புதன், 6 நவம்பர், 2019

பாடல் வரிகளில் பொருட்குற்றம்





                                             பாடல் வரிகளில் பொருட் குற்றம்
                                             ----------------------------------------------------
-சில ஆண்டுகளுக்கு முன்  வாழ்வியலில் சினிமா பாடல்கள் என் று ஒரு பதிவு எழுதிஇருந்தேன்   அதில் நம்வாழ்க்கை இயல்பில் சேரும் வண்ணம்   பல சினிமா பாடல்களிருப்பதைக் காட்ட  பல பாடல்வரிகளைத் தொகுத்து இருந்தேன்
அதில் ஒன்றுதான் பூமுடிப்பாள்என்னும்பாட்டு  அதற்கு பின்னூட்டமாக  டோண்டு ராகவன் கீகண்டவாறு எழுதி இருந்தார் 
dondu(#11168674346665545885)July 30, 2012 at 8:46 PM

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி இப்பாடலில் வரும் பொருட்குற்றம் பற்றி அறிய இங்கே செலவும், http://dondu.blogspot.com/2012/07/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாடல்கள் பல கேட்கிறோம்  அவற்றில் ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை  ஆனல் மறைந்த ராகவனின் பின்னூட்டம்  என் எண்ணத்தையே மாற்றிவிட்டது  பதிவர்களிலும் நக்கீரர்கள் இருப்பது தெரிந்தது
 பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....
P













ஞாயிறு, 3 நவம்பர், 2019

முதியோரின் நினைவுகள்


                                            முதியோர்  நினைவுகள்
                                          ----------------------------------------

முன்பே நான் எழுதி இருக்கிறேன் எங்கள் வீடு ஒரு முதியோர் இல்லம் என்றும்   அதன் வாசிகள் நானும்  என்மனைவியும் என்று.  எங்களாசி வேண்டி பலரும்  வருவார்கள் ஆனாலும்  வரும்போது  கைக்குழந்தைகளைக்  கொண்டு வருவார்கள் என்வீட்டில்  வாடகைகுஇருந்தவர்  அவரதுஅவரது ஐந்து நாள்குழந்தையை என்னிடம்கொடுத்து ஆசி வேண்டினார் என்  மனைவியின்  தம்பி தன்மகள் இரட்டை குழந்தைகளை பெற்றபோது நானுமென் மனைவியும் சென்று பார்த்து வந்தோம்ஆசி வழங்கினோம் என்று சொல்லத்தேவை இல்லை  என் வீட்டில் பணி புரிபவரின்மகனும் தன் குழந்தையைஎன்வீட்டுக்கு கொண்டு வந்து  ஆசி வேண்டினான் பொதுவாக ஆசி என்றால் என்ன  எங்கள்வயதை அவர்களுக்குத் தர ஆசைதான்
என்மைத்துனன்  அவனுக்குஇரட்டைக் குழந்தைகள் பேரன் பேத்தியாக வந்தபோது  கர்ப்பரட்சகாம்பிகா  கோவில்லுக்குச்சென்று பிரார்த்தனை செய்தான் அவன் எங்களுடன்  தங்கி திருச்சியில் அவன் படிப்பை முடித்தவன்
 இப்போது 65 வயதாகிறது  அவனுக்கும் பல நினைவுகள் 
நாங்கள் ஒவ்வொரு  ஆண்டும் சிதம்பரம்  வைத்தீஸ்வரன் கோவில் திருச்சி என்றுபோய்க் கொண்டிருந்தவர்களே  இப்போது ஆயிற்று ஐந்து ஆண்டுகள் பயணப்பட்டு இருந்தால்  என்ன மைத்துனன் அனுப்பி இருந்த சில புகைப்படங்கள்நினைவுகளைக் கிளறி விட்டது   
அவன் சிறுவனாக வீட்டுக்கு தேவையான  பலபணிகளைச் செய்திருக்கிறான்  அண்மையில் திருச்சி சென்றிருந்தபோதுஅவனது நினவுகளை மீட்டெடுக்கும்விதமாகசில படங்களை அனுப்பி இருந்தான் அதனூடே என் நினைவுகளும் 
முதியோர் இல்ல வாசிகள்

