Tuesday, July 23, 2013

எங்கே நிம்மதி...?


                                  எங்கே நிம்மதி.....?
                                   --------------------



ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்து முடிக்கும் இவ்வேளையில் என் வாழ்க்கை எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்று அசை போடாத நாளில்லை. வாழ்நாளில் முக்கியமாகத் தேவைப்படுவது மன அமைதி. அதை எங்கெல்லாமோ தேடி அலைகிறோம். என்னைப் பொறுத்தவரை வாழ்வில் திருப்தியும் மன அமைதியும் பெற நமக்கு வேண்டியது என்ன என்பதைப் பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக இருக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம் நம் கட்டுக்குள் இருப்பவற்றை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நியமங்களை வகுத்துக் கொண்டு உடலைப் பேணல் அவசியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


இரண்டாவதாக வாழ்க்கையை குறைவில்லாமல் வாழத் தேவையான பொருட்செல்வம். இலட்சக் கணக்கிலோ கோடிக்கணக்கிலோ இருக்க வேண்டாம், தேவைக்கேற்ப உண்ணவும் உடுத்தவும் பிறர் கையை எதிர்நோக்காமல் இருக்கத் தேவையான பணம். இதை இளவயதில் உழைக்க முடியும்போது நேர்மையாய் உழைத்து தீட்ட வேண்டும். கடன் வாங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது பிறர் முன் தலை தூக்கி நடக்க இயலாதபடி செய்து விடும். உழைக்க வலு இல்லாத நேரத்தில் உழைக்கும்போது சேர்க்கும் பணமே உதவ வேண்டும்.பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை
 

மூன்றாவதாக அவரவருக்கென்று வசிக்க ஒரு சொந்த வீடு. அதில் வசிக்கும் சுகமே தனி. கூடியவரை சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து, முடிந்தால் ஓரிரு செடிகளோ மரமோ நட்டு அவை தரும் சந்தோஷங்களை அனுபவிக்க நேரும்போது ஒரு அலாதியான இன்பம் வரும்.நம் வீடு நம் வீடுதான்


நான்காவதாக நம் வாழ்வில் எல்லா நேரங்களிலும் நம் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஒரு துணை. புரிந்து கொள்ளாத துணையை விட நிம்மதியைக் குறைக்கும் மனைவியோ கணவனோ இல்லாதிருப்பதே மேல்மனைவி(துணை) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.


ஐந்தாவது பொறாமையைத் தவிர்க்க வேண்டும் நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. நம்மைவிட வாழ்க்கையில் வசதியானவரைப் பார்த்து ஏங்கினால் துன்பமே மிஞ்சும் “ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” .ஒளவியம் பேசேல்”


ஆறாவதாக புறம் பேசுவோரைத் தவிர்க்க வேண்டும். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால் இருக்கும் சூழலையே விஷமாக்கி விடுவார்கள்.


ஏழாவதாக நமது நேரத்தை உருப்படியாகச் செலவிட வேண்டும் மனம் லயிக்கும் ஏதாவது உபயோகமான கைவினைப் பொருள்கள் செய்வதிலோ இசைப்பதிலோ இசை கேட்பதிலோ கவனம் செலுத்தும்போது தேவையில்லாத மறைமுக சிந்தனைகள் எழுவது தவிர்க்கப் படும்

கடைசியாக தினமும் நம்மை நாமே விமரிசிக்க குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களாவது காலையிலும் மாலையிலும் ஒதுக்க வேண்டும் என்ன செய்தோம் என்ன செய்ய விட்டோம் , என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே ஒரு மூன்றாவது மனிதனின் இடத்தில் இருந்து கணிக்க வேண்டும்(.INTROSPECTION)

இன்னும் பலவும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலே கூறியவை குறைந்த பட்ச தேவைகள்.

        LET US FIND THE POWER OF DREAMS.. WHAT DO YOU SAY.?

      
 


27 comments:

  1. அற்புதமான அந்தக்காணொளியை பலமுறை மீண்டும் மீண்டும் போட்டுப்பார்த்து ரஸித்தேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  2. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்த்து செயல்பட வேண்டிய பல விஷயங்களை அழகாகப் பட்டியல் இட்டுக்கொடுத்துள்ளீர்கள்.

