Thursday, November 16, 2017

உதவும் கரங்கள்


                                   உதவும்கரங்கள்
                                    -------------------------
 சென்னையில் இருந்து சுமார்  20 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இடம் திருவேற்காடு  பக்தர்களுக்கு தெரிந்திருக்கும்  கருமாரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆனால் என்னை பொறுத்தவரை  இதை விட பிரசித்தி பெற்ற இடம் அங்கு இருக்கிறதுஅனாதைகளாக்கப்பட்ட சுமார் நானூறு குழந்தைகளுக்கும்  ஆதரவற்ற முதியோர்களுக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட பலருக்கும் அன்பு கரம்  நீட்டி ஆதரவளிக்கும் இல்லம்  உதவும் கரங்கள். அதை இயக்குபவர் வித்தியாகர் என்னும்பெயருடைய பிரம்மசாரி  அங்கிருக்கு எல்லாக் குழந்தைகளுக்கும்  பப்பா .
இவர்களது இயங்குமிடம் முதலில் சென்னை அரும்பாக்கத்தில் என் எஸ்கே நகரில் இருந்தது  எனக்கு இந்த தொண்டு நிறுவனம்பற்றி  1993ம் வருட வாக்கில் தெரிய வந்தது
நான் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வந்தகாலம்  என் எஞ்சிய நாட்களை இம்மாதிரி ஏதாவது நிறுவனத்துக்கு உதவியாக செலவிட நினைத்தேன்  ஆனால் எண்ணம் மட்டும் போதாதே சூழ்நிலையும்  சரியாக இருக்க வேண்டுமே என்னதான் இருந்தாலும் என்னால் முடிந்த அளவு உதவ எண்ணம் இருந்தது  அங்கு சென்றுவிசாரித்தபோதும் அங்கு இருந்தகுழந்தைகளைப்பார்த்தபோதும் ராமனுக்கு பாலம்கட்ட உதவிய அணில் போன்று ஏதாவது செய்ய  விரும்பினேன் அனாதை குழந்தைகளுக்கு படிப்பு முக்கியமாக விளங்கும்   என்பதனாலும் எனக்கு பெண்குழந்தை இல்லை என்னும் காரணத்தாலும்  அங்கிருக்கும்  ஏதாவது ஒரு பெண்குழந்தையின்படிப்புச் செலவை நான்  ஏற்க முன்வந்தேன்   வித்தியாகரும் மகிழ்வுடன் சம்மதித்தார்  ஒரு குழந்தைக்கு படிப்புக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார்  2500 ரூபாய் செலவாகும் என்றார்  ஆனால் நான் ஒருநிபந்தனை விதித்தேன்   நான் உதவும் குழந்தை யார் என்று எனக்குத் தெரிய வேண்டும் என்றேன்   அவரும்  சம்மதித்து ஒரு பெண்குழந்தையின்  புகைப்படம் காட்டினார் அந்தப் புகைப்படத்தை நான்  எங்கோ மிஸ்ப்லேஸ் செய்துவிட்டேன்   குழந்தையின் பெயர் அழகானது நித்தியகல்யாணி எனக்கோ எந்த வருமானமும் இருக்க வில்லை ஆனால் செலவோடு செலவாக ஆண்டுக்கு ரூபாய் 2500 பெரிதாகப் படவில்லை மேலும்  நா ந் பெங்களூரில் இருந்தேன்  அந்த நிறுவனம்  சென்னையில் இருந்தது சென்னைக்கு அவ்வப்போது செல்வதுண்டு  திருவித்தியாகர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே அந்த தொண்டாற்றி வந்தார்.  அவருக்கு இருக்கும் இடத்தில் பல பிரச்சனைகள் இருந்தது  நல்லசெயலைப் பாராட்டா விட்டாலும்   பிரச்சனை தராமலிருந்தால் சரி என்னும் நிலையில் இருந்தார் ஆனால் விடாது உழைக்குமந்த மனிதரிந்தொண்டுநிறுவனம் இப்போது பல கிளைகள் பரப்பி சொந்த இடத்தில் வசிக்கு இடங்களுடன்    கல்வி சாலைகளும்  கொண்டுஇயங்குவது மனதுக்கு திருப்தி அளிக்கிறது அந்தப் பெண் நித்திய கல்யாணியின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது வித்தியாகர் தெரியப்படுத்தி வந்தார்  ஒரு முறை என் இளைய மகனுடனும் என் பேத்தி மற்றும் மருமகளுடன்  சென்று அப்பெண்ணைக் கண்டு வந்தோம்   அவள் படிப்பிலும் நுண்கலைகளிலும்   தேர்ச்சி பெற்றுவந்தாள்  ஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனமும் ஆடி யிருக்கிறாள் ஆனால் சமீப காலமாக அங்கு நான்செல்லவில்லை  என் இந்தச் செயல் என்மூத்தமகனையும்   ஒரு குழந்தையை அடாப்ட் செய்ய வைத்தது  அடுத்தமுறை  சென்னை செல்லும் போது திரு வேற்காடுசெல்ல வேண்டும்  எங்கோ பிறந்து யாராலோ வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின்பள்ளி இறுதி படிப்பு வரை நான்  என்னால்முடிந்த உதவி செய்திருக்கிறேன்  என்பது மகிழ்ச்சி  தருகிறது. இங்கும் பெங்களூரில் வந்த புதிதில்  ஸ்ரீ ஐயப்பா கோவில் நடத்தும்  பள்ளிக்கும்  டொனேட் செய்திருக்கிறேன்  இதெல்லாம் மகிழ்ச்சியான செய்திகள் நினைத்துப்பார்க்க வைக்கிறது
 கோவில்களுக்கு செல்கிறோம்  ஆண்டவனுக்கு காணிக்கை செலுத்துகிறோம்   ஆண்டவனின்  குழந்தைகளுக்கும் உதவுவது நல்ல தல்லவா  சென்னையில் இருப்பவர்கள் ஒருமுறை திருவேற்காடு உதவும் கரங்களுக்குச் சென்று  பாருங்கள் உங்களை அறியாமலேயே மனதில் ஈரம் சுரக்கும்                                
 
என் பேத்தியை தூக்கிக் கொண்டிருப்பது நித்திய கல்யாணி  வலதுஓரத்தில் வித்யாகர் 
   

44 comments:

  1. நல்ல பதிவு. ஜூனியர் விகடன் கூட, ஆரம்ப காலத்தில் உதவும் கரங்களுக்கு உதவி செய்தது எனப் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதன் மூலம்யாருமுதவலாம் என்று தெரியுமே வருகைக்கு நன்றி

      Delete
  2. வணக்கம் ஐயா எனக்கு கடந்த 15 வருடங்களாக சென்னை சிவானந்தா குருகுலம், ஸ்ரீசாரதா சக்தி பீடம் மற்றும் கோவை தி யுனைடெட் ஹேண்டிகேப்பிட் ஸ்கூல் இவைகளின் தொடர்பு உண்டு.

    இது எனக்கு புதிய தகவல் தங்களுக்கு ஒரு இராயல் சல்யூட்டுடன் நன்றி.

    //எழுத்தறிவித்தவன் இறைவன்//

    ReplyDelete
    Replies
    1. உதவும் உள்ளமுங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. மிக நல்ல செயல் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
    2. அருமையானபதிவுடெலிபோன் இட்டுஇருந்துதால்சிறப்புஆகஇருந்திருக்கும்

      Delete
    3. அவர்களுடன் தொடர்பில் இல்லை கூகிளில் தேடினால் கிடைக்கலாம்

      Delete
  4. நல்ல பதிவு. தொண்டு சிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. என் தொண்டு ரமனுக்கு அணில் உதவியது மாதிரியானது வருகைக்குநன்றி மேம்

      Delete
  5. சமீபத்தில் ஜீவி ஸார் இந்த உதவும் கரங்களைத் தொடர்பு கொள்ள மிகவும் முயற்சித்தார். அரும்பாக்கத்திலிருந்ததுதான் எனக்கும் தெரியும்.

    உங்கள் செயல் பாராட்டத் தக்கது. உங்களை பார்த்து இன்னும் நாலு பேருக்கு இப்படி உதவும் எண்ணம் வந்தாலே இந்தப் பதிவுக்கான நோக்கம் நிறைவேறி விடும்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே பலருமுதவும் உள்ளத்துடன் இருப்பது தெரிகிறது ஸ்ரீ வருகைக்கு நன்றி

      Delete
  6. @ ஸ்ரீராம்

    //சமீபத்தில் ஜீவி ஸார் இந்த உதவும் கரங்களைத் தொடர்பு கொள்ள மிகவும் முயற்சித்தார். //

    நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்களே, ஸ்ரீராம்.. அப்புறம்
    தொலைபேசியில் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்து வேனில் வீட்டிற்கே வந்து அந்த நிறுவனத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    எங்கள் வீட்டில் எல்லோருடைய பிறந்த நாளும் இரண்டு நாட்கள் முன்னாலேயே அவர்கள் அனுப்பும் பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தின் மூலமே நினைவுக்கு வரும்.

    வித்யாகர் பற்றி நான் முதன் முதலில் தெரிந்து கொண்டது 'கல்கி' பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த ஒரு கட்டுரையின் மூலம் தான். தொப்புள் கொடி கூட சரியாகத் துண்டிக்கப் படாமல் குப்பைத் தொட்டியில் வீசி விட்ட பச்சை குழந்தைகளை அள்ளித் தூக்கி, அடைக்கலம் தந்திருக்கிறார். இன்று அந்தக் குழந்தைகளுக்கு தொழிற்கல்வியும் தரும் அளவுக்கு ஆலமரமாக அந்த நிறுவனம் வளர்ந்து நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நாந்திருவேற்காடு சென்று நாட்களாகி விட்டன மீண்டும் வாயொப்புக்காக காத்திருக்கிறேன் பிறர் உதவி இன்றி எங்கும்செல்ல முடிவதில்லை உங்கள் உதவும் மனதுக்கு ஒரு பெரிய சல்யூட்

      Delete
  7. கண்டிப்பா இனி சென்று வருகிறோம்ப்பா. எனக்கும் இந்த ஆசை இருக்கு. முதல்ல என் பிள்ளைகளை படிக்க வச்சு அதுக்கப்புறம் அவங்க மூலம் ஆளுக்கொரு ஆளை படிக்க வைக்கனும்ன்னு எண்ணம் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. கோவிலுக்கு எல்லாம் செல்கிறோம் அல்லவா இங்கும் குழந்தைகள் தெய்வங்களாகத் தெரியும் சென்னை ஔத்திருந்தால் ஒரு விடுமுறை நாளை இவர்களுடன் கழிக்கலாம்

      Delete
  8. ஒரு பெண் குழந்தைக்கு படிப்பிற்காக செலவழித்திருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இனிய வாழ்த்துக்கள்!

    வித்யாகர் ' உதவும் கரங்களை' ஆரம்பித்த புதிதில் ( 1990 வாக்கில்} இங்கே [ ஷார்ஜா, ஐக்கிய அரபுக் குடியரசு] தமிழ்ச்சங்கங்களின் அழைப்பில் வந்திருக்கிறார். அனைவரும் பணம் வசூலித்து இரு முறைகள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்திருக்கிறோம். நடிகர் ஜெயசங்கர் ஒரு முறை வந்த போது வித்யாகரும் இங்கு வந்திருந்த சமயம் தான் கொன்டு வந்திருந்த‌ சில பொருள்கள், கலைப்பொருள்களை பொதுவில் ஏலம் விட்டு அவற்றில் கிடைத்த பணத்தையும் வித்யாகருக்கு வழங்கினார்.
    த‌னிப்பட்ட முறையிலும் நானும் என் கணவரும் அவ்வப்போது இங்கிருந்து துணிமணிகள், பொருள்கள் கொண்டு போய்கொடுத்ததுண்டு. என் மகனும் மருமகளும் ஒரு முறை ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து உதவியிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான்செலவழித்ததைச் சொன்னது இது பற்றி எல்லோரும் அறியத்தான் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  9. போற்றுதலுக்கு உரிய செயல் ஐயா
    தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    தம+1

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  10. உங்களுக்கு நல்ல மனம்.
    மிக நல்ல தொண்டு. வாழ்க வளமுடன்.
    உங்கள் குழந்தைகளும் இப்படி உதவி செய்வது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் செய்ய முடியவில்லையே என்னும் ஏக்கமுண்டு வருகை மகிழ்ச்சி தருகிறது

      Delete
  11. நல்ல மனம் வாழ்க.

    பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  12. 1993 ல் ஜூனியர் விகடன் தான் பிரதான வாசிப்பில் இருந்தது..

    தொப்புள் கொடி கூட சரியாகத் துண்டிக்கப் படாமல் குப்பைத் தொட்டியில் இடப்பட்ட பச்சை குழந்தையுடன் இருக்கும்
    புகைப்படத்தைக் கூட நறுக்கி வைத்திருந்தேன்..

    நானும் என் நண்பர்களும் உதவும் கரங்களுக்கு உதவுவதற்காக முயற்சித்தபோது ஏதோ ஒரு அவச்சொல்.. பிரச்னையாகி விட்டது..

    உதவிம் கரங்கள் அமைப்பின் மீது கூட ஏதேதோ களங்கம் சொன்னார்கள்..

    ஆயினும் எண்ணியபடி உதவ இயலாமல் போனது மனதை உறுத்திக் கொண்டிருக்கின்றது..

    பதிவின் மூலமாக தங்களது அருங்கொடை தெரியவந்தது..
    நல்ல மனம் என்றென்றும் வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. என் எஸ்கே நகரில் இந்த அமைப்பு தொடங்கியபோது சந்தித்த இன்னல்கள் அதிகம் மதம் சார்ந்த எதிர்ப்புகள் . வருகைக்கு நன்றி சார் பதிவு இந்த மையம்குறித்து அறிய வைக்கு என்னும் நம்பிக்கையே

      Delete
  13. ஸார் முதலில் தங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இது போன்ற நற்பணிகள் பலரையும் ஊக்கப்படுத்தும். உதாரணமாகவும் இருக்கும்.

    கீதா: வித்யாகர் பற்றியும் இப்போது திருவேற்காட்டில் இருக்கிறாது என்பதும் அறிவேன் ஸார். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் நிறுவினார் ஆரம்பக்காலத்தில். நல்ல செயல் ஸார். பெண் குழந்தையின் படிப்பை ஏற்றுக் கொண்டு படிக்க வைத்தமைக்கும் சல்யூட் ஸார்! வாழ்க நலம். இது போன்ற நற்செயல்களில்தான் இறைவன் இருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. பாலக்காட்டில் இயங்கும் காருண்யா இல்லம் பற்றியும் முன்பே பகிர்ந்துள்ளேன் ஆதரவு அற்றோருக்கு ஏதோநம்மால் ஆன உதவி வருகைக்கு நன்றி ஒருமுறை திருவேற்காடு சென்று வாருங்களேன்

      Delete
    2. ஆமாம் ஸார் நீங்கள் காருண்யா பற்றி பகிர்ந்தது நினைவு இருக்கு ஸார். நான் உங்களைச் சந்தித்த போதும் சொன்னீர்கள்.

      கீதா: திருவேற்காடு சென்று பார்க்கிறேன் சார்.

      Delete
  14. எல்லா வருடமும் என் இரண்டு பிள்ளைகளின் பிறந்ததிலிருந்து பிறந்த நாளுக்கு அவர்களுக்கு முதலில் பணம் அனுப்பிவிடுவோம் இன்றுவரை எனக்கு பக்கத்தில் அண்ணாநகரில் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நல்ல செயல் வாழ்த்துகள்

      Delete
  15. உங்களை பெரியோர்களின் ஆசிகளே நல்ல உள்ளங்களே வழிநடுத்தும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அறியாதோர் அறிய இப்பதிவு வழிசெய்தால் நன்று

      Delete
  16. மிக நல்ல விசயம்... இங்கும் நிறைய இப்படி நிறுவனங்கள் இருக்கிறார்கள்.. அப்போ ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியுமோ எனக் கேட்டார்கள். தத்தெனில் எப்படி எனில், குழந்தை தன் வீட்டில் தாயுடனேயே வளரும், ஆனா அதன் செலவை நாம் கவனிக்க வேண்டும்.. ஆனா அவர்கள் தரும் குழந்தையைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், குழந்தை வளர்ந்தபின், அதுவா விரும்பினால் நாம் கூப்பிடலாம் இப்படிச் சொன்னார்கள்.

    ஓகே என்றோம்.. குஜராத் மானிலம் என நினைக்கிறேன்.. பெயர் ரீட்டா ராணி... வயசு 5... தந்தர்கள்.. இது 2003 ஆம் ஆண்டு... மாதம் 20 பவுண்டுகள் கொடுத்தோம். குழந்தை கிரிஸ்மஸ் க்கு எமக்கு கார்ட் செய்து அனுப்புவா, நாமும் அனுப்புவோம். படமும் அனுப்பினார்கள்.. .. கிட்டத்தட்ட 6,7 வருடங்கள் இது தொடர்ந்தது, பின்பு இடையில் அது என்னமோ தடைப்பட்டு தொடர்பே நின்று விட்டது.

    நான் என் கணவருக்குச் சொல்லியிருந்தேன், குழந்தை கொஞ்சம் வளரட்டும் கேட்டுப் பார்த்து தத்தெடுப்போமா என...

    ReplyDelete
    Replies
    1. தத்து எடுத்துதான் உதவ வேண்டுமா உங்கள் செயலும் போற்றுவதற்குரியதே

      Delete
  17. நல்லதொரு சேவை. படிப்புக்கும் பராமரிப்புக்குமான உதவி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். பல நிறுவனங்கள் இப்படி செயல்படுகின்றன. முதியோர்களைத் தந்தெடுக்கவும் வழி செய்கின்றன. உங்கள் வழியில் உங்கள் மகனும். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வேலை இல்லாத நேரம் அதற்குமேல் செய்ய இயலவில்லை

      Delete
  18. போற்றத்தக்கோரைப் பற்றிய அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் ஏதோ நம்மால் ஆனது வருகைக்கு நன்றி சார்

      Delete
  19. நல்ல பதிவு ஐயா! பாராட்டுகள்.சிறய அளவில் அவ்வப்போது உதவிகள் செய்தாலும் இது போல் செய்ய வேண்டும் என்ற உணர்த்திவிட்டீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஓரிருவர் உதவ முன் வந்தாலும் சரியே வருகைக்கு நன்றி சார்

      Delete
  20. பாராட்டிற்குரிய செயல். பொதுவாக வலது கையால் கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாது என்பார்கள். ஆனால், இப்போதுள்ள காலசூழ்நிலையில், உங்களைப் போன்றவர்களின் எடுத்துக் காட்டுகள்,எந்த தொண்டு நிறுவனம் உண்மையானது என்பதனை அறிந்து கொள்ள உதவும்.

    புகைப்படத்தில் உள்ள அந்த குழந்தை நித்தியகல்யாணியின் கண்களில் தோன்றும் நம்பிக்கை ஒளியும் மகிழ்ச்சியுமே உங்கள் தொண்டு எத்தகையது என்பதனை உணர்த்துகின்றன.

    ReplyDelete
  21. மன நிறைவு தந்த பதிவு.

    நாங்கள் முதல்முதலா இப்படி ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்துக்குதான் உதவியை ஆரம்பிச்சோம். அதுவும் பெரிய தொகை எல்லாம் இல்லை. தீபாவளிப் பட்டாசு வாங்காமல் அதுக்கு ஒதுக்கி வைத்த பணத்தை அங்கே அனுப்பினோம். கொஞ்சம் நம் நிலை சரியானதும் நாம் அனுப்பும் தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக்கூடியது. கல்விக்கு அனுப்புவது மனசுக்கு மகிழ்ச்சிதான். இப்ப அவுங்களே நல்ல நிலையில் இருப்பதால்.... வேறொரு இடத்துக்கு உதவி செய்து வருகிறோம்.

    ReplyDelete