ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

சொல்லற சும்மா இரு


                 சொல்லற சும்மா இரு
                -----------------------------------


  
அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசித்ததாகச் சொல்லப்படுவதே பதிவின்  தலைப்பு. இருந்தாலும்  சில அடிப்படை குணங்களை ஏன்  களைய வேண்டும்  என்றும்  தோன்றுகிறது  விஜய் டிவியில்  முருகன் தமிழ்க் கடவுள் என்னும் தொடர் வரப் போகிறதாம் கடவுளில் தமிழ்க் கடவுள் இங்கிலீஷ் கடவுள் என்றெல்லாம்  உண்டா  என்ன. பதிவு  அதைப் பற்றியதும் அல்ல. முருகனை எனக்கும் பிடிக்கும்  சிலகுணங்களாக சொல்லப்படுவதும்  பிடிக்கும் எனக்கும் முருகனுக்கும்  இருப்பதாக நான்  நினைக்கும் சில சமன்பாடுகளைக் குறித்து எழுதியும்  இருக்கிறேன்  பார்க்க

முருகனின் சொற்படி ஏதும் பேசாமல் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த அருணகிரிநாதரை முருகன்நம் புகழ் பாடுகஎனவும் ஏதுமறியாதவன் என்ன பாடுவேன், எப்படிப் பாடுவேன் என்று கேட்கமுத்தைத் தருஎன்று அடியெடுத்துக் கொடுக்க எழுந்த முதல் பாடலே
நாக்கைப் புரட்டும்   முத்தித் தரு பத்தித் திருநகை  எனத் துவங்கும் பாடல் முருகனின்  இப்பாடல் பொருள் தெரிந்தோ தெரியாமலோ மிகவும்  ரசித்துப் பாடப் படுகிறது இதன்  பொருள் எனக்குத் தெரியவில்லை வழக்கம்  போல இணையத்தின்  துணை நாடி பொருள் அறிந்தேன்   யான்  பெற்ற இன்பம்  இப்பதிவுலகும் பெறட்டுமே என்பதே நோக்கம்  முருகன்  சொன்ன படி சொல்லற சும்மா இரு என்றபடி இருக்க முடியவில்லை பதிவும் தேற வேண்டுமே  அதுவும் உபயோகமாக இருந்தால் நல்லதுதானே முதன் முதலில் முருகனடியெடுத்துக் கொடுக்க அருண கிரியார் எப்படி நாக்கைப் புரட்டும் இம்மாதிரிப் பாடலைப்பாட முடிந்தது என்னும் சந்தேகமும்  கூடவே வருகிறது
பாடலின்  வரிகளும் அதன்  பொருளும்
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண்
முத்திக்கொரு வித்துக் குருபர                      எனவோதும்

முக்கட் பரமற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமு வர்க்கத்தமரரும்.........................அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு, 
பட்டப்பகல் வட்டத் திகிரியில்...........................இரவாக

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தருபொருள் 
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் .........................ஒரு நாளே

 தித்தித்தெய ஒத்தப் பரிபுர, 
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொடகந டிக்கக் கழுகொடு.............................கழுதாட

திக்குப் பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத்தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக........................................எனவோத

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென..............................முது கூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல.................................பெருமாளே

எனக்கு இப்பாடலைப் படிக்கவே சிரமமாய் இருக்கிறது சொலவதில் வெட்கம்  ஏதும் இல்லை பொருள் தெரிந்து படித்தால் மகிழ்ச்சியும் கூடுமல்லவா  முதலில் சில அருஞ்சொற்கள்

அத்திக்கிறை = தெய்வயானை அம்மைக்குத் தலைவர்
சுருதி = வேதம்;
ஒற்றைக்கிரி = ஒப்பற்ற மந்தரமலை. ;
திகிரி = சக்கரம்;
பச்சைப் புயல் = பச்சை மாமலை போல் மேனி கொண்ட திருமால்.
பரிபுர = சிலம்புகள் அணிந்த
கழுது = பேய்கள்;
சித்ரப் பவுரி= அழகிய கூத்து;
கொத்துப் பறை = கூட்டமாகப் பல பறை வாத்தியங்கள்;
முது கூகை = கிழக் கோட்டான்.;
கொட்பு = சுழலுதல்;
அவுணர் = அரக்கர்;
குலகிரி =கிரௌஞ்ச மலை
பொரவல = போர் செய்ய வல்ல
பெருமாளே = பெருமை மிகுந்தவரே.

