Sunday, October 21, 2012

உன்னைவணங்குகிறேன்


iஇது நாள் வரை ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி சமயம் ஏதோ சிறிய அளவிலாவது கொலு வைப்பது வழக்கம். இந்த வருடம் முறைப்படி கொலு வைக்க இயலவில்லை. படத்தில் காண்பது சென்ற ஆண்டு வைத்த கொலு. இம்முறை வைக்க வாங்கிய கண்ணனின் விக்ரகம் பூஜைக்கு வைக்கப் பட்டுள்ளது. என் பங்குக்கு நானும்  ஒரு துதிப் பாடல் ( முதன் முறையாக )
எழுதி உள்ளேன். அது கீழே.


ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய  சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உனை நான் வணங்குகிறேன் காத்தருள்வாய் சக்தியே.! 

( இன்னொரு கண் அறுவைச் சிகிச்சை காரணம் நான் வலைப் பூவிலிருந்து சிறிது காலம் விடுமுறையில் இருப்பேன். )

8 comments:

 1. கண் சிகிச்சை நல்லபடியாக நடக்க ஆண்டவன் அருள் உங்களுக்குப் பூரணமாக உண்டு.

  ReplyDelete
 2. துதிப் பாடல் நன்றாக இருக்கிறது...

  கண் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக நடக்கும் ஐயா...

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. பாடல் அருமை.

  சீக்கிரம் வந்து 300வது இடுகையை எழுதுங்க சாமி.

  ஆபரேஷன் நல்லபடியா நடக்க ஆண்டவன் கிட்டே அப்ளிகேஷன் போட்டுட்டேன்.

  ReplyDelete
 5. அருமையான கவிதை
  விரைவில் குணமடைய
  எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
 6. மனமெனும் பெருங்கடலில்
  முத்தெடுத்து மகிழ்வோர் பலர் எனினும்
  முருகனைக் கண்டோரும் உளர்.


  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 7. கண் சிகிச்சை நல்ல வண்ணம் நிறைவுற்று புதிய பார்வையுடன்,இன்னும் இளமையாய் வலைப் பூவில், மீண்டும் தங்களைச் சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கின்றோம் அய்யா.
  தங்களின் கவிதையில் குறிப்பிட்டுள்ளபடி, பெயரும் உருவமும் இல்லா அச்சக்தியை நானும் வேண்டுகின்றேன் அய்யா, தாங்கள் விரைவில் பூரண நலம் பெற.

  ReplyDelete

 8. @ டாக்டர் கந்தசாமி,
  @ திண்டுக்கல் தனபாலன்,
  @ சுந்தர்ஜி.
  @ ரமணி.
  @ சூரி சிவா,
  @ கரந்தை ஜெயக்குமார்.
  என் பாடலைப் பாராட்டியும் எனக்காக வேண்டியும் கருத்திட்ட அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. கண் அறுவைச் சிகிச்சை நலமாக முடிந்தது.
  கண்ணின் காயம் ஆற இன்னும் ஆறு வாரங்களாகும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார். நான் எந்த வேலையும் செய்யத் தடை இல்லை. கணினியிலும் பணி செய்யலாம். ஒரே ஒரு பிரச்சனை என்ன வென்றால் சிறிய எழுத்துக்கள்செய்தித் தாள் வாசிப்பது சிரமம். சில நாட்களுக்குப் பின் கண்ணாடி அணிந்தபின் எல்லாம் சரியாகி விடும். இந்த சிகிச்சை குறித்த பதுவு உண்டு. மீண்டும் நன்றி.

  ReplyDelete