Monday, May 23, 2011

இப்படியுமா.....? கதை அல்ல நிஜம்.

இப்படியுமா.....?  கதை அல்ல நிஜம்..
================================

       உறவுகள் பற்றியும், அதன் திரிபுகள்  பற்றியும் ,
       யார் யாரோ, என்னவெல்லாமோ எழுதி விட்டார்கள்.
       நானும் எழுதி இருக்கிறேன்.
 
உணர்வுகள் திரிந்து ஏற்படும் உறவுகள் -மனசாட்சி
துணையுடன் நியாயப்படுத்தப்படும் செயல்கள்,
நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
அலசி ஆராயும் மனோபாவங்கள் எல்லாம் மீற

        எண்ணத்தறியில்  ஏதேதோ எண்ணங்கள் 
       முன்னுக்குப்பின் முரணாய்  முற்றும்  கற்பனையாய் 
       சில சமயம் பாழாய் பழம் பொய்யாய்,பகற்கனவாய், 
       சிலநேரம் எதிர்கொள்ள வொண்ணா சீற்றத்துடன் 
       நம்பவே முடியாத நிகழ்வுகள் கண் முன்னே விரிகிறது.

        உள்ளத்து உணர்ச்சிகளுக்கு, வார்த்தைகளில்
       உயிரூட்டினால் உண்மையில் ஜொலிக்கும்
       நிஜங்களில் கற்பனை கலந்தால்  வீரியம் குறைந்து,
       உண்மை நிலை மங்கிப் போகாதோ.

இதுவும் அயல்தேசத்தில் நடந்த இந்தியக் கதை அல்ல,
நிஜம்.உணரப்பட வேண்டிய உண்மைகள் இருப்பதால்
பகிர்ந்து  கொள்கிறேன்.

       மணம் முடித்து மனைவி குழந்தையுடன்
       வசிக்கும் தன் மகனைப் பார்க்கச் சென்ற
       பெரியவர் அவனைச் சிறையில் சந்தித்தார்.
       மாமனாரைப் பார்க்க மருமகள் விரும்பவில்லை.
       எங்களுக்குள் சிறு பிணக்கம், பெரிது படுத்த
       வேண்டாம், வெளியில் வருவேன் சடுதியில்
       கவலை வேண்டாம் என்று உறுதி அளித்த
       மகன் சொல் கேட்டு ஊர் திரும்பி வீடு
       சேரும் முன் வந்தது மகன் தன்னைத்தானே
       தூக்கிலிட்டு  மாய்த்துக் கொண்டான் என்ற
       பேரிடிச் செய்திஒன்று.

மறுபடியும் பறந்து சென்று, விசாரித்து அறிந்தால்
கிடைத்தது அதனினும் பெரிய பேரிடிச் செய்தி.

        பெற்ற மகளிடம் வன்புணர்ச்சி கொண்டான் கணவன்
        என்ற மனைவியின் வாக்குமூலம் பெற்றுத்தர
        இருக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன்
        தேர்ந்தெடுத்த வழியே தற்கொலை.
-----------------------------------------------------------------------
      

           ( வக்கிர உணர்வுகளின் எல்லை மீறிய வெளிப்பாடு 
                இப்படியுமா.. என்ற ஆதங்கத்தில் பகிர்ந்தது. )






..



,
      .


 
 





      


4 comments:

  1. கேட்கவே மிகவும் சங்கடமாக இருக்கிறது, ஐயா.

    தவறு செய்ததால் சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்துகொள்ள, அவர் மனைவி, குழந்தை, தகப்பனார் முதலிய நெருங்கிய சொந்தங்களுக்கு எவ்வளவு தலைகுனிவும், நெருடல்களும்.

    கடைசிவரை இந்த சங்கடமான சம்பவமே தினம் தினம் அவர்களை வாட்டி வதைக்குமே! என்ன சொல்வதென்றே சொல்லத்தெரியாமல் உள்ளது.

    பின்விளைவுகளைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படியா ஒருவன் கீழ்த்தரமாக நடந்து கொள்வான்?

    மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  2. ஒரு பெண்ணை பெற்ற தகப்பனாய் என்னால் இதை சகித்து கொள்ளவே முடியவில்லை , ஆனால் இது உண்மையான குற்றச்சாட்டு தானா அய்யா ??

    ReplyDelete
  3. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. It is a shocking news.

    ReplyDelete
  4. @கோபு சார்
    மனிதனின் வக்கிர உணர்வுகளின் உச்சம் என்றேஇதனைக் கூறலாம சில நேரங்களில் பத்திரிகைகளில் படிக்கும் செய்திகளைநம்பவே முடியாமல் இருக்கும்.ஆனால் உண்மை சில நேரங்களில் புனைவை விடக் கொடூரமாகத் தெரிகிறது.
    @ஏ.ஆர். ராஜகோபாலன்.
    நான் எந்தக் குற்ற்ச்சாட்டையும் வைக்கவில்லை. உண்மையில் நிகழ்ந்ததை எழுதினேன்
    @சித்ரா. YES, IT WAS REALLY SHOCKING WHEN I FIRST LEARNT IT.

    ReplyDelete