Tuesday, October 10, 2017

ஆய கலைகள்


                                        ஆயகலைகள்
                                        ---------------------

ஆய கலைகள் 64 என்கிறார்களே, அவையாவன
1)   அக்கர இலக்கணம் --------------- எழுத்திலக்கணம்
,2)  -இலிகிதம்,     ----------------------- எழுத்தாற்றல்   
-3)  கணிதம்,- --------------------------------- கணித இயல்
4)   வேதம்,-------------------------------------- மறைநூல்       
5)   புராணம்,-------------------------------------தொன்மம் - 
6)   வியாகரணம் ---------------------------இலக்கணவியல்,-
7)   நீதி சாஸ்திரம்,--------------------------நயநூல் 
8)   ஜோதிட சாஸ்திரம்,------------------கணியக் கலை      
9)  -தர்ம சாஸ்திரம்-------------------------அறத்துப்பால்
10)  யோக சாஸ்திரம்,---------------------ஓகக்கலை - 
11)  மந்திர சாஸ்திரம்,-------------------மந்திரக்கலை-
12)  சகுன சாஸ்திரம்,--------------------நிமித்தக்கலை
13) -சிற்பசாஸ்திரம்,--------------------------கம்மியக்கலை
14)  வைத்திய சாஸ்திரம்-------------- மருத்துவக்கலை,-
15)  உருவ சாஸ்திரம்,------------------உருப்பமைப்பு- 
16)  இதிகாசம்,---------------------------------மறவனப்பு  
17)  காவியம்,------------------------------------வனப்பு
18) அலங்காரம்--------------------------------- அணி இயல்  ,-
19) மதுரபாடனம்,-------------------------------இனிது மொழிதல்
20)  நாடகம்,----------------------------------------நாடகக் கலை-
21)  நிருத்தம்,-------------------------------------ஆடற்கலை-
22)  சத்த பிரமம்,--------------------------------ஒலி நுட்ப அறிவு 
23) -வீணை,-----------------------------------------யாழ் இயல்
24) வேணு,------------------------------------------குழலிசை
25) மிருதங்கம்-----------------------------------மத்தள நூல் 
26) தாளம்------------------------------------------தாளையல் 
27) அத்திரப் பரீக்ஷை,---------------------வில்லாற்றல் 
28) கனகப் பரீக்ஷை,--------------------- பொன் நோட்டம்  
29) இரதப் பரீக்ஷை,-----------------------தேர் பயிற்சி -
30)  கஜபரீக்ஷை,---------------------------யானை ஏற்றம் 
-31) அஸ்வப் பரீக்ஷை,-----------------குதிரையேற்றம்  -
32) ரத்தினப் பரீக்ஷை-------------------மணி நோட்டம்- 
33)  பூபரிக்ஷை,------------------------------மண்ணியல்
34) -சங்கிராம இலக்கணம்,---------போர்ப்பயிற்சி-
35) மல்ல யுத்தம்,------------------------- கைகலப்பு  
36) ஆகருக்ஷணம்.-------------------------கவர்ச்சி இயல்
37) -உச்சாடனம்,-----------------------------ஓட்டுகை 
38) வித்துவேஷணம்,---------------------நட்பு பிரிக்கை-
39) மதன சாஸ்திரம்,--------------------மயக்கு கலை-
40) மோகனம்,--------------------------------புணருங்கலை (காம சாத்திரம்)
41) வசீகரணம்,------------------------------வசியக் கலை
42)-இரசவாதம்,------------------------------இதளியக் கலை
43) காந்தர்வ விவாதம்----------------இன்னிசைப் பயிற்சி-,
44) பைபீல வாதம்,-----------------------பிற உயிர் மொழி
45) கௌத்துகவாதம்---------------------மகிழுறுத்தம் 
46)-தாது வாதம்,-----------------------------நாடிப்பயிற்சி 
47) -காருடம்,----------------------------------கலுழம்   
48) நட்டம்,--------------------------------------இழப்பரிகை
49) முட்டி,--------------------------------------மறைத்ததை அறிதல் 
50) ஆகாயப் பிரவேசம்---------------வான் புகுதல்,
51) ஆகாய கமனம்,----------------------வான் செல்கை 
52) பரகாயப் பிரவேசம்,--------------கூடுவிட்டுக் கூடு பாய்தல்
53) அதிரிச்யம்,-----------------------------தன்னுறு கரத்தல்-
54) இந்திரஜாலம்,-------------------------மாயம் 
55) மகேந்திர ஜாலம்--------------------பெருமாயம்,
56) அக்னிதம்பம்,--------------------------அழற்கட்டு  
57) ஜலஸ்தம்பம்,------------------------நீர்க்கட்டு - 
58) வாயுத்தம்பம்,------------------------ வளிக்கட்டு -
59) திட்டித் தம்பம்,-----------------------கண்கட்டு 
60) வாக்குத்தம்பம்,----------------------நாவுக்கட்டு- 
61) சுக்கிலத்தம்பம்,---------------------விந்துக் கட்டு
62) கன்னத் தம்பம்,---------------------புதையற்கட்டு 
63) கட்கத் தம்பம்,----------------------வாட்கட்டு - 
64) அவத்தைப் பிரயோகம்--------சூனியம்  


சத்தியமாகச் சொல்கிறேன், பெயர்கள்தான் எழுதிவிட்டேனே அல்லாமல் அவை என்ன என்று தெரியாது ‘அபிதான சிந்தாமணியில் கலைஞானம் 64 என்னும் தலைப்பில் கொடுக்கப் பட்டவை என்று சொல்லப் படுகிறது

இன்னொரு தொகுப்பு 
வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;

8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
;43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம் சிலருக்கு இவை உதவலாம் 











42 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ எனக்கு முடிந்தது நன்றி

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி ஐயா சேமித்துக் கொண்டேன் சமயத்தில் பலன் தரும் விசயம்

    ReplyDelete
    Replies
    1. நீங்களே பல்கலை வித்தகர் அல்லவா நன்றி ஜி

      Delete
  3. நல்லதொரு தொகுப்பு.

    ReplyDelete
  4. அந்தக் காலத்தில் அரச, இளவரசர்களைப் பற்றிச் சொல்லும்போது 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர் என்று குறிப்பு வரும். இத்தனையையும் அவர்கள் கற்றுத் தெரிந்திருக்கவேண்டும்!!

    ReplyDelete
    Replies
    1. 65-வது கலை பிற்காலத்தியது. அதனால் நீங்கள் குறிப்பெடுத்த இடத்தில் அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை போலும்.

      Delete
    2. ஸ்ரீ ராம் அவர்களுக்குத் தெஇந்ததோ இல்லையோ என்னவெண்ரு தெரிந்து கொள்ளலாம்தானே

      Delete
    3. ஜீவி அந்த 65 வது கலை என்ன வென்று கூறி இருக்கலாம் வழக்கம் போல் ஒருகொக்கி ......!

      Delete
  5. adeyappa ! aRputhamana thoguppu sir. !!!

    ReplyDelete
    Replies
    1. பதிவு எழுத எண்ணிக் கொண்டிருந்தபோது இது பற்றித் தோன்றியது இணையத்தில் தேடித்தொகுத்தது நன்றி இணையத்துக்கே

      Delete
  6. அறுபத்து நாலு கலைகளில் பெரும்பாலானவை வாழ்க்கைக்கு உபயோகமாத் தெரியவில்லையே? பகிர்ந்ததற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. முதற்தொகுப்பில் 42 ல் இருந்து (61 நீங்கலாக) மற்றவை எல்லாருக்கும் ஆகாது.. 42 க்கு முன்னுள்ளவைகள் அவற்றைக் கைக்கொள்பவர்களுக்கு நன்மையளிக்க வல்லவை..

      Delete
    2. @நெத. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே பலகலைகளும் தெரிந்திருக்கும்

      Delete
    3. @துரை செல்வராஜு
      இந்தப்பதிலை நெதவுக்கு பரிந்துரைக்கிறேன்

      Delete
    4. ஜி.எம.பி சார்,.. நிஜமாகவே ஓரிரண்டு கலைகளைத் தவிர பெரும்பாலானவை வாழ்க்கைக்கு உபயோகமாத் தெரியலை. அதிலும் நமக்கெதுக்கு நட்பைப் பிரிக்கும் வேலை

      Delete
    5. வாழ்க்கைக்கு உபயோகமாகிறதோ இல்லையோ பல கலைகளையும் பலரும் தெரிந்தோ தெரியாமலோ உபயோக்கிக்கிறார்கள் நட்பை எப்படி இவை பிரிக்கும்

      Delete
  7. ஒரு சில, கலைகள் போலவே இல்லை :)

    ReplyDelete
    Replies
    1. பலவும் நமக்குப் புரியாதவை வழக்கம்போல் பேசப்படுபவை கலைகள் என்றால் என்ன ?

      Delete
  8. Replies
    1. ஆயகலைகளின் பெயர்களை மட்டுமே அறிந்தேன் நான்

      Delete
  9. நல்லதொரு தொகுப்பு..

    இது போன்ற தகவல்கள் பலவற்றை கல்லூரி நாட்களில் நூலகமே கதியெனக் கிடந்தபோது தொகுத்து வைத்துள்ளேன் ஐயா!..

    ReplyDelete
    Replies
    1. 65 வது கலை என்னவெண்ரு தொகுத்தீர்களா (உபயம்ஜீவி)

      Delete
  10. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  11. அன்பின் ஐயா..
    64 தான் அறிந்தவை.. 65 என்பது புரியவில்லை..
    அன்பின் ஜீவி அவர்கள் தான் விளக்கவேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜு சார்... 64 கலைகள் எதுவுமே தெரியாமல் இந் நிலவுலக வாழ்க்கையைக் கழித்துவிடுவது 65வது கலை.

      Delete
    2. துரைசெல்வராஜு - ஜீவி அவர்கள் விளக்க மாட்டார்கள் நாம்தான் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்

      Delete
    3. blessed are those that are ignorant என்கிறீர்கள்...!

      Delete
    4. அறுபத்து நாலுகலை யாவுமறிந்தோம்
      அதற்குமேலொரு கலையானதும் அறிந்தோம்
      மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்
      மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே –பாம்பாட்டிச் சித்தர்

      Delete
  12. தொகுப்பு அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் தொகுத்ததைப் பகிர்ந்தேன் அவ்வளவுதான் நன்றி மேம்

      Delete
  13. நல்லதொரு பகிர்வு.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  14. ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று கம்பர் (சரஸ்வதி அந்தாதி)பாடி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அவை என்ன என்று தேடப் போனதன் விளைவே இப்பதிவு வருகைக்கு நன்றி சார்

      Delete
  15. ஆய கலைகள் யாவை என்பதை பகிர்ந்தமைக்கு நன்றி! நான் படித்ததில் சிறிது மாற்றத்தொடு வேறு சில கலைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எது சரியெனத் தெரியவில்லை.

    ReplyDelete
  16. இரண்டு தொகுப்புகளை இணையத்தில் கண்டேன் இரண்டாவது தொகுப்பில் காண்பவற்றில் பதும்புரியவில்லை வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி குமார்

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. ஆஹா.... அறியத் தந்தமைக்கு நன்றி !

    ReplyDelete