 
ஆச் வேண்டி 
சமயபுரம்மராமத்து வேலைகள்
சமயபுரம் இன்னொரு வியூ 
கர்ப்ப ரட்சகாம்பிகா கோவில் 
திருவெறும்பூர் மலை 
மலை கோவில் ஒரு காட்சி 
மலைக் கோட்டை வாசல் 
அப்பாய் மளிகை  காந்தி மார்க்கெட்டில் இருக்கும் இக்கடையில் இருந்தே மளிகை சாமான்கள் வாங்குவான்  சிறு பையனான  இவன்   கால்சட்டையில் பணம் பறிபோகாமல்  இருக் க  ஊசியால்  நிஜாரில் குத்தி அனுப்புவாள்  என் மனைவி   
                                                                          கொள்ளிடம்பிரிட்ஜ்
                           கல்லணை  ஒருகாட்சி 
கரிகாலன்
அகஸ்தியர் கல்லணை 

ஒன்று சொல்ல மறந்து விட்டேனே என் மைத்துனன்  திருச்சியில் இருந்து பத்மா  காஃபி தூள் வாங்கி வந்திருந்தான் அவனது நினைவுகளில்  அதுவுமொன்று   




     


வெள்ளி, 1 நவம்பர், 2019

பாலித் தீவிலொரு தேன்நிலவு


                              பாலித் தீவிலொரு  தே நிலவு
                               --------------------------------------------------

  திருமணம் முடிந்தபின் தேநிலவுக்குச் சென்றதுண்டா
அப்படியென்றால் …
பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்  தேனிலவு  செல்வது பற்றியே தெரியாது ஆனால் பார்த்தாயா உன் பேரன்  திருமணத்துக்குப்பின்  தேநிலவுக்குகோவா சென்றான் முதல் ஆண்டு நிறையும்போது மறுபடியும் சென்றான்  ஆனால் இம்முறை ஒரு அயல் நாட்டுக்கு இந்தோனேஷிய பாலித் தீவுக்கு அவ சில அரிய செய்திகளைச் சொன்னான் இந்தியாவைவிட பாலியில் இந்துமதம் அதிகம் அனுஷ்டிக்கபடுவதாகவும் அங்கு இருக்கும் இந்துக்கள்  ந்ம்மைப் போன்ற இந்துக்களை விட அதிகமாகவே இந்துக்களாக  இருக்கிறார்கள்  அவர்கள் கோவிலுக்கு நாம் செல்ல அனுமதி கிடைப்பதே கஷ்டம் என்றும்  சொன்னான்  அங்கு  இருக்கும் ஒரு வகைகாப்பி பற்றியும் சொன்னான் அவன்  சொன்னதில் இருந்து ----  பாலி  உள்ளிட்ட இந்தோனேசியாவின் பல இடங்களிலும் ஒரு புது வகை காபி தயாரிக்கப்படுகிறது. அதன் சுவை பற்றிச் சொல்வதற்கு முன்பாக அக்காபி தயாரிக்கப்படும் சுவையான (!) கதையைச் சொல்ல வேண்டும். பாலியில்லுவாக் காபிதோட்டம்  . அங்குள்ள காபி பெர்ரிகளை புனுகு பூனை வகையைச் சார்ந்த மரநாய்கள் சாப்பிட்டுவிட்டு, அவை கழிக்கிற மலத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளிலிருந்து தயாராவதுதான்லுவாக் காபி’.
மரநாய் தேர்ந்தெடுக்கும் காபி பெர்ரிகள் விசேஷமானவை என்றும் அவை பூனையின்

குடலுக்குள் சென்று வெளி வருவதால் அவற்றுக்கு ஒரு புதிய பதம் கிடைக்கிறது

என்றும் காபி தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். பூனையின் கழிவிலிருந்து பெறப்படும்

காபிக் கொட்டைகளை வெந்நீரில் சுத்தமாகக் கழுவி எடுத்து அவற்றின் தோலை

உரித்தெடுத்த பிறகு வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். பின்னர் உரலில் போட்டுப்

பொடிசெய்து காபியாக விற்பனை செய்கிறார்கள் அங்கு இள நீர்க் காய்க

 பெரிதாக இருக்கின்றன  சிலபுகைப்படங்க்சள் இன்னும் சேதிகள்  சொல்லலாம்


பாலியில் என் பேத்தி மருமகள் 
இளநீர்க்காய்கள்
போட் ரைட்
பூல்சைட் பிரேக்ஃபாஸ்ட்


நீருக்கடியில் நடை 

                                                 தங்கிய இடம் /அறை