விபத்தின் விளைவு --ஒரு கவிதை
கண்ட கண்ட மனிதரெல்லாம்
வளைவும் நெளிவும் கண்டென்னிடம்
அண்ட வொண்ணா இயல்பினன் எனத்
தொலைதூரம் சென்றும் எண்ணுவர்
அற்றைத்திங்கள் அன்றொருநாள்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ
சிந்தையில் தோன்றாமலே சிந்திய வித்து நான்
விந்தை உலகில் விளைந்த விபத்தேயன்றோ
தோன்றிற் புகழோடு தோன்றுக -- என்றான் வள்ளுவன்
தோன்றலும் தோன்றாமையும் நம் செயலல --அறிந்திலனோ அவன்?
ஏற்ற தாழ்வு கண்டு எரியும் மனம்
மாற்று வழிகளை விழையும் உள்ளம்
எண்ணியதாங்கே செயல்படுத்த இயலாமை
சொல்லில் செயலில் எழுத்தில் எழும் ஆற்றாமை
எண்ணி எண்ணி என் குறைகள் ஏனோ கூறுவீர்
மண்ணில் யான் செல்லும் வழியும் நேர்வழியேயாம்
மற்றவ்வழியை மாற்றோர் நோக்கிடும்
விழியின் வளைவே விளையும் பிழையெலாம்
எனைப் பொல்லான் எனச்சொன்னாலும் என்ன
நல்லான் எனச்சொன்னாலும் என்ன
சொல்லில் வசைகள் சொன்னாலும் என்ன
என்றும் எவரும் நலம் பெற வேண்டும்
என்றே எண்ணும் என் மனமே .
உங்கள் தமிழ் மிக ஆழமாய் மிக மிக அழகாய் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்
ReplyDelete////அற்றைத்திங்கள் அன்றொருநாள்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ
சிந்தையில் தோன்றாமலே சிந்திய வித்து நான்
//
ரொம்ப ரசித்தேன்
paaraattukkal en ezhuththil maelum merugootra uthavum enru nambukiraen. nanri.
ReplyDeletepaaraattukal en ezhuththil maelum merugootra uthavum enru nambugiraen nanri
ReplyDeleteAppa, I wish I studied Tamil as my second knowledge in school. Your tamil is too rich like you and very thought provocative. I liked reading this (though I could not understand the meaning in full) I envy you paa.....
ReplyDeletemano
கவிதையும்,தங்கள் கதைகளும்
ReplyDeleteஅருமையாய் உள்ளன.என் மனம்
நிறைந்த பாராட்டுக்கள்.
அன்புடன்,
காளிதாசன்
thank you sri kalidhas.
ReplyDelete// தோன்றிற் புகழோடு தோன்றுக -- என்றான் வள்ளுவன்
ReplyDeleteதோன்றலும் தோன்றாமையும் நம் செயலல --அறிந்திலனோ அவன்? //
எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வியைக் கவிதை வரிகளாய்த் தந்தீர்! நான் ஏன் பிறந்தேன்?
ReplyDeleteஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ சிந்தையில் தோன்றாமலே சிந்திய வித்து நான்
ஆஹா எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள்
அருமை ஐயா.
ReplyDelete@ கில்லர்ஜி
வாசித்துபாராட்டியதற்கு நன்றி ஐயா.