Sunday, October 29, 2017

தீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள் -2017


                  தீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள் -2017
                  --------------------------------------------------------------------
பணியில் இருந்த போது தீபாவளிச் செலவுகள் அனைத்துமே எனக்குத்தான்  ஓய்வு பெற்றபின்னும் மக்களுக்குப் புதுத் துணி வாங்கும் பழக்கம்  தொடர்கிறது. பொதுவாக நான்  மால்களுக்குப் போவதுகிடையாது என்னுள் ஒர் மெண்டல் ப்ளாக்கேட் துபாய் சென்றிருந்த போது மால்களுக்கு அனுபவம்  பெறப் போனதுண்டு  சென்னையிலும்  ஒரு முறை வேளச்சேரி அருகே இருக்கும் மாலுக்கு என் மகன் கூட்டிச் சென்றிருக்கிறான்
இந்த முறை உடுப்பு வாங்க ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும்  என்று என் மகன்கூட்டிச் சென்றான் அப்போதெல்லாம்  தினமும் மாலை மழை பெய்து கொண்டிருந்தது  மாலை மழைக்கு முன்  போய் வந்து விட வேண்டும்     என்றும் மதிய உணவை மாலிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்பதும்  திட்டம்  ஆடை வாங்குவதில் சில சிரமங்கள் இருக்கின்றன வாங்குவது அவர்களுக்குப் பிடிக்க வேண்டும்   சைஸ் சரியாக இருக்க வேண்டும்  இருந்தாலும்  இப்போதெல்லாம் இந்த வாட்ஸப்பில் படம்  அனுப்பி விருப்பம்  தெரிந்துகொள்ள முடிகிறது துணி மணிஎல்லாம் வாங்கி முடித்தபோது மதியம் இரண்டரை ஆகியிருந்தது  உணவுக்கு அங்கிருந்த ராஜஸ்தானி ஓட்டலுக்குச் சென்றோம்  ஒரு தாலி விலை ரூபாய் 450/-மிக அதிகம் என்றே தோன்றியது

பதினெட்டாம்  தேதி தீபாவளி என்று மனைவி சொன்னாள் ஆனால் இங்கு கர்நாடகாவில்  19 .20 தேதிகளே விடுமுறை  என்  மூத்தமகன்  சென்னையிலிருந்து  17ம் தேதி மாலை வந்தான்  இரண்டாம் மகனும் ஒருநாள் விடுப்பு எடுத்து வந்தான்   என் மச்சினன்  என்னுடன்  இருந்து படித்து வளர்ந்தவன் மனைவி மாமியாருடன்  வந்தான்  நெருங்கிய சுற்றம்  என்று சொல்லிக் கொள்ள இவர்களே  தீபாவளிக்கு இனிப்பு வகைகள் எல்லாம் கொண்டு வந்திருந்தார்கள் என்  மூத்த ஒஏரன்  எனக்காக ஒரு வாக்கிங் ஸ்டிக்கும்  ராமச்சந்திர குஹா எழுதிய இந்தியா பிஃபோர் காந்தி என்ற புத்தகத்தையும்  ஒரு டைரியையும்  வாங்கி வந்தான்  இப்போதெல்லாம் டைரி எழுத முடிவதில்லை கை எழுத்து கட்டுப்பாட்டில் இல்லை கூடவே ஒரு ஐ ஃபோனும்  வாங்கி வந்திருக்கிறான் எனக்கு அதை இயக்கம் கற்க நாளாகும் போல் இருக்கிறது  நான் அவனுக்கு ஹாரியட் பீச்சரின்  UNCLE TOM;S CABIN என்னும்  புத்தகம் பரிசாகக் கொடுத்தேன்  என்  மனைவி அவள் பங்குக்கு பேசின்  லட்டு செய்து இருந்தாள் யார் வந்தாலும்  சமையல் வேலை அவளுக்குத் தானே  அவளுக்கும்  வயதாகிறது  உணவு முடிந்தபின்  என்ன ஒரே ஃபோட்டோ செஷன்  தான்   இனிய நினைவுகளை மீட்டெடுக்க உதவுவது
பினிக்ஸ் மாலில் 
       பேரனுக்கு என் அன்பளிப்பு 
 
பேரனின்  பரிசுகளுடன்  

பேரனின் அன்பு  
என் வாரிசுக்சளுடன்  
மூத்தமகன் மச்ச்சினன் இளைய மகன்  நான்  
மருமகள்களுடன்   
இளைய மகன் படம்பிடிக்க எங்கள் குடும்பம்  
மாமியாரும் மருமகள்களும்  



இன்னும்  நிறைய படங்கள் இருக்கின்றன/ அவை எல்லாம்  என் நினைவுகளை மீட்டெடுக்க உதவு ம் 









        

42 comments:

  1. அருமை ஐயா இந்த மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும் வாழ்க வளமுடன்.....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்டுக்கு நன்றி ஜி

