சனி, 2 ஆகஸ்ட், 2014

படங்களில் பதிவு


                                         படங்களில் பதிவு.
                                         ------------------------
தலையைப் பிய்த்து கொண்டு ஏதேதோ சிந்தித்து எழுதுவது சரியாகப் புரிந்து கொள்ளப் படுகிறதா என்று புரியாமல் தவிப்பதை விட  சில படங்களின் மூலம் நிறையவே சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எண்ணங்களைச் சித்தரிக்கும் படங்கள் கிடைப்பது அரிது. இள வயது நினைவுகளைப் பகிரும்போது அன்றிருந்த . நாம் அறிந்த இடங்கள் காணாமல்போய் மனம் வருத்தத்தில் ஆழ்கிறது. என் வயதுக்கும் முந்தைய சில இடங்களின் கோலங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்று தெளிவுபடுத்துகிறது. வாருங்கள் நண்பர்களே அன்றைய சில இடங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பாருங்கள். கூடவே எண்ணங்களையும் பகிருங்கள்(அந்த நாள் அல்ல , அதற்கும் முந்தைய நாள் ஞாபகம் வருகிறதா.?)

 

COIMBATORE JUNCTION -NOW
 திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவில் பற்றியும் அங்கு கிடைக்கப் பெற்ற புதையல் பற்றியும் அநேகமாக எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம் . அது பற்றிய ஒரு காணொளித் தொகுப்பு  அண்மையில் எனக்கு வந்தது. வலைப் பூ நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 





32 கருத்துகள்:

  1. காலச்சுவடுகள் காணொளி அருமை.
    அந்தக்கால ரயில்நிலையம், அந்தக்கால பஸ், மற்றும் இடங்கள் எல்லாம் இப்போது எவ்வளவு மாறுதல்கள்!

    திருவனந்தபுர பத்மனாப கோவில் பொக்கிஷ பகிர்வு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. முதல் காணொளியின் பின்னணி இசையில் மனதைப் பறி கொடுத்தேன். காட்சியை மறந்து கானத்திலேயே லயிக்க வைத்தது. மத்யமாவதி என்று தெரிகிறது. வாசித்தது யாராயிருக்கும் என்று மண்டைக் குடைச்சல். எ, எஸ் ஜி?

    மூன்று தரம் இசையை ரசித்து விட்டு நான்காவது தரம்தான் புகைப்படங்கள் பார்த்தேன்.


    பதிலளிநீக்கு
  3. எம் எஸ் ஜி என்று வாசிக்கவும்! பதிவுகளின் பின்னூட்டங்களிலும் முகநூல் போல எடிட்டிங் வசதி இருந்தால் நன்றாயிருக்கும்!

    பதிலளிநீக்கு
  4. அரிய படங்களின் தொகுப்பினை - அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  5. அன்றைய கறுப்பு வெள்ளை படங்கள் இன்றைய ஆவணங்கள். திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவில் புதையல் பார்க்க பிரமிப்புதான். கணக்கில் வராமல் போனவை இன்னும் எத்தனை எத்தனையோ? – தங்கள் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அன்றைய கருப்பு வெள்ளைப் படங்களுக்கு நிகர் அப்படங்கள்தான்
    பொக்கிஷம் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
  7. என்றும் மாற்றம் ஒன்றே மாறாதது
    என்று அன்றும் இன்றும் படங்களும் காணொளியும் காட்சிப்படுத்துகின்றன..

    பதிலளிநீக்கு
  8. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...அருமை சார்!

    மதியமாவதியேதான்...ஸ்ரீராம் சார்! எம்.எஸ் ஜி போலத்தான் தெரிகின்றது.....ஜி ஜி...ஜீனியஸ்...

    எல்லாமே அருமை!

    பதிலளிநீக்கு
  9. வீடியோவும் படக்காட்சிகளும் அதிசயிக்க வைக்கின்றன. மிக அருமை. பொக்கிஷம் என்றால் இதுதான் பொக்கிஷம். ரங்கநாத பொக்கிஷம்.மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அபூர்வ பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. பழைய படங்கள் ஒன்றை நினைவூட்டுகின்றன. காலங்கள் மாறும்போது கோலங்களும் மாறும் என்பதை.

    திருவனந்தபுரம் கோயில் நகைகள் பற்றிய காணொளி அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  12. @ கோமதி அரசு
    நான் கண்ட பெங்களூர் மெட்ராஸ் எல்லாமே அடையாள்ம் தெரியாமல் மாறிப் போய் விட்டது. நான் பிறக்கும் முந்தி இருந்த இடங்களின் படங்கள் காலச் சுவடுகளைக் காட்டுவதே ஆகும் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு

  13. @ ஸ்ரீராம்
    என் இசைஞானம் பற்றி எழுதி இருக்கிறேன். இசையை ரசிக்கத் தெரியும் ராகம் என்ன என்றால் தெரியாது. நீங்கள் சொன்னால் சரியாய் இருக்கும். இசையும் காணொளியும் உங்களை ஈர்த்ததில் மகிழ்ச்சி. நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  14. @ துரை செல்வராஜு
    வருகை தந்து படங்களை ரசித்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  15. @ தி.தமிழ் இளங்கோ
    கருப்பு வெள்ளைப் படங்களின் மவுசே அலாதிதான். பத்மனாபஸ்வாமி கோவில் பொக்கிஷங்களின் கணக்கு இன்னும் முழுதும் வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  16. @ கரந்தை ஜெயக்குமார்.
    வருகை தந்து கருத்துப் பதித்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  17. @ இராஜராஜேஸ்வரி
    காலங்களும் கோலங்களும் மாறுகின்றன .அதைக் காட்டவே காணொளியைப் பகிர்ந்து கொண்டேன். வருகைக்கு நன்றிமேடம்

    பதிலளிநீக்கு

  18. @ துளசிதரன் தில்லையகத்து
    அந்த நாளுக்கும் முந்தைய நாளின் ஞாபகம் ஐயா. இசை பற்றி கூறும் தகுதி எனக்கில்லை. வந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  19. @ அப்பாதுரை
    எதிர்பாராமல் கிடைத்த காணொளி. விடுவேனா..? பகிர்ந்து கொண்டேன். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  20. @ வல்லி சிம்மன்
    இக்காலத்தியவருக்கு முற்காலம் தெரிய ஒரு வாய்ப்பு. கோவிலில் கணக்கில் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் வருமோ.? வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு

  21. @ டாக்டர் கந்தசாமி
    வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  22. @ வே. நடன சபாபதி
    வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  23. @ டி.பி.ஆர்.ஜோசப்
    எனக்கு இதை அனுப்பிக் கொடுத்த என் மக்களுக்கு நான் நன்றி சொல்லிவிட்டேன். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  24. நானும் ஸ்ரீராம் போல இசையை ரசித்து பின்புதான் படக் காட்சியை ரசித்தேன். இரண்டுமே ரசனைக்கு நல்விருந்து.

    பதிலளிநீக்கு
  25. காணொளி சரியாத் திறக்கலை. ஸ்ரீரங்கம் வந்ததும் தான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  26. அருமையான தொகுப்பு! ஸ்ரீரங்கத்தின் இன்றைய ராஜ கோபுரம் அன்றைய ராய கோபுரம், அப்பொழுது மொட்டை கோபுரம் என்று அழைக்படும். முடிவு பெறாத ஒன்றை முடிவு பெராததாகவே வைத்திருக்கும் அழகை இழந்து விட்டோம்!

    பதிலளிநீக்கு

  27. @ பாலகணேஷ்
    எனக்கு இசையைக் கேட்கப் பிடிக்கும் அதில் உள்ள நெளிவு சுளிவு ஏதும் தெரியாது. வருகை தந்து காணொளி+ இசையை ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  28. @ கீதா சாம்பசிவம்
    இந்தக் காணொளிகள் நீண்டவை அல்ல. பார்க்காவிட்டால் ...ஒரு நல்ல பதிவை தவற விட்டீர்கள் என்று வஎஉத்தமாக இருக்கும். அவசியம் பாருங்கள்.

    பதிலளிநீக்கு

  29. @ கீதா சாம்பசிவம்
    மேலிருக்கும் மறுமொழியில்
    ‘வருத்தமாக இருக்கும்’ என்று படியுங்கள். தட்டச்சும்போது பிழை.நன்றி.

    பதிலளிநீக்கு

  30. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    இரண்டையும் பார்த்து இருந்ததால் ஏற்படும் ஆற்றாமையோ.?வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி பானுமதி.

    பதிலளிநீக்கு