Monday, November 16, 2020

மனைவிக்கு

 

நான் இவ்வுலகில் உதித்து 82 ஆண்டுகள் உருண்டோடி விட்டன ஒவ்வொரு ஆண்டு  இந்தநாள் எனக்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா

 திருமண நாளும் பிறந்த நாளும்  ஒன்றுதான்  அதெப்படி பிறந்த நாளூம் மண நாளும் ஒன்றாக இருக்கும்  நான் சொல்ல வருவது 11 நவம்பர் நான் பிறந்தநாள் ஆனால் ஆண்டு 1938 நான் மண்ந்தது 11 நவம்பர் ஆனால் ஆண்டு 1964  இந்த நாளை நான் இண்ட்ராஸ் பெக்ட் செய்ய உபயோகிப்பேன்  இந்த முறை என்மனைவிக்கு அர்ப்பணம்செய்கிறேன் என்னை மாதிரி ஒரு பிரகிருதியோடு 56 ஆண்டுகள் குப்பை கொட்டுவதென்ன லேசுப்பட்டதா அவளுக்கு நான் சமர்பிக்கும்  பாடல் வரிகள் இதோ

 எங்கள் மண நாளில் அவளுக்கும் வாழ்த்து சொல்வது கடமையல்லவா 


ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்

என் கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்

என்  மனம் ஏனோ அல்லல் படுகிறது

வெறும்  களிமண்ணாய் வந்தவளை நன்கு பினைந்து

குயவன்  கைப் பானையாய் வளைத்துச் செதுக்கினேன்

எனப் பெருமைப் படுவாள் பாவம்

அவள் அறிய மாட்டாள் ஐம்பத்து ஆறு  ஆண்டுகள்

என்னுடன் இருந்தது எத்தனை அரிய செயல் என்று

இன்று ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்

தாரமும் ஒரு தாய்தானே

   அன்னையவளைத்  தேடி நான் அலைந்தபோது

சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,

நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,

தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.

 

யாதுமாகி  நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்

 தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 

நிரப்பி ,   சஞ்சலங்கள் நீக்கிய  சேயானேன்.

 .

பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து

காளையாய்க்  காமுற்றுஎனதவளைக் கைப்பிடித்து

இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்

 எல்லாம் செத்துநாளை  எண்ணுகையில் 

எனக்கு நானே  அழாதிருக்க,

 

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்

கரைபுரளபூக்கின்ற  புன்னகையால் ,

ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 

அடங்கவே  அளித்தருளி அன்னையாய்

,என்னை ஆட்கொள்ள  வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே


வெறும்   வார்த்தைகள் கூடவே ஒரு டாப்லெட் டும்( மருந்தல்ல) கொடுத்தேன்   

 

 

 

24 comments:

  1. இனிய மணநாள்/பிறந்த நாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் உங்கள் மனைவியுடன் சேர்ந்திருந்து மகிழ்ச்சியுடன் வாழவும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. முதல் வருகை நன்றி மேம்

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் மற்றும் மண நாள் வாழ்த்துகள்.

    எல்லா ஆண்களுமே இப்படி நினைத்துக்கொள்வார்கள் (மனைவி, எப்படீடா நம்முடன் இத்தனை ஆண்டுகள் குப்பை கொட்டினாள் என்று) என நினைக்கிறேன். அவங்களுக்கு என்ன செய்தாலும், அவங்களோட contributionக்கு 50% கூட கிடையாது என எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் என்னைப்பற்றி மட்டும்தானே கூற முடியும் மனைவிகள் எல்லாம் என்மனைவி போல் ஆவதில்லை என்றே எனக்குத்தோன்றும்

      Delete
  4. உங்கள் இருவருக்கும் மணநாள் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    உங்களை வணங்கி உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக் கொள்கிறோம்.

    அருமையான கவிதை. உங்கள் அன்பு வெள்ளமாக இருக்கிறது கவிதையில்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையை பாராட்டியதற்கு நன்றி

      Delete
  5. அற்புதம். இனிய வாழ்த்துகள்.
    இன்னொரு அம்மாவாகிறார் மனைவி காலப் போக்கில்.

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்ட்ர் வாயால் ......போல் இருக்கிறதுகருத்தும் வாழ்த்தும்

      Delete
  6. பிறந்த நாள் மற்றும் மண நாள் வாழ்த்து. மனைவி வாழ்க்கைத் துணை , தோழி , தியாகி. உங்களைப் போல இல்லத்தரசியை மதிக்கிறவர்கள் சிறுபான்மையரே.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சார் என்றும் மனைவியை நேசிப்பதும் மதிப்பதும்சரிதானே சார்

      Delete
  7. இந்த நாளில் தங்களுக்கு
    அன்பின் வணக்கங்கள்!..

    ReplyDelete
  8. இனிய் மணநாள் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..யாதுமாகி..அற்புதமான சொற்பிரயோகம்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு discerning readerசில நேரங்களில் வார்த்தைகள் வந்து விழுவதுண்டு ரசித்தமைக்கு நன்றி சார்

      Delete
  9. அருமை.   பதினொன்றாம் தேதி பிறந்த நாளுக்கு மட்டும் வாழ்த்தி இருந்தேன்.  மணநாளுக்கும் வாழ்த்துகிறேன்.  உங்கள் இருவரின் ஆசியை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஆசி என்று முண்டு

      Delete
  10. 56 வருடங்கள் ஓயாது கவனித்த மனைவிக்கு பாராட்டு பாட்டு ஒன்றே போதுமானது இல்லை. ஆனால் அன்பே சிறந்த பரிசு. அந்த அன்பை கவிதையாய் சமர்ப்பித்து விட்டீர்கள். கவிதை சிறப்பு.
     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவுதான் எழுதினாலும் அது போதாதோ என்றே தோன்றும் பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  11. தாமதத்திற்கு சாரி சார்.

    உங்கள் மண நாள் பிறந்த நாள் எல்லாவற்றிற்கும் வாழ்த்துகளுடன் ஆரோக்கியமாக இருந்திட பிரார்த்தனைகளும்.

    அம்மாவிற்கான உங்கள் கவிதை அவர்களுக்கு ஒரு டானிக் தான். அன்பும் காதலும் ஒளிர்ந்து ஒலிக்கும் கவிதை!

    வாழ்த்துகள் சார்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சரியாக கணித்ததற்கு நன்றி

      Delete
  12. உங்கள் பிறந்த நாள், மண நாள் எல்லாவற்றிற்கும் அன்பான வாழ்த்துகள் பிரார்த்தனைகள்.

    உங்கள் மனைவியின் மீதான உங்கள் அன்பு கவிதையில் வெளிப்படுகிறது. சிறப்பாக இருக்கிறது சார்.

    நீங்கள் இருவரும் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்திட வாழ்த்துகள் பிரார்த்தனைகள்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி சார்

      Delete