Sunday, October 25, 2015

நவராத்திரி துதி



                                                 நவராத்திரி துதி
                                                --------------------------

சமயபுரம் மாரியம்மன் தஞ்சாவூர் ஓவியம் 



ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்

இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே

உன்னை வணங்குகிறேன்
( அண்மையில்  நவராத்திரி பதிவுகளாக திருமதி கீதா சாம்பசிவம் நவராத்திரியின் போது வழிபடும் தேவியர்களின் பெயர்களை ஒவ்வோரு நாளுக்கொன்றாகக்  கூறி எழுதி வந்தார். எனக்கு ஒரே கன்ஃப்யூஷன்  நான் ஒரு துதிப்பாடல் எழுத முயற்சித்தேன்  அதன் விளைவே மேல் கண்ட பதிவு) 

      
மூன்றாண்டுகளுக்கு முந்தைய கொலு





45 comments:

  1. நவராத்திரிப் பாடல் பல விஷயங்களைச் சொல்லுகின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. //என்ன சொல்லிப் போற்றுவேன்.. //

    'வேண்டுதல் வேண்டாமையிலான்' மாதிரி--

    போற்றுதலுக்கும் பொருத்தமாக ஒரு வரி யோசித்துப் பாருங்கள், ஜிஎம்பீ ஐயா!

    மன்னிக்கவும். எனக்கென்னவோ போற்றுதல் என்கிற வார்த்தையே பொருத்தமின்மையாகத் தோன்றுகிறது.

    'துதித்தல்' என்கிற வார்த்தைக்கான சரியான அர்த்தமாகவும் 'போற்றுதல்' தெரியவில்லை.

    போற்றினாலே போதுமானது என்று அதைத் தாண்டி வராத தடுப்புச்சுவரையும் இந்தப் போற்றுதல் போட்டு விட்ட மாதிரியும் உணர்வு வேறே.

    தனிப்பட்ட யோசனையின் தொடர்புக்கான பகிர்வே தவிர பொதுவில் எல்லோருக்குமாக இதைச் சொல்லவில்லை.

    ReplyDelete
  3. எதை ஸ்ரீராம்?.. ரசித்ததைச் சொல்ல ரெண்டு வரி எழுதினால் தான் என்னவாம்?..

    ReplyDelete
    Replies
    1. எந்தப் பெயரில் இருந்தால் என்ன? எந்தப் பெயரில் பார்க்கிறோம் என்பது அவரவர் விருப்பம். எல்லாம் ஒரே சக்திதான் என்று சொல்லும் அவர் கருத்தை ரசித்தேன். மேலே அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்று சொல்லும் அவர் வரிகளை ரசித்தேன்.

      Delete
  4. வணக்கம்
    ஐயா
    வெகு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  5. @ துரை செல்வராஜு
    நவராத்திரிப் பாடல் புதிதாக ஒன்றையும் சொல்லவில்லையே வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  6. @ ஜீவி
    ஐயா எழுதும் போது வந்து விழுந்த வார்த்தை அது. போற்றி என்று சொல்லி அர்ச்சிக்கிறோம் அல்லவா. நல்ல apt வார்த்தை சொல்லி யிருந்தால் மாற்றுவேன் கருத்துப் பதிவுக்கு நன்றி சார்

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  8. @ ஜீவி
    இப்போதெல்லாம் ஸ்ரீராம் முகநூலில் அதிக நேரம் செலவு செய்கிறார் முகநூலில் ரசித்தேன் என்று கூட எழுத வேண்டாம் லைக் போட்டால் போதும்

    ReplyDelete
    Replies
    1. முகநூல், வலைத்தளம் எல்லாம் சம அளவில் உபயோகிக்கிறேன் GMB ஸார். ப்ளாக்கில் பதிவிடவும் தவறுவதில்லை! :)))

      Delete

  9. @ ரூபன்
    இந்தமாதிரி பதிவிட பக்தி வேண்டும் என்று நினைக்கிறேன் எனக்கிருக்கிறதா தெரியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. நவராத்திரிப் பாடல் அருமை ஐயா வாழ்த்துகள்

    ReplyDelete
  11. @ ஸ்ரீராம்
    நீங்கள் ரசித்ததைக் குறிப்பிட்டதற்கு நன்றி

    ReplyDelete

  12. @ ஸ்ரீராம்
    நான் சொன்னது இன் லைட்டர் வெய்ன் . என் பதிவுகளுக்கு தவறாது வருபவர்களில் நீங்களும் ஒருவர் நன்றி

    ReplyDelete

  13. @ கில்லர்ஜி
    வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  14. நவராத்திரி பாடல் அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  16. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  17. @ மோகன் ஜி
    உங்களிடம் இருந்து பாராட்டு பெற்றது மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete

  18. @ டாக்டர் கந்தசாமி
    பார்வை இட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. ஓயாது எழுதி வரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.- இராய செல்லப்பா

    ReplyDelete
  20. ஓயாது எழுதி வரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.- இராய செல்லப்பா

    ReplyDelete

  21. @ செல்லப்பா யக்ஞசாமி
    வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete
  22. நவராத்திரி பாடல் அருமை! நன்றி!

    ReplyDelete

  23. @ தளிர் சுரேஷ்
    வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஐயா

    ReplyDelete

  24. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றொஇ ஐயா

    ReplyDelete

  25. @ வெங்கட் நாகராஜ்
    மேலே நன்றி என்று இருக்கவேண்டும் தட்டச்சுப்பிழை

    ReplyDelete
  26. வலைக்கலைஞரே! உமது தஞ்சாவூர்பாணி சமயபுரம் மாரியம்மன் ஓவியம் ப்ரமாதம்.
    கவிதை? உமது `ஒரே வாக்கிய ராமாயணம்`போல்..அடடா!
    பொன்னாள் அதுபோலே.. வருமா இனிமேலே...

    ReplyDelete
  27. கவிதை மிகவும் அருமை, உங்களது ஓவியம் போலவே. நவராத்திரிக்கு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் சென்றுவந்தேன். விரைவில் அங்கு பார்த்த கொலுவினைப் பற்றி பகிர்வேன். உங்களது நவராத்திரி எனது நவராத்திரியை நினைவூட்டி, எழுதவைத்துவிடும்போலுள்ளது. நன்றி.

    ReplyDelete
  28. நல்ல பாடல். சக்தி எப்படிப் பலவிதமாகப் பிரிகிறதோ அதற்கேற்றாற்போல் அம்பிகையின் பெயரையும் பிரித்துச் சொல்கிறோம். இதில் குழப்பத்துக்கே இடம் ஏதும் இல்லை.

    ReplyDelete

  29. @ ஏகாந்தன்
    வாருங்கள் நண்பரே சில நேரங்களில் நம்மை அறியாமல் நல்ல வார்த்தைகளும் அவற்றின் ஓட்டமும் அமைந்து விடும் சாதாரணன் ராமாயணம் நினைத்த இதே மனதுதான்இந்த துதியையும் எழுதியது ஓவியத்தைப் பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete

  30. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  31. @ கீதா சாம்பசிவம்
    சக்தியில் குழப்பம் இல்லை மேடம் இந்தப் பெயர்களில்தான் குழப்பம் இருந்தால் என்ன . ஒரு துதி எழுத வைத்துவிட்டதே. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  32. //அது. போற்றி என்று சொல்லி அர்ச்சிக்கிறோம் அல்லவா. நல்ல apt வார்த்தை சொல்லி யிருந்தால் மாற்றுவேன்//

    மாற்றுவதற்காக இல்லை ஜிஎம்பீ சார். உங்கள் யோசனைக்கு.

    இப்போ,

    வேண்டுதல் வேண்டாமை யிலான்அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல்.

    என்று குரள் இருக்கிருதில்லையா?.. இதில், 'வேண்டுதல் வேண்டாமையிலானுக்கு'
    'விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின்'என்று பேராசிரியர் மு.வ. உரை எழுதுகிறார்.

    இந்த வேண்டுதல் வேண்டாமையில் பக்தர்களின் 'போற்றியும் அடக்கம்.

    அப்போ, போற்றல்களையும், போற்றாமைகளையும் சமமாகப் பார்க்கக்கூடிய இரண்டிற்கும் வித்தியாசம் காணாத இறைவன் என்றாகிறது.

    இப்போ, வேண்டுதல் வேண்டாமையிலான்' மாதிரி போற்றிகளையும் போற்றாமைகளையும் என்று குறள் போல எழுதிப் பாருங்கள். அதைத் தொட்டு நிறைய யோசிக்கலாம்.

    //போற்றினாலே போதுமானது என்று அதைத் தாண்டி வராத தடுப்புச்சுவரையும் இந்தப் போற்றுதல் போட்டு விட்ட மாதிரியும் உணர்வு வேறே. //

    இது அதைத் தொட்டு அடுத்த சிந்தனை. இதை 'எனது மனம் உயிர் உடல்' தொடரில் தகுந்த இடத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.

    இரண்டு நாட்கள் இந்தப் பக்கம் வராததினால் தாமதமான பின்னூட்டம். கீதாம்மா இதைப் பார்த்தால் அவர்கள் யோசனையில் ஏதாவது சொல்வார்கள். இல்லை, ஸ்ரீராம். பார்க்கலாம்.



    ReplyDelete
  33. அப்பாதுரை சாரைக் கூட இப்போல்லாம் பார்க்க முடிவதில்லையே! இந்த மாதிரி பின்னூட்டங்களை இடும் பொழுது அவர் நினைவு தன்னாலே வருகிறது.

    ReplyDelete
  34. இங்கே "என்ன சொல்லிப் போற்றுவேன்!" என்பது அம்பிகையை வாழ்த்துவதையோ அல்லது துதிப்பதையோ குறிக்கிறது என என் கருத்து. உன் கருணையை நினைந்து நினைந்து சொல்ல வார்த்தையில்லாமல் தவிக்கிற மனதைக் குறிக்கிறது என்னும் பொருளில் எடுத்ஹ்டுக் கொண்டேன். :)

    ஜிஎம்பி ஐயா அவர்கள் தனக்கு பக்தி இருக்கிறதா தெரியவில்லை என எழுதி இருக்கிறார். உள்ளார்ந்த ஈடுபாடு இல்லாமல் இப்படி எல்லாம் இறைவன் மேல் பாடல் எழுத எல்லோருக்கும் இயலாது. பிறவிக் கவிஞனாகவே இருந்தாலும் இறைவன் மேல் உள்ள பக்தியை வெளிக்காட்டும்படி எழுத அவன் பரம பக்தனாகத் தான் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் எங்கானும் ஓர் இடத்தில் மனதில் உள்ள காழ்ப்புணர்ச்சி இறைவன் மேல் பாடும் வசையாக அமையும். இதை நாத்திகவாதி எனச் சொல்லிக் கொள்ளும் பலரிடம் கண்டிருக்கிறேன். இது என் கவனிப்பும், என் கருத்தும் மட்டுமே! பொதுவானது இல்லை. :)

    ReplyDelete
  35. //எடுத்ஹ்டுக் கொண்டேன்//

    ஹாஹா, டைபோ! எடுத்துக் கொண்டேன் என வந்திருக்கணும். இந்த கீ போர்டு ஒரு சில எழுத்துக்களில் செய்யும் தகராறு! :) உடனடியாகக் கவனிக்கலை! தவறுக்கு மன்னிக்கவும். :)

    ReplyDelete

  36. @ கீதா சாம்பசிவம்
    எனக்கு பக்தி இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. என் கருத்துக்கள் அனைவருக்கும் உடன்பாடாக உள்ளதா என்பதையே பார்க்கவேண்டும் இறை பக்தி மிகுந்த என் மனைவியுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கை நடத்தி வருகிறேன் என்னை அவளும் அவளை நானும் புரிந்து கொண்டிருக்கிறோம் கடவுள் பக்தி வேறு நம்பிக்கை வேறு கடவுளின் பெயரால் பல மூட நம்பிக்கைகள் உலவி வருவது என்னால் சகிக்க முடியாத ஒன்று. ஜீவி அவர்கள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று கடவுளைக் குறிப்பிடுகிறார். அப்படியா என்று கூட எனக்கு சந்தேகம் வரும் . என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு கான்செப்ட். அவரவர் புரிதல் போல அமையும் பொதுவாக வரும் துதிப்பாடல்கள் போல் அல்லாமல் நான் சற்றே வித்தியாசமாக சிந்தித்ததன்பலனே இப்பா மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் நம்பிக்கைகள் அவரவர் விருப்பம் அது மூட நம்பிக்கையாக இல்லாதவரை. நான் எனக்கு என்று ஒரு எல்லை அமைத்துக் கொண்டு எழுதுகிறேன் அவ்வளவுதான்

    ReplyDelete

  37. @ கீதா சாம்பசிவம்
    இந்த மாதிரி தட்டச்சுப் பிழைகள் எனக்கும் வருகிறது உடனுக்குடன் கவனித்து திருத்துகிறேன் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  38. //ஜீவி அவர்கள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று கடவுளைக் குறிப்பிடுகிறார். //

    -- என்று குறள் குறிப்பிடுவதாகக் குறிப்பிடுகிறார் என்று இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete

  39. @ ஜீவி
    உங்கள் பின்னூட்டத்தைப் புரிந்து கொள்ளும்போதோ அதற்கு மறு மொழி எழுதும் முன்போ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது அவ்வப்போது மறந்து விடுகிறதுதவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete