பரிகாரம்.
------------
சில நேரங்களில் ஆர்வக்கோளாரால் எதை எதையோ
எழுதி விடுகிறோம்(றேன்) பிறகு ஆர அமர ஆலோசித்தால்
அதை எழுதி இருக்கவேண்டாமோ என்று தோன்றுகிறது.
“இப்படியுமா” என்ற பதிவைத்தான் கூறுகிறேன். இதனால்
யாருக்கு என்ன லாபம். வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக்
காட்டியதால் என்ன பிரயோசனம்.? எழுதும் முன்பே என்
மனம் அலைக்கழிந்தது என் பதிவைப் பார்த்தாலேயே தெரியும்.
மேலும் டாக்டர் கந்தசாமியின் பதிவு படித்த பிறகு என் தவறு
மிகவும் உறைக்க ஆரம்பித்தது. அந்த பதிவினைப் படித்தவர்கள்
அதிகம். கருத்து பகிர்ந்தவர் வெகு குறைவு. இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது இனிமேல் இந்த மாதிரியான சென்சேஷனல்
பதிவுகள் எனக்கு உகந்ததல்ல என்பதுதான். அவசரப்பட்டு பதிவு
போட்டதற்கு வருந்துகிறேன். அதற்கு பரிகாரம் இந்தப் பதிவு.

தாங்கள் படித்ததாகச் சொல்லும் டாக்டர் கந்தசாமி அவர்களின் பதிவின் இணைப்பையும் தெரிவித்திருக்கலாமே, ஐயா.
ReplyDeleteமற்ற பதிவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையக்கூடுமே.
Dear GMB,
ReplyDeleteKindly excuse me if I have wounded your feelings. Such matters are not for us.
பரிகாரம் ????
ReplyDeleteஅதி காரம்.....
அன்புள்ள ஐயா..
ReplyDeleteநான் தொடர்ந்து வாசித்து வரும் பதிவுகளில் உங்களுடையதும் முக்கியமானது. எல்லாவற்றையும் வாசித்துவிடுவேன். ஆனாலும் சில பதிவுகளே வேறுபட்டும் சில விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றையே நானும் விவாதத்திற்கு எடுத்துக்கெர்ண்டு அதுபற்றிய கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். மற்றவை பொதுநிலையில் எல்லோருக்கும் பொதுவானவையாகவும் உடன் அதனதன் இலக்கைச் சென்று சேர்ந்துவிடும் என்பதாலும் அதுகுறித்து கருத்துரை தெரிவிப்பதில்லை. இன்னொன்றும் கூறவிழைகிறேன். என்னுடைய ஈர்ப்பிற்கு உட்பட்டதையே நான் வாசிக்கும்போது உணர்ந்து அதனால் ஏற்படும் விளைவுகளையே நான் எப்போதும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனவே எல்லாப் பதிவுகளுக்கும் கருத்துரை எழுதுவது என்பதிலிருந்து நான் சற்று விலகுகிறேன். அவ்வளவுதான் காரணம். இயல்பானது என்னவெனில் ஒருசிலரைப் பாதிக்கும் பதிவு வேறு சிலரை பாதிப்பதில்லை. இதுதான் காரணம். தொடர்ந்து நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
வேறு எண்ணம் இல்லை. அப்படியொரு எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
பரிகாரம் படித்தேன். எதற்குப் பரிகாரம்? இவ்வகைப் பதிவும் தேவைதான். தமிழ் நாட்டிலேயே செய்தித்தாள்களில் அவ்வப்போது இத்தகைய வக்கிரங்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. குழந்தை வளர்ப்பில் நாம் கவனமாக எடுத்துக் கையாளவேண்டிய செய்திகள் பல உள்ளன. அதுகுறித்து ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதவேண்டும். நம்முடைய காலம்போல தற்போது குழந்தைகளுக்கு மண்ணுடனான தொடர்பு என்பது விட்டுப்போயிற்று. அது பண்பாட்டுச் சிதைவின் தொடக்கம். இங்கிருந்து சரிசெய்யத் தொடங்கவேண்டும். அவ்வகையில் உங்கள் பதிவு வருங்காலத்திற்கு ஓர் எச்சரிக்கை எனும் நிலையில் அவசியத் தேவையானது. முழுக்கத் தெரிந்தே தவறு செய்பவர்கள் பரிகாரம் தேட தயாராக இல்லாதபோது உங்கள் பரிகாரம் தேவையற்றது. எழுதுங்கள் எதுவாயினும் உங்களைப் போன்றோரின் அனுபவர் வருங்காலத்தின் சேமிப்புக் கிடங்கின் பொக்கிஷம்.
அனுபவர் இல்லை அனுபவம் - திருத்தி வாசிக்கவும்.
ReplyDeleteஉங்கள் பரிகரம்பதிவு கண்டேன் பாராட்டுகள் உள்ளத்தில் உள்ளதை எழுதுவது ஒருவகையில் சிறப்பானதே ஏன் என்றால் முந்தைய பதிவர் கூறியது போல ஒருவரின் மன இயல்போல மற்றவர்க்கு இருப்பதில்லை எனவே தவறு என்பதும் எழுதியிருக்க கூடாதோ என எண்ணுவதும் பிழியனது என எண்ணுகிறேன்
ReplyDelete