Thursday, October 22, 2015

புதுக் கோட்டை VIA மலைக்கோட்டை ( 6)


                              புதுக் கோட்டைvia மலைக் கோட்டை (6)
                              ------------------------------------------------------------

                                  பதிவுக்கும் காணொளிக்கும் சம்பந்தமில்லை


எண்ணங்கள் ( தொடர்ச்சி)

இன்னும் சொல்லப் போவது தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகமும் புதுக் கோட்டை வலைப்பதிவர் குழுவும் இணைந்து நடத்திய ஐந்து பிரிவுகளில் ஆன மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் ஐந்து வகைப் பிரிவுகளில் கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிவகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிவகை-(4) புதுக்கவிதைப் போட்டிவகை-(5) மரபுக்கவிதைப் போட்டி



இதில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக
முதல் வகையில்
கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், இணையத்தில் தமிழ், கையடக்கக் கருவியில் தமிழ் (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போன்ற வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - 4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.
 இரண்டாம் வகையில்
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - 4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.
மூன்றாம் வகையில்
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - 4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
.நான்காம் வகையில்
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு.
ஐந்தாம் வகையில் .
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
போட்டிக்கான பதிவுகள் இருக்க வேண்டும் என்பது மாகும் பரிசுத் தொகையாகமொத்தம் ரூ 50000 அறிவிக்கப் பட்டிருந்தது.

இதெல்லாம் தெரிந்தது தானே என்பவர்கள் சிந்திக்க வேண்டியது  வந்த பதிவுகள் கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில்  கொடுக்கப்பட்டிருந்ததா என்பதாகும் எனக்கென்னவோ போட்டிக்கு வந்தபதிவுகள் இந்தக் கட்டுக்குள் இருந்ததா என்னும் சந்தேகமே அதிலும் பெண்கள் முன்னேற்றம் என்னும் வகைக்கு வந்த போட்டிக் கட்டுரைகள் பல இதில் அடங்கியதாகத் தெரியவில்லை. போட்டி என்று வந்தால் யாராவது ஒரு சிலர்தான் வெற்றி பெற முடியும் ஆனால் அவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் போட்டியாளர்களுக்கு அறிமுகமாகி இருக்கக் கூடாது என்று முன்பே ஆலோசனைக் கூறினேன் ஏன் என்றால் தேர்வில் bias  வர வாய்ப்பு உள்ளதென்று  நினைவுப்படுத்தி பதிவும் எழுதி இருந்தேன்  இதை நான் ஏன்  சொன்னேன் என்றால்  எல்லாம் முடிந்தபின் குறைகளைக் கூறுவதை விட அவை வராமலிருப்பதைச் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான்
 ஆனால் நடந்தது நடுவர்களில் அநேகம் பேர்  ஒருவரை ஒருவர் அறிந்த வலைப் பதிவர்கள்  கொடுத்திருந்த நிபந்தனைகளுக்குள்போட்டிக்கு வந்திருந்தபதிவுகள் இருந்தனவா என்று கூட கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது சுய இன்பம் தவறில்லை அதுவே பெண்கள் முன்னேற்றம்  என்பது போல் வந்திருந்த போட்டிக்கட்டுரைக்கு முதல் பரிசு.  இதெல்லாம் பரிசு கிடைக்காதவனின் புலம்பல் என்று ஒதுக்கி விடுதல் தவறாகும் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பார்கள்எதிலும் ஒரு ட்ரான்ஸ்பெரன்சி இருக்க வேண்டும் போட்டிக்கு வந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது  என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன  என்பதும்  தெரியவில்லை.போட்டி என்று இருந்தால் வெற்றியும் இருக்கலாம் தோல்வியும் இருக்கலாம் அதை நன்கறிந்தவன் நான் போட்டிகள் எல்லாம் முடிந்தபிறகாவது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து விளக்கம் இருக்கலாம்
 இதல்லாமல்  விமரிசனப் போட்டி என்று ஒன்று.  அதில் யாராவது வெற்றிபெறும் வாய்ப்பே மிகவும் குறைவு என்று முன்பே எழுதினேன்  அதைக வாசகர்களையும் பதிவர்களையும்  பங்கு பெறச்செய்யும் உத்தி என்றார்கள் இதற்கு வந்த போட்டியாளர்களின்  எண்ணிக்கையே 20க்கும் குறைவு.  அதிலும் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என்பது முடிவானது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
தயை கூர்ந்து இதைப் படிப்பவர்களெந்த உள்நோக்கமும் கற்பிக்க வேண்டாம்  நான் பயந்தபடி முடிவுகள் இருப்பதால் இதை எழுதுகிறேன் என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டமொன்றில்
தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்-- ஜீவி
என்னும் கருத்து இருந்தது சிந்தித்து செயல்படவேண்டிய ஆலோசனை இது.

நான் பெங்களூர் எச் ஏ எல்  நிறுவனத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்ததும் பாம்பே அருகிலுள்ள அம்பர்நாத் என்னுமிடத்தில்  மேற்பயிற்சிக்காக  அனுப்பப் பட்டிருந்தேன் எனவும் வலையில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அந்தப் பயிற்சிப் பள்ளியில்  1957 முதல் இரண்டாண்டுகள்  பயிற்சியில் இருந்தேன்  அந்த இடம்  ஒரு மினி இந்தியா   ஒரே நேரத்தில் 500 பேர்  பயிற்சியில் இருந்த இடம் ஆண்டொன்று போக  பழையவர்கள் சிலர் போவதும் புதியவர்கள் சிலர் வருவதும்  வழக்கமாக நடக்கும் அங்கு பயிற்சி பெற்ற பலரும் உலகின் பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கின்றனர்  இம்மாதிரி பயிற்சி பெற்றவர்கள் ஒன்று கூடலாமே என்னும் எண்ணம் சிலருக்கு வந்து  2010-ம் ஆண்டு ஜனவரி மாதம்  சென்னையில் முதல் சந்திப்பு நிகழ்ந்தது  வந்திருந்தவர்களில் பெரும் பான்மையோர் அவர்களது எழுபதுகளில் இருந்தனர்  சென்னை நேரு விளையாட்டரங்கில்  இந்தக் கூடல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  அதில் பங்கு பெறுபவர் ஆளுக்கு ரூ 600=/ செலுத்த வேண்டும்(மனைவியும் வரலாம்)  ஒரு நாள் நிகழ்ச்சி உலகின்  பல பகுதிகளிலும் இருந்து பலரும் வந்திருந்தனார்  ஒரு சிலரே தொடர்பில் இருந்தனர் என்றாலும்  பங்கு பெறுவதில் குறைச்சல் இருக்கவில்லை.  பங்கு பெற்ற அனைவருக்கும்  ஒரு ஷர்ட் ATS  முத்திரையுடன் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. விழாவுக்காக ஒரு சூவநீர்  தயாரிக்கப்பட்டது  வந்திருந்தோர் அனைவருக்கும் மதிய உணவும்  மாலை தேநீரும் வழங்கப்பட்டது.  இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வோர் இடத்தில் சந்திப்பு நிகழ்கிறது 2016-ல் ஃபெப்ருவரி மாதம்  27 அல்லது 28 தேதியில்  பெங்களூரில் நடக்க இருக்கிறது. பெங்களூர் சந்திப்பில் கலந்து கொள்பவர்   தம்பதியர் இருவரானால் ரூ2500ம் ஒருவரானால் ரூ1500  வசூலிக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது முன்பே பணம் அனுப்பிப் பதிவு செய்து கொள்ள வேண்டும் இதை எல்லாம் நான் பதிவிடக் காரணம்  புதுகையில் நிதிப் பற்றாக்குறை என்று எழுதி இருப்பதுதான் மதுரைப் பதிவர் சந்திப்பிலேயே வருவதாகக் கூறி வராதவர்கள் அதிகம் புதுகையில் 400 பேர் எதிர்பார்க்கப்பட்டு நூறுக்கும் குறைவானவர்களே வருகை தந்திருந்தனர்  ஒரு திருமண அழைப்புக்கே நூறு பேர் எதிர்பார்க்கப் படும் இடத்தில்  எண்பது பேருக்கே உணவுக்குச் சொல்வார்கள் இங்கு கிடைக்கும் தகவல்படி நிறையவே பண விரயம் நேர்ந்திருக்கும்  போலிருக்கிறது.  மேலும் இந்தக் கையேடு விஷயம்  சரியாகச் சிந்திக்கப் படவில்லையோ என்று தோன்றுகிறது ரூபாய் 30000-/  குறைகிறது என்றும்  கையேடு விற்று சரிசெய்யலாம் என்றும் எண்ணுவது சரியா தெரியவில்லை நன்கொடை ஏதும் வேண்டாம் என்பதும் புரியவில்லை.கஷ்டப்பட்டு விழா நடத்தி கைகாசும் போட வேண்டும் என்றால் அது சரியில்லை என்றே தோன்றுகிறது இப்போது கொள்வாரில்லையே என்று ஆதங்கப்பட்டு என்ன லாபம் வருகைக்கான கட்டணம் முன்பே வசூலித்திருந்தால் வராதவர்கள் எண்ணிக்கை கஷ்டம் கொடுத்திருக்காது அடுத்த பதிவர் சந்திப்பு எங்கு என்று முடிவாகாத நிலையில்  அடுத்து விழா நடத்துபவர்கள் கவனமாக இருக்கவேண்டும் இதைத்தான்  முன்பே நண்பர் ஒருவர் என் பதிவு ஒன்றுக்கு இட்ட பின்னூட்டத்தைக் குறிப்பிட்டிருந்தேன்  அதையே  மீண்டும் சொல்கிறேன்
  
தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்-ஜீவி 

நினைவுப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஷர்ட்டின் பின் பக்கம்

அம்பர்நாத் ஆலும்னி மீட்டில் கொடுத்த நினைவுப் பரிசு  முன் புறம் 

   

              
                


                   

 



   

71 comments:

  1. உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். மற்றவர்கள் கருத்து என்ன என்று அறிய, தொடர்கிறேன்.

    :)))

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அன்பின் ஐயா..

    என் மனதிலும் இப்படித் தான் தோன்றியது.. சொல்வதற்குத் தயக்கம்..

    ReplyDelete
  4. //தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்.. //

    கடைசியாக சிவப்புக் கலரில் எழுதியிருக்கும் இந்த வரிகளுக்குக் கீழே

    --- ஜீவி

    என்று போடுங்கள். யார் சொன்னது இதை என்னும் தெளிவிற்காக.

    வலைப்பதிவர் திருவிழா நடப்பதற்கு பல நாட்கள் முன்னாலேயே பொதுப்பார்வையில் என்னால் சொல்லப்பட்டக் கருத்து இது. இந்தக் கருத்தை அப்போதே தீட்சண்யத்துடன் உணர்ந்து திரு.அப்பாதுரை அவர்கள் வழிமொழிந்திருந்தார்கள்.

    'டூ லேட்' என்று அப்போது நீங்கள் கணித்திருந்தாலும், லேட்டஸ்ட்டான பதிவுக்கு உபயோகப்படுத்திக் கொண்டமைக்கு மிக்க நன்றி, ஜிஎம்பீ ஐயா!

    ReplyDelete

  5. @ ஸ்ரீராம்
    மற்றவர்கள் கருத்து சொல்வார்களா என்பதே சந்தேகம் ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன் வருகைக்கு நன்றி இதில் கருத்து சொல்ல பதிவர் விழாவுக்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன சொல்கிறீர்கள் ஸ்ரீ/ ? வருகைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பதிவர் விழாவுக்கு வரவில்லை என்பதோடு, போட்டிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லையே..!

      :))

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete

  6. @ துரை செல்வராஜு
    நீங்கள் மட்டுமல்ல . பலரும் இம்மாதிரி உணர்ந்திருக்கலாம் நமக்கு ஏன் பொல்லாப்பு என்று வாளா இருப்பார்கள் . வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  7. @ ஜீவி
    நல்ல கருத்து யார் சொன்னாலும் நான் எடுத்துக் கொள்வேன் அந்தப் பதிவில் டூ லேட் என்று சொன்னதற்கு காரணம் எல்லா விஷயங்களும் முடிந்து செயலில் இருந்தனர். ஆனால் இனி வரும் விழாக்களுக்கு உங்கள் கருத்துப் படி செயல் படலாம் என்று தோன்றியதால் இதில் பதிவிட்டேன் நீங்கள் விரும்புவீர்களோ மாட்டீர்களோ என்னும் சந்தேகமே உங்கள் பெயரைப் பதிவிடாமல் தடுத்தது பெயர் இடவில்லையே தவிர ஹைலைட் செய்து காண்பித்திருக்கிறேனே என் ஐடியா என்றும் சொல்லவில்லையே உங்கள் பெயரை எழுதி விடுகிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  8. உங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னது நல்லது. அடுத்த சந்திப்பினை ஏற்பாடு செய்பவர்களுக்கு பயன்படும்.

    ReplyDelete
  9. பதிவர் மாநாட்டுக்கு இவ்ளோ என்று நிர்ணயிப்பது கஷ்டம் இல்லையோ! அதுவுமில்லாமல் வரேன்னு சொன்னவங்க வராமல் இருக்கக்கூடாது..... உடல்நலக்குறைவு என்ற காரணம் தவிர, இல்லையா?

    ReplyDelete
  10. வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விண்ணப்பிந்திருந்தும் நானும் என் அம்மாவும் கலந்து கொள்ள இயலாமல் போனது எதிர்பாராரது. மேலும் உங்கள் இடுகையின் மூலம்தான் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தெரிந்துகொண்டேன். தொலைபேசியில் சொல்லி இருக்கலாம். ஆனால் ஞாயிறு காலை வரை டென்ஷன்.

    சகோ பால கணேஷிடம் கூட நான் எனக்கு ஏதும் விருது அறிவிக்கப்பட்டிருந்தால் வாங்கி வரும்படி ஞாயிறு காலை 10 மணிக்கு ஃபோன் செய்தேன். ( அதன் பின் ஜி மெயிலை ஓபன் செய்து பார்த்தால் முதல் நாள் மாலையே திண்டுக்கல் தனபாலன் சகோ ஜி ப்ளஸ்ஸில் பரிசு கிடைத்தவர்கள் பற்றிய விபரத்தை அறிவித்து டாக் செய்திருந்தார்கள். )

    ஏனெனில் அப்போதுதான் மருத்துவ ரிசல்டில் அதிகப்படியாக பயப்பட ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. என்ன சொல்ல . புதுகை சகோதரர்களின் அதிகப்படியான சுமைக்குக் காரணமாகிவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  11. ஐயா... வணக்கம்...

    // ஓர் // // அமர்வு // // உடகார்ந்து // // கருத்துப் பகிர்தல்கள் //

    1) //ஓர் // அல்ல பல கூட வைத்துக் கொள்வோம்...

    2) // அமர்வு // எங்கே ? எப்போது...? யார் தல...? சே தலைமை...?

    3) // உடகார்ந்து // நின்று கொண்டே இருந்தாலும் பரவாயில்லை...

    4) // கருத்துப் பகிர்தல்கள் // பகிர்ந்து தானே...? செய்து விடுவோம்...

    முடிவாக : ஏற்பாடு செய்து அடுத்த பதிவு இதைப் பற்றி இருந்தால் சந்தோசம்...

    நன்றிகள் பல...

    வணக்கங்கள் பல...

    ReplyDelete
  12. மன்னிக்கவும் : சிறு மாறுதல் --> முடிவாக

    முடிவாக : ஏற்பாடு செய்து அடுத்த பதிவு இதைப் பற்றி இருந்தால் // ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்.. // (!)

    நன்றிகள் பல...

    வணக்கங்கள் பல...

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா தங்களின் விரிவான அலசல் அடுத்த பதிவர் மாநாடு நடத்த பயன்படும் என்பது எமது எண்ணம்.

    தாங்கள் சொல்லியிருக்கும் பல விடயங்கள் நானும் அன்பின் ஜி திரு. துரை செல்வராஜூ அவர்களும் அபுதாபி சந்திப்பில் பேசிக்கொண்டோம் நன்றி ஐயா.

    ReplyDelete
  14. வணக்கம் அய்யா. நான் பேச்சாளனாக அறியப்பட்டுவிட்டாலும் என்னை ஒரு முழுமையான பேச்சாளனாக நான் ஏற்கும்படி இன்னும் பேசிவிட வில்லை என்றே நம்புகிறேன். நண்பர்களின் பாராட்டில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது இயல்பு என்றாலும் பாராட்டில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதையும் ஓரளவுக்கு அறிவேன். அவர்களின் அன்பை மட்டுமே அதில் எடுத்துக் கொள்வேன். அதேபோல, என் செயல்பாடுகளில் தமிழக ஆளுநர், அமைச்சர் பெருமக்கள், 7,8மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்ட மாபெரும் மாவட்ட அறிவொளி வெற்றிவிழா (1991) நிகழ்ச்சியை நடத்திய அனுபவமும் உண்டு. அதிலும் என் குறைகளை மறந்து பாராட்டிய மாவட்ட ஆட்சியரும் உண்டு. குறை சொன்னவர்களும் உண்டு. பேச்சு செயல் இரண்டிலும் பின்னணி புரிந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவே முயன்று வருகிறேன். இந்தப் பதிவர் விழா எமது முன்னோடிப் பதிவர்களின் அனுபவங்களை அறிந்து -மனச்சாட்சிக்கு விரோதமின்றி- உண்மையாக உழைத்த நண்பர்களின் கூட்டுப்பலன். இதிலும் குறைகளை மறந்து பாராட்டுவோர் மத்தியில் நீங்கள் சொன்ன குறைகளை அடுத்த சந்திப்பை நடத்துவோர் எடுத்துக் கொள்ளலாம். எங்களை விட அனுபமும் எல்லாவற்றையும் யோசிக்கும் ஆற்றலும் கொண்டிருக்கும் நீங்கள் அடுத்த நமது பதிவர் விழாவை நடத்தலாம் என்பது என் கருத்து. இந்தக் கருத்துக்கும், உங்கள் படங்கள்-பதிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் அன்புடன் தெரிவித்து வணங்குகிறேன். நன்றி.

    ReplyDelete
  15. அடியேன் சொல்ல வேண்டியதை திருமிகு முத்து நிலவன் ஐயா சொல்லி விட்டார்கள்... அவருக்கு நன்றிகள் பல...

    அடுத்த பதிவர் சந்திப்பு உங்கள் தலைமையில் தான் என்பது உறுதியாகி விட்டது என்றே நம்புகிறேன்...

    ஆலோசனை குழுவாக திருமிகு ஜீவி அவர்கள் மற்றும் திருமிகு அப்பாத்துரை அவர்கள் இருக்கலாம் என்றும் நம்புகிறேன்...

    மறுபடியும் சொல்கிறேன் ஐயா...

    /// தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்.. //

    கடைசியாக சிவப்புக் கலரில் எழுதியிருக்கும் இந்த வரிகளுக்குக் கீழே

    --- ஜீவி

    என்று போடுங்கள். யார் சொன்னது இதை என்னும் தெளிவிற்காக. ///

    தெளிவான அடுத்த பதிவை எதிர்நோக்கும்...

    என்றும் அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    அப்புறம் முக்கியமாக...

    இந்தக் கருத்துரைக்கும் கீழுள்ள இணைப்பிற்கும் சம்பந்தம்(மே) இல்லை என்று சொல்ல மாட்டேன்...!!!

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html
    http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html

    அடுத்து அடியேன் எழுதப் போகும் பதிவுகள் (உங்களையும் சேர்த்து) யாரையும் காயப்படுத்தும் பதிவுகளும் அல்ல... விரைவில் வாசிக்க காத்திருங்கள்...

    நன்றிகள் பல...

    வணக்கங்கள் பல...

    ReplyDelete
  16. ஐயா மன்னிக்கவும்...

    மேலுள்ள இணைப்புகள் அனைவருக்கும் என்று நினைத்து கொடுத்து விட்டேன்...

    இப்போது கீழுள்ள இணைப்பு உங்களுக்கு (1) ஆக்கபூர்வமான முயற்சியாக ஊக்கம் கொடுத்த... (2) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கிற... (3)பெரிய... மிகப் பெரிய... (4)மூத்த... அனுபவம் வாய்ந்த... (5) பெரியவர்களுக்காக...

    அன்பான வணக்கங்களோடு...

    பாடல் வரிகள் மட்டும்... http://dindiguldhanabalan.blogspot.com/2012/09/3.html

    நன்றிகள் பல...

    வணக்கங்கள் பல...

    ReplyDelete
  17. வணக்கம் அய்யா...மிக்க மகிழ்ச்சி அடுத்த கூட்டம் நீங்கள் வழி நடத்த சிறப்பாக அமைய உள்ள விழாவைக்காண மிகுந்த ஆவலுடன் இருக்கின்றோம்....உங்களின் அனுபவம் நிறைந்த நிறைவான விழா....எங்களுக்கு வழி காட்டுதலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை....
    மிக்க நன்றி அய்யா..

    ReplyDelete
  18. //அடுத்த பதிவர் சந்திப்பு உங்கள் தலைமையில் தான் என்பது உறுதியாகி விட்டது என்றே நம்புகிறேன்...

    ஆலோசனை குழுவாக திருமிகு ஜீவி அவர்கள் மற்றும் திருமிகு அப்பாத்துரை அவர்கள் இருக்கலாம் என்றும் நம்புகிறேன்...//

    அன்புள்ள திண்டுக்கல் தனபாலன்,

    என் மெயில் ஐடிக்கு தாங்கள் அனுப்பி வைத்திருந்த கடிதத்தைப் பார்த்தேன். அதற்கு முன்னால் அதையே ஜிஎம்பீ ஐயாவின் இந்தத் தளத்திலும் படித்து விட்டேன்.


    /// தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்.. //

    இதுவெ நான் சொன்னது. நான் சொன்னது தமிழ் வலைப்பதிவுலகின் பொதுவான வளர்ச்சி குறித்து. அது பற்றி இந்த மாதிரி பதிவர்கள் பலர் கூடும் மாநாடுகளில் விவாதப் பொருளாகக் கொண்டு விவாதித்தால் அது தமிழ் வலைப்பதிவுலகை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆக்கபூர்வமான முயற்சியாக இருக்கும் என்று.சொல்லியிருந்தேன். புதுகை மாநாட்டிற்கு மட்டுமல்ல, இனி நடக்கப் போகும் எந்த வலைபுலக மாநாட்டிற்கும் பொருந்தக் கூடிய ஒரு சப்ஜெக்ட் இது. அதை ஒரு சஜஷனாகக் கொடுத்திருந்தேன்.

    நான் தமிழ் வலைப்பதிவுலகின் மேம்பட்ட வளர்ச்சி குறித்துச் சொன்னால், நீங்களோ நடந்து முடிந்த மாநாட்டைப் பற்றி மாறுபட்ட கருத்தை ஏதோ நான் சொல்லி விட்டதாக நினைத்து எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கு என்று நினைக்கிறேன். என் நினைப்பு சரியென்றால் நான் எழுதியிருப்பது பற்றி உங்கள் புரிதல் என்ன என்று சொல்லுங்கள். விளக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. /// இனி நடக்கப் போகும் எந்த வலைபுலக மாநாட்டிற்கும் பொருந்தக் கூடிய ஒரு சப்ஜெக்ட் இது. அதை ஒரு சஜஷனாகக் கொடுத்திருந்தேன். ///

      ஐயா நீங்களும் வலைப்பதிவர் தானே...? தமிழ் வலைப்பதிவுலகின் மேம்பட்ட வளர்ச்சி குறித்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்... நீங்களே பதிவு செய்யுங்கள்...

      காத்திருக்கிறேன்...

      Delete
  19. முந்தைய பதிவில் படத்துக்கும், இன்றைய பதிவில் காணொளிக்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்லும் GMB ஐயாவின் கருத்துக்கு --> திருமிகு ஜீவி அவர்களே... தங்களின் கருத்து என்ன...?

    உங்கள் புரிதல் என்ன என்று சொல்லுங்கள்... உங்களின் புரிதலையும் நடந்து முடிந்த (முந்தைய பதிவில் படத்துக்கும், இன்றைய பதிவில் காணொளிக்கும்) மாறுபட்ட மறுமொழியை ஏதோ நான் சொல்லி விட்டதாக நினைத்து எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கு...! (என்று நினைக்கிறேன்)

    விளக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்...

    ReplyDelete
  20. அன்புள்ள திண்டுக்கல் தனபாலன்,

    //நான் தமிழ் வலைப்பதிவுலகின் மேம்பட்ட வளர்ச்சி குறித்துச் சொன்னால், நீங்களோ நடந்து முடிந்த மாநாட்டைப் பற்றி மாறுபட்ட கருத்தை ஏதோ நான் சொல்லி விட்டதாக நினைத்து எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கு என்று நினைக்கிறேன். என் நினைப்பு சரியென்றால் நான் எழுதியிருப்பது பற்றி உங்கள் புரிதல் என்ன என்று சொல்லுங்கள். விளக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.//

    நான் எழுதியிருப்பது பற்றி என்ன புரிதல் கொண்டு ஆவேசப்பட்டீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் தவறாக நினைத்திருந்தால் அப்படித் தவராக நினைக்கப்பட்ட நினைப்பை களைய வேண்டியது என் பொருப்பல்லவா?..

    ReplyDelete
  21. வலைப்பதிவில் நேரம் போக்க எழுதுபவர்களை விட தமிழ் சமூகத்திற்காக விக்கியில் எழுதுபவர்களையே ஒர் இளைஞனாக பின்பற்ற விரும்புகிறேன்.
    ஜம்புலிங்கம் ஐயா rocks.

    ReplyDelete
  22. நீங்கள் எதிலும் வெளிப்படையானவர்; உங்கள் கருத்துக்கள் அடுத்த சந்திப்பிற்கான திட்டமிடலின் போது உதவும். இந்த பதிவினில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு விழாக் குழுவினர்தான் பதில் தர முடியும். ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களது மறுமொழியே போதுமானது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

  23. @ ஸ்ரீ ராம்
    பதிவர் விழாவுக்கு வராவிட்டால் என்ன. போட்டிகளில் கலந்து கொள்ளாவிட்டால் என்ன கூறி இருந்த கருத்துக்களில் பலவும் அன்றைய நிகழ்வு பற்றியதல்லவே வருகைக்கு நன்றி

    ReplyDelete

  24. @ வெங்கட் நாகராஜ்
    வெளிப்படையான கருத்துக்கள் ஒரு சூடான விவாதத்தைக் கிளப்பி விட்டதே.நன் குறைகளாகக் கூறியவை யாரையும் புண்படுத்த அல்ல. மாறுபட்ட அபிப்பிராயம் இருக்கிறது என்று தெரிவிக்கவே வருகைக்கு நன்றி

    ReplyDelete

  25. @ துளசி கோபால்
    வேறு சில இடங்களில் இருக்கும் நடை முறையைச் சொன்னேன் விழாநத்துபவர் நஷ்டப்படக் கூடாது அல்லவா.? வருகைக்கு நன்றி

    ReplyDelete

  26. @ தேனம்மை லக்ஷ்மணன்
    பலருக்கும் விழாவுக்கு வரவேண்டும் என்னும் ஆசை நிச்சயம் இருந்திருக்கும் ஆனால் சில விஷயங்களின் பாதிப்பு என்ன என்றே தெரியப்படுத்தி இருக்கிறேன் மதுரையிலும் வருகிறேன் என்று சொல்லி வராதவர்கள் நிறையவே இருந்தனர். உங்கள் மன உறுத்தல் புரிந்து கொள்ள முடிகிறது. வருகைக்கு நன்றி மேம்




    ReplyDelete
  27. // நான் எழுதியிருப்பது பற்றி என்ன புரிதல் கொண்டு ஆவேசப்பட்டீர்கள் என்று சொல்லுங்கள். //

    திருமிகு ஜீவி அவர்களுக்கு : ஆவேசமா...? அப்படி நினைத்திருந்தால் இப்பதிவிற்கு தகுந்த ஒரே ஒரு குறளை சொல்லி விட்டு போயிருப்பேன்... எந்த குறள் என்பதை நீங்களே யோசியுங்கள்... இப்படியெல்லாம் (இந்த மறுமொழியையும் சேர்த்து) கருத்துரை இட வீணாக நேரத்தை வீணடிக்க மாட்டேன்... இப்பதிவின் என் முதல் இரு கருத்துரையை வாசியுங்கள்... முடிந்தால் அதற்கு மறுமொழி கூறுங்கள்... நன்றி... வணக்கம்...

    ReplyDelete

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    வணக்கம் உங்களிடமிருந்து இப்படிப்பட்ட பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. கூறி இருந்த ஆலோசனை பற்றிக் கருத்துக் கூறும்போது ஒரு கேலியும் சரியாகப் புரிந்து கொள்ளாததும் தெரிகிறது. விளக்கம் கேட்கலாம் பிறரது கருத்தை உதாசீனப்படுத்தும் குணம் தெரியக் கூடாது வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  29. @ திண்டுக்கல் தனபாலன்
    நடந்து முடிந்த பதிவர் விழா குறித்த என் கருத்துக்களின் இறுதிபதிவு என்று கூறி இருந்தேன் சொல்லவேண்டியதை சொல்லி யாகி விட்டது. ஏற்பதோ ஒடுக்குவதோ அவரவர் விருப்பம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் விழாதின நிகழ்வுகள் பற்றி நான் எதுவுமே குறையாகக் கூறவில்லை. என் பதிவுகளின் சாரத்தைப் புரிந்து கொண்டு இருக்கவேண்டும் நன்றி

    ReplyDelete

  30. @ கில்லர்ஜி
    உங்களிப் போன்றோர் பலர் நினைத்ததைப் பதிவாக்கினதே நான் செய்த பிழையா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  31. @ முத்து நிலவன்
    உங்கள் திறமையைப் பற்றியும் ஆற்றல் பற்றியும் நான் விவாதிக்கவில்லை. நடந்து முடிந்த பதிவர் விழாவில் சில குறைகள் மனதுக்குப் பட்டது பதிவாக்கினேன் ஒரு பாடகர் பாடும் போது சில குறைகள் தென்பட்டால் அதை சங்கீத விமரிசிகன் கூறு வது வழக்கம் அவனிடம் நீயே பாடிக்காட்டு பார்க்கலாம் என்பது போல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம் விமரிசிகன் எப்போதும் தன்னை ஒரு வித்தகன் என்று சொல்லிக் கொள்வதில்லை. நானும் என்னைப் பற்றி அவ்வாறு கூறிக் கொள்ள வில்லை. சில குறைகள் தென்பட்டது அவற்றைச் சுட்டி இருக்கிறேன் அவற்றுக்கு பதில் இல்லை.( கவிதை ஓவியம் தவிர ) தனிப்பட்ட முறையில் அணுகாமல் சொல்வதில் தவறு என்று உங்களுக்குப் பட்டிருந்தால் அது குறித்து எழுதி இருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete


  32. //முந்தைய பதிவில் படத்துக்கும், இன்றைய பதிவில் காணொளிக்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்லும் GMB ஐயாவின் கருத்துக்கு --> திருமிகு ஜீவி அவர்களே... தங்களின் கருத்து என்ன...?//

    இதற்கெல்லாம் என்னிடம் கருத்துக் கேட்டால் எப்படி?. என் கருத்துக்களுக்கு விளக்கம் கேட்டால் பதில் சொல்லலாம்.

    ஜிஎம்பீ சாரின் இந்தத் தொடரின் 5-வது பகுதிக்கு நான் இட்டிருந்த பின்னூட்டம் கீழே காண்பது: (இதையெல்லாம் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். அதனால் இந்த மறுபதிவு)

    எனது கீழ்க்கண்ட கருத்துக்கு மாறுபட்ட கருத்து உங்களுக்கு இருந்து விளக்கம் கேட்டால் சொல்லலாம். அல்லது ஒரு நன்றி கூட சொல்ல மனமில்லை எனில் அதையும் நான் வற்புறூத்த மாட்டேன்.

    "ஒரு பெரிய முயற்சியில் ஒவ்வொருவர் நோக்கில் ஓரிரண்டு தம்மாத்துண்டு சறுக்கல்கள் இருக்கலாம். ஆனால் அதுவே பொதுப்பார்வை என்றாகி விடாது. பொதுப்பார்வை என்பது விசாலமானது. பிர்மாண்டத்தை உள்ளடக்கியது. A to Z கணக்கில் எடுத்துக் கொண்டால் சின்ன சின்ன விஷயங்கள் பொருட்டாகவே தெரியாது. பட்ட சிரமங்களில் அமுங்கியே போய் விடும்.

    எந்த விழாவும் நடந்து முடிந்த பின் அதை நடத்தியவர்கள் பட்ட அனுபவங்கள் தாம் அடுத்த விழாவுக்கான உரம். நடந்த நிகழ்வுகளை அவர்கள் விவரிப்பது தான் உண்மையான ஸ்டாக் டேக்கிங்காக இருக்கும். ஆனால் விழாவை வெற்றிகரமாக நடத்திய மகிழ்ச்சியில் எல்லாமே நிறைவாகத் தெரியும் அவர்களுக்கு. அதுவே அடுத்த விழாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான அச்சாரமாக அவர்களுக்கு அமையும். இது தான் பொதுப்பார்வை பெற்றோருக்கே வாய்த்த பொதுநல சித்தாந்தம்.

    தேர்களை இழுப்பவர்களின் தளறாத முயற்சிகளால் தான் தேர்கள் இழுக்கப்பட்டு நிலை சேர்கின்றன. தேர்களை இழுப்போரைப் பார்ப்பவர்களும் வடத்தைப் பிடித்து தங்கள் முயற்சியை அதில் பதிக்கும் பொழுது தேர் இழுப்பதின் சிரமம் தெரிகிறது. அத்தனை பேரின் பங்களிப்பில் லேசாக ஒரு குலுங்கு குலுங்கி தேர் அசைந்து நகரும் பொழுது அது அத்தனை பேரின் மகிழ்ச்சியும் ஆகிறது.

    இது ஆரம்ப ஸ்டேஜ். தவழும் பருவம். வலைப்பதிவர்களுக்கென்று மாநில அளவில் ஒரு அமைப்பு ஏற்படும் பொழுது அதற்கான ஆரம்பப் படிக்கட்டுகளைக் கட்டியவர்கள் சிந்திய வியர்வையின் சிறப்பு தெரியும்."

    நீங்கள் சொல்லாவிட்டாலும் நான் சொல்கிறேன்.

    மிக்க நன்றி, தனபாலன்.
    --

    ReplyDelete
    Replies
    1. @ ஜீவி ஐயா :

      நன்றிகள் பல...

      வணக்கங்கள் பல...

      Delete

  33. @ திண்டுக்கல் தனபாலன்
    மீண்டும் you have jumped the gun என் செயல்களை நானே முடிவு செய்பவன் பிறரின் எண்ணங்களில் சரியானதை எடுத்துக் கொள்வது என் இயல்பு. ஜீவி அவர்களது கருத்து சரியாகப் பட்டது பதிவாக்கினேன் அவற்றை நின்று செயல் படுத்துவதா அமர்ந்து செயல் படுத்துவதா என்பது இனி விழா நடத்துபவர்கள் சிந்திக்கட்டும் நன்றி ஐயா.

    ReplyDelete

  34. @ திண்டுக்கல் தனபாலன்
    எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்து எழுதுங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதுங்கள் உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படிப்பவன் நன்றி. பலரும் நிலுவையில் இருக்கும் பதிவுகளையுமே படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இணைப்புகள் அதுவும் என்றோ தீர்க்கதரிசனமாக எழுதிய பதிவுகளின் இணைப்பைக் கொடுத்துப் படித்துப் பாருங்கள் என்று சொல்வது .......? இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பேன் நன்றி

    ReplyDelete

  35. @ வலைப்பதிவர் சந்திப்பு 2015
    இப்பதிவை இணைத்ததற்கு நன்றி.

    ReplyDelete

  36. @ எம் கீதா
    அடுத்தவிழா நான் வழிநடத்திச் செல்வதாக இருக்கும் என்று நீங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது இளைஞர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது எப்போதும் நிறைகளையே கேட்க விரும்புவது மனித இயல்பு. குறைகள் நம்மைத் திருத்திக் கொள்ள என்று நினைப்பது விவேகிகளின் குணம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  37. @ ஜீவி
    நாம் ஒன்று எழுதினால் புரிதல் வேறு ஒன்று என்பது விளங்குகிறது. விளக்கப் பின்னூட்டத்துக்கு நன்றி சார்

    ReplyDelete

  38. @ திண்டுக்கல் தனபாலன்
    இன்னபொருளில் எழுதுங்கள் என்று பதிவரைக் கேட்பது நியாயமா டிடி. இது அவர் விருப்பமாக இருந்தால் சரி நன்றி சார்

    ReplyDelete

  39. @ திண்டுக்கல் தனபாலன்
    என் பதிவில் கண்ட படத்துக்கு நான் விளக்கமளித்து விட்டேன் அதைஒ ஏற்பதே நியாயம் அது குறித்து மேலும் மேலும் சர்ச்சையை வளர்ப்பது எதையும் புரிந்து கொள்ள விருப்பமில்லாததையே காட்டுகிறது

    ReplyDelete

  40. @ ஜீவி
    ஆக்கபூர்வமான கருத்துரைகளும் ஏதோ அவர்களுக்கு எதிரானது என்று நினைக்கிறார்கள் போலும் பின்னூட்டங்களை வாசித்ட்க்ஹுப் பார்த்தால் சொல்லப் பட்ட குறைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் மிகக் குறைவான சம்பந்தமே இருப்பது புரியும் தூங்குபவரை எழுப்பலாம். தூங்காதவரை.....!உங்கள் கருத்தைச் சொல்ல முயற்சி செய்வது பாராட்டத்தக்கதே. நன்றி ஐயா.

    ReplyDelete

  41. @ ராஜ்குமார் ரவி
    ஜம்புலிங்கம் ஐயா பாராட்டுக்குரியவரே நன்றி.

    ReplyDelete

  42. @ தி தமிழ் இளங்கோ
    ஐயா வருகைக்கு நன்றி நான் வெளிப்படையாக எழுதுவது பலருக்கும் பிடிக்கவில்லை. புகழுரைகளையே விரும்புகிறார்கள் குறை சொன்னால் பொறுப்பதில்லை. முத்து நிலவன் ஐயா கவிதை ஓவியம் குறித்து மட்டுமே விளக்கம் கூறி இருக்கிறார். மற்ற கருத்துக்களுக்கு விளக்கம் ஏதும் காணோம் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  43. @ ஜீவி
    சிலரது கருத்துக்களை அணுகும் போது இது இப்படித்தான் என்னும் முடிவெடுத்தே அணுகுகிறார்களென்று தோன்றுகிறது விளக்கங்கள் மேலும் மேலும் அக்ரிமோனியசாகவே போகிறது மீண்டும் மீண்டும் விளக்க முயற்சி செய்யும் உங்கள் போக்கு வித்தியாசமானது வருகைக்கும் விளக்கங்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  44. தங்களின் பதிவின் சாரங்களும் புரிகிறது... விளக்கங்களும் புரிகிறது... அதை விட இணைத்த படமும் / காணொளியும் மிக மிக நன்றாக புரிகிறது... தங்களுக்கும் ஜீவி ஐயாவிற்கும் அனேக நன்றிகள்... வணக்கங்கள்... வாழ்த்துகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  45. உங்களது வெளிப்படையும், மனம் திறந்த பேச்சும் எங்களுக்கு பல வகையில் ஊக்கம் தருகின்றன. ஒருசிலர் எங்கோ குறை சொல்வதைப் பெரிதாகக் கொள்ளவேண்டாம். நாங்கள் உங்களிடமிருந்து அதிகம் கற்கின்றோம். நன்றி.

    ReplyDelete

  46. @ திண்டுக்கல் தனபாலன்
    புரிதலுக்கும் வணக்கங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete

  47. @ திண்டுக்கல் தனபாலன்
    ஜீவி சார் இங்கு மீண்டும் வந்தால் உங்கள் நன்றிகளையும் வணக்கங்களையும் ஏற்றுக் கொள்ளலாம் அவருக்கான பின்னூட்டத்துக்கு என் தளம் உபயோகமானதில் மகிழ்ச்சி. நன்றி டிடி

    ReplyDelete

  48. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ஐயா வணக்கம் என் இந்த வெளிப்படையான குணமே என் பலமும் பல வீனமும் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  49. வலைப்பதிவர் சந்திப்பிற்கென புதுக்கோட்டை விழாக்குழுவினர் அணி நல்ல உழைப்பு தந்திருக்கின்றனர். ஆதலால்தான் பதிவர் விழா ஏற்பாடுகள் -in general-நல்லவிதமாக அமைந்திருந்தன. எதையும் பெரிதாகச் செய்ய விழைகையில், குறை, நிறைகள் கலந்துகட்டியாக இருக்கும்தான்.என்ன செய்வது?

    இருந்தும், இன்னும் நன்றாகச்செய்திருக்கலாமே, சிறப்பாக அமைந்திருக்கலாமே என்கிற ஆதங்கத்தில், நல்ல நோக்கில்தான், விழாவினைப்பற்றிய உங்கள் பிரதிபலிப்புகளைப் பதிவிட்டுள்ளீர்கள் எனப் புரிகிறது, ஜீஎம்பி-சார். As is your nature, you have expressed yourself freely, which is fine and welcome.

    ReplyDelete
  50. வணக்கம் அய்யா .பொறுப்பை தட்டிக்கழிக்க என்றுமே நினைக்கக்கூட மாட்டோம்....எவ்வளவோ திட்டமிட்டு செய்த போதும் நடந்துவிட்ட குறைகளை ஏற்பது போலவே நிறைகளையும் ஏற்கிறோம்....மீண்டும் சிறப்பானதொரு விழா காணும் ஆவலில் கூறினேன்...பதிலளித்தமைக்கு நன்றி...

    ReplyDelete

  51. @ ஏகாந்தன் நானும் எங்கும் 11ம் தேதிய விழாபற்றிக் குறை படவில்லை. நடத்தியதில் குறை என்றுதோன்றியதையே சுட்டி இருக்கிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  52. @ எம் கீதா
    புரிதலில் எங்கோ குழப்பம் என்றே தோன்றுகிறது மேடம் முதலாவது விழா நடந்த நாளைப் பற்றி நான் குறை எங்கும் கூறவில்லை. யாரும் பொறுப்பை தட்டிக் கழித்தார்கள் என்றும் சொல்லவில்லை. பதிவு 5ம் 6ம் எனக்குக் குறை என்று பட்டதை கூறுகிறது. எல்லாக் கவிதைகளும் ஓவியங்களாகும் என்றும் சொல்லவில்லை. கவிதைகள் ஓவியமாக என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை என்றுதான் தான் கூறி இருக்கிறேன் முக்கியமாகப் போட்டிகள் என்பது பதிவர் விழாவில் இதுவரை நடக்காதது, அதற்கு வந்த பதிவுகள் கொடுக்கப் பட்டிருந்த தலைப்புக்குள் அடங்கியதாகத் தெரியவில்லை. பெண்கள் முன்னேற்றம் பகுதியில் முதல் பரிசு வென்ற பதிவைப் படித்துப் பாருங்கள் சொல்லப்பட்ட கருத்துக்கள் பெண்கள் முன்னேற்றம் பற்றி இருந்ததா சிந்தியுங்கள். தவறுகள் நேரக் காரணமும் எனக்குத் தோன்றிய விதத்தில் கூறி இருக்கிறேன் போட்டிகள் அறிவித்த போதே நடுவர்கள் பற்றி எழுதி இருந்தேன் நடுவர்கள் பதிவர்களை அறிந்திருக்கக் கூடாது என்றும் அறிவதனால் bias ஏற்பட வாய்ப்பு உண்டென்றும் எழுதி இருந்தேன் விமரிசனப்போட்டியில் யாரும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் ப்ராபபிலிடிஸ் அடிப்படையில் கூறி இருந்தேன் எனக்கு யார் மீதும் காழ்ப்பு உணர்ச்சி கிடையாது. பலரும் சொல்லத் தயங்கியதைக் கூறி இருந்தேன் அவ்வளவுதான் உங்கள் பின்னூட்டத்தில் .பதிலளித்தமைக்கு நன்றி...என்று எழுதி இருக்கிறீர்கள் நான் யாருக்கு என்ன பதில் அளித்தேன் புரியவில்லை. வந்த பின்னூட்டங்களுக்கு மறு மொழி அளித்திருக்கிறேன் அவ்வளவுதான் உங்களுக்கு இந்த விளக்கம் நீங்கள் உங்களுடன் பணி புரிந்த குழுவினருக்குத் தெளிவிப்பீர்கள் என்னும் நம்பிக்கையில்தான் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  53. வணக்கம் அய்யா..

    மனதிற்குள் வைத்துக்கொண்டு புறம் பேசுவதை விட,நீங்கள் தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி...ஏற்கிறோம் உங்களின் கருத்துகளை.விமர்சனங்களே மேலும் சிறப்பிற்கு வழிவகுக்கும் என்பதை உணர்கிறேன்...நன்றி அய்யா.

    ReplyDelete
  54. தாங்கள் மனதில்பட்ட நிறைகுறைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்...
    புறம் பேசுவதைவிட நண்பர்களுக்கு தெரியும் வண்ணம் பகிர்வாய் ஆக்கியிருக்கிறீர்கள்...
    தங்கள் கருத்துக்களும் அதற்கான நிலவன் ஐயா, தனபாலன் அண்ணா, கீதா அக்காவின் புரிதல் பதில்களும் எல்லாரும் விழா பற்றி அறியத் தந்திருக்கின்றன...

    குறைகள் மறப்போம்... நிறைகள் போற்றுவோம்...

    இனி நடப்பவைகளில் குறைகள் நேராமல் பார்த்துக் கொள்வோம்...

    நன்றி.

    ReplyDelete

  55. @ எம் கீதா
    உங்கள் பெருந்தனமையான பின்னூட்டத்துக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  56. @ பரிவை சே குமார்
    இந்தப் பதிவு எனக்கு நிறைய எதிர்ப்பாளர்களையும் பெற்றுத் தந்திருக்கிறதோ எனும் சந்தேகம் உண்டுபதிவினை சரியான முறையில் அணுகியமைக்கு நன்றி சார்

    ReplyDelete
  57. @G.M B ஐயா
    //.. இந்தப் பதிவு எனக்கு நிறைய எதிர்ப்பாளர்களையும் பெற்றுத் தந்திருக்கிறதோ எனும் சந்தேகம் உண்டு
    ஐயம் தேவையில்லை... பதிவுலக அரசியலில் இதெல்லாம் சகஜம். :)

    ReplyDelete

  58. @ ராஜ்குமார் ரவி
    ஆனால் நான் போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் என்பதை தெரிந்தவன் பதிவுலகம் அரசியல் அல்லவே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  59. @G.M B ஐயா
    தயைகூர்ந்து சார் என அழைக்காதீர்கள். வலைப்பதிவுலகத்திற்கு நான் மாணவன் தான். பதிவுலகில் அரசியல் இல்லை எனும் உங்கள் புரிதல் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சில பின்னூட்டங்கள் வெட்டு குத்தில் கூட முடிவதாலேயே தமிழ் வலையுலகம் இன்னும் மேம்பட வேண்டுமென்று நினக்கிறேன். இதில் உங்கள் எவர் மனதேனும் புண்பட்டிருந்தால் எனை மன்னித்தருள்க.

    ReplyDelete

  60. @ ராஜ்குமார் ரவி
    பதிவுலகில் மாணவன் என்று கூறும் நீங்கள் என்னைவிட அதிகம் தெரிந்து வைத் திருக்கிறீர்கள் முகம் காணா நண்பர் ஆனதால் சார் என்றேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  61. அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,
    வணக்கம். வலைப்பதிவர் விழா குறித்த உங்களின் தொடர்க் கருத்துரையை (கட்டுரையை) வாசித்தேன். எனவே இதுகுறித்து உங்களிடம் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
    மனித இனம் மொழியைக் கண்டறியத் தொடங்கிய காலத்துப் பேச்சுமொழியிலிருந்து எழுத்து மொழிக்கு வந்த காலக்கட்டம் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியது. எழுத்துமொழியில் படைப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்து இதுகுறித்த திறனாய்வில் அறிஞர்கள் தனி மனிதனின் சுயத்தை வெளியிடவும் தனக்குத் தெரிந்ததை அடுத்தவர்க்குக் காட்சிப்படுத்தவும் தான் தனித்துவமும் திறமையுமிக்கவன் என்பதையும் உணர்த்தவே படைப்பாக்கம் நிகழ்ந்தது என்று கருத்துரைத்தனர். பின்னர் அப்படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் கணிசமான விழுக்காட்டில்தான் அது சமூகநலனுக்கானதாக மாறுகிறது எனும்போது அடுத்த தன் படைப்பின் தன்மையைப் படைப்பாளன் வெளிப்படுத்துகிற சூழல் மாற்றமடையத் தொடங்கியது.

    இவ்வாறு தன்னுடைய திறன், படைப்பாக்கத்திறன், கற்பனை, ஆற்றல், அறிவு, அனுபவம் இவற்றைப் படைப்பாளன் வெளியிடத்தொடங்கினான். இதன் உச்ச வளர்ச்சியில் கணினியும் இணையமும் நன்கு பழக்கத்திற்கு வந்தபின்னர் வலைப்பக்கம் என்பதை உணரத் தொடங்கினோம். வலைப்பக்கம் என்பது அவரவர் வயது, வாழ்க்கைச்சூழல் , அனுபவவெளியில் எதனையும் எழுதி அதுகுறித்து அறியக் காத்திருந்தார்கள். இச்சூழலில் வலைப்பக்கம் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிப் பல சுவாரஸ்யங்களைப் பரிமாறத் தொடங்கியது. விருப்பப்பட்டவர்கள் இதற்குக் கருத்துரை எழுதினார்கள். அது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் பிடித்திருந்தது. இதனால் எழுதியவர்களும் எழுதியதை வாசித்தவர்களும் ஒரு பிடிக்குள் இருந்து விடுபடலை உணர்ந்தார்கள். அது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அவர்களை யாரும் வாசிப்பதற்கோ அல்லது கருத்துரைப்பதற்கோ தடுப்பதற்கு இல்லாமல் இருந்த சுதந்திரவெளியாக வலைப்பக்கம் இருந்தது. அல்லது வாழும்காலத்தில் அவர்களின் சொற்களை மதிக்காதவர்களும் ஏற்காதவர்களும் நிராகரித்தவர்களும் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாகவும் மேலும் பாராட்டுரைக்கையில் மதிப்பிற்குரிய ஒன்றாகவும் அவர்களுக்கு வலைப்பக்கங்கள் எல்லா சுதந்திரங்களையும் சுவையான தருணங்களையும் தந்திருந்தது. என்றாலும் எதிரான கருத்துரைகளும் வெளியிடப்பட்டாலும் அதனை ஏற்பதுபோல அதற்கு மறுத்தோ அல்லது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றோ பதிலுரைப்பதற்கும் வலைப்பக்கம் உதவியது. இதன் பொருள் மனித வாழ்க்கை குறைகளும் நிறைகளும் கலந்து கலந்தே எப்போதும் இருக்கும் என்பதை மறைபொருளாகக் கொண்டது என்பதுதான்.

    ReplyDelete
  62. படைப்பாளிகள் எல்லோரும் படைப்பாளிகள் என்பதில் நுட்பமான வேறுபாடுகள் நிறைந்து கிடக்கின்றன. எழுத்துக்களோடு நின்றுவிடுகிற படைப்பாளிகள் பலர். எழுத்துக்களோடு சில தேவைகளை உள்ளடக்கிக் களத்தில் இறங்குகிறவர்கள் சிலர். முழுக்க முழுக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறவர்கள் சிலர். இந்த மூன்றாவது பிரிவுதான் படைப்பிலக்கியம் என்பதையும் அது சமூகத்தின் அவலத்தையும் தேவையையும் சிக்கலையும் உணர்ந்து போராடுவது என்பதை உறுதிச்செய்வதாகும். அண்ணல் காந்தியடிகள், பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ், மார்ட்டீன் லூதர் கிங், அன்னை தெரசா எனப் பெருகி நிற்கும் சான்றுகளில் சிலவாக இவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் யாரும் வலைப்பக்கங்களை ஏற்படுத்திக்கொண்டவர்கள் இல்லை. இவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்லது பெரும்பான்மை விழுக்காடு வலைப்பக்கம் இவர்களின் சொற்களையும் போராட்டங்களையும் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் நம்பியே இயங்கிக்கொண்டிருக்கின்றன.

    இந்த மூன்றாவது பிரிவை உருவாக்க முதலாவது, இரண்டாவது பிரிவுகளின் செயற்பாடுகள் அவசியமாகின்றன. இந்த இரண்டாவது பிரிவின் செயற்பாடுகளை மேற்கொள்கிறவர்களாகத்தான் புதுகை வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியவர்கள் உணரப்படுகிறார்கள். எங்கெங்கோ நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பை நாம் நடத்திப் பார்க்கலாம். இப்படியொரு வலைச்சமூகம் இயங்கி வருகிறது. அவர்களும் அவரவர் வலைப்பதிவுகளில் இந்த சமுகத்தின் முதல் மனிதன் தொடங்கிக் கடைசி மனிதன் வரை வாழ இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தவே இம்மாநாடு.

    இம்மாநாட்டில் தாங்கள் உணர்ந்த சில குறைபாடுகள் உங்கள் மனத்தை வருத்தியிருக்கின்றன. அதனைப் பெரிதுபடுத்தியிருக்கவேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். இதற்குத்தான் மேற்சொன்ன நீண்ட முகவுரையை நான் எழுதவேண்டியதாயிற்று. ஏன் என்றால் சில நபர்கள் இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகள் பழக்கப்படுத்தப்பட்ட திட்டமிடல் என்றாலும் ஒவ்வொரு நாளும் விடியும்போது அதில் மாற்றங்கள் நிகழ்ந்து சிக்கல்கள் உருவாகின்றன என்பது வெளிப்படையானது. எல்லாவற்றையும் குற்றவிரல் கொண்டு வெகு எளிதாக சுட்டிவிடமுடியும். ஆனால் நம்மைநோக்கிய நிகழ்வில் அது பெரிதான வருத்தத்தை ஏற்படுத்தும்போது அதிகம் வலிக்கும்.

    எந்த ஒரு நிகழ்வும் கூட்டு உழைப்பால் உருவாவது. ஒருவர் பிசகினால்கூட அந்த உருவம் சிதைந்துவிடும். இந்த வலைப்பதிவர் சந்திப்பும் அப்படித்தான். அது முழுமையுற அதன் முக்கிய கரு பதிவர்கள்தான். ஆயிரம் திட்டமிடல்கள் வைத்திருந்தும் அவர்கள் கேட்டதை எத்தனை பேர் ஒழுங்குபடச் செய்திருப்பார்கள் யோசித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  63. சரியான நேரத்தில் வருகையைப் பதிந்தார்களா? சரியான விவரங்களை விடுபடாமல் தந்தார்களா? கேட்ட வடிவத்தில் தந்தார்களா? அவர்கள் கேட்டதையெல்லாம் உடனுக்குடன் செய்தார்களா? வலைப்பதிவர் கையேட்டிற்கு எல்லாவற்றையும் ஒரே தடவையில் அனுப்பி வைத்தார்களா? விவரம் மட்டும் அனுப்பி வைத்தவர்கள் யார்? போட்டோ மட்டும் அனுப்பி வைத்தவர்கள் யார்? போட்டி விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றினார்களா? குறிப்பிட்ட தலைப்பை உணர்ந்தார்களா? குறிப்பிட்ட பக்க வரையறையைப் பின்பற்றினார்களா? அவர்கள் அதற்கான தகவல்களை அவர்களே சேகரித்தார்களா? முன்பே குறித்திருந்த இறுதிநாளுக்குள் அனுப்பி வைத்தார்களா? நாள் நீட்டித்தபின் அனுப்பிவைத்தவர்கள் யார்? அதற்குப் பின்னரும் அனுப்பி வைத்தவர்கள் யார்? இத்தனை ஏற்பாடுகளையும் வலைப்பதிவர் சந்திப்பிற்குள் ஒழுங்கமைக்கவேண்டும் என்று படாதபாடு பட்டவர்களின் நிலையை யோசித்தவர்கள் யார்? முக தாட்சயண்யத்திற்காகச் சமரசம் செய்துகொண்டவர்கள் நிலை என்ன? மேடை, அலங்காரம், வரவேற்பு, அடையாள அட்டை, அதற்கான எண்கள், கைப்பைகள், பேனா, குறிப்பேடு, வலைப்பதிவர் விவரப்புத்தகம் இவையெல்லாம் ஒரு கூட்டுக்குள் எப்போது வந்தது? விழாவிற்கு முன்னர் வலைப்பதிவர் கையேட்டைக் கொண்டுவர பட்ட பாட்டை மேடையில் சொன்னார்களே கேட்டவர்கள் எத்தனை பேர்? மேடைக்கு வரும் முக்கிய விருந்தினர்களைக் கடைசிவரை உறுதி செய்துகொண்டிருக்கவேண்டுமே அவர்களின் நிலை என்ன? ஓடிஓடி விழா ஏற்பாடுகளை செய்தாலும் அவர்களின் சோர்வு… பெட்ரோல் இல்லாமல் சட்டென்று நிற்கும் வண்டியின் நிலை.. சாப்பாட்டிற்கு எல்லாப் பொருள்களை வாங்கித்தந்தும் முதல் நாளிரவில் வராத முக்கியமான பொருளுக்கு அலைந்தவர்கள்.. ஒட்டவும்..ஓடவும்.. கட்டவும்.. கணக்கிடவும்.. அரங்கை ஒழுங்குபடுத்தவும்.. எத்தனை பாடுகள்? ஆயிரம் பேர்கள் இருக்கலாம். ஆனால் ஆயிரம் குணங்கொண்டவர்கள். அவர்களை ஏதோ ஒரு அன்புச்சங்கிலியால்தான் ஒருங்கிணைக்கமுடியும்.. ஒருங்கிணைப்பவர்கள் தாங்கள் இறங்கிவரவேண்டும.

    வந்திருக்கும் எல்லாக் கவிதைகளுக்கும் ஓவியங்களைப் போட்டுவிடுங்கள்.. எல்லாவற்றையும் ஒட்டிவிடுங்கள் சொல்லியிருக்கலாம்.. ஏதோ ஒன்று சிலவற்றிற்கு ஓவியங்கள் வரையமுடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.. ஓவியருக்கான சில சங்கடங்கள் இருக்கலாம்.. ஒட்டுவதற்குகூட சங்கடங்கள் இருந்திருக்கலாம்.. அதன் உண்மைநிலையை யார் உணர்வது?
    இந்தப் பொதுவிழாவிற்கான முழு இசைவையும் அவரவர் தங்கள் குடும்பங்களில் பெற்றிருப்பார்களா? தாராளமாக செய்யுங்க என்று சொன்ன மனைவிமார்கள் எத்தனைபேர்? இதெல்லாம் ஒரு வேலைன்னு போறீங்க என்று சொன்னவர்கள் எத்தனைபேர்? போங்க.. போயிட்டுக் காலத்தோட வீட்டுக்கு வந்து சேருங்க.. இப்படி பல..

    ReplyDelete
  64. இரண்டு பன்னாட்டுக் கருத்தரங்குகள்.. உலகளவில்
    நாலைந்து தேசியக் கருத்தரங்குகள்
    பத்து பதினைந்து பயிற்சி வகுப்புகள்

    இவற்றில் எல்லாம் ஓராண்டுக்கு முன்பிருந்தே காலை ஒன்பதுமணி தொடங்கி இரவு 11 மணிவரை படாதபாடு பட்டும் வாங்கியதென்னவோ கெட்ட பெயர்கள்தான்.. அடையாள அட்டை வழங்கும் குழு… உணவு டோக்கன் வழங்கும் குழு… ஆய்விதழ்கள்.. கைப்கைகள்.. தங்கும் விடுதியின் சாவி வழங்கும் குழு.. இப்படிப் பல குழுக்கள் ஒவ்வொரு குழுக்கும் ஐந்துபேர் என ஓரண்டிற்கு முன்பே திட்டமிட்டிருந்து அந்த நாளின் விருந்தாளிகள் வரும்போது எல்லாவற்றையும் வழங்கிய ஐந்துபேரில் நானும் ஒருவன். அத்தனை குழு உறுப்பினர்களும் கழுத்தறுத்துவிட்டார்கள். இருப்பினும் எல்லாவற்றையும் மீறி கடவுள் அருளால் விழா இனிதே நிறைவுறும். முழுமையான ஒரு லட்டை எறும்புகள் அரித்தது போக மிச்சமிருப்பதுபோல.

    நடுவர்கள் பற்றி பொதுவான கருத்தில் என்னையும் தாக்கிவிட்டீர்கள். நான் நடுவர் என்று தெரியாது உங்களுக்கு என்பது அப்பட்டமான உண்மை. நான் சுற்றுச்சூழல் கட்டுரை பிரிவிற்கு நடுவராக இருந்தேன். அதில் நான் நடுவராக செயல்பட்டதை விவரமாக திருமிகு ந.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு உரிய முறைப்படித் தெரிவித்து என் முடிவை அறிவித்திருந்தேன்.

    மூன்றுமுறை கணிப்பொறியில் வாசித்து கண்கள் வலிகண்டுவிட்டன. எனவே நான்காவது முறையாக எல்லாவற்றையும் கணிப்பொறியிலிருந்து பிரிண்ட் எடுத்து வரிசைப்படி அடுக்கி மறுபடியும வாசித்தேன். வாசிப்பின்போது நான் கவனத்தில் கொண்ட நானே வகுத்துக்கொண்ட சில விதிகளையும் தெரிவிக்கிறேன்.

    கட்டுரையின் தலைப்பு சரியாக இருக்கவேண்டும். போட்டியின் பொருண்மைக்கு மிக அண்மையாக இருக்கவேண்டும். அழகியலாக இருக்கவேண்டும். உணர்வூட்டுவதாக இருக்கவேண்டும். படிக்கத் தூண்டவேண்டும். இல்லையெனில் மதிப்பெண்ணை வெகு குறைவாகத் தந்திருந்தேன்.

    கட்டுரையின் அளவு அறிவித்த எல்லையை மீறக்கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பான்மை வேண்டும். எனவே அளவு மீறிய கட்டுரைகளை வாசித்தும் அதில் நல்ல செய்திகள் இருந்தாலும் எல்லை மீறிய தன்மைக்காக மதிப்பெண்களைக் குறைத்தேன்.

    எந்தப் பொருண்மையிலான கட்டுரைக்கும் வலைப்பதிவர்கள் எழுதுவது என்பது வெகு சுலபம். ஏனெனில் அவை குறித்த தகவல்கள் இறைந்துகிடக்கும் இணையத்திலிருந்து எடுப்பது சுலபம். எனவே கட்டுரை என்பது செய்திகளை அடுக்குவது அல்ல. உண்மையில் அவற்றின் சிக்கலை விபரீதத்தை உணர்த்த முற்படும் கருத்துக்களை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  65. மேலும் கருத்துக்களைத் தட்டச்சிடும்போது வடிவமைக்கும் பாங்கும் முக்கியமானது. ஏனெனில் உண்மையில் போட்டியில் வெல்வது என்பதையும் தாண்டி சுற்றுச்சூழலின் ஆபத்தை உணர்த்து பொறுப்புணர்ச்சியும் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் போக்கு நிச்சயம் மாறுபடும். இந்த சமூக அக்கறையுள்ளவர்களின் கட்டுரைகளே உண்மையானவை.

    கட்டுரையின் மொழிநடையில் அழகியல் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலினைப் பராமரிக்காமல் விட்டால் ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்திய சொற்களையும் அதற்கான உத்திகளையும் கவனத்தில் கொண்டேன்.

    முக்கியமானது கட்டுரையின் தொடக்கமும் முடிவும். இவை நல்ல கட்டுரையின் முக்கியமான கூறுகள். செய்திகளின் ஒருங்கிணைப்புத் தன்மை, கட்டுரையாளரின் நடை, நம்பகத்தன்மை, சான்றுகள் எனவும் கவனித்தேன்..

    ஒரு கட்டுரை தொடர்பற்றிருந்தது. அதற்கு மதிப்பெண்கள் வழங்கவேயில்லை.

    99 விழுக்காடு எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் நமது விருப்பம்போல எழுதுவோம் என்கிற மனோபாவத்தில் இருப்போர் விழுக்காடும் 99தான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனக்கு இன்றும் கட்டுரையாளர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் நான் படித்த ஒவ்வொரு கட்டுரையும் எனக்குத் தெரியும். அதில் தெரிவு செய்த கட்டுரையின் சொற்களும் நினைவில் உள்ளன. முடிந்தவரை மனச்சான்றுக்கு மாறாமல் நடுவராகப் பணியாற்றினேன். இதற்குக் காரணம் இன்றுவரை உலகின் பன்னாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மட்டுமல்லாமல் மனசாட்சிக்குப் பயந்து கடமையாற்றுவது என்பதை வாழ்க்கையின் மெய்ம்மையாகக் கொண்டிருப்பதும்தான்.
    புதுகையில் நடந்த வலைப்பதிவர் விழா என்பது நாம் எல்லோரும் சேர்ந்து நடத்திய விழாதான். நம்மின் பிரதிநிதிகளாக திருமிகு ந.முத்துநிலவன் ஐயா அவர்களும், திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் திருமிகு தங்கம் மூர்த்தி கவிஞர் கீதா அவர்களும் இருந்தார்கள். ஒருநாள் விழா என்றாலும் அதனைச் செயற்படுத்த எத்தனையோ நாட்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. எனவே நான் இவர்களின் வழியையைம் வலியையும் உணர்ந்தவன்.

    மேற்குறிப்பிட்ட அத்தனை கருத்துக்களும் என் கருத்துக்கள்.

    அன்புள்ள ஜிஎம்பி ஐயா.. நீங்கள் வயதில் எனக்குத் தந்தையிடத்தில் இருக்கிறீர்கள். ஒரு மகனுக்குத் தாங்கள் படிக்கத் தந்ததை மகன் உணர்ந்து எழுதியிருக்கிறேன். தவறிருப்பின் அல்லது உங்களை என் சொற்கள் காயப்படுத்தினால் மன்னிக்கவும்.

    நன்றி வணக்கம்.

    அன்புடன்
    ஹரணி 25.10.2015 இரவு 11.00 மணி.

    ReplyDelete

  66. @ அன்புபுமிகு ஹரணி ஐயாவுக்கு வணக்கம் உங்கள் நீண்ட பின்னூட்டம் என்னை நெகிழச் செய்து விட்டது. என் எழுத்துக்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் பாதித்து விட்டது தெரிகிறது.ஆனால் நான் எழுதும்போது எந்த ஒரு தனிமனிதரைக் குறிப்பிட்டு எழுதவில்லை. விழாக்கள் தொடங்குமுன்னே போட்டிக்கு நடுவர்கள் பதிவர்களாக இருக்கக் கூடாது என்று கூறி இருந்தேன் ஏன் என்றால் ஓரளவு மனித மனம் bias ஆக செயல் பட வாய்ப்பிருப்பதாக உணர்ந்தேன் விழாக்கள் தொடங்கியபின் குறை காண்பது சரியாகாது என்பதை உணர்ந்தே முதலிலேயே என் கருத்துக்களைத் தெரிவித்தேன் அது பெண்கள் முன்னேற்றம் வகைக்கு முதல் பரிசாக தெர்ர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையைப் பார்த்ததும் எங்கே நான் நினைத்தது போல் ஆகி விட்டதோ என்று தோன்றவே என் கருத்துக்களைப் பதிவிட்டேன் எந்த வகைக்கு யார் நடுவர் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. நான் கூறியது ஒரு பொதுக் கருத்தே யாரையும் குறி வைத்து எழுதியதல்ல. எழுதுயவையும் என் மனத் தாங்கலை வெளியிடவே மேலும் கவிதைக்கு ஓவியம் பற்றி நான் எழுதி இருந்ததும் என் கவிதை ஓவியமாக வரவில்லை என்பதால் அல்ல என்றும் கூறு கிறேன் என் பதிவைப் படித்தால் அது விளங்கும் ஒரு பொது நிகழ்வில் பணி ஆற்றுவோர் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது என்பதும் தெரியும். அவர்கள் செய்திருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அது பற்றிய உண்மை நிலையைத் தான் சிந்திக்க வேண்டும் நிறையவே எழுதி இருக்கிறீர்கள் நான் உங்களுக்கு ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விழைகிறேன் எழுதியது யார் மனதையும் புண்படுத்த அல்ல. சில குறைகளும் உணரப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவே/ எனக்கு உங்கள் மீது தனி மரியாதைஒயும் அபிமானமும் உண்டு. நான் எழுதியவை உங்கள் மனதை நோகடித்து இருந்தால் அது அந்த எண்ணத்தில் எழுதப்பட்டது அல்ல என்று உறுதியாய்க் கூறு கிறேன் வருகைக்கும் உணர்த்தியவைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete