ஞாயிறு, 14 மே, 2017

மீண்டும் சென்னையில்

                                    மீண்டும்  சென்னையில்
                                    ----------------------------------------
 மீண்டும்  சென்னையில்
 சென்றமாதம்  சென்னை வந்திருந்தபோது  சில பதிவர்களைச் சேர்த்து  உரையாடினேன்   என் ராசிப்படி மழை பெய்யும்  என்று நினைத்திருந்தேன்  மழை ஏமாற்றிவிட்டது  ஆனால் இந்தமுறை நல்லகத்திரிவெயில் சமயம்   சென்னை பற்றிய வெப்ப பயம் அதிகமாயிருந்தது ஆனால் இம்முறை என்  ராசிப்படி மழைபெய்து  வெப்பத்தின்  பாதிப்பு அவ்வளவு தெரியவில்லை
இம்மாதம் ஏழாம் தேதி பெங்களூரில்  என் மனைவியின்  நண்பி  ஒருவரது மகனுக்குப் பூணூல் போட்டார்கள் பிராம்மணனாய்பிறந்தவற்கு இரு பிறப்பாம் பூணூல்  போடும் முன்பு பூணூல் போட்டபின்பு அவன் பார்ப்பனனாகிறான்  பார்ப்பு என்றால் கோழிக்குஞ்சு.  கோழிக்கு இரு பிறவிகள் முட்டையாக ஒன்று முட்டை பொரித்துக் குஞ்சானபிறகு ஒன்று. அதுபோல இருப்பதால் பூணூல் போட்ட பிராம்மணன்  பார்ப்பனன் ( பார்ப்பு  அனன் ) ஆகிறான்
பூணூல் கல்யாணம் 

 காலை அங்கு வருகைப் பதிவு செய்து  என்  இளைய மகன் வீட்டுக்கு அவனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறச் சென்றிருந்தோம் அங்கு நாங்கள் சென்று மதிய உணவு அருந்தி அவனை வாழ்த்தி வந்தோம் ஏழாம்  தேதி முழுவதும்  அவன் பிறந்த அந்தநாளின் நினைவாகவே இருந்தது.
பிறந்த  நாள் கண்ட மகனுடன் 

எட்டம் தேதி மதியம் சதாப்தியில் சென்னை சென்றோம் ரயில் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு என்மகனும் மருமகளும் வந்திருந்தார்கள் வீடு சேரும்போது இரவு பத்தரைக்கும் மேலாகி இருந்ததுஏசி காரில் பயணம் வெளியே வந்தால்தான் வெப்பம்  தெரிந்தது  இரவு படுக்கையும்  ஏசி அறையில் . ஒன்பதாம் தேதி மாலை அவன்  வீட்டுக்குச் சென்றோம்  பெரும்பாக்கத்தில் இருக்கிறது எனக்கு அவன்  நகருக்கு வெகுதூரம்  வெளியே போவது போல் தோன்றியது.நான்கு அடுக்குகள் கொண்ட குடியிருப்பு. எல்லா வசதிகளும் இருக்கிறது எனக்கு அந்த தூரம் தான் பிரச்சனையாகத் தோன்றியது அவனைக் கேட்டால் வேளச்சேரி வீடு வாங்கும் போது அதுவும் இதைப் போல்தான் இருந்தது  இப்போது எல்லா வசதிகளும் கொண்ட சிறந்த குடியிருப்பாக மாறி இருக்கிறது இல்லையா என்கிறான் . இப்போதைய இளையவர்களின் சிந்தனையே வேறு மாதிரி இருக்கிறது எழுதிக் கொண்டே போகலாம் ஆனால் யாரும் ஒரேமாதிரி நினைப்பதில்லை. பத்தாம் தேதி அதிகாளையில் கிருகப் பிரவேசம் கணேச ஹோமம்  அத்தனை காலையில் வேளச்சேரியிலிருந்து போவது சிரமம் என்பதால் எங்களுக்கு குடீருப்பிலேயே ஏசி வசதி கொண்ட ஒரு கெஸ்ட் அறை ஏற்பாடு செய்திருந்தான்  என்  இளைய மகன்  ஒன்பதாம் தேதி இரவு வந்திருந்தான்   அவனது மகளுக்கு கடைசி செமெஸ்டர் பரீட்சை இருந்ததால் மற்றவர்கள் வர முடியவில்லை  எங்களுடன் என்மச்சினனும் அவன்மனைவியும்  வந்தனர்
அதிகாலையில் அண்ணா நகரில் இருக்கும்  நம்பூதிரியை அழைத்து வரவேண்டி இருந்ததுநான்  ஒரு புது வீடு வாங்குவதாயிருந்தால் ஒரு நாடாவைகட் செய்து எல்லோருடனும்  உள்ளே போகவே விரும்புவேன்.
இந்த கணேஅ ஹோமம் கூட நம்பூதிரிகள் செய்வதற்கும்   நம் பக்கத்து ஐயர்கள் செய்வதற்கும் வித்தியாசம் தெரிகிறது மாலை அஸ்தமித்த பின்  பகவதி சேவை என்னும் ஒரு பூஜை.  விவரமாக எழுதுதற்குப் பதில் புகைப்படங்கள் பேசட்டுமே
என்மகன்  குடிபோகும்  குடியிருப்பின் ஒரு தோற்றம்  
இன்னொரு தோற்றம் 
கழுகுப் பார்வையில் குடியிருப்பு (மாடல்)
கார் பார்கிங்
பூஜை அறையில் 
குழலூதும்  கண்ணன்  
கணபதி ஹோமம் 
வீட்டு பால்கனியில் இருந்து ஒரு தோற்றம் 
பால் காய்ச்சல்  சரளைக் கற்களை இரைத்த மாதிரியான சுவர் n
காலை உணவு 
ஒரு வித்தியாசமான வாஷ் பேசின் 
பகவதி சேவை 
மாலையில் ஒரு தோற்றம்   


வீட்டுக்குள் போகும்  ஒரு காணொளி 

   பால் காய்ச்சல் ஒரு காணொளி 
           பிள்ளைகள் விளையாடவும் நீச்சல் அடிக்கவும்( ஒரு காணொளி )
அன்று மாலை என் நண்பனும்  மனைவியின்  மாமனும் ஆகியவரின் பிள்ளையின்  வீட்டுக்கு போரூர் சென்றோம் பதினேழு மாடிக்கட்டிடத்தில் பதினைந்தாவது  தளத்தில்   இருந்தது  ப்ரெஸ்டிஜ் நிறுவனத்தார் கட்டியது எல்லாமே பரந்துவிரிந்து இருக்கிறது மாலை நேரமாகிவிட்டதால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை  எல்லாமே பாஷ்தான்     



  
    








 

41 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள். கிச்சன் சுவர் அட்டஹாசம். ரொம்ப நல்லா இருக்கு. மற்றபடி ஊருக்கு வெளியே வீடு இருப்பது நல்லதுதான். அங்கேயே எல்லா வசதிகளும் (சூப்பர் மார்க்கெட், ஜிம், உணவகம் போன்றவை) வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சார் வீடு சௌகரியமாகத்தான் இருக்கிறது என்னதான் வந்தாலும் பணிக்குச் செல்ல சிடிக்கு வரத்தானே வேண்டும் என் போன்றோர் அங்கு இருப்பது கஷ்டம்

      நீக்கு
  2. உங்களுக்கும், குறிப்பாக உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள். வீட்டின் அமைப்பு நன்றாக இருக்கிறது. இதோ, இதை டைப் அடிக்கும் இந்நேரம் சென்னையில் வெயில் அனல் அடிக்கிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயிலின் தாக்கம் இனி குறைய ஆரம்பிக்கும் சென்னையில் பதிவர் சந்திப்பு என்பது இனி கடினமான செயலாகலாம் தூரத்தைச் சொன்னேன்

      நீக்கு
  3. காணொளிகள் ஓடவில்லை. அடோப்ஃ பிளாஷ் பிளேயர் இருக்கிறதா என்று கேட்கிறது! தம வாக்குப் போட்டாச்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னச்சின்ன காணொளிகள்தான் கூகிள் க்ரோமிலும் அப்படிக் கேட்கிறதா பார்க்க முடிந்தால் நன்றாயிருக்கும்

      நீக்கு
  4. தங்களது மகனின் குடும்பத்தாருக்கு எமது வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  5. தங்கள் மகன் குடும்பத்தினருக்கும்
    தங்களுக்கும் வாழ்த்துகள்

    அன்னையர் நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் பூராவும் அன்னையர் தினம் ஒரே நாளில் இல்லையா நன்றி சார்

      நீக்கு
  6. வீடு சூப்பராக இருக்கிறது சார்! தங்களுக்கும் மகனுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா: வாழ்த்துகளுடன்.....முதல் காணொளி பார்க்க முடிந்தது. வீட்டிற்குள் செல்வது.

    நீச்சல் குளக் காணொளி வரவே இல்லை...மீண்டும் ரெஃப்ரெஷ் பண்ணிப் பார்க்கிறேன் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி முதல் காணொளி நீளம் சற்றே அதிகமாய் இருந்ததால் யூ ட்யூப் மூலம் பதிவிட்டது மற்றவை நேராக இட்டது கூகிள் க்ரோம் உபயோகித்துப்

      நீக்கு
  7. மற்ற காணொளிகள் அடோப்ஃப்ளாஷ் ப்ளேயர் கேட்கிறது...பார்க்க முடியவில்லை சார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. புது வீடு அழகு.
    உங்கள் மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். முதல் காணொளி பார்த்தேன், மற்ற இரண்டும் பார்க்க முடியவில்லை.
    பூஜை அறையில் க்ண்ணாடி ஓவியத்தில் சமயபுர மாரியம்மன் உங்கள் கைவண்ணத்தில் உருவாகியதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூஜையறை தஞ்சாவூர் ஓவியம் வாங்கியது என் படைப்பல்ல முதல் காணொளி யூ ட்யூப் மூலம் பதிவிட்டது

      நீக்கு
  9. Chennai based real estate company this ’Casa Grande’:ஸ்பானிஷ் வார்த்தைகள். Casa என்றால் வீடு, அபார்ட்மெண்ட். Grande என்றால் இங்கிலீஷில் Grand. அதாவது Grand House அல்லது Grand Home என்ற பொருளில் வரும்.

    வீடு நன்றாக அமைந்திருப்பது படங்களில் தெளிவாகிறது.உங்கள் பையனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் அந்தக் காலத்தவர். ஆகவே தரையோடு சிந்தித்தீர்கள். உங்கள் பிள்ளைகள் இந்தக் காலத்தவர்கள். ஆகவே அவர்கள் வானத்தோடு சிந்திக்கிறார்கள். அதாவது அடுக்குமாடிகளை விரும்புகிறார்கள் என்று சொன்னேன். மற்றபடி, பெரும்பாக்கம் நன்கு வளரக்கூடிய பகுதிதான். எனது வீடு இன்னும் பத்து கிலோமீட்டர் மேலே போகவேண்டும். எப்போது வருவீர்கள்?

    இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகனும் வேளச்சேரி வீடு வாங்கும் போது இருந்த நிலையை நினைக்கச் சொல்கிறான் இதுநான்கு அடுக்குகளே மாலை சென்றிருந்த வீடு 17 அடுக்குகள் போரூரில் சந்திப்பது தூரம் கடினமாக்கும்.அதுவும் என் போன்றோர் மற்றவரை நாட வேண்டுமே

      நீக்கு
  11. அருமையான வீடு. போகப் போகப் பழகி விடும். காணொளி எதுவும் பார்க்க முடியவில்லை. அதுவும் நீச்சல் குளக் காணொளி???? இங்கே இல்லவே இல்லை! உங்கள் மகனுக்கும் அவர் குடும்பத்தினரும் புது வீட்டில் சுபிக்ஷமாகவும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துகள். இளைய மகனுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. சென்னையைப் பொருத்த வரை
    தூரம் ஒரு பொருட்டில்லை
    இதுபோல் வீடு வந்து சேர்ந்தால்
    அமைதியான சூழலில் சகல வசதிகளுடன்
    இருக்க முடியுமா என்பதுதான் முக்கியம்
    என்பதுதான் எனது கருத்தும்

    கிரஹப்பிரவேச படங்கள் அற்புதம்

    வளமும் நலமும் நிறைவாகப் பெற்று நீடுழி வாழ
    அனைவருக்கும் என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் இருப்பது போல் இருக்காது வேறு ஊரிலிருப்பது போல் தோன்று கிறது

      நீக்கு
  13. வீடு அருமையாய் இருக்கிறது! புதுமனை புகுந்துள்ள தங்கள் மகனுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. புதுமனை புகுந்துள்ள தங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் என் வாழ்த்துகள்!



    கழுப்பார்வையில் என்று நீங்கள் இட்ட படத்தை பார்க்கும் போது கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. காரணம் கொஞ்சம் கூட தேவையான இடைவெளியை விடாமல் மிக நெருக்கி நெருக்கி கட்டி இருப்பதை பார்க்கும் போது மழை நீர் தேங்க இடம் விடாமல் கட்டி இருப்பது தெரிகிறது. இவ்வள்வு வீடுகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து இப்போது தண்ணீர் எடுக்கும் போது எதிரகாலத்தில் தண்ணீர் வறட்சி நிச்சய்ம மிக அதிக அளவில் இருக்கும் இதை எல்லாம் யோசிக்காமல் டவுன்சிப் ப்ளானிங்க கமிட்டி எப்படிதான் அனுமதி அளிக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு மாடல் மேலே இருந்து பார்ப்பதால் அப்படித் தோன்றலாம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு உபயோகிக்கதிட்டம் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  15. வீடு மிகவும் அழகாக இருக்கு சார் ..மகனுக்கு நீங்கள் நண்பர் போலிருக்கிங்க :)
    அந்த மொத்த ப்லாட்ஸ்சும் ஒரு mini வில்லேஜ் போல அமைந்திருக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழந்தானே வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  16. குடிபுகுதல் நடத்திய அனிவருக்கும் வாழ்த்துக்கள். மிக அருமையான இடம், புதுச் சூழல்போல இருக்கிறது, மிக நீட்டாக இருக்கு, இப்படியே தொடர்ந்து பேணினால் மிக நன்றாக இருக்கும். வீடியோக்கள், படங்கள் அனைத்தும் AWESOME.

    பதிலளிநீக்கு
  17. புதுவீடு அருமை!

    மகனுக்கு இனிய வாழ்த்து(க்)கள்!

    பதிலளிநீக்கு
  18. வீடு அழகு அருமை
    வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  19. புது வீடு அழகு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    காணொளிகள் நன்று.

    பதிலளிநீக்கு
  20. வீடு அருமை. எங்கள் முன்னாக அதனைக் கொண்டு வந்த தங்களின் எழுத்துக்கு மனமார்ந்த நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. படங்களில் கண்ட வீடு சூப்பர்.உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரிலும் நன்றாகவே இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு