செவ்வாய், 23 மே, 2017

இது ஒரு புதுக் கதம்பம்

                                            இது ஒரு புதுக் கதம்பம்
                                             ---------------------------------------
பதிவுகள் எழுதவே மனம்  ஒழுங்குபடுவதில்லை  கனமான தலைப்பில் எனக்குத் தோன்றியதை  எழுதினால்  பலரும் கருத்து சொல்லத் தயங்குகிறார்கள் யார் எப்படிப் போனால் என்ன என்று எண்ணுகிறார்களோ என்னவோ எழுதாமல் இருக்கவும் முடியவில்லை/ வாசிப்பவர்களுக்கு  இந்தமாதிரியும் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவருமே எப்படியும்  வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கினாலும்   கருத்து போய்ச் சேர்ந்து விடும்  அல்லவா.
இந்தமுறை ஒரு மொக்கைப்பதிவு.  இதை மொக்கை என்று ஏன்  கூறுகிறேன்  என்றால் இதில்  காணும் விஷயங்களும்  செய்திகளும்   என்னால் கற்பனை செய்யப்பட்டதல்ல  கண்டது படித்தது போன்றவற்றில் இருந்து பகிர்கிறேன்   இருந்தாலும்  என்  முத்திரையும்  இருக்க வேண்டும்  அல்லவா அதை நான் வாசகர்களை வரவேற்பதில் காண்பிக்கிறேன்   பாருங்கள் ரசிப்பீர்கள்


ஒரு புறா காரில் அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம் காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை.  காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.
மண வாழ்வில் இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர்  LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது எப்படி இருக்கு.?

 An apple a day keeps the doctor away. ஆனால் An apple a day costs Rs1000-/  a month டாக்டருக்கு  அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக சிந்திக்க வேண்டும்.

”நான் கரைந்தால் விருந்தினர் வருவர்” என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
”விருந்தினர் வந்தால் என் கழுத்தறுத்து  மகிழ்வார்கள்” என்று கோழி சொல்லி வருந்தியது.
Two pieces of advice for married men 
1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE
  YOU ARE ONE OF THEM 
2) NEVER BE PROUD OF YOUR CHOICES
  YOUR WIFE IS ONE OF THEM 
 An amazing English sentence
 I do not know where family  doctors   acquired  illegibly perplexing  handwriting:  nevertheless extraordinary pharmaceutical  intellectuality  counterbalancing  indecipherability transcendentalises intercommunications  incomprehensibleness

The author of this sentence  must be a vocabulary genious . –Why?

 This is a sentence where the first word  is one letter long , the second word is two letters long  the third word is three letters long and so on  .The twentieth  word is  twenty letters long  !






              .



56 கருத்துகள்:

  1. மொக்கைப்பதிவு என நீங்கள் கூறுகின்றீர்கள். இருந்தாலும் அதிலும் சில விஷயங்களை எங்களுக்குச் சொல்லிவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாக கற்பனை செய்து எழுதாதது மொக்கை என்று கூறி விட்டேன் எதிலும் சிலவிஷயக்களாவது இருக்க வேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  2. இந்தக் கதம்பம் ரொம்ப சுவாரசியமானது. கொஞ்சம் இடைவெளி விட்டு ஒவ்வொண்ணுக்குமே ஒரு தலைப்பு வைக்கலாம். அவ்வளவு மதிப்புள்ளது.

    An apple a day keeps the doctor away. - No spending on toothpaste keeps everybody away.