பதவுரை

முத்தினைப் போல் ஒளிர்விடும் சிரிப்பினை உடைய தெய்வயானை அம்மையின் தலைவரே, அன்னை உமையவள் ஈன்றிட்ட சக்திவேல் ஏந்தும் சரவணபவ எனும் ஆறுமுக, முத்தி எனும் வீடு பெற வித்தாய் இருப்பவனே, தகப்பனுக்கே உபசரித்த குருவான பெருங் கடவுளே,/-

 என்றெல்லாம் உனை துதிக்கும் முக்கண்ணன் சிவபெருமானுக்கும் முந்தைய வேதத்தின்  முழுப் பொருளும் அடங்கும் ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து, திருமால் பிரமன் முதலான முப்பத்து  முக்கோடி தேவரும் அடிபணிய ,/


- திக்குக்கு ஒரு தலை என்று பத்துத் தலை சிதற அம்பெய்தி அரக்கரை அழித்து, மந்தர மலை கொண்டு பாற்கடல் கடைந்து , சக்கரத்தால் சிலகணம் சூரியனை மறைத்து இரவாக்கி (ஜயத்திரனைக் கொல்ல வழிவகுத்த )/-


 பக்தனுக்குத் தேரோட்டிய,மரகதம் எனும் பச்சை மணி ஒத்திட்ட , அன்பர்க்குப் புயல்வேகத்தில் வந்தருளும் பச்சை மாமணி வண்ணனும் மெச்சுகின்ற பரம்பொருளே எனைப் பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் நாளும் உண்டோ என இறைஞ்சுகிறேனே. 

தித்தித்தெய் எனும் தாளத்துக்கு ஒப்ப சிலம்பொலி எழும்ப நர்த்தனம் செய்யும் பத்ரகாளி எல்லாதிக்கும் சுழன்றாட பிணங்கொத்தக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னிப் பேய்களும் ஆட /-

 எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்ட பயிரவர் எனும் எண்மரும் இவ்வாட்டத்துக்கு ஏற்ப  த்ரிகடக என தாளமிடக்/


- கூடவே தாரை தமுக்கு எனும் பல வகை தாள வாத்தியங்களும் அதேகதியில் முழங்கிடவும், பலகாலம் வாழ்ந்திருந்த கிழக் கோட்டான்களும் குக்குக்குகு குக்குக்குகுகுகு ,குத்திப் புதை புக்குப் பிடி என்று குழறி வட்டமிட்டு எழ,/


-சிவனாரின் வரம் பெற்றவன் எனும் இணக்கத்தை மறந்து அசுரர்களை வெட்டிக் குவித்து அவுண குலத்துக்கு இசைவாய் நின்ற குலகிரி ( க்ரௌஞ்ச மலை.)யையும் வேலாலே குத்திப் பொடி செய்து அறவழியில் நின்றன்று போர் செய்த பெருமைக்கு உரியவரே

என்ன நண்பர்களே பதிவு நன்றா? பிடித்திருந்ததா. மனதில் பட்டதை எழுதுங்கள் .










  

43 கருத்துகள்:

  1. இதை ,அய்யா T M S அவர்கள் அருமையாக பாடியிருப்பார் ,கேட்டு ரசிப்பேன் .மற்றபடி,பொருள் தெரிந்து ஓதினாலும் தெரியாமல் ஓதினாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் டிஎம் எஸ்ஸின் குரலில் பாட்டை ரசித்திருக்கிறேன் பொருள் தெரிந்து ஓதினாலும் தெரியாமல் ஓதினாலும் ஆகப் போவது ஒன்று மில்லை. என்று சொல்லும் போது பாடலைக் கேட்காமல் இருந்தாலும் பாடாமல் இருந்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை ஜி

      நீக்கு
    2. tmsன் மொழிவல்லமை காதின் வழியா உணர முடிகிறது ,முருகனின் வல்லமை .....?

      நீக்கு
    3. இப்போதும் ஒன்றும் மோசம் போகவில்லை , இந்த பாடல் காணொளியை பதிவில் இணைத்து விடுங்கள் அய்யா :)

      நீக்கு
    4. tmsன் மொழிவல்லமை காதின் வழியா உணர முடிகிறது ,முருகனின் வல்லமை .....?.பலரும் உணர்ந்ததாகச் சொல்கின்றனர் ஏன் இப்பதிவே முருகன் அருள் என்றும் பின்னூட்டங்கள் கூறு கிறதே

      நீக்கு
    5. பாடலைத்தான் பலரும் கேட்டு இன்புற்றிருக்கிறார்களே இனி அது ஆறிய பழங்கஞ்சியாகி இருக்கும்

      நீக்கு
    6. மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும் ,இதை முருகன் அருள் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள் ?
      மற்ற பதிவுகள் யார் அருளால் வந்ததாம் :)

      நீக்கு
    7. என்னைப் பற்றி எழுதினால் என் அருள் உங்களைப்பற்றி எழுதினால் உங்கள் அருள் முருகனைப் பற்றி எழுதினால் முருகன் அருள் மொத்தத்ட்க்ஹில் பிறர் அறுளால்தான் எழுதுகிறேனோ

      நீக்கு
    8. சாத்தான் அருள் பெறவும் வாழ்த்துக்கள் :)

      நீக்கு
    9. எல்லோர் அருளும் தேவை என்று நினைப்பவ நான்

      நீக்கு
  2. முருகன்தான் உங்களை இந்தப் பதிவை எழுதத் தூண்டி இருக்கிறான். ரசித்தேன்.

    தம முதலாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்துப்பறை கொட்ட களமிசை என்ற முருகன் தமிழ்க் கடவுள் என வரப் போகும் தொடரின் விளம்பர வரிகளே என்னை இப்பதிவை எழுத வைத்தது மேலும் எனக்கும் முருகனுக்கும் இருக்கும் சமன் பாடுகளைப்படித்தீர்களா.

      நீக்கு
  3. அருமையான பதிவு. அவன் நினைத்தால், யாராலும் எதையுமே எழுத, பாட முடியுமே. கவி காளமேகம் பற்றி அறிந்திருப்பீர்களே. டி.எம்.சௌந்திரராஜன் அவர்களின் குரலில் பாடல் மனதில் ஓட, அர்த்தத்தைப் படித்தேன். முருகன் அருள் துணையிருப்பதாக. தம இரண்டாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் இங்கும் படித்தறிந்து எழுதிய பதிவு சார் இது. எனக்கு ம்பொருள் தெரியவில்லை. இதுவும் சில நாட்களில் மறக்கலாம் பாராட்டுக்கு நன்றி சார்

      நீக்கு
    2. பாராட்டுக்கு நன்றி சார் சரியா ,இல்லை ..நன்றி மேம் போடணுமா ?நெ த தெளிவு படுத்தணும்:)

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அது பகவான் ஜீ, ஜி எம் பி ஐயாவின் முந்தின போஸ்ட்டின் கொமெண்ட்ஸ் ஐ இன்னும் நெ.தமிழன் படிக்கவில்லை என நினைக்கிறேன்ன்.. அப்போ உங்கள் இந்தக் கொமெண்ட் பார்த்து அவருக்கு ஹெட் சுத்தும்... ஹையோ இப்போ அவரின் கோபம் எல்லாம் என்மீது திரும்பப்போகுதே:)

      நீக்கு
    4. நெ த வுக்கு திரும்பி பார்க்கும் பழக்கம் இல்லை போலும் !நீங்கதான் அவரை இந்த பட்டிமன்ற நடுவரா கூட்டிட்டு வரணும் :)

      நீக்கு
    5. பகவான் ஜி நெத. முந்தைய கமெண்டுகளைப் பார்க்கிறாரா நான் எதையும் தப்பாச் சொல்லலையே

      நீக்கு
    6. நெல்லைத் தமிழன் எதையும் கண்டுகொள்ள மாட்டார் எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கி விடுவார்

      நீக்கு
    7. அதிரா நெத நினைக்காத ஒன்றை நினைவுபடுத்துகிறீர்கள் எனக்கு என் இந்த வம்ஸ்

      நீக்கு
    8. நெத முருகன் அருள் துணையிருக்க வேண்டியதற்கு நன்றி சார்

      நீக்கு
  4. முருகன் அருள் முன்னிற்கும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இப்பாடல் டி.எம்.எஸ். அவர்களின் உச்சரிப்புக்காக அடிக்கடிஅர்த்தங்கள
    இன்று பல அர்த்தங்கள் அறிந்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. அழகெல்லாம் முருகனே.உங்களுக்கும் முருகனுக்கும் உள்ள (அப்பா, அம்மா, மகன் என்று) பெயர்ப் பொருத்தம்தான் , உங்களை முருகன்பால் இழுத்து இருக்குமோ?

    முத்தைதரு பாடல் சந்த இன்பம் உள்ள பாடல்./ அர்த்தம் தெரியா விட்டாலும் பலரும் ரசிக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் நிறையவே சமன்பாடுகளைப் பட்டியலிட்டு இருக்கிறேனே சார் பொருளும் தெரிந்தால் இன்னும் ரசிக்க வைக்கு

      நீக்கு
  7. அருமையான பாடல் என்றென்றும் காதுக்கு இனிமை.. தமனா வோட் 4.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமுடா வென்று கேட்கும் தோன்றும் அருணகிரியி முதல் பாடாலாம் எப்படித்தான் எழுத முடிந்ததோ அருண கிரியின் இன்னொரு பாடலையும் கவனித்திருக்கிறேன் அது பற்றி இன்னொரு முறை

      நீக்கு
  8. இப்பாடலை பலமுறை கேட்டு உச்சரிபபிற்காக பல முறை வியந்திருக்கிறேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. மிகவும் பிடித்த திருப்புகழ் பாடல்களுள் இதுவும் ஒன்று....

    வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வெல்லத்தின் சுவையை அறியக்கூடுமோ!..

    சிறூவயதில் நண்பர்களோடு பாடிப் பழக்கம்..
    அதன் பின் இயல்பாக பாடுதற்கு முடிந்தது...
    வேறு சந்தத்திலும் இதனைப் பாட இயலும்..

    இந்தப் பாடலைக் கொண்டு மூன்று மணி நேரத்திற்கு வாரியார் ஸ்வாமிகள் விரிவுரை நிகழ்த்துவார்கள்..

    கேட்டிருக்கின்றேன்..

    அன்பின் ஐயா அவர்களின் தளத்தில்
    இந்தப் பாடலையும் பொருளையும் கண்டதில் மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளும் ஆவலும் அதைப் பகிர விரும்புவதுமே இப்பதிவின் நோக்கம் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  10. மிக்வும் பிடித்த திருப்புகழ் பாடல்!! இதை உச்சரிக்கும் முன் மிகவும் கடினமாக இருக்கும். டி எம் எஸ்ஸின் குரல் அப்படியே காதில் ஒலிக்கிறது. அருமையான பாடல் உங்களின் மூலம் அர்த்தமும் தெரிந்து கொண்டோம் சார்.

    மிகவும் ரசித்தோம் ...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் ஆதங்கமே இப்படித்தான் என்ன படிக்கிறோம் என்ன புரிந்து கொள்கிறோம் என்று தெரியாமலேயே நம்செயல்கள் பலவுமிருக்கிறது கடவுள் பற்றிய கோட்பாடுகளும் அடங்கும் இவற்றை வித்தியாசமாகக் கூற முயற்சிக்கிறேன் ஆனால் பலரும் blessed are those that are ignorant என்னும் நிலையில் இருப்பதையே விரும்புகின்றனர் வருகைக்கு நன்றி சார் .மேம்

      நீக்கு
  11. பதிவு அதிகம் பிடித்தது ஐயா. நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாட்டின் பொருள் அறியாத பலருக்கு பொருள் புரிய வைத்த தங்களுக்கு நன்றி!
    பள்ளியில் படிக்கும்போது எங்கள் தமிழாசிரியர் தமிழ் உச்சரிப்பு நன்கு வருவதற்கு இந்த பாடலை உரத்த குரலில் பாடி பழக சொன்னது நினைவுக்கு வருகிறது.

    பாடலை பொருளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி அயா

      நீக்கு
  13. சமாதி நிலையில் இருந்தவரை எழுப்பி, பாடய்யா என் பேரில் ஒரு பாட்டென்று முதலடியும் கொடுத்தால் பாவம் மனுஷன் என் செய்வார்? அதுதான் சத்தமாக, அட, சந்தமாகப் போட்டுத் தாக்கிவிட்டார் அருணகிரி. ஒங்களையும் அர்த்தத்தைத் தேடு தேடுன்னு தேடிப் போடவச்சிட்டார் அந்த முருகன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணகிரியார் சத்தமாக சந்தமாக பாடி மற்றவரையும் பாடவைக்கிறார் வருகைக்கு ம் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

      நீக்கு
  14. நல்ல பாடலுக்கு அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு