. எந்தத் தொடர்பையும் நிர்ணயிக்க முடியவில்லை. வருகைக்கு நன்றிஐயா.

    ReplyDelete

  30. @ துளசிதரன் தில்லையகத்து
    மனிதர்களைப்படிப்பது ஒரு சுவாரசியமான பொழுது போக்கு. பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete

  31. @ jk22384
    என் தளத்துக்கு முதல் வருகைக்கு நன்றி. அதென்ன எண்ணில் ஒரு பெயர்ஜெயக்குமார்?

    ReplyDelete

  32. @ காளிதாஸ் முருகையா
    மீண்டும் உங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு பெரிய இடைவெளிக்குப்பின்....! பார்க்க மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  33. நல்ல கதம்பம்! :)

    ReplyDelete
  34. உங்கள் அபாரமான எழுத்துத்திறமையை வெளிப்படுத்தும் கட்டுரை இது. அடுத்த புத்தகத்தில் இதை மறவாமல் வெளியிடுங்கள்.- இராய செல்லப்பா

    ReplyDelete
  35. உங்கள் அபாரமான எழுத்துத்திறமையை வெளிப்படுத்தும் கட்டுரை இது. அடுத்த புத்தகத்தில் இதை மறவாமல் வெளியிடுங்கள்.- இராய செல்லப்பா

    ReplyDelete
  36. உங்கள் அபாரமான எழுத்துத்திறமையை வெளிப்படுத்தும் கட்டுரை இது. அடுத்த புத்தகத்தில் இதை மறவாமல் வெளியிடுங்கள்.- இராய செல்லப்பா

    ReplyDelete
  37. மனிதர்கள் பலவித குணநலன்களுடன் இருப்பார்கள். அவர்களுடன் கலந்து வாழ்வதே பெரிய கலை.
    எல்லோருக்கும் இனிமையான புன்னகை, கொஞ்சம் அவர்கள் பேசும் போது காது கொடுத்து கேட்க்கும் ஆட்கள் தேவைப்படுகிறது, முடிந்தவரை அதை கடைபிடிப்போம்.

    ReplyDelete

  38. @ கீதா சாம்பசிவம்
    வருகை புரிந்து பாராட்டியதற்கு நன்றி

    ReplyDelete

  39. @ செல்லப்பா யக்ஞசாமி
    வருகைதந்து என் எழுத்தைப் பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete

  40. @ கோமதி அரசு
    வருகைக்கு கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம்



    ReplyDelete
  41. நானும் இதுபோன்ற மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடைய சுய புராணத்தையும் ‘தேமே’ என்று கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். சில சமயம் அவர்கள் நமக்கு ஒன்றும் தெரியாது என எண்ணி ‘கதை’ விடுவதைத்தான் பொறுக்க இயலாது. பதிவை இரசித்தேன்.

    ReplyDelete

  42. @ வே நடனசபாபதி
    இந்தப் பதிவில் சுயபுராணம் பாடுவோர் மட்டுமில்லையே. பல குணாதிசயங்களுடன் இருப்பவர்கள் அல்லவா. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  43. பல குணாதியசங்களைச் சொல்லும் நல்ல தொகுப்பு ஐயா...

    ReplyDelete

  44. @ பரிவை சே குமார்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  45. சிலர் சிலரிடத்தில் உரிமையுடன் நட்புடன் புலம்புவது அல்லது வடிகால் தேடுவதுகூட ஒரு ஆறுதல் பெற தங்களிடம் பலர் அப்படி நட்பை தேடலாம் ஏன் நான் கூட உங்களிடம் நேரில் பேசணும் என்ற ஆசையில் இருக்கின்றேன்! காலம் கூடினால் ஒரு சிலநிமிடம் என்றாலும் மனம்விட்டுப்பேசவும் நல்ல உள்ளம் தேவைதானே ஐயா அந்த வகையில் தடுமாற்ற அவர் மரக்கறி வாங்கும் சூழ்நிலை மனிதரை ரசித்தேன். பகிர்வு மனதை தொட்டது !

    ReplyDelete
  46. ஆஹா....மனிதரில் எத்தனை வகை!!!!

    பொதுவாகவே மனிதர்களைக் கவனிப்பது ஒரு சுவாரசியமான சமாச்சாரம். அதிலும் அவர்கள் தெரிந்தவர்களாக இருந்தால்..... இன்னும் சுவாரசியம்தான்:-)

    ReplyDelete