Thursday, May 3, 2018

பெண்களை நம்பலாமா


                              பெண்களை நம்பலாமா 
                               -------------------------------------
 பெண்கள் ஒரு கண்ணோட்டம்
சென்ற பதிவில் என் அணுகு முறைகள் பற்றி எழுதி இருந்தேன்   இது ஒரு மாற்றத்துக்காக
பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும்
முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.? மனதில் படுவதில் இதுவு மொன்று பெண்களில் பலரும்  say yes when  they mean  no குறிப்பிட்ட சில விஷயங்களில்  அவர்கள் conformist களாகவே இருக்கிறார்கள் இருக்க விரும்புகிறார்கள் செக்ஸ் பற்றி எழுதுவது அவர்களுக்கு ஒரு taboo நாடறிந்த உண்மைகளை விட்டு அவர்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருக்கும் சில நல்லதுஎன்று  தவறாக நினைக்கும் கருத்துக்சளில்மூழ்குவார்கள் மனதிற்குள்நினைப்பதுதான்  தெரியாதே இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்   எல்லாமே அனுபவக் கணிப்புகள்தான் பெண்கள் என்று கூறும் போது அது மனைவியராக மட்டும்தான் இருக்க வேண்டுமா நல்ல கேள்வி தயும்  சகோதரியும் கூட மனைவியராக இருக்கிறார்களே   


 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,
ஆனந்தத்திலும் வரலாம்துக்கத்திலும் வரலாம்.
எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்
பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வாழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது
உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.

அதென்ன  மணவினைச் சிறையில்பரோல்’? மணவினைச் சிறைவாசமென்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தேன் அது உங்கள்பார்வைக்கு மீண்டும்பதிவாக்குகிறேன் படிக்க இங்கே “ சொடுக்கவும்





                           

32 comments:

  1. மணவினைச் சிறைவாசம் சென்று இரசித்து வந்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. மண்வினை சிறைவாசம் என்பது ஒரு கணிப்பே மற்ற எண்ணங்கள் விவரமாக உள்ளதே உடன்படுகிறீர்களா

      Delete
    2. பெண்களின் வெற்றி கண்ணீரில்தான் பிறக்கிறது ஆனால் அதில் மூழ்கிய பிறகே ஆண்களால் வெற்றி பெற முடிகிறது.

      Delete
    3. கில்லர் ஜி வருகைக்கு நன்றி இதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் பொதுவாக நான் எழுதியதை அவரவரை குறிப்பது போல் ஒரு தொனியுடன் வந்திருக்கிறதுமணவினை சிறைவாசம் என்பது எலாப் பெண்களையும் நினைத்து எழுதியது அல்ல

      Delete
  2. அந்தப் பதிவில் கொடுத்திருக்கும் கருத்தில் மாற்றம் இல்லை. :)

    ReplyDelete
    Replies
    1. அது எப்படிச் சொல்றீங்க? பெண்களுக்கும், தாங்கள் பிறந்த வீடு சென்று வருவது, அன்றாட வேலையிலிருந்து பரோல் செல்வதுபோல்தானே. (பிறந்த வீட்டில் அவளுக்கு உரிய மரியாதை இல்லாவிட்டால் அது தண்டனையாகிவிடும்)

      Delete
    2. @கீதா சாம்பசிவம் நன்றி மேம் திருமணம் சிலருக்கு சிறைவாசம்தான் என்பதை குறிப்பிடவே எழுதியது பதிவுகளில் வருவதைஒன்று கேலிக்க் கூத்தாக ஏற்பது இல்லை என்றால் அவரவர் வாழ்க்கையோடு சம்பந்தப் படுத்துவ்து

      Delete
    3. @நெத ஆனால் பெண்கள் நீங்கள் சொல்வதுபோல் அடிக்கை பரோலில் செல்ல முடிகிறதேபிறந்த வீட்டில் எப்போதும் அவர்களுக்கு மரியாதை உண்டு புகுந்த வீட்டில்தான் அதை அவர்கள் பெறுவதை பொறுத்து இருக்கிறது

      Delete
    4. என்னோட மாமியார் என்னை அடிக்கடி பிறந்தகம் செல்ல அனுமதிக்க மாட்டாங்க! ஒரு குறிப்பிட்ட வருடங்கள் பின்னர் என்னோட பிறந்த வீட்டிலும் மதுரையைக் காலி செய்து சென்னை வந்து அம்பத்தூரிலேயே எங்க தெருவுக்குப் பின்னால் உள்ள தெருவில் வீடு கட்டிக் குடியேறிட்டாங்க. ஆகவே எனக்குப் பிறந்தகம் செல்வது எனில் காலை ஏதேனும் சமையலில் புதிதாகச் செய்திருந்தால் பிறந்த வீட்டினருக்குக் கொண்டு கொடுக்கச் செல்வதோடு சரி. மற்றபடி பண்டிகை நாட்களில் நமஸ்காரம் செய்யச் செல்வோம் குடும்ப சமேதராய், நான், கணவர், குழந்தைகள் இருவர்! என்னைப் பொறுத்தவரை பிறந்தகம் செல்வது என்பது கனவு! அதே என் நாத்தனார்கள் எல்லாம் எங்களிடம் வந்து மாதக் கணக்கில் தங்கிவிட்டு அரை மனதோடு கிளம்பிச் செல்வார்கள். :)

      Delete
  3. //மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
    பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. //

    ஆம். பிரளயம்தான்!

    ReplyDelete
    Replies
    1. சில வாழ்வின் நிதரிசனங்கள் சிலர் ஒப்புக் கொண்டாலும் இல்லாவிட்டாலும்

      Delete
  4. ஆணே அடிமை. அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள். - ஜிஎம்பி சார்... என்னவோ இடுகையின் கருத்து எனக்கு முழுமையா ஒத்துப்போகலை. இப்போது இருவரும் சம்பாதிக்கும்போது பெண்ணிற்கு இருக்கும் சுதந்திரம், கணவன் மட்டுமே சம்பாதிக்கும்போது இருந்ததில்லை. கண்ணீரினால் கட்டிப்போடுவாள் என்பதை சினிமாவில் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில் சந்தித்ததில்லை.

    இருந்தாலும், நியாயம் யார் சொன்னாலும், மற்றவர்களுக்கு அதை மீறுவது கடினம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நெத சார் இடுகையை நன்றாகப் படித்துப் பாருங்கள்பெண்கள் படித்து சம்பாதிக்கும் போது நிலைமை இன்னும்வேறு மாதிரி கஷ்டங்கள் வரும்போதுஆண்கள்அடங்கி போவதே நல்லது என்று எழுதி இருக்கிறேன்

      Delete
  5. அனைத்தும் சக்திமயம்...?!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி டிடி

      Delete
  6. சுதந்திரம், வெற்றி என்பதெல்லாம் மாயை.

    :)))

    ReplyDelete
    Replies
    1. இல்லை என்று சொல்கிறீர்களா ஸ்ரீ

      Delete
  7. Replies
    1. சில பொதுவான கருத்துகளை அவரவர் வாழ்வில்நினைதுப் பார்க்கும் போது சரியாக தோன்றாதிருக்கலாம் பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  8. சில கருத்துகள் எனக்கு ஒத்துப் போக இயலவில்லை சார். மயக்குவது என்பதெல்லாம் ட்ரமாட்டிக்காக இருக்கு...ஒரு சில இடங்களில் நடக்கலாம் ஆனால் எல்லா குடும்பங்களிலும் என்று சொல்லிப் பெண்களை அப்படி வகைப்படுத்த முடியாது சார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையே ஒரு நாடகம் தான் கீதாநாடகங்கள் ப ல இ டங்களில் வாழ்க்கையை சித்தரிக்கிறதுஎல்லக் குடும்பங்களிலும் என்று சொல்லழ் வில்லை யே பொதுவாக மனதில் படுவதுதானே அது என் வாழ்க்கையில் இந்தக் கருத்துகள் சரி யில்லை என்றால் எல்லாமே தவறுஎன்றாகி விடுமா

      Delete
  9. அந்தப் பதிவும் பார்த்தேன். சார் தன் அம்மாவைக் காண்பதற்கும் அம்மாவின் அன்பினை எஞ்சாய் செய்வதற்கும் மனைவியின் அனுமதி வேண்டுமா என்ன? சரி நீங்கள் சொல்லுவது போலவே இருக்கட்டும் இப்படியும் நடக்கும் வாய்ப்பு இருக்கு நடந்தும் இருக்கிறது. ஒரு சில இடங்களில். என் கேள்வி இதுதான் அபப்டி என்றால் அந்த ஆணிற்கு முதுகெலும்பு இல்லை.

