Sunday, September 9, 2012

இதோ ஒரு அகவல் !


                                     இதோ ஒரு அகவல். !
                                     -----------------------------

          பொருள் தெரிந்து பாட என்ற தலைப்பில் அருணகிரி நாதரின் “ முத்தைத்தரு பத்தித் திருநகை எனும் பாடலை எனக்குத் தெரிந்த அளவு விளக்கிக் கூறியிருந்தேன். அதை அடுத்து பலரும் அனுதினம் ஓதும் ஔவையின் வினாயகர் அகவல் குறித்து எழுதலாம் என்றிருந்தேன். இணையத்தில் ஒரு சுற்று வலம் வந்தபோது, அது குறித்து பலரும் பல கோணங்களில் விளக்கியும் வியாக்கியானம் செய்தும் எழுதி இருப்பது கண்டேன். அதைவிட சிறப்பாகவோ, அல்லது அந்த அளவுக்காகவோ என்னால் எழுத முடியும் என்று தோன்ற வில்லை. ஆகவே அந்த எண்ணத்தை தூர ஒதுக்கிவிட்டேன். இருந்தாலும் வினாயகன் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அதன் விளைவே கீழ் வரும் பாடல். முதலில் படியுங்கள். பின் அடியில் இருக்கும் கேள்விக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்.


பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்;
மண்மீதுள்ள  மக்கள் ,பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து  நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக,துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்,
இன்புற்று வாழ்க என்பேன்.!இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
‘ அங்ஙனே யாகுக ‘ என்பாய் ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை
அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரண மிங்குனக்கே 

இந்தப் பாடல் எழுதியது யார் என்று தெரிகிறதா,?

(எழுது பொருள் படிக்கும்போது நானாயிருக்கலாமோ என்னும் சந்தேகம் வருகிறதா. ?)


பின்னூட்டங்கள் பார்த்து பின் பதில் தருகிறேன்.  
----------------------------------------------- .  இனி ஒரு சில ஜோக்குகள்.

பள்ளி சோதனைக்காக மாநிலக் கல்வி அதிகாரி வருகை தரும் நேரம் .ஒரு வட இந்தியப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.வெகு மும்முரமாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் அதிகாரி வருவதை கவனிக்கவில்லை. வந்த அதிகாரியும் ஆசிரியர் பாடம் எடுப்பதைக் கவனிக்கத் துவங்கினார்.
ஆசிரியர் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். “, கத்தே கே பீச்சே கத்தே, கத்தே கே பீச்சே மை, மேரே பீச்சே தேஷ்,.

கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்து ஆசிரியரிடம் அவர் என்ன கற்பிக்கிறாரென்று கேட்டார்.. ஆசிரியர் உற்சாகமாகி கடினமான ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லிக் கொடுக்கிறேன் என்றார். எந்தக் கடின வார்த்தை , எப்படி அவர் சொல்வது ஸ்பெல்லிங் ஆகும் என்று அதிகாரி வினவினார்
ஆசிரியர் விளக்கமாக கூறினார் “ ஹிந்தியில் கத்தே என்றால் ஆங்கிலத்தில் ASS ஆகும் கத்தே கே பீச்சே கத்தே என்றால்  ASSASS.,கத்தேகே பீச்சே மை என்றால் ASSASS –க்குப் பின் ,I ,மேரே பீச்சே தேஷ் என்றால் –I குப்பின்-NATION   ஆகும். . அந்தந்த வார்த்தைகளை சரியாக எழுதினால் ASSASSINATION   என்னும் ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங் சரியாக வரும் “
( என்ன மாதிரியான உத்திகள் ஐயா.!)
             -------------------------

 கேள்வி;- ஒருவன் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுகிறான். இன்னொருவன் முதல் மாடியிலிருந்து கீழே விழுகிறான். என்ன வித்தியாசம்.?
பதில்:-பத்தாவது மாடியில் இருந்து விழுபவன் இறக்கலாம். முதல் மாடியிலிருந்து விழுபவன் காயங்களுடன் பிழைக்கலாம்.
சரியான விடை:- பத்தாவது மாடியில் இருந்து விழுபவன் விழும்போது “ ஆஆஆஆஆ
என்று அலறி விழுந்ததும் நிறுத்துவான். முதல் மாடியில் இருந்து விழுபவன் விழுந்தபிறகு “ஆஆஆஆஆஆஎன்று அலறுவான்.
                 ---------------------------------------

            ,                                                            




” 

11 comments:

  1. விநாயகர் நான்மணிமாலை சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்பட்டது.

    புதுவை மணக்குள விநாயகரை வேண்டிப் பாடப்பட்ட பாடல் !!! ?????

    ReplyDelete
  2. ராஜேஸ்வரிமேடம் சொன்னால்
    நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்
    இல்லையெனில் நான் நீங்கள் எழுதியதாகத்தான்
    எண்ணிகொண்டிருப்பேன்
    ஆங்கில வாத்தியார் தலைச் சுற்றி
    மூக்கைத் தொட்டாலும் பரவாயில்லை
    ஊரைச் சுற்றி அல்லவா மூக்கைத் தொடுகிறார்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லாக் கடிக்கிறீங்க, சார்.

    ReplyDelete
  4. அருமையான நகைச்சுவைகள் ஐயா

    ReplyDelete
  5. //வினாயகன் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.
    .......

    அதன் விளைவே கீழ் வரும் பாடல். //

    .... அல்லது யாராவது எழுதியதை எடுத்துப் போட இருந்தேன்.

    தேடிப்பாருங்கள், நடுவில் விட்டுப்போன இந்த வரி கிடைக்கும்!

    அதுசரி, விநாயகரா?.. வினாயகரா?..

    ReplyDelete

  6. @ இராஜராஜேஸ்வரி,
    @ ரமணி,
    @ அப்பாதுரை,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ கரந்தை ஜெயக் குமார்,
    @ ஜீவி.
    வாசித்துக் கருத்திட்டதற்கு நன்றி. இராஜராஜேஸ்வரி அம்மாவைப் பற்றிப் பெருமைப் படாமலோ. பொறாமைப் படாமலோ இருக்க முடியவில்லை. பல விஷயங்களில் தேர்ச்சி பெற்ற அவதானி அவர். சரியாகக் கூறிவிட்டார். ஜீவி அவர்களே பாடலின் அடியில் ஒரு கேள்வி இருந்ததே கவனிக்க வில்லையா, திசை திருப்பவே ’ யாராவது எழுதியது ‘ பற்றிப் போடவில்லை. விநாயகரா, வினாயகரா தெரியவில்லை. இராஜராஜேஸ்வரிவிநாஉஅகர் என்று எழுதி உள்ளார். அதுவே சரியாக இருக்கவேண்டும்.

    ReplyDelete

  7. இராஜராஜேஸ்வரி, விநாயகர் என்று எழுதி உள்ளார் என்றிருக்க வேண்டும் தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஒப்புவமை இல்லா நாயகன், சிறந்த தலைவன் என்னும் பொருளில் விநாயகனையும், வினைகளை ஆய்பவன், நீக்குபவன் என்னும் பொருளில் எப்படி எழுதினாலும், நம்ம மூஞ்சூறான் புரிந்து அருள் செய்வான்! :))

    கணபதி எல்லாம் தருவான்!

    முருகனருள் முன்னிற்கும்.

    ReplyDelete
  10. சுவையான தொகுப்பு.
    பாரதியாரின் பாடல் படித்திருக்கிறேன்.
    கத்தே கே பீச்சே - ஜோக் நல்ல நகைச்சுவை .

    ReplyDelete