Wednesday, November 2, 2016

உறவுகளும் வலை நட்புகளும்



                               உறவுகளும்  வலை நட்புகளும்
                               -------------------------------------------



 உறவுகளும் வலை நட்புகளும்
உறவுகளை கொஞ்சம் அலசவும் ,புரிந்து  கொள்ளவும், முடிந்தவரை 
விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 
முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 
குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 
உறவுகளில் தலையானது தாய் சேய் உறவே  ஏனென்றால் அது தொப்புள்கொடியில் தொடங்கும்   ரத்த சம்பந்த உறவு  எந்த உறவும்  வேண்டி வருவதில்லை.  சொல்லப் போனால் நாம் எல்லோரும் விபத்தின்  விளைவுகளே என்னைப் பெற்ற பெற்றோர்  என்னை வேண்டி பெறவில்லை. அதேபோல்தான்  யாரும்வேண்டிப்பெற்றவர்கள் அல்ல. இப்படிச் சொன்னால் பலரும் முகம்  சுழிப்பார்கள்  இருந்தாலும்  அதுதானே உண்மை

 குழந்தைப்பேறு என்பதை ஆண்களால்  கற்பனையில்தான்  உணர முடியும் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக கருவைச் சுமந்து  அதை வெளிக்கொணர பெண்கள் படும் வேதனையும் மகிழ்ச்சியும்  சொல்லில் அடங்காதது பிறந்த குழந்தைக்கு முதன்  முதலில் அறிமுகமாகிறவர்கள் தாயும்  தந்தையுமே  மற்ற உறவுகள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் பிறந்த உடனே  சேய், தன் தாய் தந்தையரிடமிருந்து, அன்பை, பரிவை, ஆதரவை தன்னையறியாமலே
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.
 இந்தத் தாய் தந்தை உறவை ஒட்டியே மற்ற  உறவுகள் எல்லாம் வருகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்பட, நாட்பட கிளை
விட்டுப் பெருகி, பெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின்
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும்
. ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விதையிலிருந்து
புறப்பட்ட செடி, மரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்து, பட்டுப்போனால்
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம்
எடுபடுவதில்லை.
இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும்,
பரிவும் இல்லாமல், தானுண்டு, தன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள்
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.
மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள்.
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும்
காலூன்றி நிற்கும் வரை பராமரித்து, விட்டு விடுகிறார்கள். இதுகூட இப்போது மாறிக்கொண்டுவருகிறது 
உறவுகள் எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப்
படுகின்றன. அதையும் மீறி, உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டு, உறவு
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டு, பல்கிப் பெருகி
கிளைவிட்டு, தோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய்
விட்டதோ.?
வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும்
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு
கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும்
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில்
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 
ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .
எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 
கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 
வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 
சிறந்தவர், யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 
சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 
உறவில் விட்டுக் கொடுத்தல்தானாக வருவதன்றோ.?

 ஆனால் இருக்கும் உண்மை நிலை ஆறுதல் அளிப்பதில்லை. உறவுகளைப் பேணுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் . ஆண்கள் பேணுவதில்லை என்று கூற முடியாதுஅவர்களால் முடிவதில்லை அவர்கள் மீறி முயன்றார்கள் என்றால்  நிம்மதி இழக்க வேண்டும்ஏன் என்றால் பெண்களின்  உறவு அவர்கள் பிறந்த வீட்டைச் சார்ந்தே இருக்கிறது குழந்தைகளுக்கு அவள் வீட்டு உறவுகளுக்கே முக்கியத்துவம்  கொடுக்கிறாச்ள்
ஒரு பெண் மண முடித்தால் நாற்றங்காலைப் போன்றவள் எனக் கூறப்படுகிறதுவேறு ஒரு நிலத்தில் பதிந்து வேறூன்ற வேண்டியவள் என்பது பொருள் ஆனால் அவள் அப்படி வேறூன்றும்போது ஆணின்  உறவுகளை மதிப்பதில்லை ஏதாவது முதியோர் இல்லத்துக்குச் சென்று  அவர்கள் அங்கு இருப்பதன்  காரணம்கண்டறிய  முயன்றால் வீட்டுக்கு வந்த பெண்ணே காரணம் என்று அறியலாம் முதியோர் இல்லங்களில் பெண்ணின் பெற்றோர்கள் பெரும்பாலும்  இருப்பதில்லை.  ஒரு பெண் தன்  கணவனின்  தாயைத் தன் தாயைப்போல்  நினைப்பது அரிதாய் விட்டது.  எக்செப்ஷனல் உதாரணங்கள் இருக்கலாம்
சிலநாட்களுக்கு முன் சில பெண்பதிவர்களிடம்  உறவுகள் பற்றிய அவர்கள் கருத்துகளை எழுதக் கேட்டிருந்தேன்  எனக்கு தோன்றியது என்ன வென்றால்  எழுதியவர்கள் தங்களையே  அளவுகோலாக நினைத்து உறவின்  உன்னதங்கள் குறித்து எழுதி இருந்தார்கள் இதைத்தான் நான் எக்செப்ஷனல் உதாரணங்கள் என்று எழுதி இருக்கிறேன் நான் கூறவருவது  உறவுகள் பெரும்பாலும் ஏதோ எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே இருக்கிறது அது மாற்றுக் குறையும் போது ஒவ்வொருவரின் சுய ரூபம் வெளியாகிறது   தன் கணவன் தேவை. அவன் உறவுகள் தேவையா உதிரம் சம்பந்தமில்லாத உறவுகள் புறக்கணிக்கப் படுகின்றன என்பதே காலத்தின்  கோலம்
 அண்மையில் திரு வை. கோபால கிருஷ்ணன் எழுதி இருந்த ஒரு பின்னூட்டத்தினை டாக்டர்  கந்தசாமி பதிவாக்கி இருக்கிறார் சிலகசப்பான உண்மைகளைக் கொண்டது அது
 
”பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு. 

அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது. 

இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்” என்று சில வரிகள் அதிலிருந்தது விருப்போ வெறுப்போ இல்லாமல் யோசித்தால் அதுதான் நிதர்சனம் என்பது விளங்கும் அன்பு உறவு என்பவை எல்லாமே வேஷமாகிக் கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது

 இனி தலைப்பில்கண்ட இன்னொரு விஷயம் நட்புகள். எனக்கு இந்த நட்பு எனும்  வார்த்தையே வெகு வித்தியாசமாய் புரிந்து கொள்ளப்படுகிறதோ என்று சந்தேகம்  இருக்கிறது முக்கியமாக வலை நட்புகள். பெரும்பாலும் வலை நட்புகள் எல்லாமே அறிமுகங்களே ஒருவரை ஒருவர் புகழ்ந்து எழுதுவதே நட்பின்  அடையாளமா தெரியவில்லை.
தமிழ் இலக்கியத்தில் நட்புக்கு அடையாளமாக  கோப்பெருஞ்சோழனையும்   பிசிராந்தையாரையும்  கூறுவார்கள் ஒருவர் அரசர் இன்னொருவர் புலவர்  ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை பழகியதில்லை. மடல் வழியே இருந்தது தொடர்பு. சோழன் வடக்கிருந்து உயிர் விட்டபோது அதை அறிந்த பிசிராந்தையாரும் அவ்வாறே  வட்க்கிருந்து உயிர் விட்டாராம்  இதெல்லாம் இலக்கியங்கள் கூறுவது. இக்காலத்தில் முகமறியா நட்பு வளர்வது இயலாதது
 என்  இல்லத்துக்கு நண்பர் டாக்டர் கந்தசாமி வருகை தந்திருந்தார்  அவர் உண்டு முடித்ததும் சற்றே கண்ணயர விரும்பினார்  இதை நான் பதிவில் எழுதி இருந்தேன் நண்பர் ஜீவி ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தார் அவருக்கு  நான் எழுதி இருந்தது  மோசி கீரனாரை நினைவு படுத்தியது போலும்  அதன் மூலம் மோசிகீரனாரும்  முரசு கட்டிலும்  என்னும் கதை தெரிய வந்தது
 என்னைப் பொறுத்தவரை வலை நட்புகள் எல்லாமே பெரும்பாலும் வெறும் அறிமுகங்களே  வலையில் புகழ்ந்து பின்னூட்டம்  இடுபவர்கள் எல்லாம் நட்புகளாகி விடுமா. குறை என்று கூறி விட்டால் வலை நட்புகள் மிரட்டக் கூடத் தயங்குவது இல்லை.இன்னொரு சாரார் புகழ முடியாவிட்டால் பேசாமல் தாண்டிப்போய் விடுவார்கள்நமக்கேன் வம்பு என்னும் நினைப்பு . இம்மாதிரி இருப்பவர்கள் எப்படி  நட்பு பாராட்ட முடியும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்து கொள்வதே முதலில் நட்பின்  அடையாளமாகும் தன்னைப் பற்றிய செய்திகளை எல்லாம் பிறர் அறியக் கூடாது என்று நினைப்பவர்கள் வலை உலகில் அதிகம்
என் சென்றபதிவில் வந்திருந்த ஒரு பின்னூட்டம் / "ஆண்டுதோறும் இம்மாதிரிக் கூடி இருந்திட கொடுப்பினை இருக்கிறதோ தெரியவில்லை." இருக்கிறது
ஆண்டவன் அருளால்
பதிவர்களின் பலமான உறவால் எனக்குப் புரியாத ஒன்றை வெகு சுலபமாகப் பின்னூட்டத்தில் சொல்லி விட்டார்  எப்படி என்று இன்னும் விளங்கவில்லை.
பதிவர்களிடம் நட்பு விளங்க வேண்டுமானால் முதலில் முகமறிய வேண்டும்  என்று நினைக்கிறேன் பின் புரிந்து கொள்ள முயல வேண்டும் வித்தியாசமான புரிதல்கள் நட்பை வளர்க்க முடியாதுஎன்றே நினைக்கிறேன்   
                  
                   

 

                       

35 comments:

  1. முகமறிய என்று கூறியுள்ளீர்கள். இந்த இணைய உலகத்தில் அது சாத்தியமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றபடி நீங்கள் ஆழ்ந்து விவாதித்த விதம் அருமை. குறையாக எதுவும் என்க்குத் தெரியவில்லை ஐயா.

    ReplyDelete
  2. இன்றைய நடப்பினை - தாங்கள் அழகாகவே விளக்கியிருக்கின்றீர்கள்..

    உறவுகளை நினைத்தால் பெருமூச்சு மட்டும் தான் மிச்சம்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா...
    ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் விபத்து என்ற தங்களது கருத்தில் உடன் படுகிறேன் உண்மையே தன்னை ஆண் மகன் என்று நிரூபிக்க கணவனும், தான் மலடி அல்ல என்பதை நிரூபிக்க மனைவியும் சேர்ந்து முயல்வதே சந்ததிகள் தொடர்வதின் தொடக்கம்.
    கூட்டுக்குடும்பம் என்ற குருவிக்கூடு கலைந்து போனதற்கு காரணம் மேற்கத்திய நாடுகளின் கலாச்சார ஊடுறுவலே...
    அதன் எதிரொலி இந்தியாவில் எங்கும் முதியோர் இல்லங்களின் வளர்ச்சி

    அடுத்த சந்ததியினர் குழந்தைகளிடம் இனி எதையும் எதிர் பார்க்காமல் வாழ பழகிக் கொள்ளவேண்டும்
    உறவுகளைப்பற்றி அருமையான அலசல ஐயா வாழத்துகள்.

    நட்பு
    நான் என்னைப் பொருத்தவரை பதிவர்கள் மத்தியில் திறந்த புத்தகமாக இருக்கிறேன் என்பதை தாங்களும் அறிவீர்கள்

    ஒரு பதிவு மற்றொரு பதிவை தொடுப்பது வலையுலக வளர்ச்சியே...

    வாழ்க வளமுடன், தொடர்க நட்புடன்

    ReplyDelete
  4. எதிலும் அதிக எதிர்பார்ப்பு - அதிக ஏமாற்றம்...!

    ReplyDelete
  5. நட்பும் உறவும் பற்றி நல்லதொரு அலசல்.

    ReplyDelete
  6. ji if only one develops a DETATCHED ATTACHMENT in his daily life he could hope to avoid expectations from his people......

    ReplyDelete
  7. ஐயா தாங்கள் கணவன் மனைவி உறவை விட்டுவிட்டீர்கள். இந்த உறவின் பலம் முதுமையில் தான் தெரியும்.
    தெரிந்தோ தெரியாமலோ பொருள் ஈட்டும் குறிக்கோள் மூலம் ஒரே ஊரில் சுற்றத்தோடு வாழ்ந்த பழைய வாழ்க்கை முறை மாறி விட்டது. ஊரை விட்டுப் பிரிந்தபின் உறவெது என்று தெரிவதில்லை. சமூகம் என்பது உறவினர்கலள் என்பது இல்லாமல் சமூகம் தற்போது சாதி அடிப்படையில் மாறி விட்டது.

    வலையுலகில் பின்னூட்டம் கொடுப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் அல்ல. அதே போன்று நண்பர்கள் எல்லோரும் பின்னுட்டம் இடுபவர்கள் அல்ல. பின்னூட்டம் என்பது சினிமா பார்த்து விட்டு விமரிசனம் செய்வது போன்று தான்.

    --
    Jayakumar

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன்அவர்களின் கருத்தினை முன்மொழிகின்றேன் ஐயா
    உறவுகள் என்று வரும்பொழுதே நம்மை அறியாமலே ஒரு எதிர்பார்ப்பும், இலவச இணைப்பாக பல நேரங்களில் உடன் வந்து விடுகிறது.
    தற்காலத்தில் உறவுகளின் தன்மை மாறிவிட்டது ஐயா
    பெருந்தன்மை இல்லை,
    தேவையே இன்றி ஒரு பொறாமை உணர்வுடன் சில உறவுகள் பழகுகிறார்கள்
    ஆனால் வலையுலக உறவுகளிடம்
    நட்பை மட்டும்தான் பெறுகிறோம், அதைத் தவிர வேறு எதிர்பார்ப்பில்லை

    ReplyDelete
  9. எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் இருக்கும் உறவு தான் வலை உறவு.
    ஆரம்பத்தில் இதுவும் ஒருவகை உறவாகத் தான் (தொடர்பாகத் தான்) ஆரம்பிக்கிறது. ஒருமித்த எண்ணங்கள், சிந்தனைகள் இதெல்லாம் கலக்கும் பொழுது அது புரிதலாக நட்பாக மலர்கிறது.

    இதில் வேடிக்கை என்னவென்றால் நட்பு ஏற்பட்ட பிறகு எண்ணங்களில், சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் நட்பு பாதிக்கப்படுவதில்லை.

    நட்பு எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் ஒன்று. எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பித்து மயங்குவதும் கூட. இந்த இலட்ஸ்ணங்கள் இல்லை என்றால் அது நட்பும் அல்ல.

    ReplyDelete

  10. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    முகமறிய சாத்தியமில்லை என்றால் நட்பு வளர்வதும் சாத்தியக் குறைவே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  11. @ துரை செல்வராஜு
    பதிவின் உட்கருத்தைப்புரிந்து கொண்டதற்கு நன்றி சார்

    ReplyDelete
  12. @ கில்லர்ஜி
    உறவுகள் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அது அப்படி இல்லை என்பதைக் கூறவே பதிவு. உறவு மேம்படுதல் பெரும்பாலும் பெண்களிடம் என்றும் நினைக்கிறேன் வலை உலகில் நட்பு மிகவும் தவறாய்ப் புரிந்து கொள்ளப்படுகிறதுஒருவர் எழுத்தை இன்னொருவர் ரசிக்கலாம் அல்லது மாறு படலாம் அதெல்லாம் எண்ண சுதந்திரம் ஆனால் எழுத்தைக் கொண்டு ஓரளவே ஒருவரைப் புரிந்து கொள்ள முடியும் இதைத்தான் நான் அறிமுகங்கள் என்கிறேன் விதி விலக்காக சில வலை அறிமுகங்கள் நட்பாகப்பரிணமிக்கலாம் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  13. @ திண்டுக்கல் தனபாலன்
    எதிர்பார்ப்பில்லாத மனிதர்களும் இருக்க முடியுமா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ஸ்ரீராம்
    உறவு நட்பு போன்றவை பற்றிய எண்ணங்களே பதிவாயிற்று வருகைக்கு நன்றி

    ReplyDelete

  15. @NAT CHANDER
    For anyone to develop a detached attachment I feel it is very near impossibility Both are poles apart thanks for coming

    ReplyDelete
  16. @ jk22384
    ஐயா நான் எந்த ஒரு உறவைப்பற்றியும் பர்ட்டிகுலராக எழுதவில்லை. கணவன்மனைவி உறவுகளே இக்காலத்தில் ஏதோ ஈகோவின் வெளிப்பாடாக இருக்கிறதுமுதலில் உறவைப் பேணுவதில் பெண்களின் பங்கு அதிகம் என்று நினைக்கிறேன் உறவுகள் இந்நிலைக்குப் போக அவர்களே பெரிதும்காரணமென்றும் எழுதி இருக்கிறேன்
    /வலையுலகில் பின்னூட்டம் கொடுப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் அல்ல. அதே போன்று நண்பர்கள் எல்லோரும் பின்னுட்டம் இடுபவர்கள் அல்ல. பின்னூட்டம் என்பது சினிமா பார்த்து விட்டு விமரிசனம் செய்வது போன்று தான்./ விஷயம் இப்படி இருக்கும்போது வலை நட்புகள் பற்றி பலரும் சிலாகிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    உறவு பற்றி நான் எழுதி இருப்பதுபொதுவாகத்தான் முதுமையில் கணவன் மனைவி உறவுமுறைகள் என் வாழ்வில் இருப்பதுபோலநன்றாக இருக்கவேண்டும் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மனைவி கணவனுடன் இருந்த கருத்து வேற்றுமையால் (பணம் சம்பந்தப்பட்டது)எஉபது வயதுக்குப் பின் பிரிந்து வாழ்கிறார்கள் எதிலும் எக்செப்ஷன்கள் உண்டு நான் எழுதியது பொதுவானவை வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    வலை உலகில் எல்லோரும் கரந்தை ஜெயக்குமார் போல் இல்லை. அறிமுகங்களே நட்புகள் அல்ல என்றே எழுதி இருக்கிறேன் தற்கால உறவுகளின் தன்மை மாறிவிட்டது அதற்கான ஓரிரு காரணங்களைக் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  18. @ஜீவி
    வலை உறவுகளில் புரிதல் ஏற்படலாம் அதே நட்பாக மாறும் என்பதும் ஓரளவு சரியாகலாம் ஆனால் நான் எழுதி இருப்பது பொதுவாக நிலவும் நிலையே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  19. சிறப்பாக அலசி உள்ளீர்கள்

    ReplyDelete

  20. @ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    பாராட்டுக்கு நன்றி சார். உங்கள் கருத்தையும் பகிர்ந்திருக்கலாம்

    ReplyDelete
  21. ‘’வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும்
    உறவும் இறுகி இருந்தது. ‘’
    உண்மைதான் ஐயா.வசதிகள் பெருகியதும் அன்பும் பாசமும் அருகிவிட்டது.

    //உறவுகள் பெரும்பாலும் ஏதோ எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே இருக்கிறது அது மாற்றுக் குறையும் போது ஒவ்வொருவரின் சுய ரூபம் வெளியாகிறது.//
    மனிதன் இயற்கையிலேயே சுயநலம் கொண்டவனாக இருப்பதால் அவன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைகிறது என்பது தெரிந்த விஷயம் தானே.

    ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தம். எனவே நட்போ அல்லது உறவோ எதுவானாலும், எதையும் எதிர்பாராமல் இருந்தால் ஏமாற்றமும் சோகமும் ஏற்படாது என்பது என் கருத்து.

    ReplyDelete

  22. @ வே நடனசபாபதி
    எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பதும் அரித்துதானே ஐயா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. ****பதிவர்களிடம் நட்பு விளங்க வேண்டுமானால் முதலில் முகமறிய வேண்டும் என்று நினைக்கிறேன் பின் புரிந்து கொள்ள முயல வேண்டும் வித்தியாசமான புரிதல்கள் நட்பை வளர்க்க முடியாதுஎன்றே நினைக்கிறேன்.***

    முகமறிந்தால், மனமறிய வாய்ப்பு அதிகம் என்பதால் புரிந்து கொள்ள வாயப்பதிகம். புரிந்து கொள்ளும்போது ஏற்படும் விளைவு? ரெண்டு வகை.

    1) நட்பை பலப்படுத்தலாம்

    2) நட்பை பலஹீனப்படுத்தலாம்.

    என்று உறுதியாக நம்புகிறேன், சார். :)

    ReplyDelete

  24. @ வருண்
    /முகமறிந்தால், மனமறிய வாய்ப்பு அதிகம் என்பதால் புரிந்து கொள்ள வாயப்பதிகம். புரிந்து கொள்ளும்போது ஏற்படும் விளைவு? ரெண்டு வகை.

    1) நட்பை பலப்படுத்தலாம்

    2) நட்பை பலஹீனப்படுத்தலாம்.

    என்று உறுதியாக நம்புகிறேன், சார். :)

    சரியாகச் சொன்னீர்கள் மறுக்க இயலாது

    ReplyDelete
  25. ஆல‌ம் விழுதுகள் போல்உறவு ஆயிரம் வந்தும் என்ன
    வேர் என நீ இருந்தாய்அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..பாடல் வரிகளை நினைவு படுத்தியது உங்களின் பதிவு !
    நட்பும் ,உறவும் வளர்வதும் தேய்வதும் நம் கையில்தானே இருக்கிறது ?விரும்பி போனால் விரும்பி வரும் ,விலகிப் போனால் விலகித் தானே போகும் :)

    ReplyDelete

  26. @பகவான் ஜி
    /நட்பும் ,உறவும் வளர்வதும் தேய்வதும் நம் கையில்தானே இருக்கிறது ?விரும்பி போனால் விரும்பி வரும் ,விலகிப் போனால் விலகித் தானே போகும் :)/நான் இப்போது இருக்கும் நிலையைக் கூறினேன் ஐடியல் நிலையோ ஃபிலசொஃபிகல் நிலையோ அல்ல. வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  27. நட்பு உறவு பற்றி தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்..ரசித்தேன். என்வலைத்தளம் எனக்கு திறக்க முடியாமலிருந்தது ஆகவே வருகை தாமதமாகிவிட்டது.

    ReplyDelete

  28. @ ஷைலஜா
    வருகைக்கு நன்றி மேம் . சில நாட்களுக்கு முன் பழையபுகைபடங்கள் சிலதைப் பார்க்க நேர்ந்தது உங்களுடையவும் ஐயப்பனுடையதும் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.

    ReplyDelete


  29. 1. மனைவி இறந்த துக்கம் காரணமாக நாளுக்கு நாள் உடல் நிலம் குன்றி வாடுபவர்களையும்
    2. , கணவர் இறந்த பிறகு முகத்தில் சோபையும் ,உடலில் புஷ்டியும் கூடுபவர்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்
    1-க்கு துக்கத்தை தவிர பிறிதொரு காரணமும் இருக்கக்கூடும்;..மனிதருக்கு அடுப்படியில் சூடு தண்ணீர் கூட செய்ய தெரியாததும் ஆகவே தன்னையே கவனித்துக்கொள்ள முடியவில்லை என்பதும் கூட காரணமாகலாம் ...
    2-case -ல் இதுவரை பாடாய் படுத்திய - மனிதர் --ட மிருந்து கிடைத்த விடுதலை காரணமாகவும் இருக்கலாம் ;இதெல்லாம் மனம் சார்ந்த விஷயங்கள் ;பகிரங்கமாக பேசுவது நாகரிகமாக கருதப்படாது !

    மாலி

    ReplyDelete

  30. ! @ வி.மாலி
    என் பதிவில் எழுதி இருப்பவை பொதுவான கருத்துதான் . யாரையும் குறி வைத்து எழுதப்படவில்லை. உறவுகள் எப்போதும் உன்னதமானவையாக இல்லை என்பது உண்மை/ வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  31. உறவு குறித்த தங்களின் பார்வை மிகச்சரியே. நட்பில் வலைநட்பு வேறுவிதம். பெரும்பாலும் வலையில் எழுதுவது ஒரு வடிகால் தான். எல்லோரும் வெளிப்படையாய் இருப்பதில்லை, இருக்கவும் முடிவதில்லை.

    ReplyDelete

  32. @ சிவகுமாரன்
    உறவுகள் மற்றும் வலை நட்புகள் குறித்த என் பார்வையே பதிவு. கூடியவரை நான் உண்மைக்குப் புறம்பாக எழுதுவதைத் தவிர்க்கிறேன் சில நேரங்களில் என் எழுத்துகள் வித்தியாசமாக புரிந்து கொள்ளப்படலாம் வருகைக்கு நன்றி சிவா

    ReplyDelete
  33. முகம் அறிய எத்தனைபேர் நட்புக்கரம் துணிந்து நீட்டுகின்றார்கள் இன்றைய காலத்தில்.அவசர உலகில் நட்பு என்பதும் ஒரு வட்டத்துடன் சுறுங்கிவிடுகின்றது என்பதே என் கருத்து ஐயா! தங்களின் பார்வையில் தெளிவான அலசல்!

    ReplyDelete
  34. @தனிமரம்
    உண்மை நிலையைஒ என் கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறேன் நீங்கள் சொல்வதும் சரியே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete