புதன், 30 மே, 2018

கண்டவனெல்லாம்



                                  கண்டவனெல்லாம்
                                 --------------------------------

             பஸ்சுக்கு  காத்திருந்து  காத்திருந்து   வாழ்க்கையே  வெறுத்துவிட்டது  ஹரிக்கு ."போக்குவரத்து  துறைஎன்றால்  தமிழ்நாடுதான்  ஹேமா . விடியற்காலைமுதல் நள்ளிரவு   வரை  பஸ்கள்  கிடைக்கும் . ஐந்து  நிமிடத்துக்கு  மேல்  காக்க  வேண்டாம்சே | இந்த  பெங்களூரில்  இது  மிகவும்  மோசம் " ஹரிக்கு  அலுப்பு
. "தவிர்க்க  முடியாததை          அனுபவிக்கத்தானே  வேண்டும்  .இல்லையென்றால்  ஆட்டோவுக்கு  செலவு செய்ய  உங்களுக்கு  மனசு  வராதே " ஹேமா  ஹரியின் வீக்   பாயின்டைசற்றே  குத்தினாள்
        "அப்பாடா  அதோ  பஸ்  வருகிறது . சாமர்த்தியமாக  ஏறி இடம்  பிடித்துக்கொள்லேடிஸ்  சீட்  காலியாகவே  இருக்கும் " ஹேமாவை  முன்னுக்கு  அனுப்பி  ஹரி  அடித்து  பிடித்து  பஸ்ஸில்  ஏறி , முண்டியடித்து  முன்னுக்குப் போனால் , அங்கே  லேடீஸ்  சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில்  ஒரு  அழகான  வாலிபன்  ஸ்டைலாக  உட்க்கார்ந்து  இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம்  ஆத்திரமாக  வந்தது .  "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு  மாதிரி  ஒருத்தன்  அவள்  பக்கத்தில்  உட்கார்ந்து  இருக்கிறான் . அதுவும்  லேடீஸ்  சீட்டில்அவன்தான்  அப்படியென்றால்  இவளுக்கு  எங்கே  போச்சு  விவஸ்தை ? நாக்கைப்  பிடுங்கற  மாதிரி  நாலு வார்த்தை  கேட்க்க  கூடாது ? இதே மாதிரி   எவ்வளவு  நேரம்  பொறுத்துக்கொள்வது ? இதுக்கு  ஒரு  முடிவு  கட்டித்தான்  தீரவேண்டும் "                                

 இதற்குள்  பஸ்  அடுத்த ஸ்டாப்பில்  நிற்க . "ஹேமா. வா  இங்கேயே  இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது  என்று  கேட்பதற்குள்  ஹரி  பஸ்ஸை  விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த  ஆட்டோவைக்கூப்பிட்டார்
 .
 " இன்றைக்கு  மழைதான்  வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு  செய்ய  மனசு  எப்படி  வந்தது ?"

 கண்டவனெல்லாம்  என் பெண்டாட்டி  பக்கத்தில்  உட்க்காருவது  எனக்குப் பிடிக்கலை .நீயும்  பேசாமல்  இருந்தது  அதைவிடப்  பிடிக்கலை "

 "உங்களுக்கு  என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு  அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"

 ஹேமாப்பாட்டி  தன  புருஷனை  அன்புடன்  கடிந்து  கொண்டாள்


ஞாயிறு, 27 மே, 2018

பழைய பாடல் வரிகள்



                                         பழையபாடல் வரிகள்
                                       -------------------------------------
 சில நாட்களாக வலைப் பக்கம் ஒழுங்காக வர முடிவதில்லைநீண்ட நாட்களாக ஒத்திப்  போட்டுக் கொண்டிருந்த  ஓவியம் வரைவதை மீண்டும்   முயற்சிசெய்கிறேன்  வலைப்பக்கம் வந்து பார்த்தால்  நம்மைக் காண வருபவர் எண்ணிக்கையும்   குறைந்திருக்கிறது வலை நட்புகள் ஏனோ பாராமுகம் காட்டுகிறார்கள் தெரிய வில்லை/ போகட்டும் நான்  எழுதுவது தொடரும் வந்து படிக்காவிட்டால் அவர்கள் சில நல்ல கருத்துகளையும் எழுத்துகளையும்  ம்ஸ் செய்வார்கள் அவ்வளவுதான் 
 விஷயத்துக்கு வருவோம்  சிலநாட்களாகவே ஏதோ பாடல் வரிகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன வரிகள் முழுவதும் நினைவுக்கு வரவில்லை மிகப் பழையபாடல் வரிகள்  கூகிளில் தேடினாலும்  கிடைக்கவில்லை

