கவிதைத் தாகம்
--------------------------
நண்பரின் கவிதை ஒன்று படித்தேன்.
நிலத்தடி நீர் வேருக்குக் கீழே
வெகு ஆழம் போனது ,
கடல் நீர் கன தூரம் கசிஞ்சு
ஊருக்குள் வந்தது,
என்றெல்லாம் அங்கலாய்த்து
என்று தணியும் என் தாகம் என்று
ஏக்கத்தில் எழுதியிருந்தார்.
வானம் பொய்ப்பதும், நிலம்
வறண்டு வெடிப்பதும் ,
பயிர்கள் வாடுவதும்,
கடல் சீறுவதும்,
இயற்கையின் நியதி,
நாமென்ன செய்ய
நம்மால் தவிர்க்கப்பட முடியாதவை,
அனுபவிக்கப்பட்டே ஆகவேண்டும்,
என்றேன் நான்.
நாம் ஒருமுகப்பட்டு செயலாற்றினால்,
வானத்தையும் வளைக்கலாம்
என்றார் அவர்.
அவரது எழுத்தின் தாக்கமோ,
என் எண்ணத்தின் குறையோ,
வானம் பொத்துக்கொண்டு,
தமிழ் நாடே வெள்ளக் காடாக உள்ளது.
உணர்ந்ததை இன்னும் விளக்க
என்னால் இயலவில்லை,
எண்ணியதனைத்தையும் கவிதைக்குள்
முக்கியெடுக்கும் ஆற்றலுமில்லை.
நானென்ன,
வார்த்தைகளால் தவமியற்றி
வரங்கேட்கும் கவிச்சித்தனா....
பார்த்தவற்றை கவிதைக்குள்
பதுக்கி வைக்கும் பகல்திருடனா...
பாட்டை ஆளும் பாட்டாளியா..சிவகுமாரனா..!
ஊர்க்குருவி நானும் பறக்கிறேன் ,
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவே.
------------------------------------------------------------
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ..நாம் எல்லோருமே உயிர்த்து உயரே போக விரும்பும் ஊர்க் குருவிகள் தாங்க.பின்னூட்டும் தங்கள் வாழ்த்தாக எண்ணி மகிழ்கிறேன் ..
ReplyDeleteவாருங்கள் அய்யா சேர்ந்து பறப்போம் .வயோதிகம் என்பது வாழ்நாளின் சேமிப்பு. எடுத்து செலவழித்து இன்புற்றிருக்கலாமே, பாரதி சொன்னது போல் " இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என்று எண்ணிக்கொண்டு. நன்றி அய்யா.
ReplyDeleteI have a thought - perhaps if we could not experience "thirst", we would not have appreciated the gift of god called "water". What a selfish person is he who wanted us to experience his gift called "water". In short thannerai anubavika namaku thaagam endra anubavathai koduthaan andha aandavan. vayothigam enbathai anubavikaa vaazhkai endra anubavathai kodhuthaanoo !!!! (pls read anubavam as experience) - mano
ReplyDelete