திங்கள், 28 டிசம்பர், 2020

பழைய கள் புது மொந்தையில்

பழைய கள் புது மொந்தையில்

அது என்னவோ தெரியவில்லைமுன்பெல்லாம் பெண்கள்பற்றி நிறையவே எழுதி வந்தேன் இப்போது எதை எழுதலாம் என்றால் முன்பு எழுதியதே இன்று  ரெலெவண்ட் ஆக இருப்பது [போல் இருக்கிறது ஆகவே அதுவே  மீள்பதிவாக

 

பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?

 

 

 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;

கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,

ஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.

எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்

பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்

தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.

 

பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,

ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.

அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்

படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..

திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..

மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது

பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்

போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.

ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்

தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்

அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்

எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்

காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை

அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

 

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்

அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.

கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.

அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.

அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.

 

உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.

ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்

பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.

ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;

இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்

பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.

தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்

படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது

இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்

எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம்பரோல்.”

                                 :      .               .                                  .                                    

            

 

 

  
 
 


    


சனி, 26 டிசம்பர், 2020

ஒண்ணுமே புரியலெ

 

ஒண்ணுமே  புரியலெ


பிஎச் இ எல்லில் பணி புரிந்த போதுகணினியில் பட்டம் வாங்கு பவருக்கு கை டாக இருந்திருக்கிறேன்வலைத்தளம்  அமைத்து பத்தாண்டுகளாக இடுகைகள் எழுதி வருகிறேன் இருந்தாலும் இந்த டிஜிடல் உலகை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்னால் வெளியே எங்கும் செல்ல முடியததால் பிறர் உதவியை எப்போதும் நாட வேண்டி இருக்கிறது என்  மனைவிக்கு திருமண நாளில் ஒரு TAB

வாங்கிகொடுக்க என் மகன்  உதவி நாடினேன் அமேசானில் ஆர்டர் செய்தான் ஆனால் வரும்  பொருள்சரியாக இல்லாவிட்டால் அதை சரி செய்யவோ  பழுதுபார்க்கவோ முடியாது அவர்கள் டெலிவரிசெய்வதோடு சரி மீதிஎதாவது  தேவை என்றால் நாம்தான் ஓட வேண்டும் வாங்கிய டாப்  இரண்டு நா;ளில்பல்லை காட்டியது வாரண்டி இருந்ததால்செல்வு இல்லாமல் ரிபெர் செய்பவரை தேட வேண்டி வந்தது சொல்ல மறந்து  விட்டேனே அதுசீனத்தயாரிப்பு லெனோவா டாப் என்மகன் ஓடியாடி அதை பழுது பார்ப்பவரிடமிருந்து வாங்கி வந்துவிட்டான் 15 நாட்களுக்கு மேலாகி விட்டது எனக்காவது என் மகன்  ஓடியாட இருந்தான்எனக்கு இந்தவங்கியில்  பணபரிவர்தனை புரிவ்தில்லை இத்தனை வயதாகி ஓரளவுப் படித்திருக்கும் எனக்கே இப்படி என்றால் ஒரேயடியாக எல்லா பணபரிவர்தனைகளும் டிஜிடல்ல் என்றால் எங்கோ இடிப்பது போல் இல்லையா அரசு கோடிக்கணக்கில் ஒதுக்கீடுசெய்யும் பணம் எத்தனை பேரின் புறங்ககளில்வழிகிறதோலஞ்சம் ஒழியு,மா

ஒண்ணுமே புரியலை லஞ்சத்தை ஒழிக்கமுடியுமா   

டிஜிடல் பரிவர்த்தனை துணைபோகவில்லையா பல விஷ யங் கள்  யூ ஹவ் டு ரீட் பிட்வீன் த லைன்ஸ்
 
 


    

 

 

 

வியாழன், 24 டிசம்பர், 2020

ஹிந்து மதம்

நான் ஒரு ஹிந்து 


 என்னால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்  எழுத முடிகிற அளவுக்கு கிடைக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறதா.? உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம். என் எண்ணங்களுக்குத் துணை போவதால் இந்தப் பதிவு பகிர்வு

ஒரு பயணத்தில்  அயல் நாட்டவர் ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது அறிமுகத்துக்குபின் நடந்த சம்பஷணை தொகுப்பு உங்கள் நம்பிக்கை எது

புரியவில்லை

உங்கள்  மதம்  எது ரிலிஜியன்எது  இஸ்லாமா கிருத்துவமா

 (ஒரு சராசரி மேற்கத்தியருக்கு தெரிந்த மதம்இஸ்லாமும்  கிருத்துவமும்தான்)

அப்படியயானால்  நீங்கள்  யார்

நனொரு ஹிந்துஒரு ஹிந்து தாய்க்கும்ஒரு ஹிந்து தந்தைக்கும் பிறந்ததால் பிறப்பாலேயே நானொரு ஹிந்து உங்கள் மதகுரு யார்

மதகுரு யார்

மத குரு என்று யாரும்  கிடையாது

உங்கள் புனித நூல் எது

எங்களுக்கு புனித நூல்  என்று ஏதும்கிடையாது நூற்றுக்கணக்கான வேதாந்த எண்ணங்களும் எழுத்துக்களும் அடங்கிய நூல்கள் ஏராளம் உண்டு

உங்கள் கடவுள்தான் யார் என்றாவது சொல்லுங்களேன்.

 

“ என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள். 

” கிருத்தவருக்கு ஏசுவும், இஸ்லாமியருக்கு அல்லாவும் இருப்பதுபோல் உங்களுக்கு என்று கடவுள் கிடையாதா.?

 

நான் ஒரு சில வினாடிகள் சிந்தித்தேன். கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒரு கடவுள் ( ஆண் ) இந்த உலகை சிருஷ்டித்ததாகவும் அவர் இவ்வுலகில் வாழும் மனிதர்கள்பால் அக்கறை கொண்டுள்ளவர் என்னும் போதனையில் வளர்ந்தவர்கள்.ஹிந்துமதம் குறித்து அறியாதவர்களுக்கு ஒரு மதகுரு, ஒரு புனித நூல், ஒரு கடவுள் என்னும் கோட்பாடு தவிர மற்றவை புரிந்து கொள்ள, முடியாதது தெரியாதது.

 நான்  விளக்க முயன்றேன்.ஒருவன் ஒரு கடவுளை நம்புபவனாக, ஹிந்துவாக இருக்கலாம். பல கடவுள்களை நம்புபவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளையே நம்பாதவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம்

 

இந்தமாதிரியான எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத ஒரு மதம் மாற்றாரின் தாக்குதலைதாங்கி இத்தனை வருடங்கள் இருக்க முடியுமா என்னும் வியப்பு அவர் முகத்தில் தெரிந்தது


“ வித்தியாசமாகவும் இண்டெரெஸ்டிங் ஆகவும் இருக்கிறது நீங்கள் பக்தி உள்ளவரா.?

 

நான் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்வதில்லை. எந்த வழிபாட்டு முறையையும் செய்வதில்லை. சின்ன வயதில் செய்திருக்கிறேன்.இப்போது  சில நேரங்களில் செய்யும்போதும் விரும்பிச் செய்கிறேன்.மகிழ்ச்சியாக இருக்கும்.

 

“ விரும்பிச் செய்கிறீர்களா.? கடவுளிடம் உங்களுக்கு பயம் இல்லையா.?

 

“ கடவுள் ஒரு நண்பர். அவரிடம் பயம் ஒன்றுமில்லை. மேலும் இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாரும் எப்போதும் கட்டாயப் படுத்துவதில்லை.“


சிறிது நேர யோசனைக்குப் பிறகு
 ” மதம் மாற வேண்டும் என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

 

” நான் ஏன் மாற வேண்டும்.? எனக்கு சில சடங்குகளும் கோட்பாடுகளும் உடன் பாடில்லை என்றாலும் என்னை யாரும் மத மாற்றம் செய்ய முடியாது. ஹிந்துவாக இருப்பதால் எனக்கு சுதந்திரமாக சிந்திக்கவும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகவும் முடியும். எந்தக் கட்டாயத்தின் பேரிலும் நான் ஹிந்துவாக இல்லை. விரும்பியே இருக்கிறேன்.

 

நான் அவருக்கு விளக்கினேன். ஹிந்துயிஸம் என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை நெறியும் முறையும் என்று. கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் போல் எந்த ஒரு தனி மனிதராலும் தோற்றுவிக்கப் படவில்லை. எந்த அமைப்போ குழுவோ சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில்லை

 

“ அப்படியானால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.?


“ நான் அப்படிச் சொல்லவில்லை. ஒரு தெய்விக சக்தியை மறுத்து ஒதுக்கவும் இல்லை. எங்கள் நூல்கள்,
 ஸ்ருதிக்களும், ஸ்மிருதிக்களும், வேதங்களும், கீதையும் உபநிஷத்துக்களும் கடவுள் இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம் என்றே கூறுகின்றன. ஆனால் நாங்கள் எங்கும் நிறைந்த, சர்வ சக்தி மிகுந்த அந்த பரப் பிரும்மத்தை இந்த பிரும்மாண்டத்தை சிருஷ்டி செய்தவராக வணங்குகிறோம்.

 

“ நீங்கள் ஏன் ஒரு தனிப்பட்ட கடவுளை வணங்கக் கூடாது.?

” எங்களுக்கு கடவுள் என்பது ஒரு கோட்பாடு. நம்பிக்கை. விவரிக்க இயலாத எங்கும் விரவி இருக்கும் அரூபம். ஒரு குறிப்பிட்ட கடவுளின் பின் மறைந்து அவரை நம்பாவிட்டால் தண்டனைஎன்றெல்லாம் பயமுறுத்தி அவரை வணங்க வைக்க அவர் ஒன்றும் கொடுங்கோலர் இல்லை. பயத்தையும் மரியாதையையும் திணிப்பவர் அல்ல. ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களை ஏமாற்றி , மூட நம்பிக்கைகளை வளர்த்து ,மதம் குறித்த சிந்தனைகளையே தடம் மாறச் செய்பவர்களும் அவர்கள்போதனையில் மயங்கி ஏமாறுபவர்களும் இருக்கலாம். ஆனால் வேதாந்த ஹிந்துமதம் இவற்றை எல்லாம் மறுதளிக்கிறது.

 

“ நல்லது கடவுள் இருக்கலாம் என்று நம்பி வழிபடுகிறீர்கள். வேண்ட்வும் 

.உங்கள் வேண்டுதல்தான் என்ன.?

 

” லோக சமஸ்த சுகினோ பவந்து. ஓம் ஷாந்தி ஷாந்தி.”( அமைதியுடன் வாழ்க வையகம்.)

 

 வியப்பாயிருக்கிறது. இந்த வேண்டுதலின் பொருள் என்ன. ?

 

இந்த உலகும் அதில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்

எங்கும் அமைதி நிலவட்டும்

 

இந்த மதம் பற்றிய விஷயங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது. ஜனநாயக முறையில் இருக்கிறது.பரந்த விசாலமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

 

உண்மையில் ஹிந்துயிசம் என்பது வேதங்களிலும் பகவத் கீதை போன்ற நூல்களிலும் வேர் விட்டுக் கிளர்ந்த ஒரு தனி மனிதனின் மதம்..அவனது வாழ்வியலுக்கும், எண்ண ஓட்டத்துக்கும் சித்தாந்தங்களுக்கும் ஈடு கொடுத்து அவன் விரும்பும் பாதையில் அவனுடைய கடவுளை அடைய வழி வகுக்கும் மிக எளிமையான மதம்

 

“ ஒருவன் ஹிந்து மதத்துக்கு மாறுவது எப்படி.?

“ யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின் கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம் விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது. ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி

” எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனையும் அவனது சிருஷ்டியையும் நேசிப்பதேஅவனைத் தேடும் முயற்சியின் முதல் படி. இசவஸ்யம் இதம் ஸர்வம் ( ISAVASYAM  IDAM  SARVAM ) 

எங்கும் நிறைந்திருக்கும் அவனை எதிலிருந்தும் பிரித்து அறிய முடியாது. உயிருள்ள மற்றும் ஜடப் பொருளை கடவுளாக மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது ஹிந்துயிசம் .அது சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது. வாழ்வின் நியதிகளைக் கடைபிடிப்பதில் அடங்கி இருக்கிறது. அவனவனுக்கு உண்மையாக இருப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.ஹிந்துயிசத்தில் கருத்துக்களுக்கு உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரமில்லை. எல்லோருக்கும் பொதுவானது. ஹிந்துக்கள் ஒரு ஆண்டவனை பல உருவங்களில் பல நிலைகளில் வழிபடுகிறார்கள் அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.

எம்மதமும் சம்மதமே என்றே முன்னோர்கள் அறிவிறுத்தினர். ஆனால் சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக  மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது.



நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.

யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன். 

ஹிந்து மதம்பற்றிய எண்ணங்கள் பதிவாகிறது