சில வரிகள்      ப்ரேமை எனதே பாரின்  மீதே  பாக்கியம் வேறேதே

கட்டிக்கரும்பே தேனே கனியே ஜானகி மானே கட்டி அணைத்திட கருதி வந்தேனே

கண்ணே எனையே காண்பாய் நீயே காதல் கனிரசமே

 தெருவில் வராண்டி வேலன் தேடிவராண்டி
ஆனைமுகன்  வேலனுக்கு அண்ணனாமடி
அவனைக்காட்டி வள்ளிப்பெண்ணை  மணந்து கொண்டாண்டி
\
கடைசியாக உள்ளது  யூ ட்யூபில்  கிடைத்தது பகிர்கிறேன் இம்மாதிரி பழைய பாடல்கள் எங்கு கிடைக்கும்  வாசகர்கள் தெரியப்படுத்தினால்  நன்றி உடையவனாய்  வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியலாம்நீங்களும் கேட்டிருக்கலாம்




பல எக்சோடிக் பூக்கள் வளர்கின்றன  என்  சிறிய தோட்டத்தில் ஃபுட்பால் லில்லி  பிரம்ம கமலம்  எனப்படும்  நிஷாகந்தி இவை தவிர லாப்ஸ்டர் க்லாஸ்  எனப்படும் பூ போன்றவை  இவற்றில் லில்லி ஆண்டு ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் மலரும் அதுவும்  மே மாதம் மட்டுமே  இது பற்றி எழுதி இருக்கிறேன்  அதே போல் ஆண்டுக்கு ஒரு முறை மலரும் நிஷாகந்தியும் ஒரே நேரத்தில் நான்கு பூக்கள் மலர்ந்திருந்தன ஆனால் அவை மலர்ந்த நிலையில் விடியய்ற்காலை மட்டுமே காட்சி தரும்  பின்  கூம்பி விடும் என்னால் அத்தனை  காலையில் படம்  எடுக்க முடியவில்லை கூம்பிய மலர்கள் இங்கே

  



இரண்டு நாட்கள் மகனுடனிருந்தேன்   காலை நடை தடைபட்டதால் மாலயில் அந்தக் குடியிருப்பின்  பேஸ்மெண்டில்  என் பேரனுடன்  நடந்தேன்   என்  நடையை அவன்  காணொளி யாக்கினான்   அதைப் பகிர்கிறேன்   





திங்கள், 21 மே, 2018

காதல் நினைவுகள்


                                       காதல் நினைவுகள்
                                     ----------------------------------
எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
                பிணைந்திழையோட  இழையோட

     கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க 

                பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி

     மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப் 

                 புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி

      இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்

                 காதல்   பண்பாடி  பண்பாடி  |

    
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க

      எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க

     தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க

     மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம் 
|
               அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க

                பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட

                என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்

                பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |

      ஈருடல்  ஒன்றாய்    இணைய _அதனால்

      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க

      இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்

      இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது

                  கண்ட  கனவு  நனவாக  இன்று

                   காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்

                  கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே

                  கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |          



   

வெள்ளி, 18 மே, 2018

நையாண்டி அரசியல்



                                நையாண்டி அரசியல்
                               ----------------------------------

Hello  is this the governors office ?

YES ….

 I have got 113 MLAs with me  Will you make me the CM?

Who is this ?

Iam the owner of the resort where  thery are hidden
                            =====================


One day in heaven Gandhiji  went upto God and enquired  about the state of his  three monkeys

God replied they were very happy.

 The one which was blind had become the judiciary

The one which was deaf had become the government

The one which was mute  has become the citizen



Horse  trading  for a STABLE government ?

