Sunday, March 28, 2021

நாம் இந்தியர்கள்

 


நாம்இந்தியர்கள் சில விசேஷ குணங்கள்

 நான் ஒரு இந்தியன்

பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பேன்.
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பேன்.
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவேன்.
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பேன்.
என் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பேன்.
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வேன்.
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பேன். புது பாட்டரி வாங்காமல் காலம் கழிப்பேன்.
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்
என்னுடைய T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்துவேன். இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவேன். இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பேன்.

நாம் இந்தியர்கள்.
----------------
ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல.
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்.
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

 

 

 

 

 

 


14 comments:

  1. உண்மையான வார்த்தைகள் ஐயா. அதிகம் இரசித்து படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி

      Delete
  2. முதல் பகுதி இன்னமும் இருக்கலாம்...

    இரண்டாவது பகுதி தெளிவடைந்து மாறி வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. இந்தியர்களின் சில விசேஷ குண்ங்கள் அவை மாறுவது கடினம்

      Delete
  3. அலுவலகத்தில் ஏற்கெனவே வந்திருக்கும் கவரையே கவனமாகப் பிரித்து திருப்பி ஒட்டி மறு உபயோகம் செய்திடுவோம்.

    நோட்டில் கோடுகள் முடிந்து அதன் கீழும் இருக்கும் இடத்திலும் என்ட்ரி போடுவோம்!

    கல்யாணக்கவரையே பத்திரிகையை வெளியில் எடுத்துவிட்டு மொய்க்கவராய் பாவித்து பணம் போட்டுக் கொடுத்துவிடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணக்கவரையே பத்திரிகையை வெளியில் எடுத்துவிட்டு மொய்க்கவராய் பாவித்து பணம் போட்டுக் கொடுத்துவிடுவோம்!யாரிடம் இருந்து என்பதுஎளிதாக தெரியும்

      Delete
  4. இது நீங்க வெளிநாட்டுக்குச் செல்லாததால் எழுதறீங்க. என்னுடன் வேலை பார்த்தவர், அமெரிக்க, ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு டூர் சென்றார். Bed & Breakfast என்று போட்டிருக்கும் இடங்களில், Breakfastஐ கையில் எடுத்துச் செல்லக்கூடாது என்று போட்டிருப்பாங்களாம்

    நம்முடையது சிக்கனமான மனநிலை. அவ்ளோதான். வெளிநாட்டில், யாரும் யாருக்குமே சொந்தச் செலவில் ஒரு காபிகூட வாங்கித்தர மாட்டார்கள். There is no free lunch என்பது அவங்களோட கலாச்சாரம் (even with their own kids, after they become 16+)

    //ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்// - இதுக்கு மிகப் பெரிய காரணம் நம் சமூக முறை, சமூகப் பெரியவர்கள் (ஆன்மீகப் பெரியவர்கள்) இதனைப் பற்றி அதிகமாக பிரச்சாரம் செய்யாமை. நாமும் அதனை மாற்ற முயலாமை. திருமணத்துக்கு பெண்களுக்கு ஏகப்பட்டது செய்யவேண்டியிருக்கிறது. இதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் நிலைமைக்கு வந்திருக்கிறது. நம்மை, நமது பையன் காப்பாற்றணும் என்று நினைக்கும் தன்மை, பையன், அவனது மாமனார்/மாமியாரை கூடவே வைத்துக்கொண்டால், 'இது என்ன..' என்று கேள்வி கேட்கும் மனப்பான்மையில் இருப்பது.

    நாம திருந்தாமல், வெறும்ன இருக்கும் நிலையைச் சொல்லி நகைத்துக்கொள்ளலாம். அவ்ளோதான்.

    ReplyDelete

  5. நம்முடையது சிக்கனமான மனநிலை. அவ்ளோதான். வெளிநாட்டில், யாரும் யாருக்குமே சொந்தச் செலவில் ஒரு காபிகூட வாங்கித்தர மாட்டார்கள். There is no free lunch என்பது அவங்களோட கலாச்சாரம் (even with their own kids, after they become 16+)நான் இந்திய மனப்பான்மையினை எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
  6. நம்முடைய இந்த மனோநிலையினால் தான் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாவால் சமாளிக்க முடிந்தது/முடிகிறது. வெளிநாட்டில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பார்கள். இப்போ இங்கேயும் வங்கிகளில்/வீடுகட்ட/மற்றத் தனிப்பட்ட கடன்களுக்கு எனத் தொலைபேசி அழைப்பின் மூலம் பிடுங்கி எடுக்கின்றனர். இது வெளிநாட்டைப் பார்த்து வந்த ஒரு விஷயம். இதை நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பணம் செர்த்து வீடு வாங்கியவர்கள் யார் சிக்கனம் வேண்டியதுதான் அதற்காக இப்படியா

      Delete
  7. நம் குறைகளைச் சொல்லும்போது ரசிக்காதுதான் வருகைக்குநன்றி சார்

    ReplyDelete