சில நேரங்கள்-பேரனுடன்
----------------------------------------
( அல்லது பேரப் பிரலாபங்கள் OR பிரதாபங்கள் ..?)
எங்களுக்குஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. இளைய மகனின் மகன் ,வயது 9, பள்ளியில் விளையாடும் போது அடிபட்டு கீழ் உதட்டில் மூன்று நான்கு தையல்கள் போட வெண்டி இருந்ததாகச் செய்தி.மகன் வேலைக்குப் போகவேண்டும் . மறுமகளுக்கும் பள்ளிப்பணி. பேத்தி கல்லூரிபோக வேண்டும் இவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் , ஓய்வில் இருக்கட்டும் என்பது மருத்துவர் உத்தரவு. பிள்ளையைத் தனியே வீட்டில் விட்டுப் போக முடியுமா.? நாங்கள் எதற்கு இருக்கிறோம்?. அங்கே ஆஜரானோம். என் பேரனுடன் நேரம் செலவிட இது ஒரு வாய்ப்பு. ஆனால்.... எனக்கு கை ஒடிந்ததுபோல் இருக்கும். அங்கே கணினி என் உபயோகத்துக்கு இல்லை.எப்போது நாங்கள் அங்கு சென்றாலும் அவனுடைய அறையில்தான் தங்குவோம். இந்த முறை போனபோது அறையின் கதவில் இருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது. அவனுக்கான ஒரு உலகில் அவன் இருக்கும்போது தொந்தரவு செய்யப் படுவதை அவன் விரும்புவதில்லை என்று புரிந்தது. நீங்களே பாருங்கள் அந்த வாசகங்களை code என்பது பாஸ்வேர்ட். சொன்னால்தான் அனுமதி . அது அவன் விருப்பம் போல் மாறும் நான் போயிருந்தபோது NINJAஎன்பதே கோட்
என்னதான் காயம் பட்டிருந்தாலும் அது அவனது spirit
ஐக் குறைக்கவில்லை. அவன் ஓடுவதும் ஆடுவதும் காணும்போது நம் வயிற்றில் புளியைக்
கரைத்ததுபோல் இருக்கும்.
அவனை ஓர் இடத்தில் இருத்தி வைக்க
அவனுக்கு ஏதாவது இதிகாசக் கதை சொல்ல ஆரம்பித்தால் ‘ அது எனக்குத் தெரியும் ‘
என்பான். தொலைக்காட்சியில் பல விதமாகக் காட்டப்படும் காட்சிகள் நிறையவே
பார்த்திருப்பான் போல். அது அப்படி அல்ல என்று திருத்தப் போனால் நம்ப மாட்டான். தொலைக்
காட்சிகளில் காண்பதில் அவ்வளவு நம்பிக்கை.
இவனே சிறிய பையன். இவனுக்கு இன்னும் சிறிய குழந்தையாக
நடிப்பதில் உற்சாகம் அதிகம். குழந்தைக் குரலில் பேசியதைப் பதிவாக்கி இருக்கிறேன்
கேளுங்களேன்
கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் இருப்பதைஒரு முறை “இந்த
வீட்டில் ஒன்றுமே இல்லை. மிகவும் bore ஆக இருக்கிறது
என்றேன். அப்போது அவன் சொன்னது எனக்கு ஒரு பாடம் போல் இருந்தது
“அப்பா, இந்த வீட்டில் ஒன்றும் இல்லை என்று சொல்லாதீர்கள்.
உங்கள் லுங்கியில் மஞ்சள் நிறம் இல்லை யென்றால் எந்த நிறமுமில்லை என்றாகி
விடுமா.?மஞ்சள் நிறம் இல்லை என்று சொல்லுங்கள். அதேபோல் உங்களுக்கு கம்ப்யூட்டர்
இல்லை என்றால் கம்ப்யூட்டர் இல்லை என்று சொல்லுங்கள். அது எப்படி ஒன்றுமே இல்லை
என்று சொல்லலாம்” என்று ஒரு பிடி பிடித்தான். நான் அவனை வாரியெடுத்து உன்னில்
என் ஜீன்கள் ஓடுகின்றதடா என்று உச்சி முகர்ந்தேன். மிகச் சாதாரணமாக அருமையான கருத்தை
கூறிச் சென்றான்.
அவனுடைய அறைக்குச் சென்று அவன்விளையாட்டைக் காண வேண்டும்
என்று எனக்கு ஆசை. ஆனால் அவனுக்குத் தனிமையில் ஆடுவது பிடித்த விஷயம் அவன்
விளையாட்டுப் பொம்மைகளை வீடியோ எடுக்க அவனது அனுமதி கிடைத்துப் படமெடுத்தேன்.வீடியோவின்
சைஸ் பெரியதாயிருப்பதால் பதிவில் அப்லொட் ஆக மாட்டேன் என்கிறதுவிலங்குகளைப் பற்றி
அவன் எனக்கு ஒரு பாடமே எடுத்துவிட்டான் ஆஃப்ரிக்க சிங்கம் ஏஷியாடிக் சிங்கம்
எக்ஸ்டிங்ட் ஆன டைனோசரஸ் பற்றியெல்லாம் தெளிவாகக் கூறினான் ஆஸ்திரேலியாவில் வாழும்
மீனினம் ப்ளாடிபஸ் மட்டுமே முட்டையிடும் மம்மல் என்றான் அவனோடு எடுத்த நேர்காணல்
காணொளி பதிவில் ஏறாதது ஏமாற்ற மளிக்கிறது
எல்லா வீட்டுக் குழந்தைகளுமதிபுத்திசாலிகள் என்று
தெரிந்தாலும் ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானேதாத்தாவின் தோளில்( இரு வருடங்களுக்கு முந்தையபடம் |
கிரிக்கட் பயிற்சிக்குப் போகிறான் |
அக்காவுடன் |
இளைய மகன் குடும்பத்துடன் புது மனை புகு விழாவன்று(29-09-2014) |
இந்தப் பதிவை எழுதி முடித்ததும் இன்று காந்தியின் பிறந்தநாள் என்னும் நினைவு வந்தது. காந்தியைப் பற்றி எழுதலாம் என்றால் நேரம் போதாது, இருந்தாலும் சென்ற ஆண்டு எழுதிய பதிவை ப் பார்க்க இங்கே சொடுக்கவும்
பேரனுக்கு ஏற்பட்ட காயம் குணமாக வேண்டுகின்றேன்..
பதிலளிநீக்குபேரனைப் பற்றிய பதிவினைப் படிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது..
வாழ்க நலம்..
உங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த வீட்டில் ஒன்றும் இல்லை என்று சொன்னதற்கு உங்கள் மகன் அளித்த பதில் சிந்திக்க வைக்கக் கூடியது.
அருமையான தருணங்கள் என்றும் இனிக்கட்டும்!.
சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குபேரனுக்கு வாழ்த்துகள். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது மகிழ்வான விஷயம் தான். வாழ்த்துகள், உங்களுக்கும்.
பதிலளிநீக்குஆறு நாட்களுக்கு முன்பு இதே தலைப்பில் தங்களது வலைப்mபதிவில் ஒரு பதிவு இருப்பதாக எனது வாசிப்புப்பட்டியல் காண்பித்தது. அதை படிக்க முனைந்தபோது அது நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திரும்பவும் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. ‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை’ என்பார்கள். தாத்தாவைப்போல பேரன் என சொல்லலாம் போல் உள்ளது தங்கள் பதிவைப் படித்ததூம். அவரும் விரைவில் சகலகலா வல்லவர் ஆவார் என்பது உறுதி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇந்த பதிவை நேற்று வெளியிட இருந்தீர்கள் போலும். ஏனெனில் ‘இன்று காந்தி ஜெயந்தி’ என குறிப்பிட்டுள்ளீர்கள்.
மிகச் சாதாரணமாக அருமையான கருத்தை கூறிச் சென்றது சிந்திக்கவைக்கிறது..
பதிலளிநீக்குதங்கத்தருணங்கள்....
பேரனுடன் இனிமையான அனுபவம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
அவன் காயம் குணமாகிவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டி என் முரளிதரன்
/அருமையான தருணங்கள் என்றும் இனிக்கட்டும்/ அவனது அந்தப் பேச்சே என்னை இப்பதிவிட செய்தது. இனிமையான தருணங்கள்தான். காந்தியின் வாழ்க்கையிலொரு சம்பவம் பதிவிட்டிருக்கிறேனே . பார்க்கவில்லையா.? வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி முரளி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
/சுவாரஸ்யம்தான் / அதனால்தானே இப்பதிவும் பகிர்வும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ வே.நடன சபாபதி
ஆம் ஐயா . ஆறு நாட்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன். ப்ரிவியூ வுக்குப் பதில் பப்லிஷ் பொத்தானை தவறுதலாக அழுத்திவிட்டேன். நேற்று இரவு முழுமை பெற்ற பதிவு. இன்றுதான் பதிவாக்கினேன். காந்தி பற்றிய ஒரு பதிவும் இணைத்திருந்தேனே. பார்க்கவில்லையா.? வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
உண்மையிலேயே தங்கத் தருணங்கள்தான் மேடம் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி ஐயா. காந்தியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவமும் பதிவாக்கி இருக்கிறேனே.
எப்போதுமே-பொதுவாக பெற்றோருக்கு தாத்தா பாட்டியானால் அதில் மிகவும் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுடன் விளையாடியதை விட, கதை சொல்லியதை விட பேரன் பேத்திகளுடன் விளையாடுவது, கதை சொல்லுவது என்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பிள்ளைகள் எனும் போது அப்போது பெற்றோரான கடமைகள். தாத்தா பாட்டி எனும் போது சிறிது ஓய்வு பெற்று பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது என்பது அந்த வயதிற்கு தனிமை உணர்வு இல்லாத நல்ல ஆரோக்கியமான மன நிலையை வைத்திருக்க உதவும்1 இல்லையா சார்? சரிதானே! நல்ல அனுபவம் சார்! மிகவும் ரசித்தோம்!
பதிலளிநீக்குதங்களின் பெயரனுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇனிமையான தருணங்கள் தொடரட்டும்
பதிலளிநீக்கு@ துளசிதரன்
உண்மை. பெற்றோராய் இருந்து பிளைகளிடம் அன்பு செலுத்தியதை விட தாத்தா பாட்டியாகி பேரக் குழந்தைகளிடம் பரிவும் அன்பும் கூடுகிறது. இதில் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும் பேரக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது அவர்கள் நலன் கருதி கண்டிப்பது வரவேற்கப் படுவதில்லை. அக்குழந்தைகளின் பெற்றோரே,(அவர்கள் நாம் பெற்றதுகள்)விரும்புவதில்லை. நாம்தான் கண்டிக்கப் பட்டோம் நம் பிள்ளைகளாவது சுதந்திரமாக இருக்கட்டுமே என்னும் எண்ணமோ. இதுதான் தலைமுறை இடைவெளியோ.?வௌகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ துளசிதரன்
மேலே தட்டச்சுப் பிழை. வருகைக்கும் என்று திருத்தி வாசிக்கவும்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
பேரன் நலமா இப்போது?
பதிலளிநீக்குபேரன் மழலையாக மாறி ஸ்லோகம் சொன்னது அருமை.
தாத்தாதோளில் கொஞ்சும் கிளியாக பேரன் காட்சி அருமை.
மகிழ்ச்சியான பதிவு.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
உங்கள் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து ஆதரவு தர வேண்டி நன்றியுடன்
நேரு தன் நூலில் (Glimpses of World History) தன் மகளுக்குக் கடிதமாக எழுதும்போது கடந்த சில கடிதங்களாக கனமான செய்திகளை உனக்கு கூறி வந்துள்ளேன். இப்போது சற்று மாற்றாக உனக்கு போரடிக்காமல் இலகுவான செய்தியைப் பற்றிக் கூறட்டுமா என்று கேட்பார். கனமான பதிவுகளுக்கிடையே ஒரு லைட்டான பதிவு என்ற சொற்றொடரைப் பார்த்தவுடன் இந்நினைவு எனக்கு வந்தது. நன்றி.
பதிலளிநீக்கு// பிள்ளையைத் தனியே வீட்டில் விட்டுப் போக முடியுமா.? நாங்கள் எதற்கு இருக்கிறோம்?. அங்கே ஆஜரானோம். //
பதிலளிநீக்கு” நாங்கள் எதற்கு இருக்கிறோம்?” – மனதைத் தொட்ட ஆழமான வரி! அன்புதான் ந்ம்மை வாழ வைக்கிறது. நம்மை ஊக்கப் படுத்துகிறது. நமது பெயர் சொல்லுபவன் பெயரன் > பேரன்.
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
தொடர்ந்து வரும்வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. மகளின் ஆர்வத்தை தக்க வைக்க நேருஜி முன்பே இதனைக் கையாண்டார் என்பது அறியாத செய்தி. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ தமிழ் இளங்கோ
வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றிசார்.
அன்புள்ள ஐயா
பதிலளிநீக்குவணக்கம். பேரன் பற்றிய பதிவு எப்போதும் மகிழ்ச்சியானதுதான். அனுபவித்தேன்.
அன்புள்ள ஐயா,
பதிலளிநீக்குவணக்கம். கூரியரில் அனுப்புவதில் எனக்கொன்றும் சிரமமில்லை. அவசியம் அனுப்ப நினைக்கிறேன். எனவே முகவரியை அனுப்பி வையுங்கள். நன்றிகள்.
பதிலளிநீக்கு@ ஹரணி
பேரன் பற்றிய பதிவை அனுபவித்ததற்கு நன்றி ஐயா. என் வீட்டு விலாசத்தை அனுப்புகிறேன்