Wednesday, August 26, 2015

வயதுகளின் பரிணாமம்


                                   வயதுகளின் பரிணாமம்
                                  ----------------------------------------


வயதாவதின் பரிணாமம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான்  பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும்  நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே  நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும்  என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல்  உணர்வோம்  நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும்  அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்துக்கு வந்து சேருகிறோம்  வந்தவேகம் எழுபதில் புலப்படும்  எண்பதுகளில் எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி இருக்கும்  தொண்ணூறுகளில்  எல்லாமே இப்போது நடந்தது போல் இருக்கும் வந்து போன 1980 ல் இது அப்படி அது இப்படி என்றே எண்ணம் தோன்றும் .  நூறு ஆயிற்றென்றால்  மீண்டும் வயது என்ன என்று  சொல்லும்போது நூறரை  நூற்றி ஒன்றரை என்று ஆகும்
என்றும் இளமையாய் இருப்பது எப்படி.? இந்த எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்  இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும்  வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
அவ்வப்போது நான் எழுதிய முதுமை என்பது ஒரு வரம் என்னும் பதிவைப்படியுங்கள்.தெளிவும் கிடைக்கும்
 

53 comments:

  1. வயதானாலும் எண்ணம் இளமையாக இருந்தால் பிரச்னையே இல்லை. நன்றி.

    ReplyDelete
  2. பதிவு அருமை. எதையாவது கற்றுக் கொண்டு இருக்க வேண்டும் என்பது உண்மைதான்.
    நாள்தோறும் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் நமக்கு ஏதாவது கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள்//

    சிறப்பான சிந்தனைகள்..

    ReplyDelete
  4. எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள்//

    சிறப்பான சிந்தனைகள்..

    ReplyDelete
  5. >>> சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள். கண்ணீர் தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்.இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள்.<<<

    வைர வரிகள்.. ஐயா!..

    ReplyDelete
  6. // வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.//

    உண்மைதான் ஐயா. வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்க தங்களின் அறிவுரைகள் உதவும். அதற்கு நன்றி!

    ReplyDelete
  7. வயது வெறும் எண்கள்தான். ஐயா. ஜமாய்ப்போம்.

    ReplyDelete
  8. //அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும் வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.//

    அருமையான வரிகள்!

    வாழ்க்கை முழுவதும் போராட்டமென்றாலும் அறுபது வயதுகளில் தான் இப்போதெல்லாம் போராட்டம் அதிகமாகிறது. வருடக்கணக்கில் கிடைத்த அனுபவங்களின் துணையுடன் இந்தப் போராட்டங்களையும் ஜெயிக்க முடியும். வயது உடலுக்குத்தானே தவிர மனதிற்கு இல்லை!

    நல்ல கருத்துக்களுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  9. வயது / மனம் பற்றிய குறிப்புகள் அருமை.

    ReplyDelete
  10. நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்வு என்பதானது அனுபவிக்கும் நிலையில்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாழ்க்கையின் தத்துவத்தை அழகாகச் சொன்னீர்கள். உண்மையில் வாழ்க்கையை இதுதான் என்று உணர்வதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. இப்போது தோன்றும் சிந்தனை முன்பே இருந்திருந்தால் ( அல்லது யாரேனும் வழிகாட்டி இருந்திருந்தால் ) இன்னும் சிறப்பாக வாழ்ந்து இருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  12. இருபதைக் கடந்த பிறகு உண்மையான வயதைச்சொல்ல சிலருக்கு விருப்பம் இல்லாமல்தான் போகின்றது! மிகச்சிறப்பான தத்துவம்! நன்றி!

    ReplyDelete

  13. வணக்கம் ஐயா
    வாழ்வியல் உண்மையை மிகவும் எளிமையாக சொல்லி விட்டீர்கள் அருமை
    நான் ஏற்கனவே படித்த முதுமையின் பரிசு மீண்டும் படித்து வந்தேன் ஐயா.

    ReplyDelete
  14. Nalla urchagam tharum vaarthaigal nandri

    ReplyDelete
  15. //நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.//

    நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் விதத்தில் தான் மூச்சுக் காற்றும் இருக்கிறது.
    அதை அவ்வளவு சுலபத்தில் அமைத்துக் கொள்ள முடியாமை தான் வாழ்க்கையாகவும் இருக்கிறது!

    ReplyDelete
  16. என்னுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு நண்பர்- என்னைவிட ஐந்து வயது இளையவர்- ஓய்வுபெற்ற நான்கு மாதங்களிலேயே மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி இன்று காலை செய்தித்தாளில் பார்த்தேன். இறுதிநாள் குறிக்கப்பட்டே மனிதர்கள் இங்கு பிறக்கிறார்கள். இருக்கும்வரை பொறுமையோடு, பொறாமையின்றி, அன்புடையவர்களாகவோ அல்லது அன்பைத் தேடுபவர்களாகவோ இருந்துவிட்டுப் போவதுதான் நல்ல மனிதனின் இலக்கணமாக இருக்கமுடியும்.- இராய செல்லப்பா

    ReplyDelete
  17. இதை ,வாழும் கலை என்றும் சொல்லலாம் :)

    ReplyDelete
  18. உண்மை
    நன்று சொன்னீர் ஐயா
    வாழ்வு என்பது வயதில் இல்லை
    அனுபவிப்பதில்தான் இருக்கிறது

    ReplyDelete
  19. வயது ஒரு பொருட்டா? கவலையை விட்டொழிப்போம். அனுபவங்களால் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோம்!

    ReplyDelete

  20. @ கீதா சாம்பசிவம்
    இதெல்லாம் வயது பற்றிய கவலை உள்ளவர்களுக்கு .வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ கோமதி அரசு
    கற்க நிறையவே இருக்கு. கற்பிக்கவும் நிறையவே இருக்கிறது. ஆனால் நாம்தான் கற்கிறோமா என்பதே கேள்வி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  22. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கு நன்றி ஜீனியஸ் மேடம்

    ReplyDelete

  23. @ துரை செல்வராஜு
    சிறிய விஷயங்கள் இன்பம் தருபவை. ஆனால் இன்பம் சிறிய விஷயமல்ல. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ வே நடன சபாபதி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  25. @ டாக்டர் கந்தசாமி
    அதுதான் ஜமாய்த்துக் கொண்டிருக்கிறோமே.

    ReplyDelete

  26. @ மனோ சாமிநாதன்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  27. @ ஸ்ரீராம்
    வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  28. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அனுபவித்து மகிழ பல விஷயங்கள் இருக்கும் போது ஏன் கவலையில் உழலவேண்டும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  29. @ தி தமிழ் இளங்கோ
    நேற்று என்பது திரிந்தபால். நாளை என்பது மதில் மேல் பூனை. இன்றே கையில் வீணை. அதை மீட்டி மகிழவே வாழவேண்டும் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  30. @ தளிர் சுரேஷ்
    வயதைச் சொல்ல ஏன் தயக்கம் பெண்கள்தான் தயங்குவார்கள் என்று கேட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  31. @ கில்லர்ஜி
    எந்த வயதானாலும் அதை அனுபவிக்க வேண்டும் நேற்று என்பது இன்னும் ஒரு முறை வராது. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  32. @ கோகுல்
    முதல் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  33. @ ஜீவி நான் வாழ்க்கையை நேர்முறையில் அணுகுவதைச் சொல்கிறேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  34. @ செல்லப்பா யக்ஞசாமி
    நம் கட்டுக்குள் இல்லாதவற்றில் கவனம் செலுத்தி கவலை கொள்வதைவிட, நம் கட்டுக்குள் இருப்பதில் கவனம் செலுத்துவோமே.

    ReplyDelete

  35. @ பகவான் ஜி
    இது வாழும்கலையா என்பதை அவரவர் எண்ணத்துக்கு விடுவோம் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  36. @ கரந்தை ஜெயக்குமார்
    புரிந்துகொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  37. @ துளசி கோபால்
    வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வோம். நன்றி மேடம்

    ReplyDelete
  38. வலையுலகில் வயதில் மூத்தபதிவர்கள்தான் சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.பழனி கந்தசாமி,நடனசபாபதி,சென்னை பித்தன், தமிழ் இளங்கோ இராய செல்லப்பா தாங்கள் உள்ளிட்ட இன்னும் பலரின் சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. பெண் பதிவர்களும் பலர் உள்ளனர்.இவர்களைப் போலவே ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலே வாழ்க்கையில் உற்சாகம் குறையாது.

    ReplyDelete

  39. @ டி.என்.முரளிதரன்
    ஒரு சிறு திருத்தம் முரளி. முதியோர்கள்தான் என்பதை விட முதியவர்களும் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்/

    ReplyDelete
  40. வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை.. அனுபவிப்பதில்தான் இருக்கிறது.. உண்மையான வரிகள். வாழ்வின் அர்த்தம் தெரியாமல்தானே இப்போதைய தலைமுறை அதையும் இதையும் தேடி நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  41. வரம் என்று பார்க்கிற போது வாழ்வில் இளமை தான் வரம் என்று நினைக்கிறேன். (வரத்தின் மதிப்பைப் புரிந்து கொள்ளாமல் பின்னாளில் பலர் வருத்தப்படுவதும் அதனால் தானோ?)

    வயது நிலை என்பதே ரெலெடிவ். தொண்ணூறு வயதுக்காரர் அறுபது வயதுக்காரரை இளமையுள்ளவராக எண்ணலாம்.

    ReplyDelete
  42. வயதானால் எண்ணம் எப்படி இளமையாக இருக்க முடியும் தெரியவில்லையே?

    ReplyDelete
  43. நீங்கள் சொல்லி இருக்கும் வரிகள்...நமது எண்ணங்கள் தேடலிலும், கற்றுக் கொள்ளுதலிலும், ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கவும், பிடித்ததைச் செய்யவும், நேர்மறையாகவும், மகிழ்வான தருணங்களையும் நினைக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், எண்ணங்கள் இளமையாக இருந்துவிட்டால் வயதானாலும் பிரச்சனைகளே இல்லை...வலைப்பதிவர்களில் உதாரணங்கள் சகோதரிகள் துளசி கோபால், கீதா சாம்பசிவம்.....எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை...இவர்கள் இருவரும் செம ஜாலி டைப் பதிவுகள் எழுதுவதை வைத்துக் கணிப்பு...அவர்கள் தான் சொல்ல வேண்டும்..சரியா இல்லையா என்று....

    ReplyDelete
  44. வயதின் பரிணாமம் பற்றிய பகிர்வு நன்று....
    எண்ணத்துக்கு வயதாகாமல் இருந்தால் சரி...

    ReplyDelete

  45. @ கீத மஞ்சரி
    வாழ்வின் அர்த்தம் தெரியாமல் ஓடுவது எல்லா தலைமுறைகளிலும் உண்டு. அர்த்தம் தேடும் முன் பலரது வாழ்வும் முடிந்து விடுகிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  46. @ அப்பாதுரை
    வயதானால் எப்படி இளமையாக இருக்கமுடியும்/ இளமையாக இருக்கமுடியாதுதான் ஆனால் இளமையாகநினைக்க முடியுமே

    ReplyDelete

  47. @ அப்பதுரை
    well said/ பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  48. @ அப்பாதுரை
    /வரம் என்று பார்க்கிற போது வாழ்வில் இளமை தான் வரம் என்று நினைக்கிறேன். (வரத்தின் மதிப்பைப் புரிந்து கொள்ளாமல் பின்னாளில் பலர் வருத்தப்படுவதும் அதனால் தானோ?)

    வயது நிலை என்பதே ரெலெடிவ். தொண்ணூறு வயதுக்காரர் அறுபது வயதுக்காரரை இளமையுள்ளவராக எண்ணலாம்./ பதிவைப் படித்தபின் ஏதேதோ நினைப்புகள் வருவது தெரிகிறது வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  49. @ துளசிதரன்
    வயதுகளின் பரிணாமம் பற்றி எழுதி இருக்கிறேன் ஒவ்வொரு கால கட்டத்தில் எவ்வாறு ரியாக்ட் செய்கிறோம் என்பதைச்சொல்லி இருக்கிறேன் எனக்குத் தெரிந்தவரை எல்லோரிடமும் அன்பு செலுத்தினால் வாழ்வில் எல்லாமே கிடைக்கும் என்றே தோன்றுகிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  50. @ பரிவை சே குமார்
    வயதாகாமல் தடுக்க இயலாது/ ஆனால் வயதாகி விட்டது என்னும் எண்ணம் இல்லாமல் செய்யலாம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  51. தெளிவான தெம்பு தரும் பதிவு!

    ReplyDelete
  52. @ புலவர் இராமாநுசம்
    பதிவை ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete