சில பகிர்வுகள்.
---------------------
அண்மையில்
திருமணம் ஒன்றுக்குச் சென்று வந்தேன். சாதாரணமகவே திருமண விருந்துகளுக்குச் சென்றால்
என்னால் பசியாறச் சாப்பிட முடியாது. குறை என்னிடம்தான். நான் உண்பதில் வெகு
நிதானம். பந்தியில் ஒரு முறை பரிமாறியதை நான் சுவைக்கத் துவங்கும் முன் அடுத்து
பரிமாற வந்து விடுவார்கள். நான் சாம்பார் போட்டு உண்பதற்கு முன் பந்தி முடிந்து
எல்லோரும் போகத் துவங்கி விடுவார்கள். நான் மாத்திரம் உட்கார்ந்து உண்டு
கொண்டிருப்பது நான் விரும்பாதது மட்டுமல்ல. அநாகரிகமாகவும் தோன்றும். இது குறித்து
சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இம்மாதிரியான விழாக்களில் விரயமாகும் உணவு
குறித்தும் சிந்தனை சென்றது. நண்பன் ஒருவன் கூறிய செய்தியைப் பகிர்ந்து கொள்வது
பலரது சிந்தனைக்கு விருந்தாகலாம் !
நண்பனுக்கு
ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக
அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம்.
இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு
வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும்
குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ
என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச்
சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக
அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே
விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு
கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு
மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம்.
நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று
இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக
இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம்
விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?
---------------
இனி
சில பறவைகள் பற்றிய தகவல்கள்.
ஹோமா என்னும்
பறவையைப் பற்றி வேதத்தில் சொல்லி இருக்கிறதாம் .அது வானத்தில் வெகு உயரத்தில்
வசிக்கிறது. பூமிக்கு அது ஒரு போதும் வருவதில்லை. வானத்திலேயே அது முட்டை
இடுகிறது. அம்முட்டை நிலத்தை நோக்கி விழும் வேகத்தில் வெப்பம் பெற்றுக் குஞ்சு
பொரித்து விடுகிறது. விழும் வேகத்தில் குஞ்சு கண் திறக்கிறது. சிறகு முளைக்கிறது.
.பூமி க்கு வந்து விழுந்தால் அது சிதறடைந்து செத்துப் போகும். ஆனால் அதற்கு முன்பே
அக்குஞ்சுக்கு தன் தாயுடன் இருக்க வேண்டிய யதாஸ்தானத்தின் ஞாபகம் வருகிறது.
அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.
சாதகப் பறவைமழை நீரை மட்டும் அருந்தும். புண்ணிய நதிகள் அனைத்திலும்
ஏராளமாக நீர்ப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தாலும்பூமியில் படிந்த நீரை
அப்பறவை அருந்தாது.
அசுணம் என்றொரு பறவை இருந்ததாம். அதன் செவிகள் நளினமான இதமான ஓசையே கேட்குமாம். விகாரமான நாராசமான ஓசை கேட்டால் துடிதுடித்து
இறந்து போகுமாம்.
பாலிலிருந்து
நீரைப் பிரித்து எடுத்துக் குடிக்கும் சக்தி வாய்ந்த அன்னம் எனும் பறவை
பற்றி அநேகமாக அனைவரும் கேள்விப் பட்டிருக்கலாம்.
----------------------
இது
ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு
முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். தாகமாயிருக்கவே சீடன்
ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார். அவன் அருகில் இருந்த
குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான். அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே
சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை
கடந்து சென்றது. குளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்தது. சீடன் திரும்பி வந்து
நீர் குடிக்கத் தகுதி யில்லாமல் கலங்களாய் இருக்கிறது என்றான்.
ஒரு
அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச் சொன்னார். இம்முறை
குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தான்.
” நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும்
தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு
விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன
நிம்மதி பெற எந்த முயற்சியும் தேவை
பகிர்வுகளில் புகைபடங்கள் இல்லாவிட்டால் சோபிக்காதல்லவா.!
------------------------------------------------------------------------------------------------------------------
பறவையைப் பற்றின விசயங்கள் ஆச்சிரியமாக இருக்கிறது ஐயா.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
அத்தனை செய்திகளும் அக்ஷர லக்ஷம். அருமை பாலு சார். அந்த ஓவியம் உட்பட.
ReplyDelete//இது புகைப் படமல்ல.. ஓவியம்.. //
ReplyDeleteஅதனால் தான் அடுப்பில் நெருப்பெரியும் சுவடே இல்லை போலும்!
//அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.//
ReplyDeleteஹோமாவைப் பறவையாகவே நினைக்கத் தோன்றவில்லை. புராணங்களில் சொல்வார்களே, அதுமாதிரி யாரிடம் பெற்ற வரமோ தெரியவில்லை; பூமியை நெருங்குவதே இல்லை!
இல்லை, எதனாலோ ஒரு யுகம் மட்டும் பறவையாக இருக்க நேரிட்ட தேவகணமோ?.. அது பறவையாக இருந்த யுகம் முடிந்து, தனது அடிப்படை பிறப்பிற்குப் போய்ச் சேர்ந்து விட்டதோ, என்னவோ?..
ஹோமாவுக்கு பெயர்க் காரணமும் தெரியவில்லை. மேலதிகத் தகவல்களுக்கு அலைபாய்ந்து மனம் விழைகிறது.
கருத்துள்ள கதை...
ReplyDeleteவிரயத்துக்கு அபராதம் நல்ல ஐடியா. அளவுக்குக் குறைஞ்சு சாப்பிட்டா ஊக்கத்தொகை குடுப்பாங்களோ?
ReplyDeleteஓவியப்படம் பற்றி விவரம் தெரிந்தால் சொல்லுங்களேன்? யார் ஓவியர்?
அனைத்தும் மிக அருமை .......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ரசித்தேன்.
ReplyDeleteகருத்துகள் எல்லாம் மிக அருமை...உங்கள் பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
பொதுப் பந்திகளிலும், ஹோட்டல் களிலும் கூட சாப்பிட நான் அருகதை அற்றவன் ; ( சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் - அது வேறு
ReplyDeleteவிஷயம் ) காரணம் நான் சாதம் குறைவாகவும் , காய்கறிகள் வேண்டிய அளவும் சாப்பிடவேன் ; மேலும் சாப்பாட்டில் எனக்குப்
பிடித்தது ரசம் ; அதையும் நிறைய பரிமாரச்சொல்லி, இலையிலிருந்து ' ஓடாமல் ' , லாவகமாக சாப்பிடுவேன் ! சில சமயம் , சிலர்
இதைப்பற்றி ஆச்சர்யத்தோடு குறிப்பிடும்போது , " எனக்கு சின்னக்குழந்தை முதல் , பழக்கம் " என்று கூறி முற்றுப்புள்ளி வைத்து
விடுவேன் ; Culture starts from the dining table - என்று எங்கோ படித்த ஞாபகம் ; மேலும் Healer Bhaskaaran அவர்களுடைய உறையை க்கேட்டதுமுதல்
( சரியாக சாப்பிடும் " ரகசியம் " -- முழு கவனத்தையும் சாப்பிடுவதில் மட்டும் செலுத்தி , மெதுவாக நன்கு மென்று சாப்பிடவேண்டும் ) எனக்கு
சாப்பிட குறைந்தது 40 - 45 நிமிடங்கள் ஆகிறது ; மேலே குறிப்பிட்ட இடங்களில் இதுமாதிரி பரிமாறவும் , சாப்பிடவும் சாத்தியமில்லை ...
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இப்போதெல்லாம் கல்யாணச்சாப்பாடுகளில் waste மிகவும் அதிகம் ; பார்க்கும்போது மனம் வருந்துகிறது ,
கோபமும் வருகிறது ; கை கழுவப்போகும்போது சாப்பிட்ட இலைகளை கவனித்தால், 60 % இலைகளில் பரிமாறப்பட்ட sweets அப்படியே
விடுபட்டிருக்கிறது ; சாபபிடுவர்கள் பந்திtயில் அமர்ந்த பிறகு பரிமாரினாலே இது போன்ற wastes களை தவிர்க்கலாம் .நாகரிகம் என்ற
பெயரில் பல கெட்டப்பழக்கங்கள் உடுரிவிக்கொண்டிருக்கின்றன...தங்கள் பதிவு என்னை இவ்வளவு எழுதவைத்துவிட்டது ! நன்றி ..
மாலி .
...
....
திருமணப்பந்திகளில் உணவு அருந்துவது கொஞ்சம் இல்லை நிறையவே கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteஒன்று நேரம்./
நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கிற அவசர கேஸ். சாப்பிட்ட இலயிலே எத்தனை நேரம் உட்கார்ந்து
கொண்டிருப்பது ? பக்கத்து இலைக் குச் சொந்தக்காரர் இன்னும் ரச சாப்டரே துவங்கவில்லையே !
இந்த ஸைட் பார்த்தால், இவர் ஏதோ ஐடம் வரவில்லை என்று காத்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கிடையே
ஒரு அவஸ்தை தான்.
இரண்டாவது. திருமதி மாதங்கி மாலி அவர்கள் கூறியது போல, நானும் காய்கறி தான் பொறியல், அவியல்,
போன்றவை அதிகமாக சாப்பிடுபவன். பெரும்பாலான திருமண சாப்பாடுகளிலும் காய்கறி மிகவும் குறைவாக
இருக்கும். ஒரு தடவைக்குமேல் பக்கம் திரும்பக்கூட மாட்டார்கள். ஏதோ பேருக்கு போடுவது ஸ்பூன் அளவில்
போடுவார்கள். இன்னும் கொஞ்சம் என்று இந்த வயசில் சொல்ல கூச்சமாக இருக்கிறது.
அதுவும் ஒரு காரணம் நான் சீக்கிரம் எழுந்து விடுவதற்கு. சாதம் அதிகம் சாப்பிடுவதில்லை. கறிகாயும் இலையில்
இல்லை. இலை தான் இருக்கும்.
ஒரே சொல்யூஷன். பஃபே தான். இதில் அதிகம் வேஸ்ட் ஆவதில்லை. ஆனால் சில ஐடம் பலருக்கு பின்னால்
வருபவருக்கு கிடைக்காது.
ஒரு திருமண பந்தலில் அண்மையில் எனக்கு என்ன வேண்டும் என்ன வேண்டும் என கேட்டு பறிமாரினார்கள்.
சூபர் லஞ்ச். டேஸ்டும் பிரமாதம். ஐடம்ஸும் சூபர். அளவும் சரியாக இருந்தது. கவனிப்பு அதற்கும் மேலே.
ராக சுதா கல்யாண மண்டபத்தில் 20ம் தேதி.
சும்மா ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டேன். (டோம்)
சுப்பு தாத்தா.
to know whose marriage function it was, pl log on to
www.naachiar.blogspot.com
correct name of the blog is
ReplyDeletehttp://naachiyaar.blogspot.in/2012/09/60.html
sorry to make my presence once again
subbu rathinam
http://vazhvuneri.blogspot.com
ReplyDeleteபதிவுக்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. @ அருணா செல்வம், சுந்தர்ஜி, ஜீவி, திண்டுக்கல் தனபாலன், அப்பாதுரை, ஈசி பிரியா, டாக்டர் கந்தசாமி, தமிழ் காமெடி உலகம், வி. மாலி, சூரி சிவா.
உற்சாகப் படுத்தும் கருத்துக்கு உங்களிடம் பாடம் படிக்க வேண்டும் சுந்தர்ஜி. அந்த ஓவியம் வரைந்தவரின் பெயர் இளைய ராஜா என்றும் அவர் ஆனந்த விகடனுக்காக வரைகிறார் என்றும் என் நண்பன் கூறினான், அப்பாதுரை சார். ஹோமா பறவை பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேச மஞ்சரியில் படுத்தது, வேறு தகவல்கள் இல்லை, ஜீவி சார்.
உணவு பற்றி எழுதும் போது அது பலரது சிந்தனைகளைக் கிளறிவிடும் என்று எண்ணா வில்லை, மாலி சார் . நீங்கள் குறிப்பிட்டுள்ள விழா பற்றி நான் ஏற்கனவே திருமதி, ஷைலஜாவின் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். நீங்கள் கொடுத்த சுட்டியின் மூலம் உங்கள் புகைப்படம் பார்க்க முடிந்தது.மாமியுடன் அட்டகாசமாய் இருக்கிறீர்கள். மீண்டும் நன்றி.
ReplyDeleteகடைசி வாக்கியங்கள் சூரி சிவாவுக்காக. குறிப்பிடத்தவறியதற்கு மன்னிக்கவும்.சூரிசார்.
நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும் தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற எந்த முயற்சியும் தேவை
ReplyDeleteஇல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும் அமைதியாக்கும். //
மன நிம்மதிக்கு உள்ளம் அமைதி அவசியம் என்பதற்கு அருமையான நல்ல கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீங்கள் பகிர்ந்து கொண்ட எல்லாமே மிக நன்றாக இருந்தது.
விழாக்களில் என்னாலும் அவர்கள் பரிமாறும் வேகத்திற்கு ஈடு கொடுத்து என்னாலும் சாப்பிட முடியாது.
இளையராஜாவின் படத்தை ராமலக்ஷ்மியின் பதிவில் பார்த்து இருக்கிறேன்.