Monday, February 16, 2015

காண சிந்திக்க ரசிக்க பல்சுவை


                            காண சிந்திக்க ரசிக்கபல்சுவை
                            -----------------------------------------------
முதலில் சிந்திக்க
--------------------------
என்னிடம் ரூ.50/- இருந்தது அதிலிருந்து நான் ரூ.20/- செலவு செய்தேன். மீதி இருப்பது ரூ.30/-அதிலிருந்து நான் ரூ.15/- செலவு செய்தேன். மீதியிலிருந்து ரூ.9/- செலவு செய்தேன். மீதியிலிருந்து ரூ 6/- செலவு செய்தேன் பாக்கி இருப்பு ஒன்றுமில்லை.
I have Rs 50/-
     
Spend        Balance
20/-               30/-
15/-               15/-
  9/-                 6/-
  6/-                 0/-
….…             ………
50                   51             ஆனால் இது எப்படி.?

.....                .......
எனக்குத் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன் 

இனி படித்து ரசிக்க
--------------------------

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...

தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..

வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..

ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
#
டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம

ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம

இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம்
எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
என்று தான் எண்ணுகிறோம

ATM - Anju Time Mattum
(
அஞ்சு டைம் மட்டும்)

குழந்தைங்க நம்மகிட்ட
கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்
செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

கிணத்த
தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப
கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண
போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300
பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

காய்கறி விலை மளமளவென
உயர்ந்துவரும் நிலையில்,
கீரை விலை ஏறாமல் சில்லறயில்
கிடைப்பது, நம் உடல்
ஆரோக்கியத்துக்க
ு கொடுக்கப்பட்டிருக்கும்
கடைசி வாய்ப்பு..

ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9
மணி வரைக்கும் தூக்கம் வரும்சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல
வராது # விதி

பியூட்டி பார்லர்க்கும்
ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா

தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1
கேமரா 4

மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு
#
அப்டியே நெட் கட்டணத்தயும்
உயர்த்தகூடாதுன்
னு உத்தரவு போட்ருங்கயா.....( யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறப் பகிர்வு).

இனி கண்டு களிக்க
-------------------
 என்ன நண்பர்களே ரசித்தீர்களா? உங்கள் கருத்துக்களைப் பகிரலாமே.   

36 comments:

 1. வாக்கிங் போக
  எந்திரிக்கிறது தான்
  கஸ்டமானது..//

  ஹெஹெஹெ என்னை மாதிரி போலிருக்கு! :)))

  //மதம் மாறினால் தான் கடவுள்
  ஆசீர்வதிப்பார் என்றால்
  உண்மையில் அவர் கடவுள்
  இல்லை, கட்சித் தலைவர்..//

  கடவுள் எங்கே மதம் மாறச் சொல்றார்? இருக்கிறவங்க தானே பிடுங்கி எடுக்கிறாங்க! :)

  ReplyDelete
 2. ஹெஹெஹெஹெ, செம மூட்லே இருக்கீங்க போல! நல்ல ரசனையோடு தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கீங்க!

  ReplyDelete
 3. பாக்கி இருப்பைக் கூட்டுவது ஏடாகூடம்!..

  நகைச்சுவைத் துணுக்குகள் ரசனை!..

  ReplyDelete
 4. துரை செல்வராஜு சொல்வது சரி.

  எங்கிட்ட 50 ரீபாய் இருக்கு. அதில் ஒரு ரூபாய் செலவு செய்கிறேன். மீதி 49 ரூபாய். அதில் 10ரூபாய் செலவு செய்கிறேன். மீதியில் 39 ரூபாய் செலவு செய்கிறேன். மீதி ஒன்றுமில்லை.

  இப்போது பாருங்கள்

  1 49
  10 39
  39 0
  ------ -----
  50 88
  ------ ----

  இது எப்படி?

  ReplyDelete
 5. அட? ஆமா இல்ல? அந்தக் கணக்கைப் பத்திச் சொல்ல மறந்திருக்கேன். துரை செல்வராஜ் அவர்களும், கந்தசாமி ஐயா அவர்களும் சொல்வது சரியே! :)))) சாதாரணமாகப் பார்த்தால் ஏமாற்றத் தான் செய்யும். கந்தசாமி ஐயா நன்கு விளக்கி விட்டார். :))))

  ReplyDelete

 6. ரசிக்க அனைத்தும் அருமை,,,
  காணொளி மூன்றும் அருமை முதலாவது என்னிடம் இருக்கிறது.

  ReplyDelete
 7. கணக்கு ஏற்கெனவே படிச்சிருக்கேன். மற்றவை எனக்கு வாட்சப்பில் வந்து ரசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. உங்கள் ரசனையே ரசனை !படித்தும் ,பார்த்தும் ரசித்தேன் :)

  ReplyDelete
 9. ரசிக்க வைத்தது ஐயா.,..

  ReplyDelete
 10. செலவு செய்த தொகையினையும், ஒவ்வொரு முறையும் செலவு போக மீதமிருக்கும் தொகையினையும் கூட்டினால், ஒரே மாதிரியான விடை வரவே வராது ஐயா
  ரசித்தேன்

  ReplyDelete
 11. சிந்திக்க வைத்த ரசனையான பதிவு.

  ReplyDelete
 12. சிந்திக்க வைத்த ரசனையான பதிவு.

  ReplyDelete
 13. சில துணுக்குகள் புதியவை ஐயா...

  ReplyDelete
 14. மீதியை கூட்டுவது என்பது கணித விதிகளின்படி சரியல்ல
  //இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
  ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
  நாடு...//
  அருமை

  ReplyDelete
 15. எல்லாவற்றையும் ரசித்தேன். இரண்டு, மூன்றுமுறை எப்படி பார்த்தாலும் கணக்கு புரியவில்லை. உங்கள் கணக்கே “வாழ்வின் விளிம்பில்” போல தனிதான்.

  வலைப்பதிவுக்காவே நீங்கள் யோசித்து தேர்வு செய்த வீடியோ காட்சிகள் போல இருக்கின்றன. ரயில் தண்டவாளத்தில் காய்கறி கடைகள். எந்த வூரு சார்? ந்மம ஊர்லே அது டாய்லெட் தான்.

  ReplyDelete
 16. ஐயா பழனி கந்தசாமி அவர்களுக்கு நன்றி!..

  ஐயா அவர்களும் அவர்களுடைய பங்கிற்கு ஒரு செலவு = இருப்பு கணக்கை சமர்ப்பித்தது ரசனை..

  ReplyDelete

 17. @ கீதா சாம்பசிவம்
  வருகை தந்து ரசித்த்தற்கு மிக்க நன்றி மேடம். கடவுள் பெயரைச் சொல்லிச் சில காரியங்கள் நடைபெறுகின்றன. இது அவர்களைக் குறிக்கிறதோ என்னவோ...நான் தேர்ந்தெடுத்த துணுக்குகளும் காணொளிகளும் என் மேலான வாசகர்களால் ரசிக்கப்படவேண்டும் என்பதே என் நோக்கம்
  திசை திருப்பும் கணக்கு என்றே எண்ணுகிறேன் மீண்டும் நன்றி.

  ReplyDelete

 18. @ துரை செல்வராஜு
  பாக்கி இருப்பைக் கூட்டுவது ஏடாகூடம்...! நானும் அப்படித்தான் நினைத்தேன். சரி ஏடாகூடம் என்றால் என்ன. ?வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ டாக்டர் கந்த சாமி
  ஆசிரியர் அல்லவா.? விளக்கி விட்டீர். நன்றிசார் ஐயா துணுக்குகளையும் காணொளிகளையும் பற்றி ஏதும் கூறவில்லையே. கணக்கில் மூழ்கிவிட்டதால் மற்றவற்றை ரசிக்கவில்லையோ?

  ReplyDelete

 20. @ கில்லர்ஜி
  வ்ருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஜி.

  ReplyDelete

 21. @ ஸ்ரீ ராம்
  உலகம் மிகவும்சுருங்கி விட்டது. யாருமே பார்க்காத காணொளியோ, படிக்காத நகைச்சுவை துணுக்கோ அவரவர் கை வண்ணத்தில் வந்தால்தான் உண்டு. வருகை தந்து மீண்டும் ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 22. @ பகவான் ஜி
  உங்கள் பதிவுகளைப் படிப்பதன் தாக்கம் என்று நினைக்கிறேன் நன்றி ஜி

  ReplyDelete

 23. @ பரிவை சே குமார்
  வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்

  ReplyDelete

 24. @ கரந்தை ஜெயக் குமார்
  கணித ஆசிரியர் சொன்னால் சரியாய்தான் இருக்கும்.இதெல்லாம் திசை திருப்ப என்றே நினைக்கத் தோன்றுகிறது. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ திண்டுக்கல் தனபாலன்
  /சில துணுக்குகள் புதியவை ஐயா/ என்ன செய்வது டிடி. இப்போதைய முன்னேறிய யுகத்தில் எல்லாமே வாயு வேகத்தில் பரவி விடுகின்றன. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 27. @ டி.என். முரளிதரன்
  அதைத்தான் கந்தசாமி ஐயா தெளிவு படுத்தி விட்டாரே. நானும் முதலில் புரியாமல் விழித்தது உண்மை வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி முரளி.

  ReplyDelete

 28. @ தமிழ் இளங்கோ
  /எல்லாவற்றையும் ரசித்தேன்.இரண்டு மூன்று முறை எப்படிப் பார்த்தாலும் புரியவில்லை உங்கள் கணக்கே “வாழ்வின் விளிம்பில்”போல் தனிதான்/ ஐயா புரியவில்லை. இது ஷொட்டா இல்லை குட்டா?
  எப்பவுமே யோசித்துத்தான் பதிவுக்காக பகிர்வோ, என் ஆக்கமோ செய்கிறேன் ்தண்டவாளமும் ரயிலும் எங்கோ கிழக்கு நாட்டுடையது என்று என் மகன் சொன்னான் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 29. அன்பின் ஐயா!..

  திடீரென ஏடாகூடம் என்றால் என்ன என்று கேட்டுவிட்டீர்கள்..

  சிக்கல் பிடித்த விஷயம் என்பதற்காக - ஏடாகூடம் என்று சொல்வார்கள்.

  நானும் அப்படியே!.. இருப்பினும் Wiktionary -ல் தேடினேன்..

  தாறுமாறு, குளறுபடி,முறைகேடு - என்று விளக்கம் வருகின்றது

  ஆங்கிலத்தில் - Confusion / Something improper - என்றும் விளக்கமளிக்கின்றது.

  புதிய அர்த்தத்தை தெரிந்து கொள்ளத் தூண்டிய தங்களுக்கு நன்றி..

  ReplyDelete

 30. @ துரை செல்வராஜு
  கேள்வி கேட்டதற்கு தவறாக எண்ணவேண்டாம் சில நேரங்களில் சரியான பொருள் தெரியாமலேயே சில வார்த்தைகளை உபயொகிக்கிறோம் உ-ம் கண்ணீரும் கம்பலையுமாய் என்னும் இடத்தில் இந்தக் கம்பலையின் பொருள் தெரிந்திருக்கவில்லை. பதிவில்வாசக நண்பர் சுந்தர்ஜி தெளிவு படுத்தினார். இப்போது இந்த ஏடாகூடத்துக் நீங்கள் . மிக்க நன்றிஐயா.

  ReplyDelete
 31. அன்பின் ஐயா..
  பற்பல கோணங்களில் சிந்திப்பதற்கு தாங்களே வழிகாட்டி..

  தாங்கள் கேள்வி கேட்டது பற்றி - நான் ஏதும் தவறாக நினைக்கவில்லை..

  வளர்க நலம்!..

  ReplyDelete
 32. Rs 1= 1 p ?

  Rs 1 = 10 p x 10 p

  = 1/10 Rs x 1/10 Rs

  = 1/100 Rs

  = 1 p.

  =QED !

  இது எப்படி இருக்கு ?

  ReplyDelete

 33. @ V.Mawley.
  ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. அசத்திவிட்டீர்கள். ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் ஒரு பதிவு வித்தியாசமாக சிந்திக்க வைத்தது என்பதுதான். முதலில் டாக்டர் கந்தசாமி ஐயா, இப்போது நீங்கள். நன்றி சார்.

  ReplyDelete
 34. பகிர்ந்த அனைத்தும் அருமை.
  சில காணொளிகள் வாட்ஸப்பில் பார்த்து இருக்கிறேன்.

  ReplyDelete

 35. @ கோமதி அரசு. வருகைக்கு நன்றி. எதைப் பகிர்ந்து எழுதினாலும் பதிவிட்டாலும் அது குறித்து முன்னமே அறிந்தவர் பலரும் இருக்கிறார்கள் உலகம் மிகவும் சின்னதாய் விட்டது.

  ReplyDelete
 36. Re. 1 = 1 p. முத்லில் , இது சரியாக இருக்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே ,ஆகவே equation-ல்

  எங்கே தவறு இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்...( இப்போதைக்கு இது போதும் ! )

  மாலி.

  ReplyDelete