Sunday, March 1, 2020

சில நினைவுகள்


                       
சில நினைவுகள்
 நாங்கள் ஐவர் என் தாய்க்கு நான் நான்காமவன்   எனக்கு மூத்தவர் என்சகோதரி ஒரே பெண் நான்கு சகோதரர்நடுவே ஒரே பெண் சிறுவயதில்சற்றே புஷ்டியாகiஇருப்பாள் நால்வரில் ஒருத்தியாக இருந்ததால்நாங்கள் அவளை  சூர்ப்பனகை என்று அழைப்போம் ஏன்பள்ளி கொண்டீர் ஐயா பாடலுக்குநடனமாடுவாள்  நாங்கள் தரை சொட்டயாகு என்றுகேலிசெய்வோம்  ஏனொ தெரியவில்லை அவள்நினைவாக இருக்கிறது  
யார்பாடியது தெரிகிறதா 





நான் பார்த்த தேர்கள்
நான்பார்க்க விரும்பிய  தேர்களில்திருவாரூர்  ஆழித்தேர் பார்க்க முடியவில்லை நாங்கள் திருவாரூர் ஒருமுறை சென்றபொது  தேர் மொத்தமாக பிரித்து  விடப்பட்டு இருந்தது
காசியில்பாதி கல்பாத்தி என்பார்கள்  கல்பாத்தி தேர் பிரசித்தி பெற்றது மேலும்  எங்கள் கிராமம் அருகே உள்ளது என்மனைவியைஅழைத்துக் கொண்டு தேர்காட்டப்போனேன் -தெரு முனைகளில் தேரைத்திருப்ப யானையை உபயோகிப்பார்கள்
தேரைத்திருப்ப யானை ரெடி

தேரின்  முன் என் மனைவி 


யானை தேரை முட்டி திசை திருப்புகிறது
திருப்பரங்க்குன்றத்தேர்வீதி 

Add caption



திருப்பரங்குன்றத்தேர்


அடுத்து எங்கள்கிராமத்தேர் அதில் என்பேரனை ஏற்றி அமர வைத்தேன்





என் தம்பி மனைவி வீட்டுத் தோட்டத்தில்  கொல்லங்கோடு செடியில் காய்த்து தொங்கும் பப்பாளி

பப்பாளிகள்
நான் பிறந்த ஊர் ஹலசூர் அங்கு ஆண்டுதோறும் பூப்பல்லக்குஎடுப்பார்கள்
 சுமார் 500 கேஜி மல்லிகை மலர்களால்  அலங்கரிப்பார்களிள் இளிதுதேரல்ல



பல்லக்கு கூடு அருகே நான்
திருமணத்துக்கு முன் பல்லக்கு பார்க்கப் போன நினைவு  நாங்கள்நான்கைந்து  நண்பர்கள் ஒரு சங்கிலி  வளையம் அமைத்து அதன்  உள் வீட்டு பெண்களை  பாதுகாப்பாக நடத்தி சென்றது  நினைவுக்கு வருகிறது   





30 comments:

  1. படங்கள் அருமை ஐயா
    நினைவுகளை தொடர்ந்து மீட்டெடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் அதுதானே செய்கிறேன்

      Delete
  2. அழகிய நினைவுகளும் படங்களும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசார்

      Delete
  3. யானை தேரைத் திருப்புவதா?.. இது புதுசு. கேரளத்து யானைகள் நன்றாகத் தான் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நேர்பாதையில் வடம் பிடித்து செல்ல முடியும் சாலைவளைவுகளி,ல் யானை ஒரு சக்கரத்தில் முட்டி நேராக்கும் கண்கொள்ளாக் காட்சி

      Delete
  4. தேரை முட்டித் திருப்பும் யானை - பாவம் அந்த யானை. மனிதன் தன் வசதிக்காக எப்படியெல்லாம் யானையை பயன்படுத்திக் கொள்கிறான்!

    சூர்ப்பனகை - உடன் பிறந்தவரை கிண்டல் செய்ய இப்படி ஒரு பெயர். அந்த வயதில் இதெல்லாம் செய்வதில் கிடைத்த மகிழ்ச்சி அளவில்லாதது தான்.

    பாடல் கேட்டேன். பாடுவது யார் என்று தெரியவில்லை.

    நினைவுகள் நன்று. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. பாடியது n c வசந்த கோகிலம் காணொளிபகிர்ந்தபோதுதான் எனக்கும் தெரிந்தது சிலரைப் போல் குரல் கேட்டு அடையாளம் தெர்வதில்லை

      Delete
  5. நினைவுகள் நகரட்டும், கற்பனை கள் பிறக்கட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. இப்பொதெல்லாம் எழுத்தே நினைவுகளின் தொகுப்பே

      Delete
  6. யானை தேரைத் திருப்பும் என்பது செய்தி மட்டுமல்ல, ஆச்சர்யமும் கூட.  

    திருவாரூர் சென்றபோது திருவாரூர்த் தேர் பார்த்த ஞாபகம்.  திருவாரூர் கமலாலயத்தில் என் அம்மாவும் என் அப்பாவும் இளவயதில் படகில் அமர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று உண்டு.

    திருப்பரங்குன்றம் தேரை ஒரு கூண்டில் வைத்திருந்தார்கள்.  அதைபோட்டோ எடுத்து பேஸ்புக்கில்போட்டு  "ஸீ தேர்...    சிறையில் தேர்" என்று எழுதியிருந்தேன். அதுநினைவுக்கு வருகிறது.

    உங்கள் நினைவுகளுடன் என் நினைவும் பயணித்ததால்...

    ReplyDelete
    Replies
    1. கமலாலயத்தில் படகு சவாரி உண்டா நான் பார்க்கவில்லையே

      Delete
  7. என் ஸி வசந்தகோகிலம் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்திருந்தால் எம் எஸ்ஸுக்கு மார்க்கெட் கம்மியாயிருந்திருக்கும் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாடகியாய்த்தான் இருந்திருக்க வேண்டும்

      Delete
  8. நினைவுகள் சுவாரசியமாக செல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தே நினைவுகளின் தொகுப்புதானே

      Delete
  9. நினைவுகள் இனிமையானவை
    தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மை வருகைக்கு நன்றி சார்

      Delete
  10. எங்கள் ஊரில் நடந்த தேர்த் திருவிழாவைப் பார்த்து 35 வருடங்களுக்கு மேலாகி விட்டது. மகள்களை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த வருடம் நிச்சயம் வாயப்பு அமையும் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தேரைக்காட்ட வென்றே என்மனைவியுடனும் மக்களூடனும் ஊருக்குப் பயணப்பட்டேன்

      Delete
  11. 40 ஆண்டுகளுக்குப் பின்பு வசந்தகோகிலத்தின் இனிய குரலைக் கேட்க வாய்ப்புத் தந்த உங்களுக்கு மிகுந்த நன்றி . உண்மையாகவே கோகிலம் ( குயில் ) தான் . இளமையிலேயே அவர் காலஞ் சென்ற்மை கர்நாடக இசையுலகுக்குப் பெரிஉ இழப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன் இப்போதுதான் கேட்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  12. பழைய தகவல்களுடன் இனிய மலரும் நினைவுகள்....

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம்கூடர்கிருவாரூர் தேர் பற்றி கேட்ட நினைவு

      Delete
  13. உங்கள் சகோதரி இப்போது இல்லையா? பாவம், அவர் நினைவுகள் உங்களுக்குத் திடீரென வந்திருக்கிறது. நினைவுச் சங்கிலி அருமை. தேரை யானைத் திருப்புவது பற்றி இன்றே அறிந்தேன். ஆனால் கல்பாத்தி தேர்த்திருவிழாவுக்கு எங்க பாலக்காட்டு நண்பர்கள் அம்பத்தூரில் இருந்து வருஷா வருஷம் போவார்கள். எங்களுக்கும் பத்திரிகை வரும். பப்பாளிகள் எங்க அம்பத்தூர் வீட்டிலும் வேலி ஓரமாகக் காய்த்துத் தொங்கும். அதை சாம்பார், கூட்டு, சப்பாத்திக்கான கூட்டு, துருவி சாலட், துவையல் என்றெல்லாம் பண்ணுவோம்.

    ReplyDelete
  14. பப்பாளிகள் குலையாய் காய்த்து தொங்குவது நான்பார்த்தது புதுசு

    ReplyDelete
  15. யானை தேரை திருப்புவது இப்பொழுதுதான் கேள்வி படுகிறேன்.

    ReplyDelete
  16. இதற்காகவே நவம்பர் மாதம் எங்களுர்ருக்கு வாருங்கள்

    ReplyDelete
  17. பல்லக்கு கூடு ... பாற்பதற்கு மிகவும் கலை நயத்தோடு இருக்கிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  18. நான் பதிவிட்டது வெறும் எலும்புக்கூடு மாதிரிதான்மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு வெகூநேர்ட்ட்யாயுமக்ஷகாகவும் இருக்கும்

    ReplyDelete