    அந்த ஆண் மனைவிக்குத் தெரியாமல் தன் பெற்றோரையோ, தாயையோ வெகு எளிதாகச் சந்திக்க முடியும். அவனுக்கு மனம் இருந்தால். அவன் மனைவியின் அனுமதி இல்லாததால் செல்லவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது அப்படி என்றால் அவனுக்கே அந்த அன்பு ஆசை இல்லை என்றே நான் சொல்லுவேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிறைய இடங்களில் ஆண் முதுகெலும்பு இல்லாதவனாகவே இருக்கிறான் பல இடங்களில் பெண் ஆண்கள் பக்க உறவையே உதாசீனம் செய்கிறார்கள் இதை எல்லாம் பொறுத்துப் போவது ஆணின் சாமர்த்தியம் பொதுவான கருத்துகளை அவரவர் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எட்ல்லாமே தவறாகத் தெரியும் பெண்களின் சில குணாதிசங்களயும் கூற் இருக்கிறேன் அதற்கெல்லாம் பொங்கி யாரும் எழ வில்லையே

      Delete
  10. குடும்பத்துடன் ஒன்றி வாழ்பவர்கள் அனைவருக்கும் மனைவி இல்லாமல் சில நாட்கள் தனியாக இருக்கும் போது தான் வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்ற பழமொழி நினைவுக்கு வரும்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி சார்... இந்த ஊரில் இருக்கும்போது, வெகேஷனுக்கு மனைவி குழந்தைகளை முதலில் அனுப்பிடுவேன். ஒரு சில வாரங்கள் கழித்து நான் செல்வேன். இல்லைனா அவங்க மட்டுமே போய் வருவார்கள். அப்போ, முதல் இரண்டு நாட்கள், வீடே அமைதியா அவ்வளவு சுகமா இருக்கும். நம்ம வேலையை நாம் பார்க்கலாம். வீட்டை சுத்தமாக வைக்கலாம். இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் வெறுமையா இருக்கும். ஒரு வாரம் ஆனால், எப்போடா அவங்க வரப்போறாங்கன்னு இருக்கும். அது நிழலோ வெயிலோ தெரியாது.. ஆனால் இதுதான் யதார்த்தம்.

      Delete
    2. @ஜோதிஜி நீங்களுமா சார் பதிவில் சில யதார்த் நிகழ்வுகளை தங்கள் வாழ்வுடன் சம்பந்தப் படுத்திப் பார்க்காமல் எட்ட இருந்து பார்த்து எழுதியது நிழலின் அருமை வெயிலி ந் அருமையானது எப்படி என்று தெரியவில்லை சில கருத்துகளை அவரவர்வாழ்வோடு ஒப்பிடலால் வந்ததோ நான் 54 வருடங்களாக சந்தோஷமான மனநிலையில் மண வாழ்க்க வாழ்பவன் நிழல் வெயில் எல்லாம் பார்த்தாகி விட்டது சிலவிசேஷ பெண்களின் குணாதிசயங்கள் மாறுவதில்லை

      Delete
    3. @நெத இன்னொரு தரம் சொந்த அனுபவங்களை பதிவில் கொண்டுவந்து சிந்திப்பது

      Delete
    4. ஐயா, அனுபவங்கள் என்னும்போது அவரவர் வாழ்க்கையில் நடப்பது தானே சொல்ல முடியும்? பிறர் வாழ்க்கையைப் பற்றி அனுமானம் செய்வது எவ்வகையில் சரியாகும்? நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பெண்களை வைத்தேப்பொதுவாகப் பெண்கள் இப்படி எனச் சொல்கிறோம் அல்லவா? அவரவர் அனுபவங்களை நினைக்காமல் என்னால் எல்லாம் சிந்திக்கவே முடியாது! இது தவிர்க்கவும் முடியாதது. இம்மாதிரியான பதிவுகளில் அவரவர் அனுபவங்கள் இடம் பெற்றே தீரும்!

      Delete
  11. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்குமிடத்தில் இதற்கெல்லாம் அவசியமே இல்லையே சார். இப்படியானவற்றைப் பொதுவாக என்றும் சொல்லிட முடியாது. இது ரிலெட்டிவ் சப்ஜெக்ட் என்றே தோன்றுகிறது சார்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. பல இடங்களில் புரிதல் குறைவாகவே இருப்பதுகண்டதால் எழுந்த சிந்தனைகளே பதிவாகி விட்டது ந்நனும் எல்லா இடங்களிலு ம் இப்படித்தான் என்றுசொல்ல வில்லையே பெண்களி ந் ஆதிக்கம் ஆண்கள் மேல் அதிகம் என்றே கூற வந்தேன் கூடவே சிலபெண்களுக்காகவே இருக்கும் குணங்களையும் எழுதி இருக்கிறேன் பெண்கள் தங்களை கன்ஃபார்மிஸ்டாகவே எண்ணு கிறார்கள் என்பதையும் அவர்களின் ஆயுதம் பற்றியும் சொல்லிச் சென்றி ருக்கிறேன் பதிவு ஒரு கண்ணோட்டம் தான் பெண்களின் சில விசேஷ குணங்கள் அடிக்கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன்

      Delete
  12. மணவினைச் சிறை..அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய புதிய சொல்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete