Sunday, November 26, 2017

நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -2


                           
                                 நான் சந்தித்த  என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -2
                                  -----------------------------------------------------

அடுத்ததாக என்னை என் இல்லத்தில் சந்தித்தவர்கள் திருமதி  ஷைலஜாவும் திரு அய்யப்பன் கிருஷ்ணனும்  . திருமதி ஷைலஜா  ஒரிஜினல் ஸ்ரீரங்க வாசி தற்போது வசிப்பது பெங்களூரில் எழுத்துலகில் பலரும் இவருக்கு உறவுகளே சமுத்ரா என்னை பற்றி உயர்வாகக் கூறி இருந்தார் என்று சொன்னார் வலையுலகில் தானும்  இருப்பதாகக் காட்டும்  சில பதிவுகள் எழுதி வருகிறார் இவரும் பாடக்கூடியவரே இவரும்திரு கிருஷ்ணனும் பாட அதை நான்  டேப்பில் எடுத்திருந்தேன்  இவர்களை  நான் மீண்டும்பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பில்தான் சந்திக்க முடிந்தது கம்பராமாயணம் முழுதும் படிக்கஎன்று முயற்சி செய்தார் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை
தமிழ்சங்கமத்தில் சந்தித்தப் பலரையும் பின் எப்பவுமே சந்திக்க முடியவில்லை    வலைப்பதிவுகளில்  எழுதி வருகிறார்களா தெரியவில்லை எங்கள் ப்ளாகில்  அய்யப்பன் கிருஷ்ணனின் கதை ஒன்று கண்டேன்   பெங்களூர் தமிழ் சங்கம காணொளி  ஒன்று இடுகிறேன்  காணொளியில்  திருமதி ஷைலஜா  திருமதி ராம லக்ஷ்மி திருமதி ஷக்திப்ரபா ஆகியோரைக் காணலாம்  


tதிருமதி ஷைலஜா, திரு அய்யப்பன்

நான் இந்தத் தொடரில் முதலில் என் வீட்டுக்கு விஜயம் செய்த பதிவர்களைப்பற்றி மட்டும் முதலில்  எழுதுகிறேன்

என்னை என் இல்லத்தில் சந்தித்த மூத்த வலைப்பதிவர் டாக்டர் கந்தசாமி முக்கியமானவர் என்னை விட முதியவர்  என்வீட்டுக்கு வருவதாக எழுதியவரை நான் ரயிலடிக்குச்சென்று  வீட்டுக்குக் கூட்டி வந்தேன் இவரை நான் இதற்கு முன்பே கோவையில் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்   மிகவும் சுவாரசியமானவர்  இந்த சந்திப்பு பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்

 திருச்சியில் பதிவர் வை கோபால கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தவரை என்  அழைப்பு இங்கு வர வழைத்தது இவரை மீண்டுமொரு முறை என் வீட்டில் சந்திக்கும் பாக்கியமும் கிடைத்தது இந்தமுறைமனைவியுடன்வந்திருந்தார் அவரை நான் பதிவர் மாநாட்டிலும்  சந்தித்தேன் பதிவர் மாநாடு பற்றிய என் பதிவு ஒன்றில் ஒரு படம் வெளியிட்டு இருந்தேன்    அது பிறர் மனதை சங்கடப்படுத்தும் என்றும் அகற்றி விடுமாறும் கூறி இருந்தார் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதை  நான் அகற்றினேன்  இப்போதும் எனக்கு அந்தப் படம் தவறான  நோக்கத்துடன் பதிவிடவில்லை என்றே தோன்று கிறது  மூத்தவர் வாக்குக்கு மதிப்பு கொடுத்தேன் 

  

தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதே  நான்சந்தித்த பதிவர்கள் அதிகம்   பயணித்து சந்தித்தவர்களைப் பற்றி இப்போது எழுதவில்லை என்வீட்டில் வந்துசந்தித்தவர்கள்  பற்றிய தொடர் முதலில்      (தொடரும் )


  

47 comments:

  1. படிக்க சுவாரசியம்தான். முனைவர் கந்தசாமி சார் தளத்தை நான் அடிக்கடி படிப்பேன். அவர் உங்களைவிடப் பெரியவரா? தொடர் முடிவதற்குள் வாய்ப்பிருந்தால் சந்திக்கிறேன்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? கோவை வர வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள். நானே வந்து சந்திக்கிறேன்.

      Delete
    2. நெல்லை தமிழன் வய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன் சந்திக்க மிகவும் ஆவல் நன்றி

      Delete
    3. டாக்டர் கந்தசாமி நெல்ல தமிழன் யாரை சந்திப்பதாகக் கூறினார் என்பதில் ஒருகன்ஃப்யூஷனா வருகைக்கு நன்றி சார்

      Delete
    4. கந்தசாமி சார்... இப்படிச் சொன்னதே எனக்கு மிகவும் சந்தோஷம். நான் ஊரில் இல்லை. ஜி.எம்.பி சாரையும் (ஏன்னா.. அங்க நான் பிற்காலத்துல செட்டில் ஆக வாய்ப்பு இருக்கு.. ஆனா எனக்கு அதை நினைத்து கொஞ்சம் மனக் கஷ்டமும் இருக்கு.. தமிழ் மண்ணை, அதன் சாம்பார் போன்றவற்றை விட்டுவிட்டுச் செல்ல), கோவை வந்தால் (ஓரிரு முறை வர வாய்ப்பு இருக்கு. நான் 7ம் வகுப்பு படித்த தாளவாடிக்கு (சத்தியமங்கலத்திலிருந்து மலைமேல்) என் குடும்பத்தை அழைத்துச் செல்ல எண்ணியிருக்கிறேன். வந்தால், வாய்ப்பிருந்தால் உங்களைச் சந்திக்கிறேன் சார். (உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை.. உங்க மகள், 20 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள்ளேயே நீங்கள் கார் ஓட்டிச் செல்ல தடை போட்டுவிட்டார்கள் என்று எழுதியிருந்தது எனக்கு ஞாபகம் இருக்கு)

      Delete
    5. அந்த பிற்காலம் தொலைவில் இல்லை என்று எண்ணுகிறேன்

      Delete
    6. இன்றைக்கு இருக்கும் நிலையில், உண்மையாகவே அது (பிற்காலம் தொலைவில் இல்லை) வாழ்த்தா, சாபமான்னே தெரியலை சார். இதைப் பற்றி பின்னொரு சமயத்தில் உங்களைச் சந்திக்கும்போது சொல்றேன். 'உணவு பற்றியதல்ல இது'

      Delete
    7. எல்லோருமின்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன்

      Delete
  2. முன்னரும் இவர்களைக்குறித்து எழுதிய நினைவு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கந்தசாமி ஐயா பற்றி எழுதியதைத்தான் சுட்டியில் கொடுத்திருக்கிறேன் மற்றவர் பற்றி பதிவாக எதுவும் எழுதவில்லையே இருந்தாலும் தவறில்லையே

      Delete
  3. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாருங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  4. திரு அய்யப்பன் கிருஷ்ணன் எங்கள் பிளாக்கில் வெளியிட இதுவரை இரண்டு படைப்புகள் தந்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. திரு அய்யப்பன் கதை ஒன்றினைப் படித்தநினைவு குறிப்பிட்டிருக்கிறேன்

      Delete
  5. பகிர்வு நல்ல சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சந்திப்புகள் சுவாரசியமானவை அவற்றை நினவு கூர்வதும் மகிழ்ச்சி தருபவையே

      Delete
  6. //அது பிறர் மனதை சங்கடப்படுத்தும் என்றும் அகற்றி விடுமாறும் கூறி இருந்தார் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதை நான் அகற்றினேன்.. //

    அது பார்க்காதே, பேசாதே, கேட்காதே -- படம் என்றால் எனக்கும் அது பற்றி சில நினைவுகளைத் திரட்ட முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. அது அல்ல சார் அந்தப் படம் பதிவுக்குச்சம்பந்தமில்லை என்று எழுதி இருந்தேன்

      Delete
    2. நீங்கள் வேறு எந்தப் படத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?

      Delete
    3. அந்தப் படம் பதிவிலிருந்து அகற்றப்பட்டு விட்டதே மனதில் குடைகிறதோ தொடர்ந்து படிக்கும்போது தெரியும் நன்றி

      Delete
  7. முதலாவது வீடீயோவில் பேசிய அம்மாவின் பேச்சு, என் உள்ளத்தை ஈர்த்தது.
    சிறந்த கருத்துப் பரிமாற்றம் - என் போன்ற சின்னப் பொடியன்களுக்கு நல்வழிகாட்டல்.
    அருமையான சந்திப்பு

    எனது தளங்களை மீளமைப்பதால், அடிக்கடி வரமுடியாமைக்கு மன்னிக்கவும்.
    விரைவில் அடிக்கடி வரமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. திருமதி ஷைலஜா ஒரு பல்கலை வித்தகி அடிக்கடி வாருங்கள் நன்றி

      Delete
  8. நல்ல பகிர்வு. தமிழ் சங்கத்து சந்திப்பை மீண்டும் நினைவு கூர வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. பெங்களூரில் நடந்த பதிவர் சந்திப்பை மறக்க முடியுமா நானவ்வப்போதுஎல்லோரதுஅறிமுகங்களையும் பார்ப்பேன்

      Delete
  9. வை. கோபாலக்கிருஷ்ணன் ஐயா எனக்கு அதிகமா பழக்கமில்ல. ஷைலஜாக்காலாம் நல்ல பழக்கம். இப்பதான் டச் விட்டுப்போச்சு

    ReplyDelete
    Replies
    1. வை கோ[பால கிருஷ்ணன் அவர்கள் திருச்சி வாசி அவரையும் இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன் ஷைலஜாவிடமும் டச் விட்டுப் போச்சு அவர்பதிவுகளைத் தொடர்கிறேன்

      Delete
  10. நண்பர்களை அன்புடன் நினவு கூர்தல் அருமையிலும் அருமை!.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் வாய்ப்பு வரும்போது சந்திக்க விருப்பம் வருகைக்கு நன்றி சார்

      Delete
  11. தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவர் நினைவுகளை தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாருங்கள் பலரும் அறிமுகமாகலாம்

      Delete
  12. தங்களின் சந்திப்புகளைப் பற்றி அறிகிறோம்... தொடர்கிறோம் சார்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  13. சந்திப்பு அருமை. சுவாரசியம். பெங்களூரில் எங்கே இருக்கிறீர்கள் பாலா சார் ?. இன்பாக்ஸில் தெரிவியுங்கள். பெங்களூர் வந்தால் வந்து சந்திக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மெயில் இன் பாக்சைப்பாருங்கள் நன்றி மேம்

      Delete
  14. தொடர்ந்து உங்களின் சந்திப்புகளைப் பார்த்து படித்து வருகிறேன். நிகழ்வினை அழகான நினைவோடையாகத் தரும் உத்தி அருமை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தரும் நிகழ்ச்சிகள் அல்லவா வருகைக்கு நன்றி சார்

      Delete
  15. அன்று நானும் தம்பி ஐயப்பனும் தங்கள் இல்லம் வந்ததும் மதிய விருந்தினை உண்டதும் தங்கள் திருமதியின் அன்பான உபசரிப்பினில் மகிழ்ந்ததும் மறக்கமுடியாதவை.தமிழ்ச்சங்க சந்திப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டுக்கு வருபவர் பலரையும் என்மனைவி அறிவாள் எப்படியோ அவர்கள் நினைவில் தங்கி விடுவாள்

      Delete
  16. வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  17. சந்தித்தவர்களைப்பற்றி எழுதுவது படிக்க சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் முயற்சி எடுத்து நிறைய பேரை சந்திக்க முயன்றிருக்கிறீர்கள்.
    சந்தித்தும் இருக்கிறீர்கள். இந்தமாதிரி மனிதர்கள் அபூர்வமாகத்தான் தென்படுகிறார்கள். பாராட்டுதலுக்குரியவர் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பே சுவாரசியம் தானே பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  18. பலரைச் சந்தித்து விட்டீங்கள்.. இன்னும் பலரைச் சந்திப்பீங்கள்... சந்திப்புக்கள் தொடரட்டும்..

    ReplyDelete
    Replies
    1. பலரையும் சந்தித்து விட்டேன் இன்னும்பலரையும் சந்திக்க ஆவல் பார்ப்போம் வருகைக்கு நன்றி அதிரா

      Delete
  19. படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா
    தொடர்ந்து சந்திப்புகளை எழுதுங்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. இந்த முதல் தொடர்பதிவில் பெங்களூரில் என்னை என்வீட்டில் சந்தித்தவர்கள் பற்றி மட்டுமிருக்கும் நான் சென்று சந்தித்தவர்கள் சில இடங்களில் என்னை வந்து சந்தித்தவர்கள் என்று இன்னும் தொடரும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  20. இதற்கு முந்தைய பதிவில் சொன்னதைப் போல திருமதி ஷைலஜா அவர்களது வலைப்பக்கம் படித்து இருக்கிறேன். இப்போது அவர் முன்புபோல எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

    முனைவர் பழனி கந்தசாமி அவர்கள் தனது மனதில் பட்டதை பட்டென்று சொல்லுவார். அவரோடு கூடிய உங்கள் சந்திப்ப்பு பற்றி மீண்டும் சுருக்கமாக படித்ததில் மகிழ்ச்சி.



    ReplyDelete
    Replies
    1. ஒருவரது எழுத்தைப் படித்து தெரிந்து கொள்வதற்கும் நேரில் உரையாடி தெரிந்து கொள்வதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு

      Delete