    எல்லோருக்கும் எல்லாமே சரிவர அமைந்து விடுவதும் இல்லை.

    இருப்பினும் நமக்குக் கிடைத்ததை வைத்து சந்தோஷமாக, நாம் எவ்வளவு தூரம் திட்டமிட்டு, அமைதியாக வாழமுடியுமோ அதுபோல வாழத்தான் வேண்டியுள்ளது.

    எல்லாவற்றிற்கும் நம் அறிவு + கொடுப்பிணை தேவைப்படுகிறது.

    பதிவுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. குறைந்த பட்ச தேவைகள் மிகவும் அதிக பட்ச தேவைகள் இன்றைக்கு..!

    வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. //என்ன செய்தோம் என்ன செய்ய விட்டோம் , என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே ஒரு மூன்றாவது மனிதனின் இடத்தில் இருந்து கணிக்க வேண்டும்(.INTROSPECTION)//

    முத்தான முத்து. மனம் முதிர்ந்தால் மட்டுமே வந்து சேரும் முத்தல்லவோ!

    ReplyDelete
  5. காணொளிக் காட்சி பலமுறை ரசிக்கவைத்தது...பாராட்டுக்கள்..

    ReplyDelete

  6. "எங்கே நிம்மதி...?"

    என்று தேடி அடைய படிநிலைகளை அருமையாக தெளிவாக அனுபவப்பகிர்வுகளாக அளித்ததற்கு நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  7. கடைசியாக தினமும் நம்மை நாமே விமரிசிக்க//ஆறு கட்டளைகளும் அருமை

    ReplyDelete
  8. நிம்மதியான வாழ்விற்குத் தேவையானவையை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்டுத்தியிருக்கிரீர்களே!மிகவுமருமையாக இருக்கிறது.
    அந்தக் காணொளி மனதையள்ளிப் போனது.நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  9. காணொளிக் காட்சி அருமையோ அருமை அய்யா.
    நிம்மதிக்குத் தேவையானவற்றை அருமையாய் வரிசையாய் பட்டியலிட்டுள்ளிர்கள் அய்யா. நன்றி

    ReplyDelete
  10. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.....

    நிம்மதி நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.... அதை அற்புதமாய்ச் சொன்னது உங்கள் பகிர்வு.....

    கடைசி காணொளி மிக அருமை.

    ரசித்தேன்.

    ReplyDelete
  11. நான்காவதாக... புரிந்து கொள்ளாத துணையை விட நிம்மதியைக் குறைக்கும் மனைவியோ கணவனோ இல்லாதிருப்பதே மேல்” மனைவி(துணை) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”.//

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

    அதுபோலவே நிம்மதிக்கு சொந்த வீடு... உண்மையில் அது தேவையா? அப்படியானால் ஏழைகள் எவருமே நிம்மதியாக இல்லையா, என்ற கேள்வியும் எழுகிறதே.

    அன்றைக்கு மட்டும் உழைத்து, ஈட்டியதையெல்லாம் அன்றே கரைத்துவிட்டு வெட்ட வெளியில் உறங்கி எழும் பலரும் நம்மைப் போன்ற நடுத்தரவாசிகளை விடவும் நிம்மதியாய் உறங்கி எழுகின்றனர் என்பதை மறுக்கமுடியுமா?

    வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை.

    மற்ற கட்டளைகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete

  12. @ கோபு சார்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ டாக்டர் கந்தசாமி
    @ ஜீவி
    @ இராஜராஜேஸ்வரி.
    @ கவியாழி கண்ணதாசன்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ வெங்கட் நாகராஜ்
    @ டிபிஆர். ஜோசப்
    வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நம் வாழ்வின் கூடவே துணையாய் இருப்பவரை ஆங்கிலத்தில் பெட்டர் ஹாஃப். என்பர். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால் பிட்டர் ஹாஃப் ஆக நேரும். நிம்மதி குறையும். அதைத்தான் சொன்னேன்.
    சொந்த வீடு தேவையா என்பதை அவரவரே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இருந்தால் மன அமைதியும் திருப்தியும் கூடும் என்பதே என் கருத்து. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  13. தொடர்பதிவு அழைப்பு : http://geethamanjari.blogspot.in/2013/07/blog-post_24.html

    ReplyDelete
  14. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடருங்கள் ஐயா.

    http://geethamanjari.blogspot.com.au/2013/07/blog-post_24.html

    தகவல் தந்துதவிய தனபாலனுக்கு அன்பு நன்றி.

    ReplyDelete
  15. அருமையான பதிவு
    இதை விட நிம்மதியான வாழ்வுக்கு
    அருமையான யோசனையை இத்தனை
    எளிமையாகச் சொல்லமுடியாது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. நல்ல யோசனைகள். காணொளி அருமை.

    ReplyDelete
  17. introspection எப்பவுமே ஒரு நிறைவு தான்.

    ReplyDelete
  18. இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ சிந்தனைப் பரிணாமங்கள்.. ‘ என்ற உங்கள் பதிவில் // GMB – அவர்களுக்கு வணக்கம்! தங்களது சிந்தனைகள் வாசகர்களது சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளன. ” இத்தனை வருட வாழ்வில், வாழ்க்கை என்றால் என்ன என்று உணருகிறீர்கள்? இதுதான் என்று தெரிந்து இருந்தும் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? “ என்ற என்னுடைய சந்தேகத்தை தங்கள் அனுபவம் கொண்டு விளக்கவும். ( May 3, 2012 at 6:54 AM )// என்று கருத்துரை தந்து இருந்தேன். அதற்கு தங்கள் பதில்

    // இளங்கோவுக்கு, வாழ்க்கை என்ன என்று அவரவர் அனுபவம்தான் கூற வேண்டும் .I DO NOT KNOW OF ANY EMPIRICAL RULE. என் சிந்தனைக்கு எட்டியதை அநேக தலைப்புகளில் எழுதி இருக்கிறேன்.இன்னும் எழுதுவேன். //

    இன்றைய உங்கள் பதிவில் எல்லாவற்றிற்கும் விடை கிடைத்து விட்டது. நன்றி!













    ReplyDelete
  19. வாழ்க்கையை நிம்மதியாய்க் கழிக்க பத்து தேவைகளைச் சொல்லியுள்ளீர்கள். தேவைகள் ஒத்துப்போனாலும் வரிசை எண்கள் மட்டும் மாற்றமெனக்கு.

    எந்த ஒரு வசதியையும் அனுபவித்தபின் அகற்றுவதென்பது கடினமான விஷயம். அது இல்லாமல் இருந்தபோது எப்படியிருந்திருப்போம் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட மனம் விரும்புவதில்லை. மனித மனத்தின் விநோதம் அது.

    காணொளியை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க உதவும் நல்ல யோசனைகளுக்கு நன்றி.
    காணொளி மிக அருமை என் பேரனுக்கு காட்டினேன் மீண்டுன், மீண்டும் பார்க்க ஆசை பட்டான். நானும் ரசித்துப் பார்த்தேன்.

    ReplyDelete
  21. நாள் சிந்தனைகள், ஐயா!
    இந்தக் கால அவசர வாழ்க்கைக்கு பெரியவர்கள் ரொம்பவும் இயைந்து போக வேண்டியிருக்கிறது.
    முதலில் ஆரோக்கியம் - ரொம்பவும் சரி. இது இருந்தால் நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நாம் சுமையாக மாட்டோம்.

    எனக்கெனவோ வயதாக ஆக துணை வேண்டும் என்று தோன்றுகிறது. 'புரிந்து கொள்ளாத' என்றால் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு வருவது சகஜம்தானே!

    ReplyDelete
  22. நல்ல சிந்தனைகள் என்று இருக்க வேண்டும்
    பிழைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

  23. @ ரஞ்சனி நாராயணன்
    கருத்து வேறுபாடுகள் சகஜந்தான். இருக்கலாம். இருந்தாலும் agree to disagree என்னும் புரிதலாவது அவசியம்.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றி. முக்கால் நூற்றாண்டுக்கு வாழ்த்துகள், வணக்கம். மேலும் பல்லாண்டு இதே உடல்நிலையோடும், மனநிலையோடும் உற்சாகமாய் வாழவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. அன்பின் ஐயா..வணக்கம்.
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html

    ReplyDelete
  26. வலைச்சரம் மூலம் வந்தேன் ஐயா..அருமையான பதிவு..நன்றி!

    ReplyDelete