Friday, September 29, 2017

ஆயுத பூஜை நினிவுகளில் சில


                                                ஆயுதபுஜை நினைவுகள்சில
                                                 ----------------------------------------------
இன்றுதானே ஆயுத பூஜை என்றானால்  என்ன..... இன்றும்  என்றும்போல ஒரு நாள் அதுவும் விடுமுறைநாள் தி தமிழ் இளங்கோ அவர்கள் அவர்கள் அவரது ஆயுதபூஜை நினைவுகளைப்பதிவாக்கி இருக்கிறார் எனக்கும் பணிக்கால ஆயுத பூஜை நினைவுகள் சில வந்தது அதிலும் குறிப்பாக நான் பயிற்சி முடிந்து முதலில் பணியில் இருந்த எச் ஏ எல் ஏரோ எஞ்சின்  டிவிஷனில் நடந்த முதல் ஆயுத பூஜை (1959ம் வருடம் ) மங்காமல் நினைவுக்கு வருகிறது அப்போது எஞ்சின் டிவிஷன்  துவங்கி இருந்த நேரம்  ப்ரிஸ்டல் சிடெலி BRISTOL SYDELLY ஆங்கிலக் கம்பனியுடன்  ஆன கூட்டு முயற்சி  நிறையவே ஆங்கிலேயர்கள் இருந்தனர் எச் ஏ எல் லில் அப்போதெல்லாம் ஆயுத பூஜையை  தொழிலாளிகள் தங்கள் திறமைகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை எக்சிபிட் செய்வதில் பெருமை கொள்வார்கள் அதற்கான செலவுகளை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் எஞ்சின் டிவிஷன் புதிதாக தொடங்கப்பட்டதால் அன்றைய தினத்தை வெகுவாக அலங்கரித்து பூஜை செய்வதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது  விழா நடவடிக்கைகளை எஞ்சின்  டிவிஷனில் செய்ய ஒரு குழு நிர்ணயிக்கப்பட்டு அதன் தலைவனாக என்னை நியமித்தார்கள்
பூஜைக்கு வேண்டிய பொருட்களையும்   கடவுள் படங்களுக்குச் சார்த்த வேண்டிய மாலைகள்  மற்றும்தின்பண்டங்களாக பொரி கடலை போன்றவையும்  வாங்க முடிவு செய்யப்பட்டது நன்கு தீட்டப்பட்ட அழகு படங்கள் லட்சுமி  சரஸ்வதி பார்வதி போன்ற படங்கள்பெரிதாகக் கொண்டுவரப்பட்டன ஒரு மேடை போடப்பட்டு பணிசெய்யும்  ஆயுதங்கள் சிலவற்றையும்வைக்க முடிவெடுக்கப்பட்டது  அப்போது எங்கள் மேலாளர் மாலைகள் வாங்கும் போது  கூடவே ஐந்தாறு மாலைகளையும்  சேர்த்து வாங்கச் சொன்னார்  எனக்கு ஏன்  இந்த அதிகப்படியான மாலைகள் என்று தெரியவில்லை கேட்டேன்  வந்திருக்கும் ஆங்கில அதிகாரிகளை கௌரவிக்கவே  இந்த அதிகப்படியான   மாலைகள் என்றார்  எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை 
தொழிலாளிகள் தாங்கள் வணங்கும் ஆய்தங்களையும்  கடவுள்படங்களையும்   மாலை இட்டு வணங்கலாம் ஆனால் வெள்ளை அதிகாரிகளுக்கு மாலை போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன் சொன்னதைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன்   எனக்கு சரியில்லை என்று தோன்றியதால் பூஜைக் குழுவின்  பொறுப்பில்  இருக்க முடியாது என்று கூறினேன்  மேலும்  வரவு செலவுக் கணக்குகளுக்கு நான்  பொறுப்பானதால் மாலைகள் வாங்க  இயலாது என்றும் கூறினேன் 
 மேலாள்ருக்குக் கோபம்வந்தது எப்படியும் ஆங்கில அதிகாரிகளுக்கு மாலைகள் போட வேண்டும்  என்றார் அதுவே அவர்களுக்கு நம்  மேல் பிரியம் வரவழைக்கும் என்றார்  நான்  மறுதளித்து விட்டதால் அவரே அவரது செலவில் மாலைகள் வாங்கி வந்தார்  அந்த முதல் விழாவை நாங்கள் புறக்கணித்தோம்  என்றுசொல்ல வேண்டியதில்லை இந்த தாழ்வு மனப்பான்மை எனக்குப் பிடிக்க வில்லை அவர்களுக்கு இதன் பின்  இருக்கும் பக்தியும் சிரத்தையும்  தெரியாது மாலைகளை அணிந்துகொண்டு நாள் முழுவதும் வலைய வந்தனர் ஏதோ தமாஷ் போல் கருதினார்கள்
அதன்  பிறகு வந்த ஆயுத பூஜைகள் ஏரோ எஞ்சின் டிவிஷனில் ஆங்காங்கே அவரவர் நம்பிக்கைப் பிரகாரம் கொண்டாடப்பட்டது  எச் ஏ எல் மெயின் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தங்கள் திறமையைக் கொண்டு உருவாக்கிய பொருட்களுடன் ஒரு எக்சிபிஷன்  போல் நடத்துவார்கள் ஒரு க்யூபுக்குள் க்யூப் அதற்குள் ஒரு க்யூப் என்று ஒரு லேத் மெஷினைக் கொண்டே உருவாக்குவதைப் பார்த்து  ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்
பி எச் இ எல் லில் அன்று எல்லோருக்கும்  தொழிற்சாலைக்கு வரும் உரிமை உண்டு  ஒவ்வொரு பகுதிக்கும்சென்று எத்தனை பொரி கடலை இனிப்புப் பொட்டலங்கள் பெற்றோம் என்று காட்டிப் பெருமைப்படுவார்கள்  விஜயவாடாவில் இதே ஆயுதப் பூஜையை காண்ட்ராக்டர்கள் அன்று கொண்டாடுவதில்லை  விஸ்வ கர்மா பூஜை என்று வேறு ஒரு நாளில் கொண்டாடுவார்கள்
என் நினைவுகளை மீட்டெடுக்க உதவிய திரு தி தமிழ் இளங்கோவின் பதிவுக்கு நன்றி 
நான் பிரதிலிபிக்கு ஐந்து கவிதைகள் அனுப்பி இருக்கிறேன்  கவிதை  மழை போட்டிக்காக  நேரமிருந்தால் படித்துக் கருத்துக்  கூற வேண்டுகிறேன் september 30ம் தேதி  / http://tamil.pratilipi.com/event/kavidhai-thiruvizha/ சுட்டியில் பதிவிடுவதாகக் கூறி இருக்கிறார்கள்




 

   

38 comments:

  1. தனக்கு பிடிக்கவில்லை என்பதை மேலாளருக்கு ஆணித்தரமாய் வெளிப்படுத்திய தங்களது செயல் பாராட்டுக்குறியது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ஜி

      Delete
  2. சுட்டிக்கு சென்றேன் ஆனால் தங்களது கவிதையை காண இயலவில்லை ஐயா

    தமன்னா 1

    ReplyDelete
    Replies
    1. 30ம் தேதி பதிவிடுவாகக் கூறி இருக்கிறார்கள் ஜி

      Delete
  3. ஆயுத பூசையன்று ஆயுதங்களுக்கும், கடவுளர் படங்களுக்கும் மாலையிடலாமே தவிர வந்திருக்கும் வெளிநாட்டினருக்கு அல்ல என தாங்கள் சொன்ன கருத்தோடு உடன்படுகிறேன்.
    அன்றிலிருந்து இன்றுவரை தாங்கள் தங்களின் தனித்துவத்தை கடைப்பிடித்து வருவது அறிந்து மகிழ்ச்சி! பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ஐயா வெள்ளையரைக் கண்டால் நாம் நம்மை க் குறைத்து மதிப்பிடுகிறோம்

      Delete
  4. ரசித்தேன்.

    ப்ரதிலிபி என்னை ரொம்பப் படுத்தும். நான் அந்தப் பக்கம் செல்வதில்லை. இதை பரிவை குமாரிடமும் சொல்லியிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கே பிரதிலிபியில் அபிமானம் குறைகிறது பெரும்பாலான அவர்களது போட்டிகளின் வெற்றியாளர்கள் வாசகர்களி தீர்மானம் என்கிறார்கள் ஆனால் எல்லா வாசகர்களாலும் பதிவுகளுக்குக் கருத்து இட முடிவதில்லை இதில் முடிவு பிரதிலிபியினரே செய்வார்கள் என்றதால் எழுதியதை அனுப்பி உள்ளேன்

      Delete
    2. எனக்கும் இதே அனுபவம் தான் ஸார். பிரதிலிபியில். ரொம்பவே படுத்தும். அதனால் அங்கு சென்றதில்லை. உங்கள் கருத்தும் மிகவும் சரியே.

      பிரதிலிபியினரே முடிவு செய்வார்கள் என்றால் ஓகே ஸார் போய் பார்க்கிறேன்.

      கீதா

      Delete
    3. பொதுவாகவே பிரதிலிபி பற்றிய என் அனுபவம் சோ சோ தான் இந்த முறை பார்க்கலாம்

      Delete
  5. ,அந்தக் காலத்திலேயே நீங்கள் நம்பினவைகளைச் சகயல்படுத்தியிருக்கிறீர்கள். Interesting.

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் தெரியும் என்னைப் பற்றி மனதில் படுவதை கூறி விடுவேன் எழுதி விடுவேன்

      Delete
  6. // தொழிலாளிகள் தாங்கள் வணங்கும் ஆய்தங்களையும் கடவுள்படங்களையும் மாலை இட்டு வணங்கலாம் ஆனால் வெள்ளை அதிகாரிகளுக்கு மாலை போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன் //

    உங்களுடைய உறுதிக்கு எனது வணக்கம். நான் பிரதிலிபி பக்கம் இப்போது அதிகம் செல்வதில்லை. சரியாக அப்டேட் செய்கிறார்களா என்றும் தெரியவில்லை.உங்கள் பதிவுலக ஆர்வத்திற்கும், வலைப்பதிவர் சந்திப்பிற்கும் Tamil Indiblogger இல் சேர்ந்து கொள்ளலாமே?

    இந்த பதிவினில் எளியேனுடைய பெயரையும் தாங்கள் சுட்டிக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றிலிருந்து ஒன்று சரிதானே சார் வருகைக்கு நன்றி

      Delete
  7. பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம் தான் இருக்கிறது. அந்த சுகம் அனுபவித்துப் பார்த்தவர்கள் எல்லோருக்குமே தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. சில நினைவுகளுக்கு ஏதோ உந்துதல் தேவைப்படுகிறது தி தமிழ் இளங்கோவுக்கு நன்றி இனிய நினைவுகள் சுகம் கசப்பான நினைவுகள் வேண்டாமே வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. உங்கள் உறுதி என்னை வியப்படைய வைக்கிறதுப்பா. வேலைக்காக வளைந்து நெளிந்து செல்வதை மட்டுமே கண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஐ யாம் எ லிட்டில் டிஃப்ஃபெரெண்ட் வருகைக்கு நன்றி ம்மா

      Delete
  9. நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட விதம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  10. ஸார் உங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்பது பாராட்டிற்குரியது. அதுவும் அலுவலகத்தில் உங்கள் நிலைப்பாட்டை உறுதியாகச் சொல்லியதும் பாராட்டிற்குரியது. ..நல்ல நினைவுகள் ஸார்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் அன்றிலிருந்தே இப்படித்தான் தெரிந்திருக்குமே வருகைக்கு நன்றி சார்.மேம்

      Delete
  11. இன்னும் உங்கள் கவிதைகளை வெளியிடவில்லை போலும் ஸார். இப்போது சென்று பார்த்தும் இன்னும் வெளியாகவில்லை ஸார். அல்லது வேறு சுட்டி உண்டா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. 30ம் தேதி என்றார்கள் பார்க்கலாம் வேறு ஒரு சுட்டியில் மூன்று கவிதைகள் வெளியாகி உள்ளன என் தளத்தில் வெளியானவையே

      Delete
  12. தங்களின் உறுதி போற்றுதலுக்கு உரியது ஐயா
    இணைப்பிற்குச் சென்று தங்களின் கவிதையினைப் படிக்க இயலவில்லை

    ReplyDelete
    Replies
    1. இன்னும் வெளியிடவில்லை போலும் பார்க்கலாம் கவிதைகள் எந்தளத்தில் வந்தவையே

      Delete
  13. ஆயுத பூஜை வழிபாட்டில் வெளிநாட்டவருக்கு மாலை மரியாதை எதற்கு?..

    தங்களுடைய கருத்து நியாயமானதே..

    ReplyDelete
  14. நாம் இன்னும் மனதளவில் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதின் எதிர்ப்பே அது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  15. நல்ல பதிவு ஐயா!

    ஆயுத பூசை போன்றவை தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவை அல்ல என்பது என் சிற்றறிவுக்கெட்டிய புரிதல். ஆகையால் நான் சுண்டல் சாப்பிடுவதோடு சரி. :-)

    ஆனால், தமிழர் பண்பாடோ இல்லையோ, ஆக மொத்தம் அது வழிபாடு சார்ந்த ஒரு விழா. அதிலே போய் கடவுள்களுக்கு மாலை சூட்டும் கையோடு மனிதர்களுக்கும் மாலை சூட்டுவது சற்றும் ஏற்க முடியாதது. மனிதர்களுக்கு மாலை சூட்டிப் பெருமைப்படுத்துவது வழக்கம்தான். ஆனால், எதற்கும் இடம் - பொருள் - ஏவல் வேண்டுமில்லையா? கடவுள் பூசையின்பொழுது, கடவுளுக்கு மாலையிடும்பொழுது சேர்ந்தாற்போல் மனிதர்களுக்கும் மாலையிடுவது ஏற்புடையதில்லை. அது அந்தக் கடவுள்களை மட்டுமில்லை, அதைக் கும்பிடுபவர்களையும் புண்படுத்துவதாகும். சொல்பவர் மேலதிகாரியாயிருந்தும் அதை நீங்கள் துணிந்து எதிர்த்தது மிகச் சிறப்பு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அது தமிழர் பண்பாடோ இல்லையோ ஒரு கலாச்சாரத்தின் தொடர்புடையது எனக்கும் இம்மாதிரி வழிபாடுகளில் சிறிதும் நாட்டமில்லை. ஆனால் அதெல்லாம் அவரவர் மனத்திருப்தி எனக்கு அம்மாதி ரி வெள்ளையர்களுக்கு மாலையிடல் ஏற்புடையதல்ல. நம் கோவில்களிலும் கூட பூரண கும்ப மரியாதை என்னும் பெயரில் அடிமைத்தனம் தொடர்கிறது அங்கும் மனிதனுக்கு மரியாதை என்னும் பெயரில் சில வழக்கங்கள் தொடர்கின்றன அதுவும் எனக்கு ஏற்புடையதல்ல

      Delete
  16. முன்பே எழுத்யிருக்கிறீர்களோ?

    ReplyDelete
  17. ஏதாவது பதிவில் குறிப்பிட்டிருக்கலாம் நினைவில்லை தேட வேண்டும்

    ReplyDelete
  18. ஆயுத பூஜை நினைவுகள் இனித்தன,,/

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக நினைவுகளே இனிதானவையே அதிலும் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் நினைவுகள் சொல்ல வேண்டுமா வருகைக்கு நன்றி சார்

      Delete
  19. Hats off to your boldness at 21 yrs of age!that too first employment!great sir!

    ReplyDelete
    Replies
    1. தைரியம் என்பதைவிட கொண்ட கொள்கைகளில் பிடிப்பின் வெளிப்பாடு என்பதே சரியாகும் என் தளத்துக்கு வருவது அறிந்து மகிழ்ச்சி சார்

      Delete
  20. வழக்கம்போல உங்களது துணிவை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகையும் கருத்தும்மகிழ்ச்சி தருகிறது

      Delete