Wednesday, August 8, 2018

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது


ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது
கலைஞரின் தமிழுகு நான்  அடிமை அவரது மறைவு கேட்ட போது எழுந்த எண்ணங்களின்  தொகுப்பு இதோ நான்  என்  இள வயதில்நாடகங்களில்  ஈடுபாடு கொண்டிருந்தேன் சில நாடகங்கள்     நானே எழுதி இயக்கி இருந்திருக்கிறேன்  அமெச்சூர் நாடகங்கள் என்றாலும்  மேடை யேற்ற செலவு செய்ய வேண்டும் பெங்களூரில் நாடகச்செலவுகளுக்காக  ஒரு திரைப்படச் சுருளை  வாடகைகு எடுத்து ஒருதியேட்டரில் படமிட்டு அதில் வரும் வருவாயைநாடகம் மேடையேற்ற எடுத்துக் கொண்டோம்   அம்மாதிரி நாங்கள்திரையிட்ட திரைப்படங்கச்ளில் ஒன்று  கலைஞரின்  ராஜாராணி  அதில் ஒருநாடகம்வரும் சாக்ரடீசு பற்றியது  அதில் வந்திருந்த கலைஞரின்   வசனம் என்னை  வெகுவாக ஈர்த்தது ஓரளவு என் சிந்தனையிலும்  ஏறிக் குடிகொண்டு விட்டதுபோல் இருக்கிறது
ஏற்றமிகு ஏதென்சு நகரத்து எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் கமழ்விக்க இதோ சாக்கிரடீஸ் அழைக்கின்றேன். ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது. விவேகம் துணைக்கு வராவிட்டால்,.  நீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே! இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி!"

அதன் பின்னர்  நான் இயக்கிய நாடகங்களில்  நடிக்க விருப்பப்புபவருக்க்கு ஒரு சோதனையாக  கலைஞரின்  விரத்தாய்  என்னும் வசனத்தை பேசச் சொல்வேன்  என்னைக் கவர்ந்த வரிகள் அவை அதிகமாக பள்ளிப்படிப்பு இல்லாத கலைஞர் புறநானூற்றுக் கவிதை  ஒன்றை எளியதமிழில் உணர்ச்சி ஊட்டும் வ்கையில் எழுதி இருந்ததுஎன்னை மிகவும் கவர்ந்தது அதை என்மூத்த மகனுக்குக் கற்று கொடுத்தேன்   அவன் அதைச்சொல்லும் விதம் என்னைன்சை மகிழ்விக்கும்  அதன்பின் என் மூத்தபேரனுக்கும்  அதைச்சொல்லிக்கொடுத்து  அதை ரகார்டும்செய்திருந்தேன்
 

கலைஞரின்  கை வண்ணத்தில் வீரத்தாய்

குடிசைதான்! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும் புலியின் குகையினிலே அழகில்லை - புதுமையல்லன்று! கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் - மறவன் மாளிகை! இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்பப் பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி. ஓடி வந்தான் ஒரு வீரன் "ஒரு சேதி பாட்டி!" என்றான். ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண் மகனா நீ தம்பி! மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும். பின், பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டு தமிழச்சி! வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு. ‘மடிந்தான் உன் மகன் களத்தில்' என்றான் - மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை! "தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு-களமும் அதுதான். காயம் மார்பிலா? முதுகிலா? கழறுவாய்" என்றாள் - முதுகிலென்றான். கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனன்; வாளை எடுத்தனள். முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம்! "கோழைக்குப் பால் கொடுத்தேன் குற்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர் போர் வீரனாம்! முன்பொருநாள் பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா? அடடா மானமெங்கே - குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான். இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்கு வீணை நம்பினிலே இசை துடிக்கும். அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்! மதுவும் சுறாவும் உண்டு வாழும் மானமற்ற வம்சமா நீ - ஏடா மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய் மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன் - தின்று கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்களெங்கே? தினவெடுக்கவில்லையா? அந்தோ! வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே - என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!! என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்குச் செரு முனையில் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள் - அங்கு நந்தமிழ் நாட்டை காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்! பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்! மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு - அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி! இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்! ""எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை என் மகன் வீரனாய் இறந்தான்" என்றாள். அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை - அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே? வாளிங்கே! அவன் நாக்கெங்கே?"
 இதையே என்பேரன்  சொல்ல அதைப் பதிவேற்றி இருக்கிறேன் பார்க்க

அறிஞர் அண்ணா இறந்தபோது  கலைஞர் கருணாநிதீயற்றிய இரங்கற்பா புகழ் பெற்றது  அதன் கடைசி வரிக்சள் இதோ

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?

கலைஞர் என்னும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது அவருடைய  அரசியல் கோட்பாடுகளையும் தாண்டி அவரை அவரடுதமிழுக்காக  நேசிப்பவன் நான் என்னைப் போல் பலரும் இருப்பார்கள் வின்ஸ்டன்சர்ச்சில் ஜவஹர்லால் நேரு போன்றவர்களையும் அவர்களது இலக்கிய அறிவுக்காகவே  பாராட்டுபவர்களும்  உண்டு இப்போதுஅதே வரிசையில் கலைஞர் கருணாநிதியும்  சேருவார்


 









30 comments:

  1. என்னவொரு அழகான தமிழ்... பிரமிக்க வைக்கிறது...

    இரங்கற்பா கலங்க வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. கலைஞரின் தமிழே என்னை ஈர்த்தது வருகைக்கு நன்றி

      Delete
  2. வாழ்வில் அனைத்தும் அனுபவித்து வாழ்ந்து இயற்கை எய்திய ஆன்மாவுக்கு எமது அஞ்சலிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்வே ஒரு போராட்ட களமாய் இருந்து மறைந்த கலைஞருக்கு அஞ்சலி பதிவின் மூலம்

      Delete
  3. எங்கள் அஞ்சலிகள்.

    ReplyDelete
    Replies
    1. அரசியல் எண்ணங்களில் வேறு பாடுஇருந்தாலும் தான் நினைத்தது சரியென்று தோன்றினால் அதைச் செய்யும் அவரது குணம் பிடித்த ஒன்று

      Delete
  4. Replies
    1. அஞ்சலியில் என்னுடன் சேர்ந்ததற்கு நன்றி ஸ்ரீ

      Delete
  5. நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
    உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?//

    இன்று வைத்து விடுவார் கலைஞர்.
    நல்லதொரு அஞ்சலி.

    ReplyDelete
    Replies
    1. சொன்னபடி செய்து விட்டார்

      Delete
  6. தமிழை உயிர்மூச்சாய்ச் சுவாசித்த சமூகப் போராளியின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  7. நன்றாக இருந்தது உங்கள் அஞ்சலி.

    ReplyDelete
  8. அனுபவத்தின் அஞ்சலி!

    ReplyDelete
    Replies
    1. லட்சக் கணக்கானோரில் நானு மொருவன்

      Delete
    2. முதல் வருகைக்கு நன்றி

      Delete
  9. Replies
    1. எனது இரங்கல்களோடு உமதும் சேர்கிறது நன்றிசார்

      Delete
  10. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது அங்கு திருவள்ளுவர் விழாவில் பேச வந்த கலைஞரின் தமிழால் ஈர்க்கப்பட்டு அவரது இரசிகனானவன் நான். இன்று அவர் நம்மிடையே இன்று இல்லை என்றாலும் தமிழ் இருக்கும் வரை அவர் நம்மோடு தமிழாய் இருப்பார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் பற்றி எழுதிய பதிவு நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை என் தளத்துக்கு வரவைத்தது மகிழ்ச்சி ஐயா

      Delete
    2. ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் வலைப்பக்கங்களை பார்க்க இயலவில்லை. கூடிய விரைவில் முன்போல் பங்கேற்பேன்.

      Delete
    3. உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சிதரும்

      Delete
  11. அழகுதமிழ். பகிர்ந்தமைக்கு நன்றி பாலா சார்

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் பற்றிய என்நினைவுகள் பகிரப்பட்டது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  12. உங்களுக்கு தோன்றிய அதே வாசகம்தான் எனக்கும் தோன்றியது.'ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது' . கலைஞரின் தமிழை ரசிக்க முடியாதவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்காது. புற நாநூற்றுக் காட்சியை அவருடைய அழகான நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புற நானூற்றுக் காட்சியை கலைஞரின் எழுத்தில் ரசித்துமகிழ்ந்தவன் நான் அதை என்மக்களுக்கும் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்தவன் என் பேரனின் குரலிலும் கேட்கலாமே

      Delete
  13. அவரின் தமிழ்புலமைக்கு மயங்காதவர் இருக்க முடியாது. நிறைந்த புகழ், அழகிய வாழ்வு. அஞ்சலிகள்.

    ReplyDelete
  14. அவருக்கு நிறையவே எதிர்ப்புகள் உண்டு இருந்தாலும் கொண்ட கருத்தில் நிலையாய் இருந்தார் நிறை வாழ்வு வாழ்ந்தவர்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அவரது தமிழை தவிர்க்கவே முடியாது இந்தச்சமூகம் கலைஞரின் வசனத்தை இளைய பிள்ளைகள் படித்து தெரிந்துகொள்ளும் படி இத் தளத்தில் எழுத்து வடிவில் பகிர்ந்தமைக்காக நன்றி ஐயா

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete