Saturday, February 9, 2019

உலகமே நீ வாழ வந்தவன்



                                  உலகமே நீ வாழ வந்தவன்
                                  ------------------------------------------

காலையில் கண் விழிப்புக் கொடுத்தது. இது காலையா.?இன்னும் வெளிச்சம் வரவில்லை. தோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை..! இன்று உலகம் அழியும் தினமல்லவா. ? எங்கும் கும்மிருட்டு. லைட்டைப் போட்டால் எரியவில்லை. மின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையா. அருகில் படுக்கும் மனைவியையும் காணோம். இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா.? பூகம்பம் இலலை, புயல் இல்லை. இடி இல்லை மழை இல்லை. எந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டது. இருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன்  என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமே. அந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன். ...! இவன் தான் கலி புருஷனோ.? எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனித குலம் 
தழைக்க என்னை மட்டும் விட்டு விட்டானோ. என் ஒருவனால் மனித குலம் எப்படித் தழைக்க முடியும். எனக்கு மனைவி வேண்டுமே. ... மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அதிகரிக்கிறது. மெல்ல யாரோ நடந்துவரும் சப்தம் கேட்கிறது. அருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த உலகம் தழைக்க நம் இருவரை மட்டும் வாழ விட்டிருக்கிறான் அந்தக் கலி புருஷன்என்ற என்னைப் பார்த்து
ஏதாவது கனா கண்டீர்களா.?” என்றாள் என் மனைவி
----------------------------------------------- 



 

36 comments:

  1. ஹா... ஹா... ஹா.. நல்ல கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. வேலை இல்லாதவன்கற்பனை ரசித்ததற்கு நன்றி

      Delete
  2. நல்ல கற்பனை. உங்கள் மனைவி வந்து எழுப்பவில்லை எனில் தொடர்ந்திருக்குமோ? எழுத்துக்கள் ரொம்பப் பொடியாக இருப்பதால் படிக்கக் கஷ்டப்பட்டேன். பெரிசாக்கினாலும் உடனே சின்னதாகி விடுகிறது. ஏதோ டெக்னிகல் கோளாறு போல! :)))))

    ReplyDelete
    Replies
    1. Control key-யை அழுத்திக் கொண்டு ப்ளஸ் கீயை, ஓரிரு முறை தட்டவும்...

      Delete
    2. ஹாஹாஹா, ரொம்பப்பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா வந்திருக்கு! :))))

      Delete
    3. மைனஸ் கீயை அழுத்துச் சரி பண்ணிட்டேன். :)

      Delete
    4. இந்த விளையாட்டு நல்லா இருக்கு! :)

      Delete
    5. கீதா சம்பசிவம் கற்பனை கை கொடுத்து கதை வேறு விதமாக மாறி இருக்கலாம்

      Delete
    6. விதம் விதமாக் கற்பனை செய்ய நம்ம குழுவில் பஞ்சமா என்ன? ஆளாளுக்கு ஒரு கற்பனையில் கதையை நீட்டி விட மாட்டார்களா என்ன! :))))

      Delete
    7. @கீதா சாம்பசிவம் control keyல் -+ ஐ ஒரேயடியாய் அழுத்திக் கொண்டிர்கள் என்று நினக்கிறேன்

      Delete
    8. +என்று இருகும்போது - ம் இருக்கும்தானே

      Delete
    9. அப்புறமாச் சரி பண்ணிட்டேன். :)

      Delete
  3. உங்கள் கனவிற்குப் பலன் கிடைத்திருக்கிறது.
    Control +, Control - புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. இதற்கா நான்பதிவெழுதினேன்

      Delete
  4. தி தனபாலன் பதிவுலகில் என்னைப் போல் தெரியாதவரும் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது

    ReplyDelete
  5. @ G.M. Balasubramaniam:

    //..இதற்கா நான்பதிவெழுதினேன் //

    நீங்கள் ஒன்று நினைக்க, அவன் ஒன்று நினைத்தால், கொஞ்சம் + - ஆகப் போய்விடும் !

    ReplyDelete
    Replies
    1. என்கனவுக்கடைக்கு இப்படிய்ம் ஒரு by product ஆ

      Delete
  6. அருமையான கனவு.. சே..சே.. பாதியில் கலைஞ்சு போச்சுது.. திரும்பப்படுத்து மீதியையும் கண்டு சொல்லுங்கோ ..ஜி எம் பி ஐயா.. அதில் அதிராவும் வருகிறேனோ என மறவாமல் நினைவு படுத்திச் சொல்லவும்:).

    ReplyDelete
    Replies
    1. என் மனை கதையில் வந்தது உலகை வாழவைக்கஇதில் அதிராவை எங்கே ஃபிட் செய்வது

      Delete
  7. ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் சார்...அதுவும் கடைசி வரிகள்...நல்ல கனவு.!!! இப்படி எண்ணங்கள் அலை பாய நல்ல கதையும் கிடைக்கிறது சார் உங்கள் கனவே அழகான கதையாகியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிகிறது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் சில கனவுகள் கதை யாகி இருக்கிறது வருகைக்கும் ரசிப்புக்கு நன்றி கீதா

      Delete
  8. கனவு நன்றாக இருக்கிறது.


    //மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அதிகரிக்கிறது. மெல்ல யாரோ நடந்துவரும் சப்தம் கேட்கிறது. அருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி.//

    ஆஹா! எழுத்து நடை அருமை. வீட்டுக்கு
    விளக்கேற்றி ஓளி தந்தவர் வந்து விட்டார் அப்புறம் என்ன?
    ஆனந்தம்தான்.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆனந்தம் உலகை வாழவைக்க என்று இருந்தால் நல்லது

      Delete
  9. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும்நன்றி சார்

      Delete
  10. நல்ல கற்பனை
    விவரித்த முறை அருமை

    ReplyDelete
    Replies
    1. கற்பனையல்ல கனா சார்

      Delete
  11. சிறு கனவொன்றை அழகிய நடையில் விவரித்திருக்கிறீர்கள் .ஆரம்பம் த்ரிலிங் .

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தைப் பாராட்டியதற்கு நன்றி சார்

      Delete
  12. கனாவாக இருந்தாலும் கூட நீங்கள் அதனை ரசனையுடன் கூறும் விதம் எங்களை ஈர்த்துவிட்டது ஐயா.

    ReplyDelete
  13. என் கனவுகள் சில நேரங்களில் பதிவாவது உண்டு வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  14. வருகைல்லி நன்றி மேம்

    ReplyDelete