பழைய கள் புது மொந்தையில்
அது என்னவோ தெரியவில்லைமுன்பெல்லாம் பெண்கள்பற்றி நிறையவே எழுதி வந்தேன்
இப்போது எதை எழுதலாம் என்றால் முன்பு எழுதியதே இன்று ரெலெவண்ட் ஆக இருப்பது [போல் இருக்கிறது ஆகவே அதுவே மீள்பதிவாக
பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும்,
முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும்
எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று
சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன்.
உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?
அழுகை என்பது ஒரு
இழப்பின் வெளிப்பாடு;
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,
ஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.
எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.
பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க
வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.
ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.
உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.”
:
. .
.
திருமணம் முடிந்தும் கூட ஆண் தன் குடும்பத்தோடு சேர்ந்தே இருக்கிறான். பெண் திருமணமானதும் வேரோடு பிடுங்கி இங்கு நடப்படுகிறாள். அப்போது அவளது ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் கண்ணீராக வெளிப்படுவது சமூக அமைப்பின் மீதான இயலாமை.
ReplyDeleteஅரவணைத்துச் செல்லத்தெரிந்தால் ஆணும் அடிமையாகமாட்டான்!
திருமணம் முடிந்தும் கூட ஆண் தன் குடும்பத்தோடு சேர்ந்தே இருக்கிறான். பெண் திருமணமானதும் வேரோடு பிடுங்கிஇங்கு நடப்படுகிறாள் இது இக்காலத்தில் இல்லை தன் சாம்ராஜ்யம் அமைய கணவனை தனியே அழைத்து வருகிறாள் பதிவை படிக்கும்போது தன் நிலையோடு ஒப்பிடக் கூடாது எழுதி இருப்பது பொதுவானது
Deleteஎன்னவோ. எனக்கு அப்படித் தோன்றவில்லை.... பெண் ஆணுக்கு திருமணமானபின்பு அடிமையாவதில்லை... அதாவது பணிந்து போவதில்லை. மாலை வந்தால் பணிவான் என்பதெல்லாம் முழுக் கற்பனை.
ReplyDeleteஆனால் மெல்ல மெல்ல, குழந்தைகள் வந்த பிறகு பெண்ணின் கை ஓங்குகிறது. ஆண், தன் டாமினேட்டிங் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக கை விட்டு, அவள் சொல்வது சரிதான் எனப் புரிந்துகொள்கிறான்.
நுண் அறிவு பெண்ணுக்கே அதிகம். நாம் பலதரப்பட்ட மனிதர்களை, அவங்களைவிட அதிகம் சந்தித்திருந்தாலும், பெண் மாதிரி சட் என எடைபோடும் திறன் நமக்கு இல்லை.
கருத்துஎழுதும்போது ஏதோ கன்ஃப்யூஷன் போல் தெரிகிறது பதிவு எல்லோருக்கும் பொருந்தாதுஇது பொதுவாக நடப்பது
Deleteபெண்வழிச்சேறல் அதிகாரம் பக்கம் சற்றே நேரம் இருந்தால் சென்று பார்க்கலாம் ஐயா...
ReplyDeleteஇனி குறளில் சொல்லி இருப்பதைபார்க்க குறள் படிக்க இயலாது என்ன வென்று நீங்களே சொல்லி இருக்கலாம்
ReplyDeleteநெல்லைத் தமிழன் அவர்களை வழி மொழிகின்றேன் ஐயா
ReplyDelete