    நீங்கள் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளது உங்கள் பரந்துபட்ட படிப்பைக் காண்பிக்கிறது. ரசித்தேன். தொடருங்கள் இதனை, அவ்வப்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் எழுத கற்பனை இல்லாதபோது இடைவெளியில் இம்மாதிரி சில படைப்புகள் தொடரலாம் ரசித்ததற்கு நன்றி

      நீக்கு
  3. # LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது எப்படி இருக்கு.?#
    இதைதான் ...ஆகிவந்தா இந்த மடம் ,ஆகாட்டி சந்தை மடம் என்கிறார்களோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தை மடத்தில் லவ் அனதர் ஒன் ஒன்றுதானா வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  4. இரசித்தேன் ஐயா இது விடயம் உள்ள பதிவே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிப்பதற்காகவே விஷயங்கள் சேர்க்கப்பட்டன வரவேற்பை ரசித்தீர்களா ஐ மீன் மயிலின் வரவேற்பை

      நீக்கு
  5. மயில் அழகு சார்

    இது மொக்கையா? ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தது. குறிப்பாக ஆப்பிளும், லவ் அனதர், அட்வைசும் எல்லாம் புன்னகையை வரவழைத்தது...

    மிகவும் பிடித்தது சார். அந்த வொக்காபுலரி வாக்கியம் முன்பே நீங்கள் இங்கு பகிர்ந்திருக்கிறீர்களோ? இருந்தாலும் மீண்டும் வாசித்தாலும் அதை எழுதிய அறிவாளியை மெச்சாமல் இருக்கமுடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்ந்தெடுக்கப்பட்ட மொக்கைகள் அல்லவா ரசிப்புக்கு நன்றி மேம் மயிலின் வரவேற்பை ரசித்தது மகிழ்ச்சி

      நீக்கு
  6. பயனுள்ளது, சுவாரஸ்யமானது
    மொக்கயின்பாற்படாது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. புறாக்கதை அருமை இதுவரை நான் கேள்விபடாதது...தொடருங்கள் இந்த மாதிரி மொக்கைகள் என்று சொல்லக் கூடிய சுவையான செய்திகளை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே ரசித்தது புறாக்கதை வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  8. ஒரு சாமான்ய 77 வயது இளைஞரின் பார்வையில் பாஜக ஆட்சி http://avargal-unmaigal.blogspot.com/2017/05/77-review-of-bjp.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்தேன் வருகைப்பதிவு இருந்தால் மகிழ்ச்சி

      நீக்கு
  9. எழுதுவது உங்கள் மனத்திருப்திக்கு.. யார் மனசும் நோகடிக்காமல் அப்பதிவு இருந்தால் தயங்காமல் பதிவிடுங்கள்ப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் எண்ணங்களைப் பதிவுகள் மூலம் கடத்துகிறேன் யாரையும் நோகடிக்கும் விருப்பமில்லை பதிவுகள் தொடரும் மேம்

      நீக்கு
  10. வித்தியாசமாக இருக்கிறது பதிவு.. சிரிப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறீங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றுதானே நினைத்தேன் அதிரா ஆஷா போஸ்லே புதிதாய் இருக்கிறதே

      நீக்கு
  11. நம் கடமை எழுதுவது மட்டுமே.... யாருக்கு வாசிக்கணும் என்ற விதி இருக்கோ அவுங்க கட்டாயம் வாசிப்பாங்க.

    அதான் எழுதிக்கிட்டே போகணும். என்ன ஒன்னு.... பின்னூட்டத்தை எதிர்பார்க்கக்கூடாது :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி இருக்கிறவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் மகிழ்ச்சியே

      நீக்கு
  12. அருமையான கதம்பம்
    தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. எல்லாமே ஏற்கெனவே படித்திருக்கிறேன்! ஆனால் சுவாரஸ்யம்தான். ரசித்தேன்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்துக் கேட்டதுதான் ரசித்ததற்கு நன்றி

      நீக்கு
  14. அன்பின் ஐயா அவர்களுடைய பதிவுகள் என்றும் இனியவை..

    இந்தப் புறாவின் சந்தேகமும் கோழியின் வருத்தமும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன்..

    தினம் ஒரு ஆப்பிள் தின்பது பற்றி பதினோறாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தியபோது - ஒரு சந்தேகம் கேட்டேன்..

    பெண் பிள்ளைகள் எல்லாரும் சிரித்தார்கள்..

    ஆசிரியர் சத்தம் போட்டார்..

    நினைவுப் பூக்கள் மலர்ந்ததில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி சார் உங்கள் நினைவலைகளைத் தொட்டுச்சென்றது மகிழ்ச்சி

      நீக்கு
    2. அன்பின் ஐயா அவர்களுக்கு,
      தங்களுடைய பதிவின் வழியாக எழுந்த நினைவலைகளை எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.. மகிழ்ச்சி..

      நீக்கு
    3. நானும் படித்தேன் நன்றி

      நீக்கு
  15. ஹாஹா :) ரசித்தேன் சிரித்தேன் ..ரொம்ப சிரிச்சது அந்த 2 அட்வைஸ் திருமணமான ஆண்களுக்கு :)
    மொக்கை என்றெல்லாம் ஒன்றுமில்லை சார் அனைத்தும் நல்ல இருந்தது .ஒருவரின் எழுத்துக்கள் ஒருமுறை படித்தாலும் நினைவில் நிற்கணும் எவ்ளோ காலமானாலும் ..நான் சமீப காலமாதான் உங்கள் பதிவுகளை தொடர்கிறேன் அதுக்கு முந்தி ரெண்டு பதிவு உங்களுடையது படிச்சேன் இன்னும் நினைவில் இருக்கு
    1,உங்க niece லண்டனில்ஸ்கை டைவிங் செய்தது அப்புறம் உங்க மகன் வீட்டில் வளர்த்த நாலு கால் செல்லம் ..



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவரின் எழுத்துக்கள் ஒருமுறை படித்தாலும் நினைவில் நிற்கணும் ..தங்களின் எழுத்துக்களும் அதையே பிரதிபலிக்கின்றன .

      நீக்கு
    2. ஏஞ்செலின் என் எழுத்துகளைப் படிக்கிறீர்களென்பதே மகிழ்ச்சி. அதுவும் நினைவில் நிற்கிறது என்னும் பாராட்டுக்கு நன்றி என் சாதாரணன் ராமாயணம் படித்துப் பாருங்கள் ஜூன் 2011 ல் எழுதியது ஒரே வாக்கியத்தில் ராமாயணத்ட்க்ஹின் ஆறு காண்டங்களையும் எழுதி இருக்கிறேன் என் மகன் வீட்டில் வளர்த்த நாலுகால் செல்லம் இப்போதுவேறு டத்தில் வளர்கிறது நாங்களும் ஒரு காக்கர் ஸ்பானியல் நாயை வளர்த்தோம் அது பற்றியும் எழுதி இருக்கிறேன் என்னைப் பாதிஉக்கு ம்நிஅழ்வுகளைபதிவாக்குகிறேன் அவற்றில் சில கட்டுரை வடிவம் பெறும் சில சிறுகதை வடிவம் பெறும் சில கவிதை வடிவம்பெறும் இந்த கலெக்‌ஷனை புஸ்தகாவில் மின்னூலாக்கி இருக்கிறேன்

      நீக்கு
    3. செல்லியை படித்தேன் அங்கே பின்னூட்டம் தரேன் ..ராமாயணம் படித்து கருத்திடுவேன்

      நீக்கு
    4. சுட்டி பெறாமலேயெ சென்று படித்ததற்கு நன்றி ஒரு செய்தி. என் படைப்புகள் பலவும் கதைகள் கவிதைகள் நாவல் போன்றவை மின்னூலாக வந்திருக்கிறதூங்களுக்கு ஆர்வம் இருந்தால் எனக்கு உங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் புஸ்தகாவினரிடம் என் கிஃப்டாக அனுப்பச் சொல்கிறேன் வருகைக்கு நன்றி ஏஞ்செல்

      நீக்கு
    5. மிக்க நன்றி சார்.. நான் உங்களது மற்ற பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்து பின்னூட்டமிடுகிறேன் .
      புஸ்தகாவில் நான் உங்களது புத்தகங்களை வாங்கி அல்லது ரென்ட் செய்தெ படிக்க விரும்புகிறேன் ..விரைவில் பள்ளி விடுமுறை வரும்போது உங்களது புக்ஸை படிப்பேன்..படித்து விட்டு சொல்கிறேன்

      நீக்கு
  16. சீரியஸான பதிவு எழுதுவது எளிது சார். ஏனென்றால் பொதுவாக ஏதோ ஒரு நிகழ்வோ அல்லது ஒருவர் நடந்து கொள்ளும்விதமோ நம்மைத் தூண்டி விடுகின்றது. நாம் அச்சூழலில் நம் உணர்வுகளைப் பதிவு வடிவில் சீரியஸாக சொல்லிவிடுகிறோம். இதுபோல் "எளிய" பதிவுகள் எழுதுவற்கு மிகவும் யோசித்து எழுத வேண்டி இருக்கிறது. நிறையவே உண்மைத் தத்துவங்கள் அடங்கியுள்ளது உங்கள் புதுக் கதம்பத்தில். :)

    உண்மைதான்..புறாவுக்கு மனிதன் உணர்வுகள் புரியாது. மனிதனுக்கும் புறாவின் உணர்வுகள் புரிவதில்லை, புரிய முயல்வதும் இல்லை. ஆனால் மனிதன் தனக்குத்தான் ஆறறிவு,,தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொள்கிறான். பரிணாமவியல்ப் படி பாத்தால், குரங்கிலிருந்து மனிதன் வந்து இருக்கிறான். மனிதன் உருவாகுமுன்னால் குரங்குதான் மனிதனுக்கு ஒரு படி கீழாக "உயர் நிலையில்" இருந்து இருக்கிறது. இன்னும் பில்லியன் வருடங்கள் ஆனால் மனிதனும் குரங்கு ஸ்தானத்திற்கு போய்விடுவான். ஏழறிவு கொண்ட இன்னொரு உயிரினம் தோன்றி மனிதனைக் குரங்காகவும் பார்க்கும் நிலை வரும், மனிதன் உணர்வுகளை மதிக்காமல் அவனுக்கு எது சரி என்று "அவ்வுயிரினம்" முடிவு செய்யலாம் ..என்பதையும் மனிதன் இன்று யோசிப்பதில்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து கருத்து எழுதீருக்கிறீர்கள் என்பதிவின் நோக்கமே வாசிப்பவரை சிந்திக்கச் செய்வதுதான் நன்றி சார்

      நீக்கு
  17. எதையும் கூண்டில் அடைத்து ‘அழகு’பார்க்கும் பிரஹஸ்பதிகள் கவனிக்கவேண்டிய விஷயம் உங்கள் பதிவில் இருக்கிறது. கவனித்தால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதாபிமானத்தின் அடிப்படையில் புறாவுக்கு சிகிச்சை அளித்து அதை கூண்டில் வைத்தால் இப்படியும் நினைக்க வாய்ப்பா வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  18. நான் பொதுவாப் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறதில்லை என்றாலும் தொடர்ந்து வருபவர்கள் வரவில்லை எனில் ஏன், என்ன காரணம் என்று மண்டையை உடைத்துக் கொள்வேன். அதுவும் சில நாட்களே. அப்புறமா வந்தா வரட்டும்னு விட்டுடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பின்னூட்டம் ஏனோ மேம் என்னை நினைத்தா

      நீக்கு
    2. பதிவு எழுதிட்டுக் கருத்து வரலையேனு கவலைப்படும் எல்லோருக்கும். என்னையும் சேர்த்து. :)

      நீக்கு
  19. உங்கள் பதிவின் சில செய்திகள் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கச் சுவை. அதிலும் அந்தக் கடைசி ஆங்கில வாக்கியமும் அதன் அமைப்பும் குறித்து ஏற்கெனவே படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்த செய்திகள் நினைவுக்கு வருவது செய்திகளின் பலம்தானே அதுவே பதிவின் பலமும்கூட என்று நினைக்கிறேன் மேம்

      நீக்கு
  20. புன்னகைக்க வைக்கும் பதிவு.

    இருந்தாலும் புறாவின் தன்னம்பிக்கைக்குத் தான் முதல் மார்க். ...
    //
    ” காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நிகழ்வு எத்தனை மாறுபட்ட கண்ணோட்டங்கள் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  21. சுவையான துணுக்குகள் . நன்கு ரசித்தேன் . நன்றி .

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு