Saturday, July 9, 2016

வர்ணாசிரம தர்மம்


                                           வர்ணாசிரம தர்மம்
                                           ------------------------------
தெய்வத்தின் குரலிலிருந்து சில பகுதிகள் அடைப்பில் இருப்பவை என் கருத்துகள் மிகக் குறைந்த அளவில் குறுக்கிடுகிறேன் தெய்வத்தின் குரல் என் குரலாகி விடக்கூடாது அல்லவா?
 
ஞ்சி பெரியர்( பம் இணையத்ிலிரந்து )


மதம் என்பது என்ன? ஆத்மாவுக்கு வந்திருக்கிற வியாதி தீருவதற்கு வைத்தியம் சொல்வதுதான் மதம் (இந்தக் கருத்து சரியா.?ஆத்மா என்பதேஇன்னும்  சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில்  அதற்கு வைத்தியமா?)
மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக்கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாசம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு - இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட 'ஸாமான்ய தர்மங்கள்'(.எதுவுமே பழக்கத்தில் இல்லாவிட்டால் மதிப்பு குறையும் ) அது தவிர 'வர்ணம்' என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.
இந்த விசேஷ தர்மங்களையும் சாமானியமாக்கியிருந்தால் அவற்றை எவருமே அநுஷ்டிக்காத நிலைதான் உண்டாகியிருக்கும்.(இப்போது மட்டும் அனுஷ்டிக்கிறார்களா) இதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: புத்த மதத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பதைப் பொது தர்மமாக வைத்தார்கள். ஆனால் இன்று பௌத்த தேசங்களில் என்ன பார்க்கிறோம்? எல்லோருமே மாமிசம் உண்பவர்களாக இருக்கிறார்கள். நம் ரிஷிகளும், தர்ம சாஸ்திரக்காரர்களும் மநுஷ்ய சுபாவம் நன்றாகத் தெரியும். அதனால் புலால் உண்ணாமையைச் சிலருக்கு மட்டுமே விசேஷ தர்மமாக வைத்தார்கள்(இதுவாவது அனுஷ்டிக்கப் படுகிறதா). இதைப் பார்த்து மற்றவர்களும் விரதங்கள், நோம்பு நாட்கள், மூதாதையர் திதி ஆகிய தினங்களில் மாமிச உணவை நீக்கி விடுகிறார்கள்.
 இதை எல்லாம் எதற்குக் சொல்கிறேன் என்றால், தற்போதுள்ள மதங்கலெல்லாம் அந்தந்த தேசங்களில் தத்தளிக்கின்றன என்பது என் அபிப்ராயமும் இல்லை. இதில் எனக்கு சந்தோஷமும் இல்லை என்பதற்குத்தான் டோயீன்பீ, பால் பரன்டன், கோஸ்ட்லர் மாதிரி பிரபலமானவர்களுடைய அபிப்ராயத்தையே சொன்னேன். லோகம் பூராவிலும் மத நம்பிக்கையின்மை (disbelief) , நாஸ்திகம் (atheism) எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகி, இப்போது எல்லா மதங்களும் தத்தளிக்கும்படியான நிலைமை வந்திருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே திருப்பிச் சொன்னேன்.
யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது;(இந்த வேறுபாடுகள் பிடிப்புக் குறையாமல் தொடரவேண்டும் என்பது அர்த்தமா) இது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; அதாவது ஒரு மதம் ஜனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால், அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமலேயிருக்கும் என்று நினைக்கிறோம்.(அதுதானே உண்மை)
நம் தேச சரித்திரத்தில் பார்க்கிறமாதிரி, அலெக்சான்டர் காலத்திலிருந்து பல அந்நிய மதஸ்தர்கள் வேறு அலைஅலையாகப் படை எடுத்து வந்தார்கள் என்றால், இப்படிப் பட்ட மதம் இருந்த இடம் தெரியாமல் புதைந்துதான் போயிருக்க வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால் இதற்கு நேர் மாறாக இருக்கிறது; எல்லாருக்கும் அநுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக் கொண்டுபோயிருக்கிறது. இன்றைக்கு உயிரோடிருக்கிற அப்படிப்பட்ட மதங்களுக்கும் பெரிய ஆபத்து இருப்பதாக அந்த மதத்து அறிவாளிகளே சொல்கிறார்கள். ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் 'என்னை யார் என்ன செய்துவிடமுடியும்?' என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்
 ஆயிரம் பதினாயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொடுப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெரும்பான்மையாக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா? இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தார்களா? அதுவும் இல்லை. குறைந்த பட்சம் திரவிய பலமாவது அவர்களுக்கு இருந்ததா? அப்படிக்கூட இல்லை. பிராமணன் பணம் சேர்ப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணமும் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெருமாபான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள்? அப்படி அவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து, 'இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம், பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம்' என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தினால் அந்தப் புது மதங்களில் சேர்ந்திருக்கிறார்களேயொழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசீயில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன! பார்த்தால், பழைய வைதிக மதமே "செத்தேனோபார்" என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது.
(மதம் என்பதே சில அனுஷ்டானங்கள் என்றாகி விட்டதுஅனுஷ்டானங்கள் மனிதனை மேல் நிலைக்குக் கொண்டு போகுமா? இவை எல்லாம் கடவுளின் பெயராலும்   மதத்தின் பெயராலும்  ஆண்டை அடிமை நிலையைத்தான் உருவாக்கி இருக்கிறது)
நவத்வாரம் உள்ள உடம்பில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியம். வெளியே போவது ஆச்சரியமே இல்லை' என்று ஒரு பெரியவர் பாடினார். அம்மாதிரி உள்ளே பிரிந்து வெளியிலிருந்தும் ஓயாமல் தாக்கப்பட்ட ஹிந்து மதம் செத்திருந்தால் ஆச்சரியமே இல்லை; சாகாததுதான் ஆச்சரியம்!
நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்து பார்த்தால் என்ன தெரிகிறது? மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது(இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அதனால்தான் நம் சமூகம் சீர்குலைந்து வருகிறது). நவீன யுகத்தில் 'சமத்துவம்' (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது? அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது( தன் கருத்துக்கு பல மேனாட்டு அறிஞர்களைத் துணைக்கழைக்கும்  பெரியவர் அந்த மேனாட்டு அறிஞர்களின் கருத்து வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கிறதா என்று சொல்லவில்லை)
வேற்றுமையில் ஒற்றுமை
வர்ண தர்மத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. முதலில் ஆகாயக் கப்பலில் காற்றுப் பையை (gas bag) ஒன்றாக அமைத்தார்கள். பிறகு அதில் ஓர் ஓட்டை விழுந்தால்கூடக் கப்பலே கெட்டு விழுந்து விடுகிறது என்று கண்டார்கள். அதனால் சிறிது சிறிதாகப் பல காற்றுப் பையை வைக்கலானார்கள். தனித்தனியாக இருந்தாலும் எல்லாம் ஒரே இடத்தில் நெருங்கியிருந்து ஒன்றையே தாங்கிக் கொண்டிருந்தன. கப்பல் பழுதடையாமல் இருந்தது. இதுவேதான் நம் மதத்தில் தனித்தனி தர்மம் என்று பிரித்து வைத்திருக்கிற ஏற்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்பது இதுதான்.
ஏகப்பட்ட சுல்லிக் கட்டைகளை சேர்த்துப் பிடித்து ஒரு கட்டாகக் கட்டுவது என்றால் அது சிரம சாத்தியமான காரியம். அப்படியே சிரமப்பட்டு ஒரு கட்டாகக் கட்டினாலும்கூட அது சுலபத்தில நெகிழ்ந்து கொடுத்துத் தளர்ந்து விடும். முதலில் ஒரு சுள்ளியை ஆட்டி எடுக்கிற மாதிரி நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலே போதும். அந்த ஒன்றை எடுத்ததால் தளர்ச்சி ஜாஸ்தியாகி இன்னொரு சுல்லியைச் சுலபமாக உருவி விடலாம். இப்படி இரண்டு மூன்று என்று எடுத்து விட்டால் அப்புறம் கட்டு ஒரேயடியாக தொள தொளவென்று தளர்ந்துபோய் அத்தனை சுள்ளிகளும் தனியாக விழுந்துவிடும்.
மாறாக முதலிலேயே அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகக் கட்டாமல் கைக்கு அடக்கமாகப் பத்துப் பதினைந்து என்று சேர்த்து சின்னக் சின்னக் கட்டுகளாகப் போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்; இது ஒவ்வொன்றும் கையடக்கமாக இருப்பதால் தளராதபடி நல்ல பிகுவாகக் கட்டிவிட முடியும். அப்புறம் இந்தச் சின்ன சின்னக் கட்டுகளையெல்லாம் சுலபத்தில் ஒன்றாக அடுக்கி எல்லாவற்றையும் சேர்த்து பெரிய கட்டாகப் போடலாம். ஒட்டு மொத்தமாக அத்தனை சுள்ளிகளையும் வைத்துப் போடுகிற கட்டைவிட இப்போது நாம் போடுகிற பெரிய கட்டு இன்னும் விறைப்பாக, உறுதியாக இருக்கும். அது மட்டுமில்லை. இந்தப் பெரிய கட்டு கொஞ்சம் தளர்ந்தால்கூட ஒரு தனிச் சுள்ளி விழுகிற மாதிரிச் சின்னச் சுள்ளிக்கட்டு விழாது. அதாவது பெரிய கட்டு பந்தோபஸ்தாகவே இருக்கும். என்றைக்கும் அது கட்டு விட்டுப்போகாது. ( உதாரணம் என்னவோ நன்றாய்த்தான்  இருக்கிறதுஆனால்…விளைவுகள் எதிர்பாராதது கட்டுகளாய் நெகிழ்ந்து போவது கண்கூடு 
 இனிவரும்  பகுதிக்கு வாசகர்களின் நேர்மையான கருத்தை வரவேற்கிறேன்
  
சின்னக் கட்டுகளில் எதுவோ ஒன்று தளர்ந்து கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுகூட அதிலுள்ள சுள்ளிகள் மட்டும் விலகுமே தவிர, மற்ற கட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே பத்திரமாக இருக்கும். அவற்றிலுள்ள சுள்ளிகள் கொஞ்சங்கூடக் கலகலத்துப்போய் விடாது.
ஒரு பெரிய ஜனசமூகத்தை ஒரே அமைப்பிலே போட்டு கட்டுகிறேன் என்றால் அது முடியாத காரியம். ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது? இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக - ஜாதிகளாக - பிரிந்தார்கள். அவரவருக்கும் "ஜாதி நாட்டாண்மை" என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டாண்மைக்காரக்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேத்தான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.
 அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள் கொடுத்தார்கள் என்றால், ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அது. ஒரு சக்கிலியாக இருக்கட்டும், பரியாரி (நாவிதன்)யாக இருக்கட்டும் - எவராகத்தான் இருக்கட்டும் - இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட (depressed) என்றெல்லாம் சொல்கிற எந்த ஜாதியினராக இருந்தாலும்கூடத்தான் - அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால், அதுவே சுரீலென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை, மகத்தான அவமானம் என்று தோன்றியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஜாதியாரும் எந்த ஜாதியினரையும் மட்டம் தட்டி வைக்கவில்லை. அந்தந்த ஜாதியாரும் தங்கள் விவகாரங்களைப் பொருத்த மட்டில் தாங்களே ராஜா என்கிற பூரண திருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறது? உசத்தி தாழ்த்தி அபிப்ராயங்கள் இருந்திருந்தால், தானாகவே பலவிதமான தாழ்வு மனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும். பிராமணனையும் க்ஷத்திரியனையும் தவிர ஜாதியார் எவருக்கும் தங்கள் ஜாதியிடம் மதிப்பு, கௌரவ புத்தி, விசேஷமான பிடிப்பு இருந்திருக்க முடியாது. இதெல்லாம் இல்லாவிட்டால் "ஜாதிப்ரஷ்ட"த்தைப் பொருட்படுத்தியே இருக்க மாட்டார்கள். ஆனால், நடைமுறையில் ஜாதி என்ன பெயரில் ஜாதி என்ற பெயரில் சின்னச் சின்னச் சமுதாயங்களாக ஜனங்கள் இருந்தபோது, தங்களுக்கு பரஸ்பரமான அன்பும் விசுவாசமும் ஏற்பட்டு, அதிலே ஒரு பந்துத்துவமே உண்டாயிற்று. அதனால்தான் 'ஜாதியிலிருந்து தள்ளி விடுவோம்' என்றால் அது பெரிய தண்டனையாகத் தோன்றியது. இப்போது பிற்பட்டவர்களாக இருப்பதால் பலவித சலுகைகள் கிடைக்கின்றன என்பதற்காக வேண்டுமானால் பலர் தங்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனப்பூர்வமாக அதில் கௌரவ புத்திவைத்து அபிமானிக்கவில்லை. அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சலுகைக் எதுவும் கிடையாது. ஆனாலும், மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்வரை நாம் பார்த்தது என்னவென்றால் அவர்களுக்கும் தங்கள் ஜாதியில் ஆழமான அபிமானம் இருந்திருக்கிறது. இப்போதுபோல் இன்னொருத்தரிடம் போட்டியும் எதிர்ப்பும் இருப்பதால் தங்களுக்குள் அபிமானம் பாராட்டிக் கொள்ளவில்லை. அப்போது இந்த ஜாதிச் சண்டை, போட்டா போட்டி எல்லாம் இல்லவே இல்லை. மெய்யாகவே அவரவருக்கும் தங்கள் ஜாதியில் இருந்து கொண்டு, அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச் சடங்குகள், விதிகள், ஆச்சாரங்கள், தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் சந்துஷ்டியும் பெருமிதமும் (pride) இருந்தன( இப்போது அவரவருக்கு விதிக்கப்பட்ட தொழில்கள் பின்பற்றப்படுவதில்லை. அதைத்தவிர ஏனைய சங்கதிகளே முக்கியமாகக் கருதப் படுகிறதுஇவையே வெட்டு குத்துகளில் முடிகிறது சாதி வேறுபாடுகள்சமூகச் சீர்குலைவுக்கு துணை போகிறது இந்த சாதி வேறுபாடுகளை ரக்ஷிக்க வேண்டிய பிராம்மணர்களே  இவற்றை மீறுவதில் முன் நிற்கிறார்கள் ).

இப்போது கலகம் செய்கிறவர்களிடம் போலீஸ் வந்தால் போலீசாரிடமே கலகக்காரர்கள் அடிதடியில் இறங்குகிறார்கள்! ஆனால் முன்னமே ஜாதி நாட்டாண்மையில் எதிர்த்து இப்படி யாரும் சண்டை போட்டதில்லை. காரணம் இப்போதிருக்கிற போலீஸ் வெளியிலிருந்து செய்கிற கட்டுப்பாடாயிருக்கிறது. ஜாதி நாட்டாண்மையிலோ, 'நம்மவர்கள்' என்ற பாந்தவ்யம், அபிமானம் இருந்தது. இதனால் ஆயுத பலமும் படை பலமும் இல்லாமலே அன்றைய நாட்டாண்மை இன்றைவிட வெகு சிறப்பாகக் குற்றங்களைக் குறைத்து வந்தது. எல்லாரும் ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆச்சாரங்கள் என்று பிரிந்திருந்தும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

இதில் கூறப்பட்டிருக்கும்  கருத்துகள்நடைமுறையில் எதிர்க்கப்பட்டு வரும் எண்ணங்களுக்கு   மாறானது.  இம்மாதிரி ஜாதிகள் உருவாக்கப்பட்டது  எப்போது, யாரால் என்பவை மறைக்கப் படுகின்றனஇதெல்லாமே ஒரு  afterthought  என்றே தோன்றுகிறது  ஒரு மடாதிபதியின்  சப்பக்கட்டு   justification   என்றே எண்ணத் தோன்றுகிறது  எல்லாமே சரியென்றால் அவை ஏன் பின்பற்றப் படுவதில்லை


-



Top of Form
Bottom of Form


'

69 comments:

  1. தெய்வத்தின் குரலுக்கு நீங்கள் தந்த விளக்கங்கள் உங்கள் அனுபவங்களின் வெளிப்பாடு.நியாயமான விமர்சனமும் எனலாம்
    ( இப்போதுதான் Android செல்போன் வழியே இந்த பதிவினை படித்து முடித்தேன். விரிவான கருத்துரையை இதனால் எழுத இயலவில்லை.மீண்டும் வருவேன்)

    ReplyDelete
  2. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்த நினைவு வருகிறது. பல செய்திகளைப் படித்து உள் வாங்கி பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் மன நிறைவு என்பது அளவிடற்கரியது.

    ReplyDelete
  3. வருணாசிரமதர்மம் என்பதே கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் திணிக்கப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும். இந்த நாடு உருப்படாமல் போனதற்கும், மக்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வும் சண்டை சச்சரவுகள் நிகழ்வதற்கும், காலத்திற்கு ஒவ்வாத இந்த கொள்கைதான் காரணம் ஆகும். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை; எவரும் எந்த தொழிலும் செய்யலாம் என்று இதில் சொல்லப்பட்டு இருந்திருந்தால் இந்த வருணாசிரமதர்மம் என்றோ வழக்கு ஒழிந்திருக்கும். FC/BC/MBC/SC போன்ற பிரிவினைகளும் உண்டாகி இருக்காது. நிற்க.

    நான் ஏற்கனவே சொல்லியது போல, தெய்வத்தின் குரலுக்கு நீங்கள் தந்த விளக்கங்கள் உங்கள் அனுபவங்களின் வெளிப்பாடு. நியாயமான விமர்சனமும் எனலாம். தெய்வத்தின் குரல் என்பது பெரியவரின் குரல் என்பதால் பலர் இதுபற்றி கருத்துரை சொல்லவும் தயங்கலாம். சர்ச்சையைக் கிளப்பும் தலைப்புகளில் Straight Forward ஆக எழுதுபவர் நீங்கள்.

    ReplyDelete
  4. தங்களது அனுபவத்திலிருந்து உதித்த பதிவின் வழியே பல விடயங்கள் அறிந்தேன் ஐயா நன்று
    இதற்கு கருத்து சொல்லும் பக்குவம் எமக்கு போறா.... நன்றி

    ReplyDelete
  5. மதநம்பிக்கை, சாதி நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் சிந்திக்க முடியாதவர்கள். இவர்கள் மூளையில் ஊனம் என்பதே உண்மை. மதவெறியர்கள் "டார்வின்" போன்ற சிந்தனையாளர்களை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு மன ஊனமுற்றோர்கள் என்பதே உண்மை. என்னதான் ட்ரடிஷன், வாழ்க்கை முறையில் நீங்களும் நமது சமூகத்துடனயே கலந்து அதன்படி வாழ்ந்தாலும் அப்பப்போ அதிலிருந்து வெளியே வந்து இதுபோல் யோசிக்கிறீங்க. இதெல்லாம் பலரால் முடியாது. முடிந்தாலும் அதை வெளியில் சொல்ல மனப் பக்குவமோ, தைரியமோ இல்லாத கோழைகள்! வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  6. பாதி தான் படித்தேன். சில வரிகள் சிகப்பு கலரிலேயும், நீல கலரிலும் இருக்கிறது. அது உங்கள் கருத்து என்று நினைக்கிறேன். இந்த இந்த கலருக்கு என்று ஒரு பின்குறிப்பு கொடுத்து, பத்தி பத்தியாக பிரித்து உங்கள் கருத்துக்களை அந்த பத்தியின் அடியிலே கூறினால் எளிதாக படித்து புரிந்து நன்றாக ரசிக்க முடியும்!
    நன்றி!

    ReplyDelete
  7. வருணாசிரமதர்மம் என்பதே கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் திணிக்கப்பட்ட ஒரு கோட்பாடுதானே

    ReplyDelete

  8. @ தி தமிழ் இளங்கோ
    விருப்பு வெறுப்பின்றி வாசித்துக் கருத்திடுங்கள் பதிவின் பிற்பகுதியில் பெரியவர் சில எண்ணங்களைக் கூறுகிறார் உங்கள் கருத்து என்ன. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  9. @ கில்லர்ஜி
    சாதி அதன் விளைவுகள் பற்றியெல்லாம் நீங்கள் எழுதி உள்ளீர்களே உங்கள் கருத்து எதுவாயினும் யார் மனதும் தனிப்பட்ட முறையில் புண்படாதவாறு கூறலாமே வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  10. @டாக்டர் ஜம்புலிங்கம்
    மன நிறைவோடு எழுதியதல்ல இப்பதிவு மனதில் வலியோடு எழுதியது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  11. @தி தமிழ் இளங்கோ
    /பெரியவரின் குரல் என்பதால் பலர் இதுபற்றி கருத்துரை சொல்லவும் தயங்கலாம்./ மிகச் சரியான கணிப்பு சார். சில கருத்துகளை நியாயப்படுத்த பெரியவரின் சில வாதங்கள் இண்டெரெஸ்டிங் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  12. @ வருண்
    எல்லா இடங்களிலும் நல்லவையும் அல்லாதவையும் உள்ளது நல்லதை எடுப்போம் மற்றதை விலக்குவோம் பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  13. @ நம்பள்கி
    வருகைக்கு நன்றி சார் பதிவிலேயே கூறி இருக்கிறேன் அடைப்பான்களுக்குள் இருப்பது என் கருத்து. அவை சிகப்புக் கலரில் நன்கு தெரிய எழுதி இருக்கிறேன் நீலக் கலரில் சில வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க எழுதி இருக்கிறேன் அவை பெரியவரது எழுத்துகள் பெரியவரது சில வாதங்கள் நன்றாக இருக்கிறது

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    அந்தக் கோட்பாடுகளின் கொடுமையை இன்றும் அனுபவிக்கிறோம்வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  15. அருமையான பதிவு

    ReplyDelete
  16. வருணசிரம தர்மமல்ல ! "வருமசிரம அதர்மம்" அதர்மம் என்று ஒரு இடுகை இட்டிருந்தேன்.GMB sir துணிச்சல் மிக்கவர். நன்று ! நன்றி ---காஸ்யபன்.

    ReplyDelete
  17. இரண்டு பகுதியாக வெளியிட்டிருக்கலாம். ரொம்பப் பெரிதாகவும் பத்திகள் பிரிக்காமலும் இருப்பதால் படிப்பது சிரமமாக இருக்கிறது. ஆனாலும் தெய்வத்தின் குரலிலேயே இவற்றைப் படித்திருக்கிறேன். கருத்துச் சொல்லும் அளவுக்குத் திறமை இல்லை! உங்கள் அனுபவங்களைப் பதிவிட்டிருப்பதற்கு வாழ்த்துகள். இதற்குத் துணிச்சல் எல்லாம் தேவையே இல்லை, மாற்றுக் கருத்துகளை ஏற்கக் கூடியவே பரமாசாரியார் என அழைக்கப்படும் சங்கராசாரியார் அவர்கள். யாரையும் எதற்கும் எப்போதும் வற்புறுத்துவதில்லை. தன் கருத்துகளை மட்டுமே கூறி உள்ளார். ஏற்க விரும்புபவர்கள் ஏற்கலாம். மற்றவர்கள் ஏற்கவேண்டாம்! :)

    ReplyDelete

  18. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    தெய்வத்தின் குரல் எனும் நூலில் இருந்து சிலபகுதிகளை வெளியிட்டுக் கூடவே என் கருத்துகள் சிலதையும் பதிவிட்டிருக்கிறேன் இதில் எது அருமை என்று தெரியவில்லை வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  19. @ காஸ்யபன் .
    அந்தஇடுகையின் சுட்டியைக் கொடுத்திருக்கலாம் ஐயா யாரையும் புண்படுத்தாமல் என் கருத்துக்களைச் சொல்கிறேன் ஐயா துணிச்சல் என்று ஏதுமில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  20. @ கீதா சாம்பசிவம்
    இரண்டு பகுதிகளாகப் போட்டிருக்கலாம் ஆனால் தொடர்ச்சி இல்லாமல் தொய்வு இருந்திருக்கும் பெரியவரின் கருத்துகளுக்கு மறு மொழியாக அடைப்பில் என்கருத்துகள் இருந்ததால் பத்தி பிரிக்காமல் இருந்ததுபோல் இருந்திருக்கலாம் எனக்கு பெரியவர் மீது மரியாதை உண்டு. ஆனால் அவருடைய எல்லாக் கருத்துகளுடனும் உடன் பாடு இல்லை. அதைக் கூறுகிறேன் துணிச்சலா அல்லவா என்பது வாசகர்கள் தீர்மானிக்க வேண்டியது. இதே பதிவுக்கு பின்னூட்டம் கூட இட துணிச்சல் இல்லாமல் பலரும் இருப்பது தெரிகிறது. உங்கள் கருத்தைச் சொல்வதற்கு என் பாராட்டுகள். வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  21. தாங்கள் எழுப்பியுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகளிலேயே இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. எந்த ஒரு சொற்பொழிவையும் அது நிகழ்த்தப்பட்ட காலம் எது என்பதையும், எந்தக் குழுவினருக்ககாக நிகழ்த்தப்பட்டது என்பதையும் கவனிக்காமல் விவாதம் செய்ய முற்படுவது out of context என்னும் பிழைக்கு இலக்காகும் என்பது தங்களுக்கு தெரியாததா?

    இந்து மதத்தை பொறுத்தவரை, காலத்துக்கும் மக்களின் நன்மைக்கும் ஏற்றபடியான எவ்வளவோ மாற்றங்களை அனுமதித்தே வந்துள்ளது என்பதை பிற மதத்தவர்கள் போலவே நீங்களும்ந ன்றாகவே அறிவீர்கள்வா தானே!- இராய செல்லப்பா

    ReplyDelete
  22. ***எந்த ஒரு சொற்பொழிவையும் அது நிகழ்த்தப்பட்ட காலம் எது என்பதையும், எந்தக் குழுவினருக்ககாக நிகழ்த்தப்பட்டது என்பதையும் கவனிக்காமல் விவாதம் செய்ய முற்படுவது out of context என்னும் பிழைக்கு இலக்காகும் என்பது தங்களுக்கு தெரியாததா? ***

    எல்லாருக்கும் தெரிந்த ஒண்ணை நீங்க இங்கே சொல்ல வேண்டிய காரணம் என்னவோ? உங்களுக்கு மட்டும்தான் ஞாபகம் இருக்குணு சொல்ல வர்ர மாதிரி இருக்கு!!

    ***இந்து மதத்தை பொறுத்தவரை, காலத்துக்கும் மக்களின் நன்மைக்கும் ஏற்றபடியான எவ்வளவோ மாற்றங்களை அனுமதித்தே வந்துள்ளது என்பதை பிற மதத்தவர்கள் போலவே நீங்களும்ந ன்றாகவே அறிவீர்கள்வா தானே!- இராய செல்லப்பா ***

    அடேங்கப்பா!!! ரொம்பத்தான் பெருமை அடிக்கிறீங்க. நீங்க இந்துவா சார்? எப்படி இந்து மதத்தை தழுவினீங்க? இந்து அப்பா அம்மாவுக்கு பொறந்தனாலயா? அதனால் சாகிறவரை ஹிந்துப் பெருமை பேசியே ஆகனும், யாரும் இந்து மதத்தை விமர்சித்தால், அங்கு வந்து இந்துமதப் பெருமை, வர்ணாசிரத்தில் உள்ள நன்மைகள்பத்தி எல்லாம் பீத்தணும்னு யார் உங்களுக்கு ஊட்டி வளர்த்தது?

    ReplyDelete
  23. விவரங்கள் அறிந்தேன்...
    கருத்துச் சொல்லவோ விவாதம் பண்ணவோ அது குறித்த அறிதல் எனக்கு இல்லை...

    ReplyDelete
  24. அப்புறம் சொல்ல மற்ந்துடேன்..யாகசாமி செல்லப்பா சார்..

    நீங்க சொன்ன "காலகட்டத்தைப் பார்க்கணும்" அப்புறம் "out of context" ணு சொல்லி பொன்னான மதத்தில் இருக்கும் நெறைய அநியாயங்களை "சப்பைக் கட்டுதலும்" செய்யலாம். உங்களை மாதிரி பெரிய மனுஷர்களும் இதில் கில்லாடிகள்!!

    "ஒரு காலகட்டத்தில் நரபலி கொடுத்தாங்க" அந்த காலகட்டத்தில் அதுபோல் கட்டாயம் இருந்தது னு சப்பைக்கட்டு கட்டலாம்.

    ஒரு காலகட்டத்தில் சதி உடன்கட்டை ஏறுதல் எல்லாம் இருந்தது..அது அந்த காலகட்டதில் போயி பார்த்தால் அதில் தப்பெதுவும் இல்லை னு ச்ப்பை கட்டு கட்டலாம்.

    ஒரு கால கட்டதில் வர்ணசிரம் இருந்தது. அதை இந்துக்களான நாங்கள் இப்போவும் கட்டி அழறோம். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் அவர் பார்ப்பனர் இல்லை பாப்பாத்தி, கொலை செய்தவன் முஸ்லிமோ இல்லை தலித்தோனு, கொலையாளியை கண்டு பிடிக்க முன்னாலேயே நீங்க வக்காலத்து வாங்கும் இந்து மதத்தினர் வர்ணாசிர முத்திரை குத்திகொண்டு திரிவதையும்கூட சப்பைக்கட்டு கட்டலாம்- உங்களை மாதிர் பெரியமனிதர்களுக்கு அதுவும் ரொம்ப எளிது..

    உலகத்தில் நடந்த, நடக்கும் எல்லாம் அநியாய்ங்களையுமே நியாயப்படுத்தலாம். எப்படி? நீங்க சொன்ன இந்த ரெண்டே வார்த்தைகளை வைத்து, அதாவது "காலகட்டத்தில்" "out of context" என்கிற ரெண்டே வார்த்தைகளை வைத்து.

    உங்களைவிட இதையெல்லாம் பல மடங்கு அலசி ஆராய்ந்துதான் இக்கட்டுரை முன் வைக்கப் பட்டுள்ளது. இங்க வந்துக்கிட்டு என்னவோ எழுதியவரும் வாசகர்களும் உங்க இந்து மதத்தை அதில் உள்ள வர்னாசிரத்தி தவறாக புரிந்து கொண்டது போல் அறிவுரை எல்லாம் தேவையற்றது.

    ReplyDelete
  25. Wonderful Post. Thank you for your courageous comments on "Periyavar". It is important to have healthy conversations instead of protecting everything told in the name of God.

    ReplyDelete

  26. @ செல்லப்பா யக்ஞசாமி
    வருகைக்கு நன்றி சார் எந்தகாலத்துக்கும் ஏற்றது என்பதனால்தான் அது புத்தக வடிவில் வந்தது. அது எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும் என்னும் எண்ணமே அதில் இருக்கிறது நிலவி வரும் ஏற்றதாழ்வுகள் பற்றி நான் எழுதி வருவது என் பதிவுகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும் அதற்கு வக்காலத்து வாங்குவதுபோல் இருக்கும் எழுத்துக்களில் என் கருத்தையும் பதிவு செய்வதே இப்பதிவின் நோக்கம் எதுவும் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் அல்ல. மேலும் பெரியவரின் கருத்துக்களை நான் விமரிசித்திருக்கிறேன் அவ்வளவுதான்மீண்டும் நன்றி

    ReplyDelete

  27. @ வருண்
    அவரவருக்கு அவரவர் கருத்து. நம் கருத்தை நாம் வெளியிடுகிறோம் அதை விவாதம் செய்வதில் தவறில்லையே நன்றி சார்

    ReplyDelete

  28. @ பரிவை சே குமார்
    வாதப் பிரதிவாதங்கள் குறிப்பிட்ட தலைப்பு குறித்த அறிதலையும் புரிதலையும் கொடுக்கும் என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  29. @ வருண்
    கருத்து கூறுபவரிடம் கோபம் கொள்வது சரி அல்ல என்றே நினைக்கிறேன் மீள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  30. @ செல்வநாயகி
    வலையுலகில் இப்போது நீங்கள் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  31. இந்தியாவைப்போல மோசமான பாகுபாடுகள் உள்ள மக்களைப் பார்த்ததில்லை. ஊருக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்பொழுதெல்லாம் இது பெரிய பிரச்சனை. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  32. @ பக்கிரிசாமி .என்
    ஐயா வணக்கம் வெகு நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியைத் தருகிறது. எத்தனையோபேர் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் சார்பில் இது ஒரு வடிகாலாக இருக்கலாம் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. நானும் தெய்வத்தின் குரல் புத்தகத்திலேயே வாசித்துள்ளேன்.

    எந்த ஒன்றுக்கும் பல கருத்துக்கள், அவரவருக்குத் தகுந்தபடி இருப்பது இயல்பே!

    அவர் அப்படிச் சொன்னார். அதுக்கு நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். அவ்ளோதான்!

    ReplyDelete

  34. @ கருத்துகள் யார் சொல்வது என்பதில்தான் இருக்கிறதுஒரு மத ஆச்சாரியார் பலரால் பெரியவர் என்று மதிக்கப் படுபவரின் கருத்துக்கு பவர் அதிகம் அதை பலரும் மறுத்துச் சொல்லத் தயங்குகிறார்கள் அதை எதிர்ப்பதே தவறு என்றும் எண்ணுகிறார்கள் அவர் கருத்து அது என் கருத்து இது என்று சொல்லிப் போகும் விஷயமல்ல இது ஏன் என் பதிவுக்கு வந்து கருத்திடும் வாசகர்களையும் காணோம் அது அவ்ளொதான் என்று நினைக்க இயலவில்லை. உங்கள் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  35. ஏற்கெனவே இப்பதிவை வாசித்து விட்டேன். பல கருத்துகளுக்கு எதிர்க் கருத்துகள் கொடுக்க நினைத்தேன். ஆனால் உங்களது கடைசி வரி அனைத்தையும் மாற்றி விட்ட்து //மன நிறைவோடு எழுதியதல்ல இப்பதிவு மனதில் வலியோடு எழுதியது // இப்படி எழுதிய பின் யார் தான் இன்னும் என்ன சொல்ல முடியும்.

    ReplyDelete
  36. …இருந்தாலும் கொஞ்சம் எழுதுகிறேன் …. In italics

    வர்ணம்' என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில்வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன….

    முழுமையாக எதிர்க்கிறேன். ஒருவருக்கு கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் தர்மம் விதிக்கப்பட்டுள்ளது; இன்னொருவருக்கு மலக்கழிவோடு போராடும் “தர்மம்” விதிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் முன்னோருக்கு எல்லாமே தர்மப்படி நடப்பதாகத் தான் தோன்றும். அது இயற்கை!

    ReplyDelete

  37. ஒரு மதம் ஜனங்களைப் பலவிதமாகப்பிரித்து வைக்கிறது என்றால், அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும்ஐக்கியமும் இல்லாமலேயிருக்கும் என்று நினைக்கிறோம்.

    (அதுதானே உண்மை)….

    உண்மையைச் சொன்ன GMB உங்களை மனதாறப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete

  38. பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில்பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் 'என்னை யார் என்னசெய்துவிடமுடியும்?' என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டுஉயிர்வாழ்கிறது. …

    இதைத்தான் பிராமணிய தந்திரம் என்கிறோம்.

    வரலாற்றைப் பாருங்கள். எல்லோரும் சமம் என்ற புத்தமும், ஜைனமும் முனைந்து அழிக்கப்பட்டன. வெறும் ancestral worship என்றிருந்த திராவிட மதம் முற்றிலுமாக மாற்றப்பட்டது. அட …பிள்ளையார் சதுர்த்தி is the latest part of our history. என்ன நடந்தது. வட இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒரு புதிய சாமி.. புதிய விழா… விழாவை ஒருமித்து வரும் பாகுபாடு.. மத விரோதம். கண்கூடாக கடந்து இருபது ஆண்டுகளில் வந்த மாற்றமிது. இன்று இவ்வளவு எதிர்ப்புகள் வந்த பின்னும், மத அணுகுமுறை மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும், பெரியாரும் அம்பேத்கரும், பூலேயும் தோன்றி புரட்சிக் கொடி தூக்கிய பின்னும் பிள்ளையாரின் வளர்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது. இல்லை… ஆச்சரியம் இல்லை; அச்சமாக இருக்கிறது?

    ReplyDelete

  39. மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவாஇருந்தார்கள்? …

    இருக்கிறார்கள் ,.. இன்றும் டிவி விளம்பரங்கள் பாருங்கள்- புரியும்! ஹார்லிக்ஸ் குடிக்கணும்னு யார் சொன்னா மக்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று விளம்பரக்காரர்கள் நினைக்கிறார்கள்.

    இந்தப் புத்திசாலித்தனத்திற்கு hats off

    ReplyDelete

  40. வைதிக மதமே "செத்தேனோபார்" என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது…

    நல்ல திறமை தான். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது தெரியுமா? தலை தூக்குகிறதா … அடியுங்கள் தலையில். சாகட்டும். உங்கள் மதம் தாங்கிப்பிடிக்கும் ஆளுக்கொரு தர்மமும் சாகட்டும்.

    ReplyDelete

  41. வர்ணதர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது…

    அடி மடியில் கைவைத்து விட்டீர்களே..

    ReplyDelete
  42. ***இது ஏன் என் பதிவுக்கு வந்து கருத்திடும் வாசகர்களையும் காணோம்?**

    உண்மை பேச ஆரம்பித்தாலே பிரச்சினைதான், சார். எல்லோரையும் போல "நட்பு பாராட்டுவதுதான் முக்கியம், அதுக்காக ஆயிரம் பொய் சொல்லலாம்ன்" எதையாவது ஜோடிச்சு பொய் எழுதினால், பாராட்டுக்கள் கிடைக்கும். மனிதன் உருவாக்கிய மதம் மனிதனை எந்தளவுக்கு ஆட்டிப் படைக்கிது என்பதற்கு "இந்நிலை" ஒரு அழகான உதாரணம்!

    ReplyDelete
  43. ஐயா
    கருத்துக் கூற முதலில் தயக்கம் இருந்தது. நீங்கள் என்ன எழுதினாலும் சரி. ஆஸ்திகம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.இது இந்து மதத்திற்கு மட்டும் இல்லை. எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆகவே அந்த அந்த மதத் தலைவர்கள் கூறுவதை யாரும் எதிர்ப்பதில்லை. இது இந்து மதத்திற்கும் பொருந்தும். நீங்கள் தனி ஆளாக உங்கள் கருத்துக்களைக் கூறுவீர்கள்.அதே சமயம் வீட்டுக்கு அடுத்து நடக்கும் கோவில் திருவிழாவிலும் கலந்து கொள்வீர்கள். உறவினருடன் கோயில் கோயிலாக ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு தீர்த்த யாத்திரையாகவும் செல்வீர்கள். இது சிறிய முரண்பாடாக எனக்குத் தோன்றுகிறது.
    உங்களுக்கும் ஏன் எனக்கும் கூட இந்த வர்ணாசிரம கொள்கைகள் பிடிக்கவில்லை. ஆனால் இந்த வர்ணாசிரம பிரிவை யார் தற்போதும் பிடித்து வைத்துள்ளனர் என்றும் கவனிக்கவேண்டும். யார் BC MBC SC ST ஏன் இன்றும் சான்று வாங்கி பெருமிதமடைய வேண்டும். அனைவரும் சமம் என்பவர் எதற்க்காக ஏழை பணக்காரன் பாகுபாடின்றி சாதி அடிப்படையில் முன்னுரிமை கோரவேண்டும்.

    நான் உயர்ந்த சாதி என்று கூறுவதை உயர்ந்த சாதியினர் விட்டு விட்டனர். அது போன்று மற்றவர்களும் நான் பிற்பட்ட சாதி என்று உரிமை கொண்டாடுவதை விட்டால் தான் சமத்துவம் ஏற்படும். முற்பட்ட சாதியினர் என்ற பிராமணர் பிறப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொழில்கள் செய்வதை நான் அறிவேன்.

    --
    Jayakumar

    ReplyDelete
  44. ***பிறப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொழில்கள் செய்வதை நான் அறிவேன்.***

    ஐயா என்ன சொல்ல வர்ரீர்??

    பிற்பட்டவருக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களா? அப்படினா?

    யாரு ஒதுக்கியது, ஜெயக்குமார் சாரா? பிற்படுத்தபட்டவருக்கு ஒதுக்கப்பட்ட தொழிலகள் பற்றி எல்லாம் பெரிய ஆராச்சி எல்லாம் பண்னி இருக்கீர் போல இடருக்கு, ஆமா செயகுமார் ஐயா என்ன சாதி? தாழ்த்தப் பட்டவரா? இல்லை அதுக்கும் கீழேயா? உம்ம சாதிக்கு என்ன வேலை ஒதுக்கி இருந்க்காங்க? அதை சொல்லும். சக்கடை அள்ளுவதா? இல்லைனா ஊரில் உள்ளவனுக்கெல்லாம் டாய்லெட் க்ளீன் பண்ணுறதா? அதைத்தான் நீர் சந்தோஷமாக செய்துகொண்டு இருக்கிறீரா? யாரு உன் சாதிக்கும் உமக்கும் நீ செய்யும் "இந்த"த் தொழிலை ஒதுக்கினா? உம்ம பகவானா? இல்லை பகவானுக்கு சொந்தக்காரரகளா? இல்லை பார்ப்பனர்களா?

    எங்கேயிருந்துப்பா வர்ரீங்க?

    ஆஸ்திகம் வளருது, கடவுள் பக்தி அதிகமாயிடுச்சுனு எதையாவது வீண் தம்பட்டம் அடிச்சுக்கிட்டு.. அயோக்கியத்தனம் அதிகமானதால்தான் ஆத்திகம் வளருது உம் மண்டையில் ஏறலையா?

    டாஸ்மாக்கும், கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், வேசித்தனம் எல்லாம்தான் அதிகமாயிடுச்சு. குடிகாரப்பயளுகளா திரிகிறது உம் கண்ணுக்கு தெரியலையா?? ரயிவே ஸ்டேஷனில் ஒரு பொண்ணை படுகொலை செய்ததா படிக்கலையா நீர்? எங்கே வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்? ஆஸ்திகம் வளருவதைச் சொல்லும்போது இதையெல்லாம் சேர்த்துச் சொல்லும். அதைவடிகட்டிவிட்டு பொய்க் கணக்கு காட்டாதீர். புரியுதா???

    ReplyDelete

  45. @ தருமி,
    ஐயா வணக்கம் நான் மன வலி என்று கூறியது இருக்கும் நிலையை வைத்துத்தான் அதற்குப் பெரியவர் போன்றோரின் வாதங்களும் துணை போவது கண்டும்தான் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  46. @ தருமி
    இம்மாதிரி தர்மம் என்னும் பெயரில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்ட காலம் முடிவுக்கு வருகிறது

    ReplyDelete
  47. @ தருமி
    பாராட்டுக்கு நன்றி உண்மைக்குப் பாராட்டு நிச்சயம் உண்டு என்று தெரிகிறது

    ReplyDelete

  48. @ தருமி
    ஐயா நான் பலமுறை எழுதி இருக்கிறேன் ஆண்டாண்டுகாலமாக நாம் மனதளவில் அடிமைகளாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம் இதில் என்ன விசேஷம் என்றால் இந்த மாதிரி அடிமை நிலையில் இருப்பதைப் பலரும் உணராமலேயே இருப்பது தான் பிள்ளையாரின் வளர்ச்சி என்னையும் ஆச்சரியப் படுத்துகிறது சுதந்திர எண்ணத்துக்கு உரமுட்ட மக்களை இழுக்க ஏற்பட்ட கூட்டு வழிபாடு இப்போது வேறு உருவில் வந்து விட்டது

    ReplyDelete

  49. @ தருமி
    இருக்கும் நிலையை சாதகமாக உபயோகிப்பது வியாபார தந்திரம்தானே

    ReplyDelete

  50. @ தருமி
    வைதீக மதமோ செத்தேனாபார் என்று தலை தூக்கி நிற்கிறதுஅது எப்படி நிற்கும் பெரியவர் போன்றோர் நிறுத்த முயற்சிக்கிறார்கள்

    ReplyDelete

  51. @ தருமி
    வைதீக தர்மம் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருப்பதுதான் இன்னும் பலரால் புரிந்து கொள்ளப்படாத ஒன்று

    ReplyDelete

  52. @ வருண்
    பதிவுலகில் நான் கண்டுகொள்ளும் உண்மை இதுதான் எல்லோரும் முகமூடி போட்டுக் கொள்கிறார்கள். நேர் கருத்தையும் நட்பையும் ஒன்று சேர்த்துக் குழப்புகிறார்கள்

    ReplyDelete

  53. @ ஜேகே22384
    என் நிலையில் எந்த முரண்பாடும் இல்லை சார் . ஒரு விஷயம் பற்றிப் பேச அது பற்றிய விஷய ஞானம் வேண்டும் என் கருத்துகளைக் கூற எனக்கு அது பற்றிய புரிதல் வேண்டும் நான் கோவில்களுக்குப் போவதுண்டு. அது எந்த நம்பிக்கையாலும் அல்ல. நிலவும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளத்தான் என் ராமேஸ்வரம் பயணப் பதிவுகளையும் படித்திருப்பீர்கள். அதில் நான் மேற்கொண்ட பயணம்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது பதிவில் நான் எழுதி இருப்பவை தெரியவில்லைபயணங்கள் நம் அறிவை விசாலமாக்கும் எந்தவிஷயத்திலும் ஆதாயம் பார்க்கும் மக்கள் நாம் இருப்பதில் லாபம் காண முயற்சிக்கிறார்கள்கல்வி பற்றி நான் எழுதி உள்ள பதிவுகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் நிலவும் உயர்வு தாழ்வுகளுக்குத் தீர்வு காணும் வழியில் என் சிந்தனை செல்வதை அறிவீர்கள் வர்ணாசிரமம் என்பதே இப்போது நிலவ இயலாத ஒன்று ஆனால் அதன் எச்சங்கள் நம்மில் பலரது செயலிலும் தொடர்கிறது வருகைக்கு நன்றி என் பதிவுகளுக்கு நேர்மையான கருத்துக்கள் எப்போதும் வெல்கம்

    ReplyDelete

  54. @ வருண்
    கருத்து வேறுபாடு இருக்கலாம் தனிப்பட்ட முறைத் தாக்குதல் வேண்டாமே ஆத்திகம் என்பதன் பொருளே தவறாக எடுத்துக் கொள்ளப் படுகிறது கருத்து மோதல் இருக்கும் போது அது குறித்த நிலையை மட்டும் விளக்கினால் போதுமே ஆவேசம் வேண்டாமே தவறாக எண்ண வேண்டாம் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  55. சமூகத்துக்கு ரொம்பவும்க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோஇருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது? …

    இப்படி மேல்சாதியினருக்கு மட்டும் தானே தோன்றுகிறது. ஒரு பள்ளனை, பறையனை அல்லது சூத்திரனை, பஞ்சமனை இதைச் சொல்ல வையுங்களேன்.

    ReplyDelete

  56. இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும்யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். …


    . அப்படியா? இல்லையே.. நாமெல்லாம் எப்போதும் இன்று போல் தான் அன்றும் இருந்தோம். .

    ReplyDelete

  57. அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச்சடங்குகள், விதிகள், ஆச்சாரங்கள், தர்மங்களைப் பின்பற்றிக்கொண்டிருப்பதில் சந்துஷ்டியும் பெருமிதமும் (pride) இருந்தன…

    வேறு வழியில்லை அவர்களுக்கு. சாதிப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு சமூகமும் அதே கட்டுக் கோப்பில் இருந்தன. விலகினால் சாப்பாட்டுக்கும் வழியில்லை என்ற நிஜமும் தாழ்த்தப்பட்ட மக்களை கட்டுகளில் / கட்டுக்குள் வைத்திருந்தன. இன்றும் தலித்துகளை ஆதரித்து வெளியாட்கள் வந்தால் தலித்துகள் சொல்வதென்ன: நீங்கள் இன்று வந்து போராடி விட்டுப் போய் விடுவீர்கள். ஆனால் எங்களின் வாழ்வாதாரம் மேல்சாதியினரிடம் தானே உள்ளது. நாங்கள் நாளை சோற்றுக்கு அவர்களிடம் தானே செல்ல வேண்டும் என்று இன்றும் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் இது இன்னும் கேடு கெட்ட தனமாக இருந்திருக்கும்.

    நீங்கள் சொல்லும் ”நாட்டாண்மைக்காரர்க”ள் தான் இன்றும் தலித்தின் வாயில் மலத்தை ஊற்றிக் குடி என்றார்கள் நம்மூரில். வடநாட்டில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்தின் தோல்களை உரித்து, கொன்று மரத்தில் தொங்க விட்டார்கள்.
    இன்றே இப்படியாயின் அன்று எப்படியிருந்திருக்கும்? கடவுளே … !


    இதெல்லாம் மேட்டுக்குடி மக்களுக்கு நிச்சயம் நினைவுக்கு வரவே வராது.

    ReplyDelete

  58. Gmb ஐயா,
    கொடுத்த பதில்களில் முதல் பதிலைத்தவிர மற்ற எல்லா கேள்விகளும் உங்களுக்கல்ல .. ‘தெய்வத்திற்கு தான்’!

    இந்த நேரத்தில் இன்னொரு கேள்வி – எல்லா இந்துக்களுக்கும். சங்கராச்சாரியார் மதப் பெரியவர். பல்லாண்டு வாழ்ந்து மதத்தொண்டாற்றியவர். இருப்பினும் ”தெய்வத்தின் குரல்…” என்று சொல்லி அவரையே கடவுளாக்கி விட்டீர்களே. இiருக்கிற கடவுள் எண்ணிக்கை போதாதா … இன்னும் மனிதர்களையும் கடவுளாக்குவது சரிதானா?

    ReplyDelete

  59. துளசி டீச்சர்,

    // அவர் அப்படிச் சொன்னார். அதுக்கு நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். அவ்ளோதான்!//

    நீங்கள் சொன்னது மிக மிக மிகத் தவறான எண்ணம். ”அவ்ளோதான்” என்று மிக எளிதாகச் சொல்லிக் கடந்து விட்டீர்கள்!

    உங்களுக்காக அன்றே கருணாநிதி எழுதி வைத்து விட்டார் – சாக்ரட்டீஸ் நாடகத்தில். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி, அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை, உன் பகுத்தறிவால் எண்ணிப்பார்ப்பாய்...!

    செல்வநாயகியின் கருத்தை உங்கள் கருத்தோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete

  60. வருணுக்கு வந்த கோபம் எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  61. தொடர்புக்கு ...

    ReplyDelete


  62. GMB ஐயா,
    மீண்டும் வருகிறேன். மன்னிக்கவும்.
    முன்பே நானும் என்னைவிட மிகச் சிறப்பாக தங்கமணி என்ற பதிவரும் ஏறத்தாழ ஒன்பது பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தை வைத்து அதை மக்கள் பலரும் விவாதித்தார்கள். மீண்டும் அதில் சில முக்கிய விசயங்களை உங்கள் பதிவில் கொண்டுவர விரும்புகிறேன். முடிந்தால் அதற்கு முன் என் பழைய பதிவு - http://dharumi.blogspot.in/2006/06/163-5.html - படித்துப் பாருங்கள். நீண்ண்ண்ண்ட பதிவு … அதைவிட மிக நீநீநீண்ண்ண்ணட பின்னூட்டங்கள்.

    முக்கிய விசயம்:
    இந்து மதம் பல மதங்களின் கூட்டணி. இறுதியாக இன்று இந்து மதமாக நிற்பது பிராமணிய அல்லது ஆர்ய மதமே.

    இம்மதத்தின் கோட்பாடுகள் விளக்கங்கள் பலவும் பிராமணர்களின் வழியிலும், அவர்களுக்கு மட்டுமே புரிவதான (வடமொழி மந்திரங்கள், காப்பியக் கதைகள், புராணக் கதைகள்…) நிலையில் உள்ளன. ஆகவே இன்று இந்து மதம் என்று கூறப்படுவதை நான் பிராமணிய இந்து மதம் என்கிறேன். ஆகவே இந்து மதமும் ஒரு சிறுபான்மையர் மதமே. (சங்கராச்சாரியாரை வழிபடும் பிராமணர் அல்லாதவர் எவரேனும் உண்டா?)
    பிராமணர் அல்லாத இந்துக்கள் தங்கள் நாட்டார் வழக்கத்தைத் தான் அதிகமாக இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் பிராமணிய இந்து மதத்திலிருந்து மிக விலகியே உள்ளன.

    ஆங்கிலேய அரசின் சென்சஸ் கணக்கில் கிறித்துவ, இஸ்லாமிய. சீக்கிய, புத்த மதங்களைத் தவிர ஏனைய அனைத்து மதங்களும் இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டன. அந்தத் தளை நீங்கினால் நான் சொன்னபடியே இந்து மதம் பார்ப்பனர் பின்பற்றும் சிறுபான்மை மதமாக ஆகிவிடும். மற்றவர் தங்கள் தங்கள் நாட்டார் மதத்தினர் ஆகி விடுவார்கள். இதைத் தடுக்கவே இன்று இந்து மதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இந்து மதத் தீவிரவாதம் உருப்பெற்று விட்டது. (ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்பது ப்ராமணிய கோரிக்கை. ஆனால் அதை நிறைவேற்ற ‘கர்சேவா’ செய்ய பிராமணர் அல்லாத இந்துக்கள் கடப்பாரையைத் தூக்க அவர்களுக்குத் தேவை. இதனால் தீவிரவாதம் வலுக்கிறது.)

    ReplyDelete


  63. @ தருமி
    சார் உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் வாசித்தேன் அதில் உங்கள் கோபம் வெளிப்படுகிறதுபிறரது அலட்சியப் போக்கு கண்டு மனம் வருந்துவதும் தெரிகிறதுபதிவர் அப்பாதுரை எழுதி இருந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இம்மாதிரி நிலைக்கு நாம் மனதளவில் அடிமைகளாகவே இருக்கிறோம் ஏன் என்றால்

    "அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."
    "எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
    "ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
    "ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
    "விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
    "தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
    "பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
    "மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."
    "அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
    இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் நம் சிறுவயதிலேயே நம்மை அறியாமல் indoctrinate
    ஆகி இருப்பது நான் அடிக்கடி கூறுவது THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED மதத்தின் பெயரால் மதத் தீவிரவாதிகளிடம் நம் அரசையும் கொடுத்து விட்டோம் நிறையவே சொல்லிப் போகலாம் வருகைக்கும் மேலான கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி





    ReplyDelete
  64. காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி, இந்துமதத்தின் குறிப்பிட்ட மடத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர். அந்த மடத்தின் கொள்கையையும், நம்பிக்கையையும், அவர் அடியொற்றிய வழக்கத்தைப்பொறுத்தும் அவரது கருத்துக்கள் அமையும். ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்து, அதை ஏற்பதும் மறுப்பதும் அமையும். மதம், கடவுள் (தான் வழிபடும், தான் இருக்கும்) இவற்றில் பிடிப்பாக இருப்பவர்கள் மாற்றுச் சிந்தனையை வரவேற்பதில்லை. மாற்றுச்சிந்தனைக்கே செல்வதில்லை. சில பல கருத்துக்களை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அதைப்பற்றி எண்ணாமல், மறுதலிக்காமல் சென்றுவிடுவார்கள். இவருடைய கருத்து மட்டுமல்ல, பல மதவாதிகளின் கருத்துக்கள் முழுமையும் ஒருவரால் ஏற்பது கடினம். ஆதி சங்கரர் மிகப்பெரியவர். அவரது கருத்தே இறுதி (definite) என்றால், வைணவம் தோன்ற வாய்ப்பு இல்லை. புத்தரின் கருத்தே இறுதி என்றால் சமணத்துக்கு இடமே இல்லை. மதப் பெரியவர்கள் (எல்லா மதத்திலும்) அவர்கள் உறுதியாக நம்பும் கருத்தைத் தெரிவிக்கிறார்கள். அவர்களது வழி நடப்பவர்கள் கேள்வி கேட்காமல் பின்பற்றுகிறார்கள்.

    அனுபவப்பட்டவர்கள் (எந்த ஒரு எதிர்பார்ப்பும், இருக்கும் நிலையால் ஆதாயமும் இல்லாதவர்கள்) அனுபவத்தின் மூலமாகச் சிந்திக்கிறார்கள். அதனால் அவர்களால் வெளிப்படையாக எழுதமுடிகிறது. கேட்கும் கேள்வியில் உண்மை இருக்கிறது. அதனால் நேரடியாக மறுத்து எழுதமுடியாது. கடவுள், தம் பரம்பரை வழக்கம் (இங்கு மதம் என்று கொண்டுவர விரும்பவில்லை) என்பதைப் பின்பற்றுபவர்கள், அதைத் தாண்டிச் சிந்திக்க பயம் (moral) கொள்கிறார்கள். கேள்வி கேட்க எண்ணுவதில்லை.இதற்குக் காரணம், அந்தச் சூழலிலேயே வளருவதாலும், ஒத்த கருத்துடையவர்களோடுதான் இளமைக்காலம் கழிவதாலும். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.

    தருமி ஐயா போன்ற, கடவுள் மறுதலிப்புக் கொள்கை உடையவர்கள், தைரியமாக தான் எண்ணுவதை எழுத இயலுகிறது. எனக்குத் தெரிந்தவரை அவர் உண்மையான கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருக்கிறார் என்பதனாலும் அவர் எல்லா மதங்களைப் பற்றியும் எழுதுவதனாலும், அவர் எழுப்பும் வினாக்களுக்கு விடை சொல்வது அரிது. ஆனாலும் அவர் எழுதிய ".... அள்ளும்" - இது நிச்சயமாக 200 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் வந்திருக்கவேண்டும்.

    தாழ்த்தப்பட்டவர்கள், கோபமாக எழுதுவதிலோ அல்லது வெறுப்பை விளைவிப்பதுபோல் எழுதுவதிலோ எனக்கு வித்யாசமாக ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள், இன்றும் எல்லோராலும் ஒடுக்கப்படுகிறவர்கள். அவர்கள் உணர்ச்சியோடு எழுதுவதில் நியாயம் இருக்கிறது. வருணாசிரமம் தவறு என்று கருதும் எல்லோரும் (தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர), அதனைக் களைய, தாழ்த்தப்பட்டவரைத் தனக்குச் சமமாக மனதிலும் செயலிலும் காட்டவேண்டும். இதுதான், மனிதன் என்று சொல்லிக்கொள்வதற்கான அடிப்படை. இதைச் செய்யாமல், என்றோ இருந்த (அல்லது இருந்ததாகச் சொல்லப்பட்ட) மனுவின் மீது வெறுப்பை உமிழ்வது, பிரச்சனையைச் சரி செய்யாது.

    பொதுவாகவே எல்லா மனிதனும் (உலகத்தில். இந்து மதம், சாதி இவைகளைக் குறிப்பிட விரும்பவில்லை) சமம் என்பது practical இல்லை. திறமையைப் பொறுத்து மேலே வந்தாலும், அவனும்கூட மற்றவர்களைச் சமமாக நடத்துவதில்லை அல்லது எண்ணுவதில்லை.

    ReplyDelete
  65. / ".... அள்ளும்" - இது நிச்சயமாக 200 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் வந்திருக்கவேண்டும். //

    மன்னிக்கணும். நான் பீ அள்ளுவது என்று தான் எழுத நினைத்தேன். ஆனால் உங்களைப் போன்ற பலர் முகம் சுழிக்கலாம் என்பதால் தவிர்த்து, மலம் அள்ளுவது என்று gentleஆக எழுதினேன். அதைக்கூட உங்களால் copy-paste செய்ய மனம் வரவில்லை.

    கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இது இருந்திருக்க வேண்டும் என்பதற்கு நான் தரும் ஆதாரம் – இன்றும் தலித்துகள் தங்கள் அடிமைத் தனத்திலிருந்து வெளிவர முடியாத நிலையிலோ, அல்லது அதற்குரிய ‘விழிப்புணர்வு’ கூட இல்லாத அளவில் தேங்கி நின்று விட்டார்கள் என்பது நேரடித்தொடர்பில் நான் பார்த்த உண்மை. இது இருநூறு ஆண்டுகளில் வந்த அடிமைத்தனத்தின் அலங்கோலமாகத் தெரியவில்லை.


    // சமம் என்பது practical இல்லை.// ஒத்துக் கொள்கிறேன். என் இரு பிள்ளைகளிலும் சமம் என்பது practical இல்லை என்பதை வாழ்க்கை நெடுகிலும் பார்த்தாயிற்று. நீங்கள் சொல்லும் சமமின்மை தனி மனிதர்களின் தரம் பற்றியது. இளையராஜாவின் மூன்று பிள்ளைகளும் இசையில் சமம் இல்லையே!

    ஆனால் நான் சொல்வது பிறப்பில் போடும் முத்திரை. நீ இந்த ஜாதி.. என்று முத்திரை குத்தி அவன் வளர்ந்தாலும் கூட சாதியைச் சுட்டி கீழானவன், மேலானவன் என்று தரம் பிரிக்கிறோமே அதைத் தான் நான் சொல்கிறேன். நீ பிரம்மாவின் அங்கிருந்து பிறந்தாய்… அவன் அங்கிருந்து பிறந்தான் என்று சட்டம் போடுகிறோமே அதையும் மதமும் மதக்காரர்களும் வளர்க்கிறார்களே … அதைத் தான் குறை சொல்கிறேன்.

    ReplyDelete
  66. நெல்லைத் தமிழன்
    (முதல் ?) வருகைக்கு நன்றி ஐயா /அவர்கள் உணர்ச்சியோடு எழுதுவதில் நியாயம் இருக்கிறது. வருணாசிரமம் தவறு என்று கருதும் எல்லோரும் (தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர), அதனைக் களைய, தாழ்த்தப்பட்டவரைத் தனக்குச் சமமாக மனதிலும் செயலிலும் காட்டவேண்டும். இதுதான், மனிதன் என்று சொல்லிக்கொள்வதற்கான அடிப்படை. இதைச் செய்யாமல், என்றோ இருந்த (அல்லது இருந்ததாகச் சொல்லப்பட்ட) மனுவின் மீது வெறுப்பை உமிழ்வது, பிரச்சனையைச் சரி செய்யாது./
    இந்தக் கருத்துடன் உடன் படுகிறேன் ஆனால் மனதளவில் மூளைச் சலவை செய்யப்பட்ட நாம் வித்தியாசமாக சிந்திக்கத் தயங்குகிறோம் பிறப்பொக்கும் என்றெல்லாம் வாய் கிழியக் கூறும் நாம் அப்படி எண்ணுவதில்லையே அதற்குத் துணை போகிறாற் போல் பெரியவர் போன்றோரின் எழுத்துகள் இருக்கின்றன.அது பற்றிய கருத்துகளைக் கூடச் சொல்லத் தயங்குகிறோம் கல்விக்கூடங்களில் மாற்று சிந்தனைகளை உருவாக்க வேண்டும் அதற்கு பள்ளியில் படிப்போர் அனைவரும் சமம் என்னும்நிலை உருவாக வேண்டும் அதற்கு அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் கல்வி உணவு சீருடை இவை எல்லாம் கட்டாயமாக இலவசமாக்கப்பட வேண்டும் நாளைய பிரஜைகள் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் வளர வழிவகுக்கப்படவேண்டும் இது நடக்கக் கூடியதா என்னும் சந்தேகம் வரலாம் எங்காவது எப்படியாவது ஒரு ஆரம்பம் நிகழத்தானே வேண்டும்

    ReplyDelete

  67. @ தருமி
    நான் சுமார் பத்து வயதாய் இருக்கும்போது எங்கள் கிராமத்தில் இந்த மனிதனே மலம் அள்ளுவதைக் கவனித்ட்க்ஹிருக்கிறேன் இவர்களை பொதுவாக எதிர்கொள்ளவே தயக்கம் காட்டுவார்கள் இவர்கள் வரவைக் கூவித் தெரிவிக்க வீட்டு உடைமையாளர்கள் நகர்ந்து விடுவார்கள் கக்கூசில் இருக்கும் மலத்தொட்டிகளை எடுத்து அவற்றில் இருக்கும் மலத்தை வேறு தொட்டிகளில் மாற்றி அள்ளியதை தலையில் வைத்துக் கொண்டு போகும் காட்சியைக் கண்டிருக்கிறேன் இது 1940 களின் கடைசியில் இந்த நிலை வெகுவாக மாறி இருக்கிறது
    மேலும் ஒன்றை கூறவேண்டும் இந்த சாதியைப் பிடித்துத் தொங்கும் பலரில் பிராம்மணர்களைத் தவிர சாதி இந்துக்களே அதிகம் என்று தோன்றுகிறது அதிலிருந்து கிடைக்கும் சலுகைகள் தொடர வேண்டியே அப்படி என்று எண்ணத் தோன்றுகிறது எல்லோரும் சமமாக இருக்கக் கூடிய வாய்ப்பு குறைவு என்றாலும் மனதளவில் உயர்வு தாழ்வு நிலை மாற வேண்டும் நெல்லைத்தமிழனுக்குக் கொடுத்திருக்கும் மறு மொழியைகவனித்துப்பாருங்கள் வருகைக்கு நன்றி தருமி அவர்களே

    ReplyDelete
  68. ஆதியில் எதுவும் நல்லதற்காகவும், நல் நோக்கத்திற்குமே ஆரம்பித்திருக்கிறது. மதமும் அதன் கோட்பாடுகளும் அப்படியே. பின்னால் வந்தவர்கள் அதனை சுயலாபத்திற்கு கையாளும் போது அதுவே அர்த்தமற்றுப் போகிறது. அதன் விஷதன்மை அதிகரிக்கும் போது வெடித்து சிதறுகிறது. எதற்கும் இன்னொரு ஆரம்பமும் சரியான புரிதலும் துவங்கினால் மீண்டும் மலர்ச்சி துவங்கலாம்.

    நல்ல பதிவு சார். இப்பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும் என்ற எண்ணத்திலேயே பல தலைமுறைகளை கடந்து கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன் பிரச்சனைகளைப் ப்சற்றிய விழிப்புண்ர்வு இல்லாவிட்டால் அது தானாகத் தீராது வருகைக்குநன்றி மேம்

      Delete