திங்கள், 27 ஏப்ரல், 2020

சேற்றில் மலர்ந்த தாமரை



                                 சேற்றில் மலர்ந்த தாமரை
                                 ------------------------------------------
 இதிகாசக்  கதைகளை நாம்சிறுவயதில் நம் வீட்டுப்பெரியவர்கள் சொல்லக் கேட்டு தெரிந்து கொள்கிறோம்  அவற்றில் நாம் வளர்ந்து  பெரியவர்களாகும்போது சில பாத்திரங்கள் பற்றி ஏதும் அறியமல் போக வாய்ப்புண்டு  மகா பாரத்க் கதைகள் என்னும் தலைப்பில் சில பாத்திர்ங்கள்பற்றி எழுதி இருக்கிறேன்   ஜயத்ரதன்  ஜராசந்தன்   அசுவத்தாமன் என்றுபல   ராமாயணத்தில்  அதிகம் பேசப்ப்டாத ஒரு கதாபாத்திரம் திரிசடை
 விபீஷணன் மகளான இவள் அசோக வனத்தில்  சீதைக்கு காவலாக  நியமிக்கப்பட்டவள்  தந்தையைப்போல  சிறந்த சிவபக்தை  சீதை மேல் அன்பு கொண்டு  பல நேரங்களில்  சீதைக்கு ஆறுதலாக இருந்தவள்   
 அசோக வனத்தில் சீதைக்கு காவலாக இருக்கு அரக்கியர்கள்
வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கியர்
எயிற்றினுக்கு இடை இடை யானை, யாளி, பேய் என
துயில் கொள் வெம்பிலன் என தொட்ட வாயினர்
 தனது   தவிப்பை  திரிசடையிடம் சொல்லி ஆறுதல் பெறுகிறாள்  சீதை  திரிசடையிடமொரு அலாதி நட்ப நம்பிக்கை என் துணை ஆகிய தூய நீ கேட்டி  என்று சொல்லத் துவங்குகிறாள்   
முனியோடு மிதிலையில் முதல்வன் முந்து நாள் துனி அறு புருவமும்   தோளும்  நாட்டமும்   இனியன துடித்தன  ஈண்டும் ஆண்டு என நனு துடிக்கின்றன  ஆய்ந்து சொல்வாய்
திரிசடை, விசுவாமித்திர முனிவரோடு இராமன் மிதிலைக்கு வந்த அன்றும் இதேபோல் என் இடது கண்ணும், புருவமும், தோளும் துடித்தன. இன்றும் அதேபோலத் துடிக்கின்றன. தம்பி பரதனுக்கு நாடளித்து நாங்கள் வனம் புகுந்த நாளிலும், நஞ்சனைய இராவணன் என்னை வஞ்சமாகக் கவர்ந்த நாளிலும் என் வலம் துடித்தன. ஆனால் இன்று என் இடப்பக்கங்கள் துடிக்கின்றன எனக்கும் ஏதேனும் நன்மைவருமா
 இதைக்கேட்ட இன்சொல்லின் திருந்தினளான திரிசடைதேவி, உனக்கு மங்களங்கள் வந்துசேரப் போகின்றன. நீ நிச்சயம் உன் கணவனைச் சேரப் போகிறாய். உன் காதிலே பொன்நிறத் தும்பி வந்து ஊதிப் போனதை நான் பார்த்தேன். நிச்சயம் உன் தலைவனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து உன்னை சந்திக்கப் போகிறான். உனக்குக் கொடுமை செய்த தீயவர்களுக்குத் தீமை வருவதும் நிச்சயம்என்று தேறுதல் சொல்கிறாள். அதன்பின் தான் கண்ட கனவை விவரிக்கிறாள்:
இராவணன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்களும் கழுதைகளும் பூட்டிய தேரில் தென்திசை போகக் கண்டேன். அவன் மட்டுமல்ல, அவன் மக்களும் சுற்றமும் கூடப்போனார்கள். நகரில் இருந்த தோரணக் கம்பங்கள் ஒடிந்தன. யானைகளின் தந்தங்கள் முறிந்தன. பூரண கும்பத்திலிருந்த புனித நீர் கள்ளைப் போல் பொங்கி வழிந்தது. மங்கையர்களின் தாலியெல்லாம் தாமே இற்று வீழ்ந்தன. மண்டோதரியின் கூந்தலும் அவிழ்ந்து சுறு நாற்றம் நாறின.
. இரண்டு சிங்கங்கள் புலிக்கூட்டத்தோடு இங்கு வந்து மத யானைகள் வாழும் வனத்தை வளைத்து அவற்றோடு போர் செய்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக வீழ்ந்து பட்டன. அந்த வனத்திலிருந்த மயிலும் பறந்து போனது. அதே நேரம் ஓர் அழகான பெண் இராவணன் அரண்மனையிலிருந்து அடுக்குதீபம் ஏந்தியபடி வீடணன் அரண்மனைக்குச் சென்றாள். இந்தச் சமயம் நீ என்னை எழுப்பி விட்டாய்என்கிறாள். இதைக்கேட்ட சீதை அக்கனவின் உட்பொருளை ஒருவாறு உணர்ந்து கொள்கிறாள். இராவணன் குலத்தோடு அழியப்போகிறான். இரண்டு சிங்கங்களும் இராம இலக்குவர்களைக் குறிக்கின்றன, அந்த மயில் தன்னைக் குறிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறாள். அவள் கவலையெல்லாம் பறந்து சென்ற மயில் எங்கே போனது? எனவே கனவின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கை கூப்பிஅன்னையே! இன்னும் துயில்க, அதன் குறைகாண்என்று வேண்டிக் கொள்கிறாள். மீண்டும் உறங்கினால் அதே கனவு தொடரப் போவதில்லை என்ற போதும், அவளை அன்னையே என்று விளித்து இவ்வாறு வேண்டிக் கொள்வது சீதாப்பிராட்டியின் நிலைமையை நமக்கு உணர்த்துகிறது.
ராவணன்அங்கு காவலில் இருந்த அரக்கியரிடம் சீதையை அச்சுறுத்தியோ  அறிவுரை கூறியோ  சீதையை பணிய வைக்க கூறுகிறான் திரிசடையைப்பற்றி  கூறும்போதெல்லாம் அவள் சீதைக்கு எத்தனை ஆறுதலாக இருந்தாள்  என்பதே முக்கியமாக கூறப்படுகிறது மண்ணில் கண்டெடுத்த சீதை திரிசடையை  அன்னை என்றே சில இடங்களில்  அழைக்கிறாள் ஒரு சமய ம் மாய ஜனகனை கொல்லும் முயற்சியால் சீதையை பணிய வைக்க முயன்றபோது  திரிசடைதான்   அது மாய ஜனகன்   என்று கூறி ஆறுதல் படுத்துகிறாள் மேலும்  ராவணனை விரும்பாத பெண்ணை  அடைய முனைந்தால்  அவனுக்கு அதனால் இறப்பு வரும்  என்றும்   பலவாறாகக் கூறி சீதையை தேற்றுகிறாள்
திரிசடையின் இயல்புகளை கம்பனின்  மொழியில்சொல்ல முற்பட்டால்சில கம்பனின்  பாடல்கள்  தெரிய வரலாம்
மாய ஜனகனே சீதையை  ராவணனுக்கு  இணங்கக் கூறுகிறான்
உந்தை என்று உனக்கு  எதிர் உருவம்   மாற்றியே 
வந்தவன் மருதன் என்று  உளன்   ஒர்மாயையான்
அந்தம் இல கொடுந்தொழில் அரக்கனாம்  எனா
ச்ந்தையில் உணர்த்தினாள்  அமுதின் செம்மையாள்     
 
  தந்தையேதனக்குத் துரோகம் இழைத்து விட்டானே என்று சீதை மிகவும் மனம் கசந்து போயிருந்த சமயத்தில் அவளுக்கு ஆறுதலாகத் திரிசடை, உயிர்போகும் தறுவாயில் அமுதம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி உயிர் பிழைப்பிக்கிறாள். அதனால் அவளை அமுதின் செம்மையாள் என்கிறான் கம்பன்
மொத்தத்தில் கம்பராமாயணத்தில்திரிசடை சேற்றில்  மலர்ந்த செந்தாமரையாகவே காட்டப்படுகிறாள் 
         

                                   

27 கருத்துகள்:

  1. திரிசடை சீதைக்கு எப்போதும் ஆறுதல் கூறி அவளது டிப்ரஷனைப் போக்குபவளாக, நல்லவளாக்க் காட்டப்படுகிறாள்.

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவளாக காட்டப்படுகிறாள் ? அவள் நல்லவள் தானே

      நீக்கு
  2. நானும் அறிந்து கொண்டேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. கதைகள் அறிந்தாலும், அவற்றிலிருந்து நல்லவைகள் மட்டும் எடுத்துக்கொள்வதுண்டு...

    பதிலளிநீக்கு
  4. எத்தகைய சூழலிலும் நன்மை செய்ய ஒரு காரணி இருக்கும் என்பதே வாழ்க்கை விதி. மனிதன் தன் பதட்டத்தில் அதைக் கண்டு கொள்ளாமல் போகும்போது நஷ்டமடைகிறான்.

    திரிஜடை விபீஷணன் வார்ப்பல்லவா..

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு விபீஷணன் பாத்திரம்மேலத்தனை ஈர்ப்பு கிடையாது துரோலம் செய்தவன் தானே

      நீக்கு
    2. ஜி எம் பி சார்... செய்நன்றியா அல்லது தர்மமா என்றால் நீங்கள் யார் பக்கம் நிற்பீர்கள்?

      நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பெரிய தாதாவின் அடியாட்கள் எல்லோரும் தாதாவுடனேயே இருப்பதால் உத்தமர்கள் என்று சொல்வது போல உள்ளது.

      நீக்கு
    3. நம் நாட்டில் அந்நியர் உடுருவலுக்கு காரணமே ம்மாதிரி செயல்கள்தான்இது அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது பதவிக்காக எதிரியுடன் கூட்டு சேர்வது நம்நாட்டில்சகஜம்தானே தர்மமாவது செய்நன்றி யாவது எல்லாம் சுத்த ஹம்பக்

      நீக்கு
  5. நல்லதொரு பதிவு. கம்ப ரசம் பருகத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. திரிசடையின் நல்வாக்குப் படித்தால் நமக்கும் நன்மையே நடக்கும் என்பார்கள். வால்மீகியும் திரிசடை பற்றியும் அவள் நல்ல குணங்களையும் சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  7. அதிகம் கவனிக்க மறந்த பாத்திரம் திரிசடையின் பண்பு விளக்கம் அருமை. சேற்றில் மலர்த செந்தாமாஇ திரிசடைக்கு ஏற்ற உவமை.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு சார். சார் நலமா? நீங்களும் அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள். உங்கள் உடல நலம் பற்றி அறிந்து கொண்டேன். நாங்கள் எல்லோரும் நலம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நலமே அதிகம் நடப்பதுசிரமம் விசாரிப்புக்கு நன்றி

      நீக்கு
  9. திரிசடை பற்றி அதிகம் பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி லக்ஷமணன் மனைவி ஊர்மிளா பேசப்படவில்லையோ அப்படி.

    எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நல்லது நடக்கும். நடக்க வாய்ப்புண்டு. (இப்போதைய சூழலைப் போல!) சீதைக்கு திரிசடை நல்லது சொல்லி உற்சாகம் அளிக்கிறாள். கெட்ட சூழலிலும் ஒரு நல்லது.

    நல்ல பகிர்வு சார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடிக்கடி கூறுவது தவிர்க்க முடியாதவை அனுபவிக்கப்பட வேணும்

      நீக்கு
  10. நல்லதொரு இலக்கிய விரிவுரை கேட்ட உணர்வு..

    நலமே விளைக...

    பதிலளிநீக்கு
  11. பெண்ணொருத்தி தனியாக இருக்கலாகாது என்று அவளுக்கு ஒரு தோழியையும் ஏற்பாடு பண்ணின கவிஞன் மாண்பு தான் என்னே!..

    பதிலளிநீக்கு
  12. திரிசடையின் ஆறுதல் உண்மையிலேயே பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணரமுடிகிறது. ஓர் அழகான பொழிவினைக் கேட்டதைப்போல அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. இராமாயணத்தில் திரிஜடைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சுந்தர காண்டத்தில் அவளுடைய கனவு வரும் பகுதியை வாசிப்பது, கேட்பதும் மிகவும் சிறப்பு என்றுதான் கூறுவார்கள். ஹனுமனுக்கு முன்னாலேயே சீதைக்கு நம்பிக்கை அளித்தவன் அவள். உலகமே ஒரு பயத்தில் உறைந்து கிடக்கும் இந்த நேரத்தில் திரிஜடையின் கனவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அப்படியே கம்பரசமும் பருகக் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு