Saturday, May 26, 2012

ஊரைக் காட்ட.... வேரைக் காட்ட....

தேரில் ஏறும் என் பேரன்.
 ஊரைக்காட்ட ..   .வேரைக்
காட்ட..தேரைக் காட்ட
--------------------------------------

பாலக்காட்டில் கல்பாத்தி கிராமத்தை பாரம்பரிய கிராமமாக ( HERITAGE VILLAGE) அறிவித்திருக்கிறார்கள். ரத்தத்தில் ஊறி நிற்கும் நம்பிக்கை வெளிப்பாடுகளின், அடையாளமாக கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன..பாரம்பரியமும் கலாச்சாரங்களும், உலகம் வளர்கிற வேகத்திலும் , தொழில் நுட்பங்கள் நம் வாழ்வில் ஊடுருவி இருக்கும் விதத்திலும்,பலியாகின்றனவோ எனும் சந்தேகம் எழுகிறது. ஒருவனது வேரும் ஊரும் பற்றிய குறைந்த பட்ச விஷயங்களாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் , எனக்கு எங்கள் கிராமத்திலிருந்து கோவில் கும்பாபிஷேகம்  குறித்த அழைப்பு வந்ததும் எழுந்தது. என்னைப் பற்றிய எந்த அடையாளமும் இப்போது எங்கள் கிராமத்தில் இல்லை. எப்படியோ என் விலாசம் பெற்று நேரிலும் அழைக்க வந்தது என் சிந்தனைகளைக் கிளறி விட்டது. நான் பத்து வயது பிராயத்தில் ஒரு வருடத்துக்கும் குறைவாகவே எங்கள் கிராமத்தில் என் தந்தை வழிப் பாட்டியுடன் இருந்திருக்கிறேன். அதன் பிறகு எங்கள் பூர்வீக வீடு விற்கப்பட்டு அந்த கிராமத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் ஆகிறது அறுபது வருடங்கள். சொல்லப் போனால் என் பெயரில் ஊரின் அடையாளமாக இருக்கும் எழுத்து (G ), என் பிள்ளைகளின் பெயரில் இப்போது இல்லை. THERE IS NO MOORING NOW.  அந்த என் செய்கை தவறோ என்று இப்போது தோன்றுகிறது.



எது எப்படி இருந்தாலும் என் பிள்ளைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் எங்கள் ஊர் பற்றியும் நான் அங்கு வாழ்ந்த கால நினைவுகள் குறித்தும் அவ்வப்போது கூறுவதுண்டு. ஊர்க் கோவில் கும்பாபிஷேக அழைப்பு வந்ததும், கோவிந்தராஜபுரம் “ என்ற தலைப்பில் ஒரு பதிவும் எழுதி இருந்தேன். இந்த அழைப்பை முகாந்திரமாகக் கொண்டு என் குடும்பத்தாருக்கு எங்கள் ஊரைக் காண்பிக்க முடிவு செய்தேன்.23-ம் தேதி கும்பாபிஷேகம் என்றிருந்ததால் , பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கும் சமயம் என்பதா 11-ம் தேதி நடந்த பூத்தேர்த் திருவிழாவிற்கு போயிருந்தோம். கூடவே என் மனைவியின் குலக் கோவிலான பரியாம்பத்த பகவதி “ கோவிலுக்கும், எங்கள் குலக் கோவிலான “ மணப்புளி பகவதி “ கோவிலுக்கும் குருவாயூர் கிருஷ்ணன் கோவில், மற்றும் திருச்சூர் வடக்கு நாதர் கோவில், திருவம்பாடிக் கோவில் என்றெல்லாம் சென்றிருந்தோம். கோவில் மட்டும் போனால் இளைய தலைமுறையினர் விரைவில் சோர்ந்து விடுகிறார்கள் என்பதால். குருவாயூரில்
யானைத் தோட்டத்துக்கும் சென்றிருந்தோம். சில புகைப் படங்கள் எடுத்திருந்தோம்.         




                     

பூத்தேர்.
   .      
         கல்பாத்திவிசுவநாதர் கோயில் கீழிருந்து
கல்பாத்தி கோயில் மேலிருந்து
 கல்பாத்தி புழை
தேரில் பெருமாள்
தேரில் என் பேரன்
எங்கள் பூர்வீக வீட்டில்
எங்கள் பூர்வீக வீட்டில் தற்போது வசிப்பவருடன்
எங்கள் பூர்விக வீட்டின் பின் புறத்தில்
பூர்வீக வீட்டின் பின் புறத்தில்
வீட்டின் உள்- மச்சுக்குச் செல்ல படி
யானைத் தாவளத்தில் பேரனுடன் தாத்தா. 
யானையைக் குளிப்பாட்ட உதவும் பேரன்
குளிக்கும் நீரே குடிக்கவும்
வெய்யிலுக்கு இதமாக...
எங்கு நோக்கினும் யானைகள்.
ஆங்காங்கே எங்கும் யானைகள்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் தேருக்கு எடுத்துச் செல்லும்போது

குருவாயூர் அருகே இருக்கும் புன்னத்தூர் கோட்ட என்னும் யானைத் தாவள்ம்..அங்கே 62-/ யானைகள் கட்டிக் காக்கப் படுகின்றன.ஆண் யானைகளில் தந்தங்கள் இல்லாத யானைகளை “மோழை” என்று கூறுகிறார்கள். அங்கே எடுத்த சில புகைப் படங்கள்..யானையைக் குளிப்பாட்டும் “பாப்பான்கள்” நன்றாக ஆங்கிலம் பேசி விள்க்குகிறார்கள்.

எங்கள் குலக் கோயில் என்று கூறப்படும் மணப்புளி பகவதி கோயிலுக்கும் சென்றிருந்தோம். என் மனைவியின் குலக் கோயிலுக்கும் சென்றிருந்தோம். மாலை இருட்டி விட்டதால் புகைப் படங்கள் எடுக்க முடிய வில்லை. “ பரியாம்பத்த பகவதி காவு “என்று பெயர்.

. .
மணப்புளி பகவதி கோயில் முன் மகனுடன்


பகவதி கோயில் முன் மருமகள் பேரக் குழந்தைகளுடன்

தேரைக் காட்டவும் ஊரைக்காட்டவும் வேரைக் காட்டவும் நான் மிகவும் விரும்பினேன். அவர்கள் வளர்ந்து என் வயது வரும்போது நினைவுகளில் அசை போடும் போது இந்த அனுபவங்கள் மனத்திரையில் வந்து அவர்களின் இதழ்கள் புன்னகையில் விரிவதை நான் இப்போது எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன்.

எங்கள் பூர்வீக வீட்டில் சில மாற்றங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். திற்ந்த திண்ணை கிரில் கம்பிகள் போட்டு காட்சியளிக்கிறது. திண்ணை அடுத்த ரேழியில் இருந்த பத்தாயம் மூடப் பட்டிருக்கிறது. பின் வரும் தாழ்வாரத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. திறந்த முற்றம் காணவில்லை. கூரை வேய்ந்திருக்கிறர்கள் திண்ணை, ரேழி, தாழ்வாரம் முற்றம் ,மச்சு என்னும் பெயர்கள் கேட்டே பல காலம் ஆயிற்று. இப்போது அங்கு வசிக்கும் திரு. வெங்கடேஸ்வரன் குடும்பத்தாருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------  
























  

18 comments:

  1. படங்களும் தகவல்களும் ரொம்ப நல்லா இருக்கு. அனுபவித்து சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. பாலக்காட்டில் ஒரு சின்ன கிராமம்.
    பெயர் மறந்து விட்டது. 'தாத..' என்று ஆரம்பிக்கும். சித்தூர் வட்டம். ஆறு ஊரின் முனையில் ஓடும். ஆற்றங்கரையில் சிவன் கோயில். நண்பரின் பிறந்த ஊர். ஊர் திருவிழா காண கூட்டிச் சென்றார். அந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மாலை ரோடின் குறுகிய பாதையில் குதிரைகளை ஓட்டி விளையாட்டு போல ஒரு கொண்டாட்டம்! 45 வருடங்களுக்கு முன்னால் போனது நிழலாக நினைவில் இருக்கிறது.

    உங்கள் பதிவும், படங்களும் ரொம்பவும் ஆத்மார்த்தமாக இருந்தன.
    வாழைத் தோட்டம் கேள்விப் பட்டிருக்கிறோம்; யானைத் தோட்டம் அதிசயம்! யானையும், தென்னையும் கேரளத்துச் செல்வம்! அதுவும், பசுமாட்டை கொட்டிலில் குளிப்பாட்டு வதைப் போலல்லவா, யானையை சுதந்திரமாக விட்டுக் குளிப்பாட்டுகிறார் கள்! வாவ்!..

    ReplyDelete
  3. தேரைக் காட்டவும் ஊரைக்காட்டவும் வேரைக் காட்டவும் நான் மிகவும் விரும்பினேன்.

    ஆத்மார்த்தமான இனிய மலரும் நினைவுகள் ...

    நிறைவான பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. பாலக்காட்டில் ஒரு சின்ன கிராமம்.
    பெயர் மறந்து விட்டது. 'தாத.?/

    தத்தமங்கலம் ????????

    ReplyDelete
  5. நாங்களும் உங்களுடன் உங்கள் பூர்வீகக் கிராமத்தைச்
    சுற்றி வந்தது போலிருந்தது
    படங்களுடன் பதிவு மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. பாலக்காட்டுக்கருகில் பதினெட்டு அக்ரஹாரங்களில் ,கல்பாத்தி , மிகவும் பிரசித்தம் ; நுரணி
    கிராமத்தில் எனது நண்பர் இருக்கிறார் ; அங்கு செல்ல நேரிடு ம்போதெல்லாம் கல்பாத்தி பார்க்காமல்
    திரும்பமாட்டேன் !" வாழ்க்கையில் , 'திரும்பிப்பார்க்கும் ' நிகழ்வுகள் எல்லாமே காவியமயமானவை " என்று
    லா.ச.ரா. கூறுவார்...

    தங்களுடைய பதிவுகள் பலவும் இந்த ரகத்தைச் சார்ந்தவையே .தவறாமல்படித்திக்கொண்டுதான் . இருக்கிறேன் ;
    ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன் ...
    மாலி

    ReplyDelete
  7. //ஊரைக்காட்ட .. .வேரைக்
    காட்ட..தேரைக் காட்ட//

    படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  8. ராஜி மேடம்! கரெக்ட்!

    அந்த ஊர் தத்தமங்கலம் தான்!

    அடடாவோ! எவ்வளவு நேரம் யோசிச்சேன், தெரியுமா?..

    நினைவூட்டலுக்கு ரொம்பவும் நன்றி.

    ReplyDelete
  9. # லக்ஷ்மி,
    @ ஜீவி,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ ரமணி.
    @ வி. மாலி.
    @ கோபு சார்
    உங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    கருத்துக்கும் மிக்க நன்றி. மாலி சார்
    உங்கள் பாராட்டு நெகிழ்ச்சியூட்டுகிறது.

    ReplyDelete
  10. எதுகைக்கப்பால் நெகிழ்ச்சி நிறைவாக இருக்கிறது.
    படங்கள் அருமை. தன்னுடைய வீட்டுக்குள் உங்களை அனுமதித்துப் புகைப்படம் எடுக்கவிட்டாரே? ஆச்சரியம். "பூர்வீக" மரியாதை இன்னும் சில இடங்களில் பராமரிப்பது மனதைத் தொட்டது.
    தாவளம் என்றால் என்ன? கட்டும் இடம்? open farm?
    ரசித்துப் படித்தேன். பூத்தேர் படம் கண்முன் நிற்கிறது.

    இராஜராஜேஸ்வரிக்குத் தெரியாத விஷயமே கிடையாது போலிருக்கிறது! அசத்துகிறார். நானா இருந்தா ஏதாவது தத்து பித்துனு சொல்லியிருப்பேன்.

    ReplyDelete
  11. @அப்பாதுரை,
    எதுகைக்கப்பால்....? புரியவில்லையே.!

    ReplyDelete
  12. //இராஜராஜேஸ்வரிக்குத் தெரியாத விஷயமே கிடையாது போலிருக்கிறது! அசத்துகிறார்.//

    அதே..அதே!..

    ReplyDelete
  13. படங்களின் மூலம் தங்கள் ஊருக்கு வரும் ஆவல் கூடி விட்டது . வெயிலுக்கு இதமாக சுற்றிலும் மரங்கள் குளுமையான பதிவு .

    ReplyDelete
  14. தத்தமங்கலம் -

    திருவிழாவுக்குச் சென்றிருக்கிறேன்..

    இனிய மலரும் நினைவுகள்,,

    ReplyDelete
  15. பிறந்த ஊரை குழந்தைகள், பேரகுழந்தைகளுக்கு காட்டுவது மனதுக்கு மகிழ்ச்சி. நாம் வளர்ந்த இடங்களை சுத்தி காட்டும் போது அவர்களுக்கு அதன் பெருமையை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
    உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
    மச்சுபடி அழகு.
    பூத்தேரில் பேரன் படம் அழகு.

    ReplyDelete
  16. Reminds me of the few days we had spent in Palakkad... (Noorani)..

    I had just typed in the comment and scrolled down and saw dad has commented already! Happy to know that he has "started" to leave "comments" :) ..!

    Photographs are beautiful! esp the elephant!

    ReplyDelete
  17. படங்கள் ஸூப்பர் ஐயா

    ReplyDelete
  18. அந்தக் கால கிராமத்துக்கும் இன்றைய கிராமத்துக்கும் நிறையவே மாற்றங்கள்

    ReplyDelete