புதன், 16 மே, 2018

அபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்


                                   அபியும்  நானும்  கோல்டென் மோமெண்ட்ஸ்
                                    ------------------------------------------------------------------------
அபியும் நானும்  கோல்டென்  மோமெண்ட்ஸ்

இதில் வரும் அபி என்பேரன்  இப்போது 13 வயது. அவன் வளர வளர அவன்  என்னைப்போல் இருப்பதாகத் தோன்றவே  அவனை என்  லுக் அலைக்  என்றே கூப்பிடுவேன் வளர்ந்த பேரனைப் பார்க்கும் போதெல்லாம் அவனது சின்ன வயது செயல்களே நினைவுக்கு வருகிறதுஎன்னதானிருந்தாலும்  குழந்தைகள் குழந்தைகச்ளாக இருக்கும் போது கொடுக்கும்  மகிழ்ச்சி பெரியவர்களாகும் போது இருப்பதில்லை  அபி இன்னும் எட்டுபத்து ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் அவனுடனின்னும் கூடி ஆடி மகிழ்ந்திருக்கலாமோ இல்லாவிட்டால்தான் என்ன அவனது சிறிய வயது  செயல்களும்பேச்சும்  நினைத்து நினைத்து மகிழ்கிறேன் இதைப் பார்ப்பவருக்கு காக்கைக்குதன்  குங்சும் பொன்  குஞ்சு  என்னும் எண்ணம் வரலாம்  இது நான் நினைத்து மகிழ்வதைப் பகிரவே





தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம். எனக்கு விளங்க வில்லை.நிறைய விலங்குகள் ஓடி வருகின்றன. ஒருவன் தன் கையைஇடவலமாக அசைக்கிறான். ஓடி வரும் விலங்குகள் பாதை மாற்றிப் போகின்றன. அடுத்து டைனோசரஸ் போன்ற மிருகம் வாயைப் பிளக்கிறது/ ஒருவன் அதன் வாய் அருகே கை வைத்து மூடச் செய்கிறான். இன்னும் இதே போல் விளங்காத விஷயங்கள். புரியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். என் பேரன் அருகில் இருந்தான் எனக்கு விளக்கினான். அது ஒரு டிவி விளம்பரம். சைகைகளின் மூலமும் சொல்வதன் மூலமும் சானலை மாற்ற முடியும் அதன் விலை என்ன தெரியுமா. ? ஒரு கோடி ரூபாய் “ அவன் அதை ஆங்கிலத்தில் சொன்ன விதமே அலாதி. நான் அவனிடம் ஒரு கோடிக்கு எவ்வளவு பூஜ்யம் என்று தெரியுமா என்று கேட்டேன். அவன் I don’t know . But it is an awesome big  money”  என்றான். எட்டு வயது சிறுவனுக்கு விளங்கும் விளம்பரம் எனக்கு புரியவில்லையே. !

. என் இடது கை  விரலில் நான் ஓட்டுப் போட்டதன் அடையாளமான மைப் புள்ளியைப் பார்த்து என்ன என்றுகேட்டான். ஓட்டுப்போட்டதன் அடையாளம் என்றேன். ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்றான். நான் அவனுக்கு எளிய முறையில் விளக்கினேன். 
“ அரசாங்கத்தில் நமக்கு வேண்டியதைச் செய்து தர நாம் அனுப்பும் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப ஓட்டு போடுகிறோம்.
“ யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.?” 
” நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புபவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
“ அதை எப்படித் தெரிந்து கொள்வது.?
பொதுவாக மக்களுக்கு சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நம் குறைகளை கேட்டு வருபவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
அவனுக்குப் புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது. அவனுக்கு இன்னும் விளங்க வைக்க சேவை  செய்பவர்களை அடையாளம் காண்பது சிறிது கடினம்தான். தேர்தல் சமயத்தில் நமக்கு பொன்னோ பொருளோ கொடுத்து  அவர்கள் நல்லவர்கள் என்று நம்மை நம்ப வைப்பவர்களும் இருக்கிறார்கள் “ என்றேன். அதற்கு அவனது ரியாக்‌ஷன் நான் சற்றும் எதிர் பார்க்காதது.
 Is that not cheating , appa.?”  என்று கேட்டானே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வமும் பழக்கமும் வர வேண்டும் என்று நினைப் பவன். “புத்தகங்கள் படிப்பாயா “ என்று கேட்டேன். பெரிய எழுத்து ராமாயணம் மஹாபாரதம் போன்ற புத்தகங்கள் வண்ணப் படங்களுடன் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு வந்தது எனக்குத் தெரியும்.
 அவன் என்னிடம் “  Have you read  GERONIMO  STILTON”S books ? Awesome  books. I have read many books .You are an author, no..? You must read them.” என்று கூறினான் நான் வலையில் பதிவுகள் எழுதுவது அவனுக்குத் தெரியும். அவனிடம் “Who is GERONIMO.” என்று கேட்டேன். 
 He writes stories  about mouses , and he assumes himself as a mouse. Oh.! He is awesome.”

  ஒரு முறை சென்னையில் இவன் பிறந்த நாளுக்கு வந்திருந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ய வந்தான். அவன் அறிமுகம் செய்ய வந்த சிறுவன் மலையாளம் பேசுபவன். அவனிடம் இவன் “ You know , he is Tamil..Speak to him in Tamil or English “ என்றான். என் மகன் வீட்டில் அவன் தமிழ் பேச , அவன் மனைவி மலையாளம் பேச குழந்தைகள் தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று பேசுவார்கள்.

இவனுக்கு நிறையக் கதைகள் கூறி இருக்கிறேன். இப்போதும் அவன் கதை கூறக் கேட்டதும் நான் சொல்ல ஆரம்பித்தால் “ ஓ... இது நீ ஏற்கனவே சொல்லியிருக்கிறாய். எனக்குத் தெரியும் “ என்றுசொல்லி கதையை அவன் சொல்லுவான். பிரகலாதன் கதையில் நான் ”இரண்ய கசிபு” என்று என்று சொல்லியிருந்த பெயரை அவனது வேறு ஒரு நண்பன் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தபடி அந்தப் பெயரை “இரண்ய காஷ்யப்” என்று சொல்ல இவன் என் தாத்தா சொல்லியிருந்ததுதான் சரி என்று சண்டைக்குப் போக.......

ஒரு முறை

தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 
ஆடிக்கொண்டிருந்தாள்  மாது ஒருத்தி
யாரந்த அழகி, பேரென்ன அவளுக்கு 
என்று அறியாமல் கேட்டு விட்டேன்  
அருகில் இருந்த சிறுவனை   கவனியாமல்
   
            பட்டென்று நிமிர்ந்து பார்த்தான் 
            பேர் சொல்ல வந்த பேரன்
           
ஆங்கிலத்தில் கேட்டான் ஆறுவயது சிறுவன்
" அப்பா, டூ  யூ லவ் ஹெர்..?"
அதிர்ச்சியில் ஆடிப்போனேன் ஓரிரு கணங்கள் 
"அனைவரும் அன்புக்கு உரியோரே
உன்னை, உன் அப்பா, அம்மா, அக்கா 
அனைவரையும்  நான் லவ் செய்கிறேன்
அதுபோல் உயிரோடிருக்கும் எல்லா 
ஜீவ ராசிகளையும் அன்பு செய்கிறேன்.
அன்புதான் கடவுள்; அன்பே சிவம் என்றெல்லாம் 
கூறி ஒரு உரையே நிகழ்த்தினேன்

             அவன் எதையும் உணர்ந்தவன் போல் 
              தோன்றவில்லை. அவன் முகத்தில் 
              தெரிந்தன சிந்தனைக் கோடுகள் சில பல
              சில நொடிகள் கழித்து சிவந்த முகத்துடன் 
              கேட்டானே ஒரு கேள்வி, பதிலென்ன சொல்ல.?

"லைக்  யூ ஹக் அண்ட் கிஸ் மீ 
 வில் யூ  ஹக் அண்ட் கிஸ் ஹெர் டூ.?"

( "LIKE YOU HUG AND KISS ME, 
 WILL YOU HUG AND KISS HER TOO.?")

என்னைக் கட்டிப் பிடித்து அணைத்து முத்தம்தருகிறாய்
அதுபோல் அவளையும் கட்டி அணைத்து முத்தம் தருவாயா.?

இன்னொரு முறை

 படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை 
பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை 
ஏதுமிருந்ததில்லை. அப்பா உன் பாடு ஜாலிதான்
மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்----
என்று கூறினான் 

நினைக்க நினைக்கநினைவுகள் சுரங்கம் போல் வெளிப்படுத்துகிறது எழுத எழுதவந்துகொண்டே இருக்கும்   அவை பிறிதொரு சமயம்