இன்றைக்கு சுமார் 2500 டாலர் கொடுத்தால் CANNON கம்பனியின் நேவிகேட்டர் என்னும்பெட்டியை நீங்கள் வாங்கலாம்
நேவிகேட்டர் என்பது ஒரு சிறியமேசைக் கணிப்பொறி ஒரு தொலைபேசி ஒரு பதில் சொல்லி ஒரு ஃபாக்ஸ் இயந்திரம்ஒரு அச்சு யந்திரம் ஒரு 10 இன்ச் டெலிவிஷன் திரை இது போதும் அலுவலகத்தை வீட்டுக்கு கொண்டு வர
இதனால் ஏற்படும் சிக்கனங்கள் ஏராளம் ஆபீசுக்குப் போகும் பெட்ரோல் மிச்சமாகும் பஸ்களில் கூட்டமிராது நகரங்களில்போக்கு வரத்துநெரிசலைக் குறைக்கலாம் பொல்யூஷன் குறையலாம்
எதிர்காலத்தில் அலுவலகம் செல்ல வேண்டாம்அலுவல் உங்கள் வீட்டுக்குவந்து சேரும்
ஒரே ஒரு சிக்கல்
நாள்முழுவதும் மனைவியுடனேயே இருக்க வேண் டும்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கற்ப்னைக்கு அப்பால் என்னும் நூலில் சுஜாதா எழுதியதாம்
சுஜாதாவின் அல்டிமேட் டச்சுடன் எழுதியது இந்த கொரோனா காலத்துக்கு பொருந்தும்தானே
சோஷியலைசிங், மற்றவர்களோடு நேருக்கு நேர் உரையாடுவதை மட்டும்தான் மிஸ் பண்ணுவோம்.
ReplyDeleteமற்றபடி வீட்டிலிருந்து வேலை என்பது பல வித்த்திலும் நன்மை பயப்பது. ஒரு நகரத்திலேயே நெரிசல், விலைவாசி ஏற்றம் என்பதெல்லாம் குறையும்.
வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும் என்பதா நகரங்களில்பல குடி இருப்புகள் காலியாக் வாய்ப்புண்டு
Deleteஅதுல நிறைய பலன்கள் இருக்கு ஜி.எம்.பி சார். எல்லோரும் நகரத்தில் நெருக்குவதால் கிராமங்கள் கவனிப்பாரற்றுப் போகின்றன. தேவையில்லாத செலவுகள் (கும்மிடிப்பூண்டிலேர்ந்தே கணிணியில் பெங்களூர் ஆபீஸுக்கு தொடர்பு கொண்டு வேலை பார்க்க முடியும் என்றால் எதற்கு 8,000 ரூபாய் வீட்டு அலவன்ஸ், 2000 ரூபாய் கார் அலவன்ஸ் - செலவுக்கணக்குல, தனிச் சாப்பாட்டிற்கு இன்னுமொரு 6,000 ரூ, குடும்பத்தைப் பிரிந்திருப்பது, வார இறுதியில் பயணம் செய்வது - இதெல்லாமே இருக்காதே
Deleteகம்பெனிக்கும் லாபம். பெரிய ஆபீஸ் வைத்துக்கொண்டு பராமரிக்க வேண்டாம். 10-6 வேலை பார்ப்பவர்கள், 10 1/2 - 20:00 வரையிலும் வேலை பார்ப்பார்கள். Productivity இல்லைனா வேலை போயிடும் என்பதால் ஓபி அடிக்க மாட்டாங்க, அதை சுலபமா மானிட்டர் செய்யலாம்.
Deleteபெங்களூரிலேயே ஐடி கம்பனிகளில் வேலை செய்பவர்கள் வீட்டைக் காலி செய்கிறார்கள் வீடு சொந்தக்காரர்கள் முழிக்கிறார்கள் சென்னையில் என்மகனது வீடும் வேளச்செரியில் காலியாகி விட்டது சாதக பாதகங்கள் நிறையவே
Deleteசுஜாதா எழுதிய பல விஞ்ஞான கதைகள் நிஜம் ஆகியது உண்மை. இந்த கதையில் அவர் அந்த நேவிகேட்டர் போட்டோ பிடிக்கும் என்று சேர்க்க மறந்து விட்டார். Jayakumar
ReplyDeleteபல ஆங்கில நாவல்களில் வந்தவை நிஜமாய் இருப்பது போல சுஜாதா நினைத்தும் பார்த்திருக்க வாய்ப்பில்லாத தீர்க்க தரிசனமோ
DeletePandemic பற்றிய தீர்க்கதரிசனம் அவருக்கு இருந்திருக்குமோ என்னவோ..!
ReplyDeleteவீட்டில் இருந்து வேலை என்பதே அவரது தீர்க்க தரிசனம்
Deleteஎனக்கென்னவோ காக்கை உட்கார பனம்பழம்விழுந்த கதைதான் எனத் தோன்றுகிறது
Deleteஅனுபவ அறிவு இல்லாத பைத்தியத்துடன், மனைவி இருக்க வேண்டுமே...!?
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா டிடி!!! செம!!
Deleteகீதா
யார்பைத்தியம் ?
DeleteHis view is in a lighter vein
ReplyDelete//ஒரே ஒரு சிக்கல் நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க வேண்டும்//
ReplyDeleteஹா.. ஹா.. இதுவும்தானா ?
வீட்டில் வேலை என்றால் சும்மாவா
Deleteஅருமையான தீர்க்கதரிசனம். இருந்தாலும் நேரடியாகப் பழகுவதில் உள்ள அன்னியோன்னியம் என்பது இதில் கிடைக்காதுதான். என்ன செய்வது, இந்த சூழலுக்கு இதுதான் இப்போதைய தேவை.
ReplyDeleteஇதை எழுதும்போது இந்த சூழல் நினைக்கப்பட்டிருக்காது
ReplyDeleteசமயங்களில் மிகவும் எதிர்பாராத வகையில் இவை நிஜமாகி விடுகின்றன. DD எதிர்திசையிலிருந்து சிந்தித்திருப்பது ரசனை!
ReplyDeleteஎதிர் திசை எனக்கு புரியவில்லை
Deleteஇது ஒரு நல்ல விஷயம். சுஜாதா நிஜமாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் என்பதை விட அவர் அறிவியல் அறிவு அப்படி அவரைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
ReplyDeleteடிசிஎஸ் இந்த நடைமுறையைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தொற்று வரும் முன்னரே கூட நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இப்போதும்.
பல நல்ல விஷயங்கள் அடங்கியது இந்த ஐடியா.
கூடவே அவரது நகைச்சுவையும்!
கீதா
எனக்கு காக்கை உட்கார பனம்பழம் விழுந்தகதைதான்நினைவுக்கு வருகிறது
ReplyDeleteகணினியில் தமிழ் வரும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதற்கு முன்பே, தன் கதையின் ஒரு அத்தியாயத்தை, கணினியில் தட்டச்சு செய்து அனுப்பி, குமுதம் என்று நினைக்கிறேன், அந்த இதழும் அதனை அப்படியே ஸ்கேன் செய்து பிரசுரித்தது நினைவிற்கு வருகிறது. கணினி விசயத்தில் கில்லாடி.மேலும் கற்பனை வளம் மிக்கவர் என்பதால்,அன்று விளையாட்டாக எழுதியது இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது
ReplyDeleteதிருச்சி அருகே ஏதொகிராமம் அங்குள்ள கல்லூரி ஒன்றில் க்வேஷன் இன்கம்ப்யூடர் சயன்ஸ் இருந்ததாக கெள்விபட்டு என் இளைய மகனைஅங்கு செர்க்க எண்ணினேன் ஆனல் அவனைஎஞ்சினீருங்கில்தான் சேர்க்க முடிந்தது அந்தகல்லூரி சுஜதவின் ய்உதவியால் டிறக்கப் பட இருந்ததாக கேள்வி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒர்க் ஃப்ரம் ஹோம் ஆரம்ப காலங்களில் சாதகம் போல் தோன்றும். அதற்கான நெறிமுறைகள் வகுக்கவில்லையெனில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு.கம்பெனிகளுக்கு இதனை முழுமையாக ஆதரிப்பதில் ப்ரச்சனைகள். உண்டு. செக்யூரிடி சிக்கலைச் சமாளிக்க வேண்டும். முழுமையாக ஊழியர்களை நம்ப வேண்டும்.
ReplyDeleteஎல்லவற்றிலும் சாதக பாதகங்கள் உண்டு
Deleteவீட்டிலிருந்து வேலை என்பது, குறைந்தபட்சம் 1500 ச.அடி. வீடு வைத்திருப்போருக்கே சாத்தியமான விஷயம்.
ReplyDeleteபொதுவாக கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகும் காலம் இது. குழந்தைகளுக்கும் வீட்டுக்கல்வியே என்று ஆகிவிட்டதால் ஐந்து வகுப்புகளுக்குள் கற்கும் குழந்தைகளை வைத்திருப்போருக்கு சங்கடம். ஒரு பத்து வயது சிறுவன் தன் வீட்டுக்கல்வியை கணினி உதவியுடன் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை. சிறார்களின் கல்வி இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம். இருந்தாலும் வெளியில் போகும் ஆபத்துக்களை நினைக்கும் பொழுது எவ்வளவு அசெளகரியங்கள் இருந்தாலும் இந்த ஏற்பாடே மேல் எனத்தோன்றுகிறது.
இதனால் சென்னையில் பல வீடுகள் காலியாகின்றனவாம்
ReplyDeleteஇந்த விஷயத்தை நான் எத்தனை வாட்ஸாப் க்ரூப்பில் இருக்கிறேனோ, அத்தனை குரூப்புகளிலும் வந்து விட்டது.
ReplyDeleteநல்லது
ReplyDelete