      Delete
    2. தமிழ்மண வாக்குக்கு நன்றி ஜி

      Delete
  2. சிறப்பு. இனிய நினைவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இவை நினைவுகள் அல்ல நிகழ்வுகள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  3. மகிழ்ச்சியான தருணங்கள். சந்தோஷம் பொங்கட்டும். நான் இதுவரை எந்த மாலும் போனதில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம் தான் ஒரு அனுபவத்துக்காகவாவது போகவேண்டும் ஸ்ரீ

      Delete
  4. இனிய நிகழ்வுகள். மகிழ்ச்சி பெருகட்டும். ராஜஸ்தானி உணவு நான் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சாப்பிட்டேன் (சில வருடங்களுக்கு முன்). எனக்குப் பிடிக்கலை. சென்னை அன்னலக்‌ஷ்மியில் சாப்பாடு 600 ரூ. பெங்களூர் உணவகத்தில் (கோரமங்கலா, டான் அல்லது பான் என ஆரம்பிக்கும்) 3-4 வருடங்களுக்கு முன் அட்டஹாசமான சாப்பாடு 750 ரூ.

    படங்களைப் பார்க்க இனிய நினைவுகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் ஜெய்ப்பூர் சென்றபோது சாப்பிட்டிருக்கிறோம் ஆனால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு செலவு அதிகம் என்றே தோன்றுகிறது எனக்கு மனம் வருவதில்லை சார்

      Delete
  5. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்று சொல்வது போல இருக்கிறது..உங்கள் குடும்பம் பல்கலைகழ்கம் என்றால் அங்கு நீங்கள்தான் சிறந்ததொரு பேராசிரியராக இருந்து வழி நடத்துகிறீர்கள் என்று சொல்லாம்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. எங்கள் குடும்பம் பல்கலைக்கழகம ர்தெரியவில்லை. ஆனால் அன்பு மிகுந்தகுடும்பம் நன்றி சார்

      Delete
  6. அருமையான நினைவுகளின் பகிர்வு,
    மகிழ்ச்சியான தருணங்கள்.
    படங்கள் மகிழ்ச்சியான தருணங்களை நினைவூட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நினைவாக அல்ல நிகழ்வுகளாகப் பகிர்ந்திருக்கிறேன் வாழ்த்துக்கு நன்றி மேம்

      Delete
  7. படங்களைக் காணக் காண மகிழ்ச்சி மேலிடுகிறது ஐயா
    மகிழ்ந்தேன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. என் மனைவி மற்றும் மகன்களை கண்டிருக்கிறீர்கள்வருகை மகிழ்ச்சி தருகிறது சார்

      Delete
  8. ஒரு சாப்பாடு 650 ரூ அதற்கும் மேலே என்று சாப்பிட்டதெல்லாம் உறவினர் வீட்டுக்கல்யாணங்களில் தான்! :) மால்னு சொன்னா ஹூஸ்டனில் பார்த்திருக்கேன். எதுவும் வாங்கினதில்லை! சென்னையில் ஸ்பென்ஸர் ப்ளாஸா! அதுவும் ஒரு மால் எனில் அதைப் பார்த்திருக்கேன். மகன், மருமகள், மகள், பேத்திகள் ஆகியோருடன் அங்கே துணிகள் மற்றப்பொருட்கள் அவங்களுக்காக வாங்கி இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான படங்கள். உங்கள் இளைய மகன் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். மூத்த மகனை இன்று தான் புகைப்படத்தில் பார்த்தேன். எல்லாப் படங்களும் அருமை! இதே போன்ற மகிழ்ச்சியுடன் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாட வாழ்த்துகள். மச்சினர் மனைவியைக் காணோமேனு நினைச்சால் உங்கள் குடும்பப் படத்தில் இருக்கார்.

      Delete
    2. இன்றைய இளைய தலைமுறையினர் பலரையும்
      மால்களில் காணலாம்இப்போதெல்லாம் கணவன் மனைவி இருவரும்சம்பாதிப்பவர்கள் என்றால் அவர்கள் பொழுது மால்களிலேயே போய் விடுகிறதுவிண்டோ ஷாப்பிங் செய்து அங்கே உண்டு சினிமா பார்த்து என்று விடுமுறை நட்களை செலவிடுகிறார்கள்

      Delete
    3. என் குடும்பத்தார் அனைவரையும் பதிவுகளில் காண்பித்து இருக்கிறேன் என் மச்சினனை என் மூத்தமகனாகவே கருதுகிறேன்
      த்டு இருக்கிறேன்

      Delete
  9. தெகிட்டாத நினைவுகள்.

    நாங்களும் இப்படிதான் கொண்டாடினோம். மாமனார், மாமியார், கொழுந்தனார், அவர் குடும்பம்ன்னு இப்ப கால ஓட்டத்தில் தனித்தனியா கொண்டாடுறோம். அதனாலயே பண்டிகைல விருப்பமில்லாம போச்சு எனக்கு. சும்மா கடனுக்கு பண்டிகை கொண்டாடுறேன்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இப்படிக் கொண்டாடவே விருப்பம் ஆனால் சில நேரங்களில் எல்லோரும் வருவது சிரமமாய் இருக்கிறது கடனுக்கு ஏன் பண்டிகை கொண்டாட வேண்டும் மகிழ்ச்சிதர வேண்டிய தினங்கள் அல்லவா

      Delete
  10. What's the name of the Mall in Bangalore you went?

    ReplyDelete
    Replies
    1. phoenix maal on way to white field / வருகைக்கு நன்றி சார்

      Delete
  11. அழகான படங்கள் அவை சொல்லும் இனிய நினைவுகள் .எல்லாம் அழகான தருணங்கள் சார் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஏஞ்செல் நன்றி

      Delete
  12. மகிழ்வும் மங்கலமும் என்றென்றும் நின்று நிலவட்டும்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சார்

      Delete
  13. படங்கள் அருமை! இளைஞர்களோடு இளைஞராக தெரிகிறீர்கள். முதுமைக்கும் ஒரு அழகுண்டு அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. என்னை மனதளவில் இளைஞனாகவே கருதுகிறேன் ஐயா

      Delete
  14. தீபாவளிப் படங்கள் நல்ல sharp -ஆக, clarity-உடன் அமைந்திருப்பதற்கு கேமரா காரணம். எடுத்த கோணமும் சரி. எந்த Digi-cam அல்லது செல்பேசியோ அது?

    குறிப்பாக நீங்கள் உங்கள் பேரர், பேத்தியுடன் இருப்பதும், மாமியார்ஜி மருமகள்களோடு சேர்ந்து நிற்பதும் ப்ரமாதம். Colourful personalities என்று தோன்றுகிறது. அதனால்தான் படத்தில் வண்ணம் ப்ரமாதமாக வந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. Thank you for the complements கருத்துரைக்கு நன்றி சார்

      Delete
  15. இனிமையான தீபாவளி.. அருமையான படங்கள்.. அத்தனையும் நினைவுப் பொக்கிஷங்கள்...

    ஐயா உங்களை விட உங்கள் மனைவி அழகூஊஊஊ:) ஹா ஹா ஹா:)

    ReplyDelete
    Replies
    1. பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள் என்மனைவியின் அழகு பற்றி நான் நிறையவே எழுதி இருக்கிறேன்

      Delete
  16. முதல் படத்தில் மிடுக்காக மனைவியோடு காட்சி அளிக்கும் நீங்கள் மூன்றாவது படத்தில் வாக்கிங் ஸ்டிக் கையில் வந்தவுடன் சற்று முதுமை அடைந்து விட்டீர்களே..? எனி வே சந்தோஷ தருணங்களை பறை சாற்றும் படங்களை பார்ப்பதும் சந்தோஷம்.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துப் பிழையா காட்சிப்பிழையா தெரியவிலை மேம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  17. தங்களின் சந்தோஷ நினைவலைகள் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சார் நன்றி

      Delete
  18. மகிழ்வான நினைவுகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான நிகழ்வுகள் குமார் வ்ருகைக்கு நன்றி

      Delete
  19. ஸார் முதலில் வாழ்த்துகள்! இப்படியான அன்பான குடும்பம் அமைவது என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்று. அதுவும் உங்கள் பேரக் குழந்தைகள் உட்பட!! பலரும் கற்க வேண்டிய ஒன்று. உங்கள் புகைப்படங்கள் அழகு என்றால் மிகவும் பாசிட்டிவ் உணர்வுகளைத் தருகிறது!!! எப்போதும் இந்த மகிழ்ச்சி நிலவிடட்டும்! பிரார்த்தனைகள்

    ---எங்கள் இருவரின் கருத்தும்..

    துளசிதரன்: ஸார் எனக்கும் மால்கள் பிடிப்பதில்லை. ஆனால் என் குடும்பத்தினருக்காகச் செல்வதுண்டு. விலை மிக மிக அதிகம் என்பது எனது அபிப்ராயம்.

    கீதா: நான் பல மால்கள் சென்றதுண்டு. எல்லாம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்காக. நானும் மாலைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவள். ஆனால் அங்கு எதுவும் வாங்க விருப்பம் கிடையாது. வாங்கியதும் இல்லை. விலை அதிகம் என்பதால். அழகை ரசித்துவிட்டு வருவேன் அவ்வளவே! நீங்கள் கொடுத்திருக்கும் வேளச்சேரி மால் ஃபீனிக்ஸ் மால் இல்லையா. நானும் சென்றிருக்கிறேன்..

    பிக் பஜாரில் ஒரு சில பொருட்கள் விலை குறைவாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மால்களுக்குச் செல்லும்போது அன்னியமாக உணருகிறேன் நான் குறிப்பிட்டமால் வேளச்சேரி அல்ல பெங்களூரில் வைட் ஃபீல்டுக்கு போகும் வழியில் இருக்கும் ஃபினிக்ஸ் மால்

      Delete