Sunday, July 8, 2012

படித்தது பகிர்கிறேன்.


                                         படித்தது பகிர்கிறேன்.
                                         -----------------------------


இந்த முறை பதிவில் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் நாயகன் ஒருவன் உழைத்துக் கிடைத்த பணத்துடன்
ஆளரவமில்லா வீதி வழியே வந்து கொண்டிருக்க,
வழிப்பறிக் கொள்ளையன் கையில் பிஸ்டலுடன்
மடக்கி மிரட்டிப் பணம் கேட்டான்.

பயந்து மிரண்ட நம் நாயகன் பணம் பறி போயிற்று
என்று சொன்னால் மனைவி நம்ப மாட்டாள்.-உன்
துப்பாக்கியால் என் தொப்பியைச் சுடுஎன வேண்ட
தொப்பியை வீசி எறிந்து அதில் ஓட்டை இட்டான் அவன்.

ஒருவனை சமாளிக்க முடியாதவனா நீ, என்பாள் அவள்.
பலரிடம் சிக்கி பணம் பறிகொடுத்தவன் நான் என அவள் நம்ப
என் மேலங்கியில் பல ஓட்டைகளை உன் துப்பாக்கியால் உண்டாக்கு  
என்றே மேலும் அவன் வேண்ட பல துளைகளுக்குப் பிறகு
‘இவ்வளவு தான் இனி .துப்பாக்கியில் ரவைகள் இல்லை
என்று சலித்துக் கொண்ட கொள்ளையன் திரும்ப முனைய
‘இதற்குத்தானே காத்திருந்தேன்.;எடுத்த பணத்துடன் தொப்பி ,அங்கிக்கான
விலையும் மரியாதையாய் தந்துவிடு. இல்லையேல் என்னிடம்
அடிபட்டுச் சாவாய் ‘என்று கூறி எல்லாப் பணத்தையும் மீட்டான்.

கதையின் நீதி; என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே
         ------------------------------

ஒரு கல்லூரி மாணவன் விலங்கியல் பாடம் முடிக்க ஒரு ஆசிரியரை அணுகினான். ஒருவாரப் பயிற்சிக்குப் பின் அவர் ஒரு தேர்வு வைத்தார். பறவை இனங்களை அவற்றின் கால்கள் கண்டு அடையாளப் படுத்த வேண்டும். முடியைப் பிய்த்துக்கொண்ட மாணவன் நொடிக்கொரு முறை ஆத்திரத்தோடு ஆசிரியரை நோக்கினான்.அருகில் வந்த ஆசிரியர் ‘இளைஞனே , இன்னும் நீ ஏதும் செய்யவில்லை. உன் பெயரென்ன.? என்று கேட்டார்.மாணவன் தன் கால் சராயை மேல் தூக்கி தன் கால்களைக் காண்பித்து “ நீங்கள் சொல்லுங்கள் “ என்றான்.
             -------------------------------

Once there was a bus conductor who was rude to his passengers.
One day a beautiful young girl, of around 18 years,tried to board the bus, but he didn't stop the bus.Unfortunately the beautiful young girl came under the bus and died on the spot.
He was taken to the electrocution chamber. There was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. The conductor was strapped to the chair and high voltage current was given to him. But to everyone's amazement, he survived. The judge decided to set him free, and he returned to his profession.

After a few months, this time, a good looking middle aged woman tried to board the bus but the conductor didn't stop the bus The good looking middle aged woman came under the bus and died on the spot.
The judge took one look at the conductor and gave him capital punishment. The Bus conductor was taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. He was strapped to the chair and high voltage current was given to him. This time also, to everyone's amazement, he survived. The judge decided to set him free, and he returned to his profession.



A couple of months later, an elderly gentleman tried to board the bus.

This time the Bus conductor, remembering his earlier experiences, stopped the bus. Unfortunately the elderly gentleman slipped and died due to his injuries. The conductor was taken to the police station and then to the court, to the same judge. Though he hadn't done anything wrong, but considering his past record the judge decided to set an example and gave him capital punishment.

The Bus conductor was again taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. He was strapped to the chair and high voltage current was given to him.


This time he died instantly !!!!!!!!!!!

The question is why didn't he die on the first two occasions, but died instantly the third time??

Try to solve it yourselves. This is rather interesting and answer is perfectly logical. If necessary read the puzzle once again

During the first two times, the conductor was a bad conductor,;therefore the electricity didn’t pass through him. But during the third time he was a good conductor, so electricity freely passed through him and he died.!
                ------------------------------------------------















15 comments:

  1. நல்லாக் "கடி" க்கறீங்க, சார்.

    ReplyDelete
  2. The third one is very super Sir.
    I enjoyed its logic. Very Funny.

    ReplyDelete
  3. பகிர்வதற்காகப் படித்தால்...

    ReplyDelete
  4. என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”//

    புத்தி உள்ளவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு சான்று இக்கதை.

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்.
    நல்ல பகிர்வு சார்.

    ReplyDelete
  5. ஆஹா.... பிரமாதம். அனைத்திலும் கண்டக்டர் புதிர் வெகு ரசனை. காரணம் என்னவென்று யூகிக்க முடியவில்லை. விடை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”
    சிறப்பாக இருந்தது ஐயா.

    ReplyDelete
  7. சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்று புதிர் போட்டுச் சிந்திக்க வைத்து விட்டீர்கள் ஐயா. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  8. அன்புள்ள ஐயா..

    முதலில் சின்ன வருத்தமும். மெல்லிய கோபமும். கரந்தையைக் கடந்து என்னை தொலைபேசியில் அழைக்காமலும் என் வீட்டிற்கு வராமலும் போனதற்காக. இனி அப்படிச் செய்யாதீர்கள். வேண்டுகோள் இது.

    கதை அருமை.

    நடத்துநர் கதை நகைச்சுவை என்றாலும் அதற்குள் இறந்துபோன மூன்று உயிர்கள் பாவம்தானே ஐயா.

    ReplyDelete
  9. iam back

    http://tamilyaz.blogspot.com/2012/07/my-brothers-pain.html

    ReplyDelete
  10. அருமை அருமை
    மூன்று துணுக்குச் செய்திகளும்
    புதியதாகவும் அருமையாகவும் இருந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ”என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே”

    சிறப்பான சிந்தனைப் பகிர்வுக்ள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. @ டாக்டர் கந்த சாமி,
    வலிக்காத ‘கடி’ தானே ஐயா. வரவுக்கு நன்றி.
    @ தோழன் மபா. தமிழன் வீதி,
    @ கோபுசார்,
    @ ஜீவி / பகிர்வதற்காக படித்தால்/
    ஏமாற்றமாகி விட்டதா ஜீவி சார்.?
    @ கோமதி அரசு,
    @ கீதமஞ்சரி,
    @ சசிகலா,
    @ ஆதிரா
    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ ஹரணி கதையின் சம்பவங்களுக்கு பாவப் படும் உங்களுக்கு மிக இளகிய மனசு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
    @ ரியாஸ் அஹமது நீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி.
    @ ரமணி,
    @ இராஜராஜேஸ்வரி வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    @ மாதங்கி மாலி /Good one!:D /
    புரியவில்லையே...

    ReplyDelete
  13. தலைப்பை மாத்துங்க பாலு சார் “கடித்தது பகிர்கிறேன்”னு.

    Conductorனு ஆரம்பிச்சு முதல் தடவை தப்பிச்சவுடனேயே என் பையன் சின்னவன் சொல்லிட்டான் புதிரின் விடையை.

    ReplyDelete