திருமணம் போகும் போக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் போகும் போக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மார்ச், 2018

திருமணம் லாட்டரியாகிறது


                 திருமணம்   லாட்டரியாகிறது
                 -----------------------------------------------

திருமணம்பற்றிய கருத்துகள் சில பதிவுகளில் காண்கிறேன் பல வகை திருமணங்களுக்குச்சென்று வந்திருக்கிறேன் அவை பற்றி எழுதியுமிருக்கிறேன்  ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதுபற்றி கில்லர்ஜியும் அண்மையில் எழுதி இருந்தார்  இது பற்றி அலசும் முன்   பண்டை காலத்தில் சங்க இலக்கியம் தொல்காப்பியத்தில் கூறி இருப்பது இப்போது நினைவு கொள்ளத்தக்கது

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில்ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆனல் இந்தக்காலத்தில் பெண்கள் படித்து வேலைக்குப் போகிறார்கள் ஃபைனான்ஷியல் சுதந்திரம் அடைந்து விட்டதாக எண்ணுகிறார்கள் திருமணத்தில் அவர்களது ஒப்பினியனும் இருக்க வேண்டும்  என்று நினைக்கிறார்கள் நல்லது/ ஆனால் அது சில நேரங்களில் அத்து மீறி போவதையே இப்பதிவில் சொல்ல வருகிறேன்  இப்போதெல்லாம்  திருமணம் ஒரு லாட்டரி யாகவே இருக்கிறது

ஒரு சில பதிவுகளில் மணப் பெண்கிடைப்பதே அரிதாகக் கூறுகிறார்கள் ஒருவனுக்கு மணம்பேசும்  வயது வந்து விட்டால்  அவனுக்கான பெண் எங்கோ பிறந்திருக்கவேண்டும்
நானறிந்த சில சம்பவங்கள் திருமணமென்பதையே கேலிக் கூத்தாக்கி விட்டதைக் காட்டுகிறது

என் நண்பரொருவர் அவரது மகனுக்குக் கல்யாணம்  என்று பத்திரிக்கை கொடுத்திருந்தார்  ஆனால் என்னால் போக முடியவில்லை  பையன் படித்து அமெரிக்காவில் வேலையில் இருந்தான் வழக்கப்படி பெண் பார்த்து சம்மதம்கூறி இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டபடி மணம்  நிச்சயமாயிற்று  திருமண நாளுக்கு முந்தைய தினம்  பெண் வீட்டை விட்டு ஓடிப் போயிருந்தாள் எல்லோருக்கும் வருத்தமும்  அவமானமும் நல்ல வேளைநான்  அந்தத் திருமணத்துக்குச்செல்ல வில்லை
இன்னொரு திருமணத்தில் திருமணம்முடிந்து  பெண் கணவனுடன் அமெரிக்க சென்றாள் ஆனால் அமெரிக்காவில் அவளது காதலன் வந்திருந்து அவளைக்   கூட்டிக் கொண்டுபோய் விட்டான்  இந்த திருமணம்  அவளுக்கு வீசா பெற்றுக்கொடுத்ததுதான்பலன் அதற்காகவே அந்தத் திருமணம் என்றாளாம்   

அண்மையில் ஒரு கல்யாணம் நடந்தது மணமகன்  ஏகப்பட்டஎதிர்பார்ப்புகளுடன்  மனை வியுடன் குடித்தனம் செய்ய ஒரு மூன்றுபடுக்கயறையுடன் கூடிய வீடு வாங்கி இருந்தான்  அவளுடன்சில நாட்கள் குடித்தனமும் நடத்தினான்   ஒரு நாள் அவன்  மனைவி  ஒரு கடிதம் எழுதி வைத்து அவள் கொண்டுவந்திருந்த் நகைகளைக் கேட்டு வந்தாள் அவள் ஏற்கனவே ஒருவனுடன் காதலில் இருந்ததாகவும் அங்கே செல்லப் போவதுமாய்க் கூறி இருந்தாள்  பெண்ணின் தாய்க்கு இந்தவிஷயம்முன்பேதெரியுமாம்  பையனின் கல்யாணக் கனவுகள் தகர்ந்தது

இன்னொரு திருமணம்  வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது  கல்யாணத்துக்கு முன்பே மணப் பெண்ணும்பையனும்  நன்கு பேசிப்பழகி இருக்கிறார்கள் திருமணம் முடிந்த சிலநாட்களிலேயே பெண் விவாகரத்து கோரி இருந்தாள்  கணவனுக்கு மனநிலை சரி இல்லை என்று கூறிவிவாக ரத்து கேட்டாள் இத்தனைக்கும்  அவனுடன் திருமணத்துக்கு முன்பே பேசிப்பழகி இருந்தாள் சிலமாத காத்திருப்புக்குப்பின்  விவாகம் ரத்தானது அந்தமணமகன் இப்போது இன்னொருபெண்ணை மணமுடித்து அமெரிக்காவில் வேலையில்  இருக்கிறான்
 இன்னும்  எத்தனையோ திருமணங்கள் நினைவுக்கு வருகிறது
இதையெல்லாம் பார்க்கும்போது இப்போதைய திருமணங்கள் ஒரு லாட்டரி என்றே நினைக்கத் தோன்றுகிறது
.