Sunday, November 22, 2015

வெக்கலாமா பெட்.....?


                                              வெக்கலாமா பெட்.........?
                                              ------------------------------------



நான் வீடுகட்டி அதை முதன் முதலில் வாடகைக்கு விட்டேன்  நாங்கள் திருச்சியில் இருந்தோம் என் மூத்த மகனுக்குத் திருமணம் முடிந்து அவனுக்கு பெங்களூரில் வேலை மாற்றல் ஆகியது. சொந்த வீடு இருக்கும் போது வாடகை வீட்டுக்கு ஏன் போகவேண்டும்  ஆகவே என் வீட்டுக் குடித்தனக் காரரை வீடு காலி செய்யக் கேட்டுக் கொண்டேன்  பெங்களூரில்  குடித்தனக் காரர்களை காலி செய்ய வைப்பது மிகவும் சிரமம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் என் வீட்டுக் குடித்தனக்காரர் பிரச்சனை ஏதும் செய்யாமல் காலி செய்தார் அவரது இரண்டாம் மகளுக்குத் திருமணம் என்று பத்திரிக்கை வைக்க கணவனும் மனைவியுமாக வந்திருந்தனர். பல நாட்களுக்குப் பிறகு பார்ப்பதால் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்  அவர் விடை பெற்றுச் செல்லும்  போது வாசலில் இருந்து ஒரு அழைப்பு மணி அடித்தது வந்தவர் தன்னைப் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக்  கொண்டார்வந்தவருடன் என் பழைய குடித்தனக் காரரும் சில நிமிஷங்கள் பேசிப் பின்  சென்று விட்டார். வந்தவர் யார் என்று சொல்லவில்லையே.

 நான்பாம்பே அருகில் இருக்கும் அம்பர்நாத் என்னும் இடத்தில் பயிற்சி பெற்றவன் என்று எழுதி இருக்கிறேன் அங்கு பயிற்சி பெற்றவர்கள் வருடம் ஒரு முறை இந்தியாவின் வெவ்வேறு இடங்களில்  ஆலும்னி மீட் என்று கூடுகிறார்கள். இந்த முறை பெங்களூரில் ஃபெப்ருவரி மாதம் கூடுகிறார்கள் என்றும்  எழுதி இருந்தேன் அப்படிக் கூடுபவர்களின் வயது சராசரி எழுபதுக்கும் மேல் இருக்கும்  இந்த வயதிலும் ஓடியாடி விழா எடுக்கத் துணியும் நண்பர்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள் எங்கள் பாட்சில் பயிற்சி எடுத்தசிலரும் ஆர்கனைசிங்  கமிட்டியில் இருக்கிறார்கள் சூவனீருக்கு  என்னிடம் பதிவுகள் கேட்டார்கள்.  நானும் எழுதிக் கொடுத்திருக்கிறேன்  அந்தக் கமிட்டியின் காரியதரிசியாக  பொறுப்பேற்று இருப்பவரை நான் மின் அஞ்சலில்  தொடர்பு கொண்டு என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டேன்  அவரும் அவசியம் வருவதாகக் கூறினார். வரும் முன்பு தொலை பேசியில் தெரிவிப்பதாகவும் கூறினார்  அவர்தான் அன்று வந்தவர். ஆனால் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கவில்லை.  அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார் நானும்  என் மனைவியும் அவரை வரவேற்றோம்  அவர் என்னைவிட நான்காண்டுகள் ஜூனியர்.  அம்பர்நாத்தில் சந்தித்திருக்க வாய்ப்பே இருக்கவில்லை.

எப்படி இந்த வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன்  அவர் சுமார் இரண்டு கிமீ தூரம் நடந்துவந்தவர்  எப்படியோ முகவர் தேடி கண்டுபிடித்து வந்திருக்கிறார்.  இவரைத் தெரியுமா அவரைத் தெரியுமா என்று கேள்வி கேட்டுக்கொண்டோம்
என்னையும் ஆலும்னி மீட்டுக்கு வரச் சொன்னார். பார்வைக்கு வயதாயிருந்தாலும் மிகவும்  சுறு சுறுப்புள்ளவராக இருந்தார்  சுமார் முன்னூறு பேர் வர இருப்பதாகச் சொன்னார். வராவிட்டாலும் நஷ்டம் ஏதும் இருக்காது.  ஏன் என்றால் வருகைக்கு  ஆளுக்கு  ரூ 1500-/ ரெஜிஸ்ட்ரேஷனுக்கு முன்  கூட்டியே தரவேண்டும் இரண்டு நாள் நிகழ்ச்சி  முதல் நாள் கூடல்  மறு நாள் பெங்களூரின் முக்கிய இடங்களுக்குச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு.பெரும்பாலும் தம்பதியினரை எதிர்பார்க்கின்றனர்  /எனக்கென்னவோ  முதல் நாள் கூடும்  போது அறிமுகம் தவிர  பாட்டும் டான்சும்  அவரவர் சிறப்புத் தகுதிகளும் காட்ட உபயோகப்படும் என்று தெரிகிறது பலருக்கும் பலரையும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத கூடல்  எந்த அளவு சிறக்கும் என்று தெரியவில்லை ஒரே ஒரு காமன் டினாமினேட்டர் எல்லோரும் அம்பர்நாத்தில் பயின்றவர்கள் என்பது தான்  அநேகமாக எல்லோரும் நல்ல நிலைக்கு வந்தவர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தவர்கள்
நண்பர் என் வீட்டுக்கு வரும்போது மாலை மணி ஏழுக்கும் மேலாகி இருந்தது உணவு உண்ணலாமா என்று கேட்டேன்  மறுத்துவிட்டார் எனக்கானால் வந்தவருக்கு ஏதாவது தரவேண்டும் என்றிருந்தது காஃபி குடிக்கிறீர்களா  என்று கேட்டு என் மனைவி  in a jiffy  காஃபி தயார் செய்துவிடுவார் என்றும் கூறினேன்  என் மனைவி என்னை முறைத்துப் பார்த்ததைகவனிக்காதது போல் இருந்து விட்டேன்  ஓரிரு நிமிடங்களில் காஃபி வந்தது  
 நண்பருக்குக் கொடுத்து அவரும் குடித்தார். அவர் போனபின் என் மனைவி என்னைக் கடிந்து கொண்டாள் ஃபில்டரில் காஃபி போட நேரம் ஆகும் என்றும்  நான் சொன்னதை நிரூபிக்கவே காஃபி ப்ரூவில் தயார் செய்தேன்  என்றும்  கூறினாள் அப்போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது  ”மனைவி அமைவதெல்லாம் ….” 



நானும் நண்பரும் பேசிக் கொண்டிருந்தபோது  அம்பர்நாத்தில்தான் நான்  டேபிள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொண்டேன்  என்றும்  பயிற்சி முடியும் தருவாயில் ஓரளவு நன்றாக ஆடும் திறன் பெற்றேன் என்றும் கூறினேன்  நண்பர் இப்போது விளையாட வருகிறீர்களா  என்று கேட்டார். நான் என் ரிஃப்லெக்ஸ் எல்லாம்  குறைந்து விட்டதால் ஆடுவது சிரமம் என்றேன்எனக்கும் தான் வயதாகி விட்டது வாருங்கள் விளையாடலாம் ரூ500/- பந்தயம்  என்றார். நான்  என் இரண்டாம் மகன் யுனிவர்சிடி  சாம்பியனாக இருந்தான் என்றும் கூறினேன்  அப்படியானால் அவரோடும் விளையாடுகிறேன் வெக்கலாமா பெட் ரூ.500-/  என்றார்.  உடல் நலம் சோர்வு எல்லாம் பெரும்பாலும்  மனதளவில்தான் என்று இன்னும்  ஒருமுறை பாடம்  கற்றேன்

(12 நாட்களுக்கும் மேலாகிவிட்டது  கணினிப் பக்கம் வந்து.  இடைப்பட்ட நேரத்தில் எழுதுவதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கோர்வைப் படுத்தி எழுதவும் நேரமும் மூடும் வேண்டும்  அதற்கு முன்பாக முன்பே ட்ராஃப்டில் இருந்த பதிவு இது. இந்த நேரத்திலெனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களும் தீபாவளி வாழ்த்துக்களும் தொலைபேசியிலும்  மெயிலிலும் ஃபேஸ்புக்கிலும்  தெரியப் படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கு  என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி....! )                






 

27 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். சற்றே தாமதமாகச் சொல்கிறேன்!

    சென்னையின் மழை, உடல்நிலை ஆகியவை இந்த முறை வில்லன்களாகின!

    ReplyDelete
  2. பந்தயம் நடந்ததா ஐயா...? யாருக்கு வெற்றி...?

    ReplyDelete
  3. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள், sir. உண்மைதான், மனம் உற்சாகமாக இருந்தால் உடல் முடிந்தவரை ஒத்துழைக்கும்.

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா நான்கூட தலைப்பைக் கண்டு பதிவர்களுடன் பெட் வைக்கின்றீர்களோ என்று நினைத்து விட்டேன்.

    ReplyDelete
  5. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள், மண நாள் வாழ்த்துகள் ஐயா. எனக்கு என்னமோ இந்த பெட் கட்டுவது அவ்வளவாய்ப் பிடிக்காது. :)

    ReplyDelete
  6. // உடல் நலம் சோர்வு எல்லாம் பெரும்பாலும் மனதளவில்தான் என்று இன்னும் ஒருமுறை பாடம் கற்றேன் //

    இந்த வரிகள் மூலம் எனக்கும் ஒரு பாடம் பெற்றுக் கொண்டேன். நன்றி அய்யா!

    ReplyDelete
  7. என்னடா கொஞ்ச நாளா ஆளைக்காணமே என்று உங்கள் நெம்பருக்கு போன் செய்தேன். ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. அப்புறம் உங்கள் கடைசிப் பதிவைப் பார்த்து சென்னை சென்ற விபரம் அறிந்தேன். உங்கள் ராசி சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நீங்கள் இருந்த பகுதியில் எப்படி?

    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. சற்றே தாமதமாய்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. தாமதமாக வந்தாலும் வழக்கம்போல எங்களுக்கு ஒரு பாடம் சொல்லும் பதிவு. பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete

  10. @ ஸ்ரீராம்
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ. சென்னையில் உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்தேன். என்ன செய்ய. சந்தர்ப்பம் கைகூட வில்லை.

    ReplyDelete

  11. @ திண்டுக்கல் தனபாலன்
    பந்தயம் நடந்ததா இல்லையா என்பது கேள்வி அல்ல. அவரது தன்னம்பிக்கையைக் காட்டவே எழுதியது வருகைக்கு நன்றி. டிடி

    ReplyDelete

  12. @ ராமலக்ஷ்மி
    வாழ்த்துக்களுக்கு நன்றி மேம் சில சம்பவங்கள் படிப்பினைகள்.

    ReplyDelete

  13. @ கில்லர்ஜி
    பதிவர்களுடன் பெட்டா..! நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  14. @ கீதா சாம்பசிவம்
    முதலில் நன்றி. எனக்குக்கூட பந்தயம் பிடிக்காது. அவருடைய தன்னம்பிக்கையைக் குறிக்கவே எழுதினேன்

    ReplyDelete

  15. @ தி தமிழ் இளங்கோ
    எப்போதும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனம் உங்களுக்கு வருகைக்கு நன்றி. சார்

    ReplyDelete

  16. @ டாக்டர் கந்தசாமி
    என் அனுபவம் புதியது. சென்னை விடுமுறை குறித்து எழுத உள்ளேன் என் கைபேசி எண் உங்களிடம் இல்லையா வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  19. @ இராஜராஜேஸ்வரி
    வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்

    ReplyDelete
  20. நல்லபடி பெங்களூரு வந்து சேர்ந்தாச்சா?.. இங்கு இன்றும் மழை தொடருகிறது.

    இந்தத் தடவை இப்படியாகப் போனது. அடுத்த தடவை சந்திப்போம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. தலைப்பில் ஒரு சின்ன திருத்தம்:

    வைக்கலாமா பெட்?..

    ReplyDelete
  22. சில பேருக்கு பந்தயம் கட்டுவது என்பது வாடிக்கையான ஒன்று. என்ன உங்கள் நண்பர் உங்கள் மகனுடன் டேபிள் டென்னிஸ் ஆடினாரா? வெற்றிபெற்றது யார் என அறிய ஆவல்.

    சென்னை வரும்போது உங்களை சந்திக்கலாமென எண்ணியிருந்தேன். சென்னையில் பெய்த,பெய்துகொண்டு இருக்கிற ‘பேய்’ மழை வெள்ளியே தலை காட்டமுடியவில்லை. அடுத்த முறை தாங்கள் சென்னை வரும்போது சந்திப்போம்.

    ReplyDelete
  23. சென்னை சிக்கெனப் பிடித்துக்கொண்டதோ என நினைத்தேன். ஒருவழியாகத் திரும்பிவிட்டீர்கள் பெங்களூர்! நல்லது.
    மனதின் துள்ளலுக்குமுன் உடம்பின் சோர்வு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது. சிலர் 30 வயதிலேயே முணுமுணுத்து, புலம்பிப் பிரண்டு அழுவார்கள், வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டதுபோல. உடம்பு இளமையோடு இருந்தால்தான் என்ன, அவர்களின் மனதின் வயதோ முன்னூறு!

    ReplyDelete

  24. @ ஜீவி
    ஸ்ரீராமிடம் இருந்து உங்கள் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டேன் அஷோக் நகர் பக்கம் வர ஒரு ப்லான் இருந்தது. வந்தால் உங்களையும் சந்திக்கலாமே என்று திட்டமிட்டேன் ஆனால் மழை வலுக்கவே திட்டம் கைவிடப்பட்டது. இன்னொரு வாய்ப்பு இல்லாமலா போகும்.? வருகைக்கு நன்றி சார்/

    ReplyDelete

  25. @ ஜீவி
    தலைப்பு வேண்டும் என்றே அப்படி எழுதினேன் நண்பர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்

    ReplyDelete
  26. @ வே. நடன சபாபதி.
    அண்ணா நகரில் கல்னல் கணேசனுடன் பேசினேன் அங்கு போவதாயிருந்தால் உங்களையும் சந்திக்கலாம் என்றிருந்தேன் மழை சதி செய்து விட்டது. சந்தித்திராத என் மகனுடன் பந்தயம் வைக்கிறேன் என்றார் அவர். எப்படி முடியும் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  27. @ ஏகாந்தன்
    எப்போது மீண்டும் பெங்களூர் வருகை. ? வயது மனம் பற்றிச் சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete